மனித உரிமைகள், நம்பகத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல்

ஆக்கம்: என். சத்தியமூர்த்தி (தமிழில்: ந. கிருஷ்ணராசா)

போரினால் உருக்குலைந்துபோன வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல் சம்பவங்களை ஒவ்வொன்றாக விசாரிப்பதற்கென உயர்மட்ட, அனுபவம் வாய்ந்த நீதிபதிகளை நியமிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானம் அரசாங்கத்தினால் நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளமையை விளங்கிக்கொள்ள முடியும். தருஸ்மன் அறிக்கையின் பின்னணியில் நோக்கும்போது இது காலம்பிந்திய நடவடிக்கையாகவும் உள்ளது. எப்படியிருப்பினும் மனித உரிமை விடயத்தில் சர்வதேச சமுதாயத்தின் அக்கறையை எதிர்கொள்ள இது ஒரு நல்ல அடிப்படையை வழங்க முடியும்.

இந்த தீர்மானம் சர்வதேச அளவில் இலங்கையின் நண்பர்களை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உலகின் தெற்கு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதற்கு உதவும் முகமாக அரசாங்கம் இதை செய்துள்ளது.

குறிப்பாக தருஸ்மன் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. மற்றும் வேறு இடங்களில் முன்வைக்கப்படும் போது இலங்கையின் நட்பு நாடுகளுக்கு இது பயன்படும்.


இலங்கை, தருஸ்மன் அறிக்கைமீது குற்றங்காணும் போது சட்டப் பிரச்சினைகளையே எழுப்புகின்றது. அறிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் மறுக்கவில்லை. விவரமாக பதிலளிப்பது அறிக்கைக்கு 'மரியாதை' செய்வதாக அமையும் என அரசாங்கம் சிந்திக்கின்றது போலும்.

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்கு, குறிப்பாக அதன் நண்பர்களுக்கு தான் நேர்மையாக செயற்படுவதாக காட்ட வேண்டியுள்ளது.

உலகின் கவனம் வேறு முக்கிய நெருக்கடிபற்றி அக்கறை கொள்ளும்வரை காலம் கடத்துவதற்காகவே இலக்கை, விசாரணை குழுக்களை அமைக்கின்றது என்ற கருத்து பரவலாக உள்ளது. நீதிபதி பகவதி குழு இதற்கு உதாரணமாகும்.

அரசாங்கம் அதன் நண்பர்களுக்கு தொடர்ந்து அலுப்பு கொடுக்க முடியாது. யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பதை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு சர்வதேச சமூகம் இலங்கையை இக்கட்டான, சங்கடமான நிலைமைக்கு உட்படுத்துவதை தவிர்க்க முடியும்.

அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் வீட்டு வேலை செய்யவில்லை. பதிலாக இது ஆரம்பத்திலிருந்தே எதையும் மறுக்கும் போக்கையே பின்பற்றி வருகிறது.

ஆரம்பத்திலிருந்தே தருஸ்மன் அறிக்கை நம்பகமற்ற ஒன்றாகவே உள்ளது. இலங்கைக்கு வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நண்பர்களாக உள்ள நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை, மனித உரிமை கவுன்ஸில் என்பவற்றில் இந்த அறிக்கை ஏற்கப்படும் என யாரும் கருதியிருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அரசாங்கத்தின் பாதையில் சென்று சீனாவிடமும் ரஷ்யாவிடமும் உதவி கோரவைத்த தருஸ்மன் அறிக்கையின் சாதனையாகும்.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்  ரொபர்ட் பிளேக்கின் முயற்சியின் காரணமாக தருஸ்மன் அறிக்கைப்பற்றி தன் கடுமையான கருத்தை சீனா கைவிட்டுள்ளது.

இலங்கையுடன் நல்லிணக்கத்தை காண பிளேக் விரும்பியமை, ஜி.எல்.பீரிஸின் சீன இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை அறிவித்தமை காரணமாக இருக்கலாம்.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூறுவாற்காக நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழு, ஏதோ ஒரு வகையில் வழக்குத்தொடருநராக மாறிவிட்டது. கடந்த காலங்களில் சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளர்கள் போல, இந்த குழுவும் நடந்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் எந்த வடிவில் வந்தாலும் எப்போது வந்தாலும் இந்த அறிக்கையை எதிர்க்கும் என நன்கு தெரிந்திருந்தபோது, ஒரு ஆலோசனைக் குழுவை நியமிப்பதனால் பான் கீ மூன் எதனை சாதிக்க நினைத்தார்?

இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கியது என்பது உண்மையே. இலங்கை அரசாங்கத்தின் மீது ஒரு நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை முதல் தகவல் அறிக்கையாக (எப்.ஐ.ஆர்)  கொண்டு யாராவது வழக்கு தாக்கல் செய்தால் ஐ.நா. இந்த அறிக்கையை ஆராய வேண்டியிருக்கும்.

இதுவே எதிர்பார்க்கப்பட்ட நோக்கமாக இருந்தால் அது அடையப்பட்டுவிட்டது.

அரசியல் நோக்கில், புலம்பெயர்ந்தோர் குழுக்களுக்கு இந்த அறிக்கை சில பிழையான நம்பிக்கைகளை கொடுத்திருக்கலாம். சகலதும் கைவிட்டுப்போன நிலையில் புலம் பெயர்ந்தோறில் சிலருக்காக இது எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையை கொடுத்திருக்கலாம்.

சர்வதேச சமூகம் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை இரும்புக்களும் கொண்டு நசுக்க தற்போதும் தயாராக இருப்பதையே நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டமை வெளிப்படுத்துகின்றது. குமரன் பத்மாநாதனை (கேபி) டச்சு அதிகாரிகள் சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கான  இலங்கையின் பதிலானது இன்னும் நீடிக்கும் பொது கரிசனைகளை காட்டுகின்றது.

கே.பியை ராஜிவ்காந்தி கொலைபற்றியோ தி.மு.க.விடமிருந்து பிரபாகரன் பெற்றுக்கொண்டதான கூறப்படும் போஷிப்பு பற்றியோ பேச அனுமதிக்க முன், கேபியை தடுத்து வைத்திருப்போர் இந்திய அரசியல் பற்றியோ பேச அனுமதிக்க முன், கே.பி.யை தடுத்து வைத்திருப்போர் இந்தியஅரசியல் பற்றி கற்றுக்கொள்வது நல்லது. கே.பி. இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்தபோது, இவ்வளவு காலமாக ராஜீவ் கொலையையிட்டு, மன்னிப்பு கேட்கவில்லை இது நம்பகத் தன்மை பற்றிய சந்தேகத்தை எழுப்புகின்றது.

நேடியவனின் கைது புலம்பெயர்ந்தோரிடையேயுள்ள மிதவாதிகளை பிரித்துகாட்டி, அவர்களின் செயற்பாடு சட்டரீதியானது என வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரதம மந்திரியைக் கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு கொழும்புக்கு கவலை தரும் விடயமாக உள்ளது. எல்.ரி.ரி.ஈ. பின்னரான புலம்பெயர்ந்தோர் குழுக்கள் தமது தந்திரோபாத்யதை மாற்றியுள்ளனவே தவிர தமது இலக்கையோ உபாயத்தையோ மாற்றிக்கொள்ளவில்லை.

Please Click here to login / register to post your comments.