தன்னிகரில்லா தமிழ்த் தலைவர் ஜி.ஜி.

அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் பிறந்த தினமாகிய இன்று ஜனநாயக ரீதியில் கையாண்ட முறைகளையும் வழிகளையும் பற்றி நினைவு கூருவது சாலப் பொருத்தம் என்று எண்ணுகின்றேன். அவரைப் பற்றி பல நினைவுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் பொருத்தமான சிலவற்றை இங்கு வெளிப்படுத்த விரும்புகின்றேன். அவர் 1939 ஆம் ஆண்டு அரச சபையில் "50 இற்கு 50" (சரிசமநிலைப் பிரதிநிதித்துவம்) கோரி அயராது தொடர்ந்த அறப்போர் என்ற விடயத்தில் கோரியிருப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இன்று இனப்பிரச்சினைக்கு தலைதூக்கப்பட வேண்டிய காரணம் என்னவென்றால், 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்ட மசோதாவை இயற்றிய பின்பே வெடிக்கத் தொடங்கியது. இச்சட்டம் கொண்டுவரப்படும் என்று எண்ணியே 1939 ஆம் ஆண்டு அரச சேவைகள் விடயத்தில் சிறுபான்மையினரின் நிலையை குறிப்பாக நிறைவேற்றக்குழு முறைமைகள் பற்றி ஐயம்திரிபுர ஆற்றிய உரையின் ஒருபகுதி பின்வருமாறு:

`அரச சேவை ஆளணியினருக்கான நியமனங்களைப் பல்வேறு நிறைவேற்றுக் குழுக்களின் பரிசீலனைக்கும் ஆராய்வுகளுக்கும் உட்படுத்துகின்ற நடைமுறை ஒழுங்குக் கையேட்டில் காணப்படும் குறிப்பிட்ட சில உறுப்புரைகளால் நிறைவேற்றுக்குழு முறைமையில் பிரதான தவறு ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் கௌரவ உறுப்பினர்கள் அறிவார்கள். இது தொடர்பில் அனுப்பிய செய்தியில் பின்வரும் பந்தியை வாசிக்கையில் நான் ஆச்சரியப்பட்டேன்.

முதலில் ஒவ்வொரு தூதுக்குழுவாலும், அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து நான் கலந்துரையாடிய ஒவ்வொரு தனி நபராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஓர் அபிப்பிராயத்தை நான் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன். அது என்னவெனில், நிறைவேற்றுக்குழு முறைமை தொடரும் பட்சத்தில், நியமனம் மற்றும் ஆளணி தொடர்பில் அவற்றை ஆற்றுப்படுத்துவதைத் தேவைப்படுத்தும், 13 ஆம் இலக்க அரச சேவை ஒழுங்கு விதி இரத்துச் செய்யப்பட வேண்டும்.

"அதன் தொடர்பில், சிறுபான்மையினத்தவரைப் பொறுத்தவரையில், அரசாங்கத்தின் நிறைவேற்றுக்குழு முறைமை தொடர வேண்டுமென்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கையில், நியமனம், ஒழுக்காற்று நடவடிக்கை, கட்டுப்பாடு, இடமாற்றம் மற்றும் அரச ஊழியர்களின் நீக்கம் ஆகியவை தொடர்பான அனைத்து விடயங்களும் நிறைவேற்றுக் குழுக்களின் உழுப்பினர்களின் பரிசீலனைக்கு ஒருபோதும் விடப்படலாகாது என்றே அவர்கள் உணர்கின்றனர் என நான் கூறமுடியும். அது தான் எங்கள் கருத்து. இந்த நாட்டுச் சனத்தொகையினரின் ஒவ்வொரு பிரிவும் அந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர் என நினைக்கும் மேன்மை தங்கிய மகாதேசாதிபதியவர்கள், பலப்பிட்டிய தொகுதியின் கௌரவ உறுப்பினரால் 10.02.1937 இல் முன்வைக்கப்பட்ட முக்கிய தீர்மானத்தை நிச்சயமாகக் கருத்திற் கொள்ளவில்லை. அது இவ்வாறு இருக்கிறது.

