உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர்

தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, தென்சூடான் உத்தியோகபூர்மாக அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக கருத்துரைத்த பெழுதே, அமைச்சர் இதனைக் குறிப்பிடடுள்ளார்.

சூடானிய மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, அந்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களை மேம்படுத்துவதற்கு, எமது புலமைசார் உதவிகளை வழங்குவதன் ஊடாக, தென்சூடானிய மக்களுக்கும் எமக்குமான உறவுகள் பலப்படும் என்றும், நாளை உருவாக இருக்கின்ற எமது தேசத்தின் கட்டுமானத்துக்கு இது உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please Click here to login / register to post your comments.