நாடு கடந்த தமிழீழ அரசு வழங்கும் நற்செய்தி

ஆக்கம்: மா.க.ஈழவேந்தன்
2011ல் மலரும் தைத்திருநாள் தமிழர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதையே உலகில் உருவாகும் நிகழ்ச்சிகள் உணர்த்தி நிற்கின்றன. தை பிறந்தால் நடம்புரிகிறது. நம்பிக்கை மலைகளை அசைக்கும் என்று விவிலியம் இயம்புகிறது. ஆண்டவன் மீது

உனக்கு நம்பிக்கை இல்லையெனினும் உன்மீது நம்பிக்கை வைத்து செயற்படு என்று வீரத்துறவி விவேகானந்த அடிகள் விளம்புகிறார். “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய்வருந்தக் கூலி தரும்”; என்பது வள்ளுவர் வழங்கும் வாய் மொழி. ““God helps only those who help themselves” (தமக்குதான் உதவியாக இருந்தால்த்தான் தெய்வம் நமக்கு துணை நிற்கும்). மேலே கூறியதை மிஞ்சும் அளவிற்கு குடிசெயல்வகை என்ற அதிகாரத்தில் 1023ம் குறளில்

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதத்துத் தான் முந்துறும்”

தான் பிறந்த குடியை உயர்த்துவதற்கு ஒருவன் முயல்வானாயின் தெய்வம் குறுக்கு கட்டி அவனுக்கு உதவும் என்பதுதான் வள்ளுவர் தருகின்ற விளக்கம்.

“You must fight for what you believe in, The presents circumstances may not be in your favour, but future events will shape in the way you want” (நீ எதில் நம்பிக்கை வைக்கிறாயோ அதற்காக நீ போராட வேண்டும். இன்றய சூழ்நிலை உனக்கு வழி பிறக்கும் என்ற சொற்தொடர் எம்மை மீறி எம்நாவில் சார்பற்றதாக இருக்கலாம் ஆனால் எதிர்கால நிகழ்ச்சிகள் உன் சார்பில் அமைவது உறுதி) என்று இந்திய விடுதலையின் தலை சிறந்த தலைவரும் தத்துவ ஞானியுமாகிய அரவிந்தர் கூறிய கூற்று எம் நெஞ்நில் ஆழப் பதிந்துள்ளது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

இக் கூற்றினை நினைவு கொள்ளும் போது 2009 மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போராட்டத்தில் புலிகளைப் பூண்டோடு அழிக்கிறோம் என்று கூறி தமிழினத்தை அழிக்க முனைந்தவர் ஸ்ரீலங்காவின் படைத்தளபதி சரத்பொன்சேகா ஆவர். இவருக்கு கட்டளையிட்டவர் ஸ்ரீலங்காவின் குடியரசுத் தலைவர் கட்டளையை நிறைவேற்றிய படைத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு கொடுத்த பரிசு சிறையில் சித்திரவதையாகும். இந்தியாவை பக்கபலமாகக் கொண்டு இருபது நாடுகளின் துணையோடு ராஜபக்ஷ எம்மை தோற்கடிக்க முனைந்தார். போருக்கு பக்கபலமாக விளங்கிய இந்திய துணைக்கண்டத்தின் தலைமைப் பீடமும் அந்த வெறியாட்டத்திற்கு துணைபோன தமிழக முதல்வர் கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியும் கோடிக்கணக்கான ஊழலில் மூழ்கி உலகமே எள்ளி நகையாடும் வகையில் தமது எதிர்காலம் என்னவென்று தெரியாது தத்தளிக்கின்றன. ஊழ்வினை வந்து உறுத்தும்.

