'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி!

ஆக்கம்: இளையசெல்வன்
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறது நாம் தமிழர் இயக்கம். இதற்காக, இயக்கத்தினருடன் பல மணிநேரம் விவாதித்திருக்கிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேநேரம் திடீரென்று வைகோவை சந்தித்தார் இவர். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணரை மணி நேரம் நீடித்தது. வைகோ-சீமான் சந்திப்பு, அரசியலில் பரபரப்பை உருவாக்கிய நிலையில்... சீமானிடம் பேசினோம்.

வைகோவுடனான சந்திப்பு?

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நான் இருந்தபோது, அய்யா நெடுமாறனும் அண்ணன் வைகோவும் என்னை வந்து பார்த்தார்கள். எனது கைதை கண்டித்தும் எனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். விடு தலையானதும் இவர்களை சந்தித்து நன்றி சொல்ல விரும்பினேன். ஆனால், பல் வேறு பணிச்சுமைகளால் அது இயலாமல் தள்ளிக் கொண்டே போனது. அத னால் இப்போது சந்தித் தேன். திருமாவையும் வழக் கறிஞர்கள் நடராஜன், சந் திரசேகரனையும் சந்திப் பேன்.

இந்த சந்திப்பில்... கலைஞரை எதிர்த்து பொது வேட்பாளராக நீங்கள் நிற்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டதாமே?

ஈழ விடுதலை குறித் தும் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை சட்டப்படி தண்டிப்பது குறித்து சர்வ தேச அளவில் இன்னும் என்ன மாதிரியான நட வடிக்கைகள் எடுப்பது பற்றியும் விவாதித்தோம். இது தவிர, அதிகம் விவா தித்தது, இந்த தேர்தலில் காங்கிரஸை வேரோடு மண் ணாக ஒழிப்பது பற்றித்தான். இதற்கான வியூகம் குறித்தும் விவாதித்தோம். மேலும், "தேசிய அரசியலில் ஈடுபட்டது போதும், மாநில அரசியலுக்கு வாருங்கள். அதற்கு இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும்' என வைகோவிடம் வலியுறுத்தினேன். "இதுபற்றி கட்சிதான் முடிவெடுக்கும், ஆகட்டும் பார்க்கலாம்' என்றார் வைகோ. பொதுவாக, "பொது வேட்பாளர்' என்கிற சிந்தனை ஈழ உணர்வாளர்கள் அனைவரிடமும் உண்டு, என்னிடம் வலியுறுத்துவதும் உண்டு. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் இதற்கு காலம் பதில் சொல்லும்!

அப்படியானால் இந்த தேர்தலில் நாம் தமிழர் இயக்கம் எதை நோக்கிச் செல்கிறது?

நாம் தமிழர் இயக்கம் இந்த தேர்தலில் மட்டும் போட்டியிடாது. ஆனால் களத்தில் நிற்கும் -அதுவும் வலிமையாக நிற்கும். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் நாங்கள்தான். எங்களின் தேர்தல் பாதை தெளிவாக இருக் கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி யிடும் அனைத்து தொகுதிகளையும் குறிவைத்து களமிறங்கவிருக்கிறோம். காங்கிரஸை தமிழ் மண்ணில் அழிப்பதுதான் லட்சியவெறி. எந்த சூழலிலும் அந்த வெறி உறுதியாக கனன்று கொண்டேதானிருக்கும்.

காங்கிரஸை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிக்கிறீர்கள். ஆனால், பிரபாகரனை தூக்கிலிடுங்கள் என்ற ஜெ.வை ஆதரிப்பது முரண்பாடாக இல்லையா?

போர்க்களத்தில் எதிரியை வெல்வதற்கு ஆயுதம் வேண்டும். அதுவும் வலிமையான ஆயுதம் வேண்டும். எங்கள் முன் நிறைய ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், வலிமையான ஆயுதம் அ.தி.மு.க.தான். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலைதான் எதிர்த்து நிற்கும். அதனால் காங்கிரஸை தோற்கடிக்க இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம். இதுதான் என்பதல்ல... "கை'யை எதிர்த்து பம்பரம் நின்றாலும், மாம்பழம் நின்றாலும், முரசு நின்றாலும், அரிவாள் சுத்தியல் நின்றாலும் அதனைத்தான் ஆதரிப்போம். அதனால், காங்கிரஸை யார் எதிர்க்கிறார்களோ, அவர் களில் தோற்கடிக்கும் வலிமையுள்ளவர்கள் யாரோ அவர்களை ஆதரிப்பதுதான் எங்கள் வியூகம். எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. ஒரு கருவி. வலிமையான கருவி. எதிரியை வெல்ல அந்த கருவியை தூக்கி சுழற்றுகிறோம். அவ்வளவு தான். அதற்காக, இவர்களது மேடையில் ஏறி முழங்குவோம் என்று அர்த்தப்படுத்திக் கொள் ளாதீர்கள். எங்கள் மேடை தனி, பாதை தனி! அதனால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இன்னும் ஒன்று சொல்கிறேன்... காங்கிரஸோடு ஜெயலலிதா கூட்டணி வைத்தால்... ஜெயலலிதாவை தோற்கடிப்பது தான் எங்களது முதல் பணியாக இருக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமே கிடையாது. ஆக, காங்கிரஸோடு சேர்ந்து யார் இயங்கினாலும் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் எதிரிகள். பிரபாகரனை தூக்கிலிடுங்கள் என்றுதான் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இன்றைக்கு தமிழீழமே அழிந்துபோக காரணம் காங்கிரஸ்தானே!

அ.தி.மு.க.வை ஆதரிப்பதன் பின்னணியில் பண விளையாட்டு இருப்பதாக பரவுகிற குற்றச்சாட்டு குறித்து?

தமிழின பகைவர்களை நாங்கள் அடை யாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த பகைவர்கள் யார் என்பது இன்றைக்கு தமிழர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்! பகைவர்களும் தங்கள் தோல்விகளை உணரத் தொடங்கி விட்டனர். அதனாலதான் எங்களை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத எதிரிகள் இந்த ஆயுதத்தை (பண விளையாட்டு) எடுத்து ஏவுகின்றனர். இதனையெல்லாம் நம்புவதற்கு தமிழன் முன்பு மாதிரி ஏமாளி அல்ல! அரசியலில் தமிழின துரோகிகளுக்கு, "நாம் தோற்று விடுவோம்'ங்கிற பயம் வரும்போதெல்லாம் இரண்டு ஆயுதங்களை கையிலெடுப்பார்கள். ஒன்று... பணம் வாங்கிக் கொண்டார் என்பது.

அடுத்தது... மரண பயம் ஏற்படுத்துவது. தற்போதும் அதுதான் நடக்கிறது. எனக்கு எதிராக முதல் ஆயுதத்தை கையிலெடுத்துவிட்டார்கள். அடுத்ததை தேர்தல் நெருங்கும்போது எடுப் பார்கள். இந்த இரண்டு பூச்சாண்டிகளுக்கும் பயப்படுகிறவன் நானல்ல!

Please Click here to login / register to post your comments.