சீமானுக்கு குறிவைக்கும் கும்பல்!

ஆக்கம்: இரா.சரவணன்
''காங்கிரஸ் - தி.மு.க. தரப்புகளை வீழ்த்த சீமான் செமத்தியான ஆயுதம்!'' என எதிர்க்கட்சிகள் ஆர்வத்தோடு இருக்க... சீமானுக்கு குறிவைத்து சிலர் ஆயுதங்களோடு தமிழகத்தில் உலவி வருவதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. புலிகளுடனான தொடர்பில் இருந்த சிலரே இதுகுறித்து பதற்றத்தோடு நம்மிடம் பேசினார்கள்.

''தமிழகத்தின் எழுச்சியைத் தணிய​விடாது செய்யும் சீமானின் முழக்கமும், நாளைய அரசியலை நோக்கி அவர் உருவெடுப்பதும் சிங்கள அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அரசியல் அரங்கில் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது சிங்கள அரசுக்கு குடைச்சலாக இருக்கிறது. அதனால் புலிகளுக்குப் போட்டிக் குழுக்களாக விளங்கும் இரு குழுக்களில் இருந்து ஆறு பேர் தயார் செய்யப்பட்டு அவர்கள் முழுவிதமான பயிற்சிகளுடன் தமிழகத்தில் உலவவிடப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர் யாழ்பாணத்தில் பிறந்த ஒருவர். வேலூர் சிறையில் இருந்து சீமான் வெளி​வந்தபோதே அவரைக் கொல்ல சதி நடந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. சீமான் தனியாக நிற்கும் சமயத்திலோ அல்லது கூட்டத்தில் இருக்கும்போதோ குண்டுகளை வீசித் தாக்குவதுதான் அவர்களின் திட்டம். சீமானை இந்த நேரத்தில் வீழ்த்தினால், பழியை ஆளும் கட்சியினர் மீது போடலாம் என்பதும் சிங்கள அதிகாரிகளின் திட்டமாக இருக்கிறது!'' என்றார்கள் பதற்றம் தணியாமல்.

சீமானிடம் பேசினோம். ''எனக்கும் பல இடங்களில் இருந்து இந்தச் சதி குறித்த தகவல்கள் வந்தன. என்னைக் கண்காணிக்கும் உளவுத்துறை இதுகுறித்தும் கண்​காணித்தால் தேவலாம். மற்றபடி வருவது வரட்டும். இந்த மண்ணுக்காகச் சாவதைக் காட்டிலும் மகத்தான பணி எனக்கு என்ன இருக்கிறது!'' என்றார் கண்கள் துடிக்க.

Please Click here to login / register to post your comments.