அரசியல் பிழைத்தோர்கு அறம் கூற்றாகும் என்பதற்கமைய டெல்கி மத்திய அரசு ஆட்டம் கண்டுள்ளது. அரவிந்தர் கூறியதற்கமைய நீ நேர்மையாக கொள்கையோடு போராடுகின்றபோது சூழ்நிலை உனக்கு சார்பாக அமையும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழர் காட்டிய எதிர்ப்பு ராஜபக்ஷவை நிலைதடுமாறி தலைகுனிந்து ஓட வைத்துள்ளது. விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தில் வெளிவந்துள்ள சிங்கள வெறியாட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகள் துணைபோன நிகழ்ச்சிகளும் அமெரிக்காவை திகிலடையச் செய்துள்ளது. ஈழத்தமிழரைப் பொறுத்த வரையில் காலங்கடந்த நிலையில் உலக நாடுகள் குரல் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடுகடந்த தழிழீழ அரசு வழங்கும் நற்செய்தி

இச் சூழ்நிலையில்தான் எம் கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டதுக்கமைய நாடுகடந்த தழிழீழ அரசு வழங்கும் நற்செய்தி 2011ல் மலரப்போகும் தைத்திருநாள் உடனடியாக எமக்கு தமிழீழத்தை பெற்றுத் தராவிடினும் ஒரு திருப்பு முனையை உருவாக்கப் போகும் என்பதை வலியுறுத்துகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு மக்ளாச்சியில் நம்பிக்கை வைத்து உலகின் கருத்தினை எம்பால் மன்னிக்கவும் இலங்கையின் கொடிய அரசின் தலைவர் ராஜபக்ஷவாகும். தன் ஈர்க்கின்ற வகையில் வெளிப்படையாக இயங்குகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசின் தலமை அமைச்சர் விசுவநாதன் உருத்திரகுமாரனும் இந்த நம்பிக்கையையே நல்கியுள்ளார். களத்தில் எம் தமிழ் மக்களின் குரல்வளை நெரிக்கப் படுகிறது. விலைபோன தமிழ் அரசில்வாதிகள் ஆழும் கட்சிக்கு அடிவருடிகளாக மாற தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பும் தடம் புரண்டு ஆழும் கட்சியின் நட்பினைப் பெறப்போகின்றோம் என்று கூறி நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காது ஒழித்தோடிய காட்சியை வரலாறு மன்னிக்காது. ராஜபக்ஷவோடு அம்பாந்தோட்டையில் சம்பந்தர் கைகோர்த்து நிற்கின்ற காட்சி வீரசிங்கம் மண்டபத்தில் சிங்களத் தேசியம் பாடப்படுகின்றபோது எம்மைப் பூண்டோடு அழிக்க முயன்ற சிங்களத் தமிழ் அமைச்சர்களோடு ஒரே மேடையில் சேனைக்கு ராஜாவாக விளங்கும் மாவை சேனாதிராஜா புன்முறுவலுடன் நிற்கும் காட்சி எம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்ச்சியாக விளங்குகிறது.

தாயகம் பறிபோகிறது

2007ம் ஆண்டு தைத்திங்கள் தொடங்கியபோது அடுத்து என்ன என்று தெரியாத நிலை நிலவியது. எனினும் அனுராதபுரத்தில் சிங்கள வான்படையின் தலைமைப்பீடத்தின்; மீது கரும்புலிகளினால் நடாத்திய வான்தாக்குதல் வரலாறு படைத்துள்ளது. ஆனால் எதிர்பாராத முறையில் அவ்வாண்டின் முடிவில் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் திரு தமிழ்செல்வனும் அவர் தோழர்களும் சூழ்ச்சுமமாக சாகடிக்கப்பட்ட நிகழ்ச்சி எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2008 தை பிறந்த போது அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்து ஏக்கநிலை தொடர்ந்தது.

