தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவின் பிரிவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணீர் அஞ்சலிகள்

ஆக்கம்: கலாநிதி ராம் சிவலிங்கம்

தேசியத் தலைவர் மேன்மைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவின் பிரிவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

உங்கள் மறைவு பற்றி செய்தி கேட்டு தாங்கொணாத் துயர்கொள்ளும் கோடிக்கணகிலான் தமிழர்கள் சார்பில் தலை சாய்ந்து நின்று நெஞ்சுருக வணக்கம் செலுத்துகிறோம் தாயே.

வீரத்தின் சின்னமான தேசியத்தலைவனைஇ ஈழத்தமிழரின் தலைமகனை பெற்றெடுத்த தேசத்தின் தாயே! தாய்க்குலத்துக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய மனித மாணிக்கமே! உன் இழப்பைஇ உனது பிரிவை எப்படியம்மா எம்மால்த் தாங்கமுடியும்.

வாடிப்போன எம் இனத்துக்கு ஒரு வரப்பிரசாதாத்தைத் தந்தவரே! உலகமே எம்மை ஓர் வீர இனம் என்று மெச்சவைக்க ஓரு வீரனை எமகுத்தந்தவரே! எம் சந்த்ததி உங்களை ஒருபோதும் மற்க்காதம்மா.

இன்று இறுதியாத்திரை போகும் எம் தானைத் தலைவனின் தாயே! எட்டுக்கோடி தமிழினத்தின் இணையற்ற அன்னையே! எம் உறவுகள் தம் வாழ்நாள்பூராவும் உங்களைப் பூர்ஜித்தாலும் உன் கடனை எம்மால் ஒருபோதும் தீர்க்கமுடியாதம்மா.

நீங்கள் எண்ணியஇ எம் தானைத் தலைவனால் வழிவகுக்கப்பட்ட இறைமையும்இ சுதந்த்திரமும் கொண்ட தனிநாடாம் தமிழீழத்தை விரைவில் அமைத்து உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்வோமம்மா. இது சத்தியம்.

பார்வதியம்மாவின் ஆன்மா இறைவனடி சென்று சாந்தியடைய வேண்டுமென அந்த எல்லாம்வல்ல இறைவனை வேண்ண்டி நிற்கின்றோம்.

அவருடைய பிரிவால் துயருறும் பிள்ளைகள்இ மருமக்கள்இ பேரப்பிள்ளைகள்இ உற்றார் உறவினர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கலாநிதி ராம் சிவலிங்கம்
பிரதிப் பிரதமர் - நாடு கடந்த தமிழீழ அரசு

Please Click here to login / register to post your comments.