பொது நலவாய நாடுகளுடன் இந்தியாவின் கூட்டு மஹிந்தவை அதிர வைத்ததா...?

நீண்ட கால மெளனத்தின்பின் பொது நலவாய நாடுகள் அமைப்பின் இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இந்தியாவுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றாததால் தான் இவ்வாறான அழுத்தங்களை இந்தியா பொதுநலவாய நாடுகள் மூலம் கொடுப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஜக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலோ அல்லது மனித உரிமைகள் சபையிலோ இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் எதுவும் கொண்டுவரப்படுமாயின் இந்தியாவும் பொது நலவாய நாடுகளும் தமக்கு ஆதரவாக இருக்குமென ஜனாதிபதி எண்ணியிருக்கிறார். இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுகள் எழுந்த போது பொது நலவாய நாடுகள் அமைதியாகவே இருந்தன.இந்தியாவில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நடை பெற்ற போது ஜனாதிபதி விசேட விருந்தி னராக அழைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதியின் எண்ணம் இந்த அழைப்புக்கும் தமது அமைப்புக்கும் தொடர்பு இல்லையென பொது நலவாயச் செயலகம் மறுப்பு விடுத்தது. ஆனால் உறுப்பு நாடுகள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தன. இது போன்றே இந்தியாவின் உதவி இலங்கைக்கு கிடைக்குமென ஜனாதிபதி எண்ணுகிறார் போலும்.அடுத்த வருடம் பொது நலவாய நாடுகள் கூட்டம் இலங்கையில் நடை பெறுவதனால் இந்தச் சந்தர்ப்பத்தின் மூலம் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகள் தமது பக்கம் நிற்பதாகக் காட்டலாம் என்று ஜனாதிபதி நம்பி யிருப்பதாகத் தெரிகிறது. இரு வாரங்களுக்கு முன்புதான் பாலித்தீவிலும் இந்தோனேஷியாவிலும் பொது நலவாய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கான பிரசாரங்களை நடத்தி இருந்தார்.ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பதாக ஜூன் 23 ஆம் திகதி லண்டனிலுள்ள பொதுநலவாய நாடுகள் செயலகம் ஓர் அறிக்கை விடுத்துள்ளது. சனல் 4 இல் கட்சிப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பாக தமது அமைப்பு மிகவும் கவனம் செலுத்தி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செயலகத்தில் இந்தியாவைச் சேர்ந்த கமிலேஷ் சர்மா செயலாளராகவும் அமிர்ரு பெனார்ஜி அரசியல் ஆலோசகராகவும் கடமையாற்றுகிறார்கள். இவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை பிரிட்டன் பிரதி வெளிநாட்டு அமைச்சர் அரிஸ்டர்பேர்ட் இவ் விடயம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை ஒத்திருந்தது. நீண்ட மௌனத்தின் பின்னான அறிக்கை நீண்ட கால மௌனத்தின் பின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது.இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதி களை ஜனாதிபதி நிறைவேற்றாததால்தான் இவ்வாறான அழுத்தங்களை இந்தியா பொது நலவாய நாடுகள் மூலம் கொடுப்பதாகப் பலர் கருதுகிறார்கள். பொது நலவாய அமைப்பின் இந்த வகையான தமக்கெதிரான நடவடிக்கைகளினால் ஜனாதிபதி பயந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சிவ்சங்கர் மேனன் அடங்கிய மூவர் குழுவினரது பேச்சு பற்றிய அறிக்கை கள் எதுவுமே ஊடகங்களுக்கு வெளி யிடப்படவில்லை. ஆனால் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண விடுத்த அறிக் கையில் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண அழுத்தம் கொடுக்கும்படி இந்தியா நிர்ப்பந்திக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார் எனத்தெரிகிறது. அடுத்த வருடம் பொதுநலவாயக் கூட்டமும் 2018 இல் பொதுநலவாய விளையாட்டும் நடைபெறவிருக்கும் நாட்டில், குழப்பமும் குளறுபடிகளும் அதிகரித்துள்ளன.அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சர்வதேச அழுத்தங்கள் இவ்வாறு இருக்கையில், உள்நாட்டிலும் பல்வேறு தலையிடிகள் எழுந்துள்ளன. அரிசியில் "ஆசெனிக்" இங்கிருக்கும் அரிசியில் "ஆசெனிக்'' இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தலைவர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் இலங்கை மின்சார சபையைக் கலைத்த ஜனாதிபதியின் செயலை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்த்ததோடு தனது பதவியை இராஜினாமாச் செய்யவும் முன்வந்தார். அண்மையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் அரிசி தொடர்பாக பிரசாரத்திலீடுபடும் அமைச்சர்களான சம்பிக்கவையும், விமல் வீரவன்சவையும், பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அவ்வாறு நடக்கும் படி ஜனாதிபதி எச்சரித்தார்.ஆனால் சம்பிக்க திருப்பியடித்தார். அடுத்த கிழமை ஒரு வார இதழில் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சனல் 4 வெளியீட்டுக்கு எவ்வித மறுப்பு நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதில் காட்டப்படுவது போல யாராவது குற்றமிழைத்தால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதேசமயம் "அரிசியில் ஆசெனிக்'' பற்றிய பரப்புரையை நிறுத்தும்படி ஜாதிக ஹெல உறுமயவுக்கு ஜனாதிபதி கட்டளையிட்டும் அத்துரெலியரத்தின தேரர் உட்பட பல உறுப்பினர்கள் தமது பிரசாரத்தைத் தொடர்ந்தும் மேற் கொண்டு வருகிறார்கள்.இது தனக்கெதிரான நாடுதழுவிய எதிர்கருத்தை உருவாக்குமென ஜனாதிபதி கருதுகிறார். இவ்வாறான நெருக்கடிகள் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தோரும் 13 ஆவது திருத்தத்தை காணி, பொலிஸ் அதிகாரங்களோடு அமுல் நடத்தியும் வடகிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கும் படி வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள்.இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் சீண்டி பகைப்பதால் நாடு பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளப்படுமென்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தோல்வியில் முடிந்த சந்திப்பு

எப்படியிருப்பினும் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஹிலாரி கிளிங்டனைச் சந்திக்க நினைத்தது வெற்றியளிக்கவில்லை. ரணில் தன்னோடு நட்புடைய பிரிட்டன் பத்திரிகைகளில் அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அமெரிக்காவுக்குச் செல்லமுன் தனது விஜயம் பற்றி மஹிந்தவுக்கு அறிவித்த ரணில், ஹிலாரி கிளிங்டனுடன் சந்திப்புக் கிடைக்குமாயின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவாறு பேச்சு நடத்துவேன் எனக் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்கா இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Please Click here to login / register to post your comments.