அதேயாண்டு எமது தேசியத் தலைவரின் மாவீரர் உரை புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடம் பொறுப்பை வழங்கும் முறையில் அமைந்திருந்தது. 2009ம் ஆண்டு தை பிறக்கின்ற போது எம் எதிர்காலத்தைப் பற்றி ஏங்கித் தவிக்கும் நிலை உருவாகியது. முள்ளிவாய்க்கால் போரில் 40 ஆயிரம் போராளிகளையும் 2 இலட்ச்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்தோம்.

15 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் சிறை வைக்கப்பட்டு சிதிதிரவதைக்கு ஆளாகி சிறையில் தொடர்ந்து இருக்கின்றனர். போரின் விளைவு தமிழ் விதைவைகளின் எண்ணிக்கை 89 ஆயிரம். மீள்குடியேற்ற அரசினால் தரப்பட்ட எண்ணிக்கைதான் இவை. 2010ம் ஆண்டு தை பிறக்கின்ற போது தமிழ் மக்களின் அழிவுக்கும் மேலாக திட்டமிட்டபடி தமிழர் தாயகம் பறிக்கப்படுகிறது. அம்பாறையை அபகரித்து திருமலையை எரிமலை ஆக்குகின்ற முறையில் சிங்கள குடியேற்றத்தால் தமிழினத்தை விழுங்கி ஏப்பம் விடுகின்ற நிலையைக் காண்கின்றோம். மன்னாரில் கேடினை நீக்கும் கேதீசுவரனுக்கும் கேடுகள் சூழ்ந்துள்ளன. மடுமாதாவை காப்பாற்ற முடியுமா என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது? முல்லைத்தீவை

முற்றுகையிட்டு வணங்கா வன்னி மண்ணையும் பறிக்கும் நிலை தொடர்கிறது. தமிழரின் பண்பாட்டு தலைநகர் யாழ்ப்பாணத்திலும் சிங்களப் படையெடுப்பு நடைபெறுகின்றது. பண்பாட்டுச் சீரழிவு எமது தலையைச் சுற்ற வைக்கிறது. எனினும் விரித்துப் பேச விரும்பவில்லை பொருள் தொக்கு நிக்கிறது.

2011ல் மலர இருக்கும் தைத்திங்கள் இருள் கடிந்த நிலையில் விடிவினை ஏற்படுத்தும். 2010ம் ஆண்டு இந்நிலையில் முடிவுற 2011ம் ஆண்டு தைத்திங்களை எச்சரிக்கையோடு – எனினும் நம்பிக்கையோடு வரவேற்கிறோம். இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறு போன்று இருளுக்கு பின் விடிவு என்ற முறையில் விடுதலை எம்மை நாடி வருகிறது என்பது எமது நம்பிக்கை. வரலாறு மீண்டும் திரும்பும் என்ற முறையில் இலங்கைக்கு எதிராக கி.மு 2ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்து சிங்களவரைச் சிறைப்பிடித்து சென்றவனான கரிகாற்சோழன் பற்றி இராஜவலியஇ பூஜாவலிய போன்ற சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இமயமலையில் புலிக்கொடியை பறக்கவிட்ட மாமன்னன் கரிகாலன் என்பதை சிலம்பு சிறப்புறச் செப்புகின்றது. எம் தலைவன் மேன்மைதகு வே.பிரபாகரன் மறு பெயர் கரிகாலன் என்பதனை நாம் மறவாது இருப்போமாக. அத்தோடு சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் கண்ணகி விழாவிற்காகச் சென்ற கஜபாகு மன்னன் அன்னியர்களாம் சிங்களவரை மீட்டு வந்த வரலாற்றையும் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.

