கொமன்வெல்த் மாநாட்டிற்கு முன்பாக சிறீலங்கா குறித்து அவுஸ்திரேலியாவில் மாநாடு

ஒக்டோபர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை, ஆதாவது அடுத்த வாரம் அவுஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22வது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், ஒக்டோபர் 20ஆம் நாள் வியாழக்கிழமை, இன்று உலகத்தமிழ் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த பாரிய மாநாடு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் சிறீலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் இம்மாநாடு முக்கியம் வாய்ததாக கருதப்படுகின்றது. சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஐபக்ச, சிறீலங்காவின் அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் முன்னாள் கடற்படைத் தளபதி திசரா சமரசிங்க, சிறீலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதி பாலித கோகனா ஆகியோருக்கு எதிராக போர்க்குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுகின்றது.

இம் மாநாட்டில் முக்கியமான பலர் சிறீலங்கா குறித்து கருத்துரைகளை வழங்கவுள்ளனர். பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி, பேராசிரியர் Nஐக் லிஷ், டாக்டர் கிரகாம் தொம், பீற்றர் ஆடட், புறுஸ் கேய்க், வணபிதா Nஐhன் பார், முன்னைநாள் அவுஸ்திரேலிய அதியுயர் நீதிமன்ற நீதிபதி Nஐhன் டாவுட், பேராசிரியர் ஐவன் சியரர், ஆகிய முக்கிய அவுஸ்திரேலிய பிரிதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் முன்னாள் Nஐ.வி.பி செயலாளர் லயனல் பேபகே, இவர் Nஐ.வி.பிஇன் தமிழர் குறித்த மாற்றமடைந்த நிலைபாட்டினால் அதில் இருந்து வெளியேறியவர், பேராசிரியர் அலுவிகார, இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், இவரது தந்தை சிங்கள மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபொழுது அதனை எதிர்த்து பண்டாயநாயக்கா அரசில் இருந்து வெளியேறியவர், தென்னாபிரிக்க காங்கிரசின் முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிசா நிக்கிலிலானா, இந்தியாவில் இருந்து பேராசிரியர் சூரியநாராயணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

தாயகத்தில் இருந்து தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது தாயகத்தில் அதற்கு சாட்சியாக இருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனா கிருஸ்ணமூர்த்தி, குட்டிமணிக்குப்பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அப்துல் காதர், மலேசியா மக்கள் பிரதிநிதிகளான செனட்டர் ராமகிருஸ்ணன், nஐகாரி அப்துல், மனோரஞ்சன் ஆகியோர் எனப் பெருந்திரளான பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மூன்று கட்சிகளைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது மேலும் வலுச்சேர்க்கும் விடயமாகும். அதிலும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற மனித உரிமைகளுக்கான குழுவின் தலைவரான ஆளும் கட்சி உறுப்பினர், பிரதித் தiவாரான எதிர்க்கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர்களான எதிர்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.

உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இமானுவேல் அடிகளார், பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உட்பட பல தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெறுகிறது.

Please Click here to login / register to post your comments.