உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மனுவேல் அடிகளார் சென்னை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்

உலகப் தமிழர் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகளார் சென்னைப் பல்கலைக் கழகம், டெல்கி nஐவர்கல்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய ஆயர் பேரவை மற்றும் பல இந்திய தொலைக்காட்சி நிலையங்களில் பேருரைகளும், நேர்காணலும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முறையான விசா அனுமதியுடன் இந்தியா சென்ற போது விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்.

ஓப்டோபர் 10ஆம் நான் செவ்வாய்கிழமை மாலை அடிகளார் சென்னை விமான நிலையத்தில் சென்றடைந்து போது ஒலி பெருக்கிகள் மூலம் அவர் பெயர் அழைக்கப்பட்டு, தனியே அழைத்துச் செல்லப்பட்டு குடிவரவு அதிகாரிகளால் விசாரிக்ப்பட்டுள்ளார்.

அடிகளார் தனது செயற்பாடுகள் அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன என்றும், மேலும் தனது பணிகளனைத்தும் மனித உரிமையையும் மனிதனின் முழுமையான விடுதலையையும் ஒட்டியதாகவே உள்ளதெனவும் எடுத்துரைத்த போதிலும் காரணம் எதுவும் கூறாமல் இது மேலிடத்து உத்தரவு எனக்கூறி, குடிவரவு அதிகாரிகள் ஒரிரு மணித்தியாலங்களில் நாட்டை விட்டு வெளியேறும்படி பணித்துள்ளார்கள்.

இதனை அடுத்து அடிகளார் தமது அடுத்த கட்ட பயண இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளதாக சேய்திகள் தெரிவிக்கின்றன. உலகததமிழர்; பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்ற ஆண்டும் இந்தியா சென்று பல்வேறு தரப்பட்ட நிலையில் உள்ளவர்களுடன் உரையாடல்களையும் நடத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடிகளாரின் வெளியேற்றம் குறித்து தமிழக தலைவர்களுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது பலரும் அதிர்ச்சி வெளியிட்ட்னர். பலரும் இச்செய்தி தற்போது தான் தமக்கே தெரியவந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர். இதிலிருந்து இதனை ஒரு அரசியல் செயற்பாடாக அடிகளார் முன்னெடுக்கவில்லை என்பதுவும் தெளிவாக புலனாகிறது. அவ்வாறாயின் டெல்லி எதற்காக அடிகளார் மீது இந்நடவடிக்கையை மேற்கொண்டது என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

காங்கிரஸ் அரசின் இவ் அதிரடி நடவடிக்கை அது ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில் தொடர்ந்தும் இரட்டை வேடம் கொண்டுள்ளதையே காட்டுவதாகவும் தொடர்ந்தும் சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுக்க முனைந்திருப்பதையுமே மேலும் காட்டுகிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள.;

Please Click here to login / register to post your comments.