ஈழத் தமிழருக்காக போராடிய கன்னடர்கள்!

ஆக்கம்: இரா.வினோத்

பெங்களூருவில் கிளம்பிய புதிய படை கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில்

கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்​தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது!

கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார்.

எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் காரம் தெறித்தது. ''ரத்த வெறி ராஜபக்ஷேவும், அவனது சகோதரர்களும் திருப்பதி, திருச்செந்தூருக்கு வந்தார்கள். பழநியிலும் மொட்டை போட்டார்கள். ஆறரைக் கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒன்றையும் கிழிக்க முடியவில்லை. காரணம், எங்க ஆளுங்க நமீதாவையும், அனுஷ்காவையும் பார்த்துட்டு டாஸ்மாக்கில் சரக்கு அடிச்சு நாசமா போயிட்டிருக்கான். கலைஞர் டி.வி-யில் 'மானாட மயிலாட’ன்னு பேர்... ஆனா அங்க மானும் ஆடலை; மயிலும் ஆடலை... வேற ஏதோ ஆடுது! எங்க ஆளுங்களை இலவசத் தொலைக்காட்சியைக் கொடுத்து உழைக்க விடாமக் கெடுத்ததே கருணாநிதிதான். தேர்தல் வேற சீக்கிரத்தில் வரப்போவுது. ஓட்டுக்கு 10 ஆயிரமும், வாஷிங் மெஷின், மோட்டார், சோப்பு, பவுடர் எல்லாம் தரப் போறாங்க. வாங்கிட்டு ஓட்டுப் போடப் போறாங்க. எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. 'எங்க ராசா சிங்கம்! சிங்கிளா போயி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை அள்ளிட்டு வந்திரிச்சு...’ன்னு அனுப்புறான்'' என வேல்முருகன் சொல்லி முடிக்கு முன் ''அது சிங்கம் இல்ல... அசிங்கம்!'' என அரங்கத்தில் கமென்ட் பறந்தது!

கொளத்தூர் மணி, ''நீங்கள் நடத்திய போராட்டத்தில் 44 பேர் கலந்துகொண்டீர்கள். அடுத்த முறை 4,000 பேராக மாற வேண்டும். ஏனென்றால், 10 பேர் வைத்தால் டிமாண்ட்; அதே 1,000 பேர் வைத்தால் கமான்ட்! குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் 15 நாட்கள் சிறையில் இருக்கிற மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் அரசாங்கம் நம்மைப் பார்த்து மிரளும். இனி நமக்கான அரசையும், அரசியலையும் நாம் போராடித்தான் பெற வேண்டும்!'' என்றார்.

அந்த 44 பேருக்கும் மேடையில் நிறுத்தி, பாராட்டு தெரிவிக்கப்​பட்டது. அவர்களில் இருவர் கன்னடர்கள் என்பது ஹைலைட்!

Please Click here to login / register to post your comments.