அன்று 5வது மகிந்தன் தோற்கடிக்கப் பட்டான் இன்று இன்றய மகிந்தனும் தோற்கடிக்கப்படுவான்

கி.பி 993 இராஜராஜன் (கி.பி 985-1016) இலங்கைமீது படையெடுத்து அனுராதபுரத்தை ஆண்ட 5 வது மகிந்தனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு பெற்றான். பின்பு பொலநறுவையைத் தலைநகராக்கிய மன்னன் “ஜனநாத மங்களம்” என இந் நகருக்கு பெயர் சூட்டினான். மாதோட்டத்தைக் கைப்பற்றிய போது “இராசராசபுரம்” என முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த மட்டக்களப்பு வந்து மும்முடிசோழன் என்ற பட்டத்தைப் அதற்கு பெயர் சூட்டப்பட்டது. இலங்கையை கைப்பற்றிய இம் மன்னன் இலங்கையை 9 தாவது மாகாணம் ஆக்கினான். இதற்கு “மும்முடிச் சோழபுரம”; எனப் பெயரும் சூட்டப்பட்டது. இவனை அடுத்து இவன் மகன் இராஜேந்திர சோழனும் இலங்கையை ஆண்டான். இலங்கையை சோழ மாமன்னர்கள் 77 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டனர் என்பதை சிங்களவரும் மறைக்க முடியாது. தமிழரும் மறக்க முடியாது. தாங்க முடியாத பேரின்னலுக்கும்இ பேரழிவுக்கும் ஈழத் தமிழினம் தொடர்ந்து ஆழாக நேரிடின் மீண்டும் தமிழின உணர்வாளன் திரு பழ. நெடுமாறன் தலைமையில் வைகோ பக்கபலமாக விளங்க செந்தமிழ்ச் சீமானுமானுடன் சேர்ந்து தமிழகம் சிங்களத்தின் மீது படையெடுக்க நேரின் அது எமக்கு வியப்பினை அளிக்காது. வரலாறு திரும்ப வரும். (ர்ளைவழசல சநிநயவ வைளநடக) என்பது வெறும் வெற்றுரையல்ல.

2011ல் தோன்றுகின்ற தமிழ் தைத்திருநாள் எமக்கு வரலாற்;றில் ஒரு திருப்புமுனையாக அமையப்போவது உறுதி. உலக நிகழ்வுகளை உற்றுகவனித்த நிலையிலேயே நாடு கடந்த அரசு தமிழ் மக்களுக்கு அந்த உறுதியை அளிக்கிறது.

சுதந்திரப் பொங்கலைப் பொங்குவோம்

எனவேதான் அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் பொங்கல் என்ற பாடலை இங்கு நினைவு கொள்ளுகிறோம். இதோ அவர் பாடிய சுதந்திரப் பொங்கல்.

  அடிமை விங்குகள் அகன்றன - இனிமேல்
  கொடுமை பிறர் பால் கூறுவதற்கில்லை
  திமுடன் சத்திய தீயினை மூட்டி
  மடமை மதவெறி மமதையை எரித்து
  பொய்யும் மோசமும் புளையும் பொசுங்க
  வையம் முழுவதும் வாழந்திட துணிந்து
  அன்பெனும் பாலை அடுப்பகத்தேத்தி
  துன்பமெனும் காரிருள் சுண்டித் - தொலைத்திட

அது பொருள் பொதிந்த பொன்னுரையாகும். நாம் காணும் கனவு பாடிய சுதந்திரப் காய்ச்சித் திரட்டிய கருணைப் பொங்கல் பாய்ச்சும் சுதந்திரப் பரிமளம் கமல அமிழ்தம் இதுவென அழியா வரம் தரும் தமிழின் தெய்வீகத் தனிரசம் சேர்ந்து புத்தம் புதியதோர் பொங்கல் சுவைதர - புசித்து நித்தமும் மகிழ்வுடன் நெடுநாள் வாழ்வீர்

நாமும் நாமக்கல் கவிஞருக்கு வழிமொழி கூறி “பூத்ததடா தமிழீழம் புலர்ந்ததடா தமிழன் வாழ்வு” எனக் கூறி “அங்குலமும் அயல் வெறியர் ஆளவிடமாட்டோம்” என உறுதி பூணுவோமாக.

Please Click here to login / register to post your comments.