கொண்ட தவம் பலிக்கும்! கோடியாண்டு பேர் நிலைக்கும்

ஆக்கம்: கு.அரசேந்திரன்
பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா-இன்று
தெய்வமானீர் அம்மா!

வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரைமன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

எட்டுகோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உரிமைக்குப் படைதிரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரிபூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும்புயலை
ஈன்ற பெரும்புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபா கரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றிநின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!
கொள்ளிவைப்பானா பிள்ளை
கொள்ளிவைப்பானா பிள்ளை-எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!

கொள்ளிவைப்பான் உன்பிள்ளை
கொள்ளிவைப்பான் உன்பிள்ளை
குமுறும்எரி மலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளிவைப்பான் உன்பிள்ளை
கொள்ளிவைப்பான் உன்பிள்ளை
கொண்டவுன் தவம்பலிக்கும்
கோடியாண்டு உன்பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்.

கு.அரசேந்திரன்
வெளியீடு
உலகத் தமிழர் பேரமைப்பு
சென்னை -85
21.02.2011

Please Click here to login / register to post your comments.