"இச்சபையின் அபிப்பிராயப்படி அரச ஊழியர் நியமனமானது எச்சமயத்திலும் நிறைவேற்றுக் குழுக்களுக்கோ, இலங்கை அரசாங்கத்தின் நடைமுறையொழுங்குக் கையேட்டின் 13 ஆம் மற்றும் 27 ஆம் இலக்க அரச சேவை ஒழுங்கு விதிகளுக்கோ ஆற்றுப்படுத்தப்படலாகாது. அத்துடன், வேறெதேனும் உரிய சட்டமோ அல்லது நடைமுறையொழுங்கோ அதன் பிரகாரம் திருத்தியமைக்கப்பட வேண்டும்.".

அரச சேவை மற்றும் குழு முறைமை தொடர்பாக ஆராயும் என்னை அது அரச சேவை ஆணைக்குழுவுக்கே இட்டுச் செல்கிறது. அரச சேவை ஆணைக்குழு தொடர்பிலேயே, குறைந்தபட்சம் வார்த்தையளவிலும், போதனையளவிலும் இச்சபையின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே மனவொற்றுமை - இது மேன்மைதங்கிய மகாதேசாதிபதியவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வார்த்தை - காணப்படுவதும், அதனடிப்படையில் சுயாதீனமான, அரசியல் கலப்பற்ற ஒரு அரச சேவை ஆணைக்குழு இருக்க வேண்டுமென்பதும் பாராட்டத்தக்கவொரு விடயமே. எனக்கு முன்னர் பேசியவர்கள் சார்பாகவும் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்ற எனக்குப் பிறகு பேசவிருப்போர் சார்பாகவும் - அதாவது, சிறுபான்மைச் சமூகங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் சார்பாகவும் இச்சபையின் கட்டுப்பாட்டில் இல்லாத, நிச்சயமாக அரசியல் கலப்பற்றதாக இருக்கின்ற ஓர் அரச சேவைகள் ஆணைக்குழுவை நிச்சயமாக நாம் வரவேற்போம். அத்தகைய ஒரு சபையை யாராவதொருவர் கண்டுபிடிக்க வேண்டுமென விரும்புகின்றேன்.

"ஓர் அரசசேவை ஆணைக்குழுவானது, அரசியலிலிருந்தும் சட்டவாக்கத்தினின்றும் உண்மையிலேயே விடுவிக்கப்பட்டுச் சுயாதீனமுடையதாயிருத்தல் வேண்டும். ஆனால், இந்த நாட்டில் அதிகாரபூர்வமற்ற ஓர் அரச சேவை ஆணைக்குழு இருக்கப் போகின்றது. இவ்வாணைக்குழுவின் ஆளணியினைப் பரிந்துரை செய்யவிருப்பது யாரென்று நான் அறியலாமா? மீண்டும் அதே நிலையில் தான் மேன்மைதங்கிய மகாதேசாதிபதியவர்கள் மக்களிடையே உயர் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரைத்தேடும் முயற்சியில் மர்ம சூத்திரமொன்றைப் பயன்படுத்தியவாறு அலையப் போகிறாரா? அரச சேவை ஆணைக்குழுவின் இடங்களை நிரப்புவதற்கான ஆட்களைக் கண்டுபிடிக்க இவ்வாறு தான் முயற்சிக்கப் போகிறாரா?

மேலும் அவ்வுரையில் அவர் கூறியதாவது:

"சபாநாயகர் அவர்களே, நான் இப்போது மேன்மைதங்கிய ஆளுநர் தெரிவித்த கருத்துரையொன்றுக்கு வருகின்றேன். மேன்மைதங்கிய ஆளுநர் அரசாங்க இயந்திரம் பற்றிக் கூறுவதற்கு முன்னர், ஐம்பதுக்கு - ஐம்பது கோரிக்கை என்ற அவர் அழைக்க விரும்பியதை, ஒரு திருத்தமற்ற கணிதச் சூத்திரம் என்று ஒரே வரியில் ஒதுக்கித் தருகின்றார். இந்நாட்டிலுள்ள சிறுபான்மைகளின் இக்கோரிக்கை நானறிந்த மட்டில் சரிசமநிலையான பிரதிநிதித்துவத்துக்கானதாக, தனியொரு சமூகம் எதுவும் இந்நாட்டிலுள்ள ஏனைய எல்லாச் சமூகங்களினதும் கூட்டை வாக்களிப்பொன்றில் தோற்கடிக்கக் கூடாதென்ற அடிப்படையிலான பிரதிநிதித்துவத்துக்கானதாக இருந்துள்ளது. கட்டாயமாக அது ஐம்பதுக்கு ஐம்பதென்ற அடிப்படையாக இருக்க வேண்டியதில்லை. அது கூடியது அல்லது குறைந்ததென்று கருதப்படலாம்.".

சரிசம நிலையான பிரதிநிதித்துவத்துக்கான அவரின் கோரிக்கை பற்றிச் சிங்களவர்களுக்கு இருக்கும் அச்சம் என்னவென்று பொன்னம்பலத்தால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவர், அவர்களைக் கேட்கின்றார்.

"ஒரு பொதுவான மொழியினால் ஒன்றுபட்ட, பெரும்பாலும் ஒரு பொதுவான சமயத்தினால் ஒன்றுபட்ட, ஒரு பொதுவான கலாசாரத்தினாலும் பாரம்பரியத்தினாலும் ஒன்றுபட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்த முப்பத்து நான்கு உறுப்பினர்களுக்கெதிராக, தமிழர்கள், இந்தியர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், ஐரோப்பியர்கள், மலாயர் என்று முற்றிலும் பல்வேறான முரண் குழுக்களைக் கொண்ட வேறு 34 உறுப்பினர்கள். ஐரோப்பிய நியமன உறுப்பினர்களின் திரளணி ஸ்திரமான ஓர் அரசாங்கத்துக்கு உறுதுணையாக நின்று அதனை ஆதரிக்குமென்றும் ஐரோப்பிய நியமன உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளபோது, நான் உங்களைக் கேட்கின்றேன், "சிங்களவர்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்?"

அடுத்ததாக, அமரர் ஜி.ஜி. சட்டமாமேதை என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாத நிலை என்பதாகும். அவர் பேசி வென்ற பல வழக்குகள் பற்றி பலர் அறிந்திருந்தாலும் இன்றும் அவரின் முக்கியமான ஒரு வழக்கை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் புகழ்பெற்ற சதிவழக்கு

ஷ்ரீலங்கா அரசாங்கத்தை புரட்டுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக இலங்கையிலேயே அதி உயர்ந்த பதவிகளை வகித்த தரைப் படை, கடற்படை, ஆகாயப்படை, பொலிஸ் படைகளின் தலைவர்களும், அரசியல் நிர்வாகத் தலைவர்களுமாக 32 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களோடு சம்பந்தப்பட்ட உளறுவாயன் ஒருவன் குடிவெறியில் மனைவியிடம் உளறியதால் மனைவியால் செய்தி வெளிப்பட்டது. கடற்படை தளபதி றொய்ஸ் டி மெல் தலைமறைவாகிவிட்டார். இவர்களை விசாரணை செய்வதற்காக மூன்று உயர் நீதித்துறை நீதிமன்றங்களை கொண்ட விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தலைமறைவாகிய தளபதி றொய்ஸ் டி மெல் அவர்களை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளும் சேர்ந்து முயற்சித்த போதும் கைது செய்ய முடியவில்லை. அமரர் ஜீ.ஜீ.அவர்கள் நீதிமன்றத்தில் றொய்ஸ் டி மெல் சார்பில் ஏற்பட்டு றொய்ஸ் டி மெல்லை நாளை மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜராக்கின்றேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அடுத்த நாள் வழக்கு கூப்பிடுவதற்கு தவணை போடப்பட்டது. குறித்த மெல்லை அமரர் ஜீ.ஜீ.அவர்கள் அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராக்க முன் முப்படைகளும் மெல்லை கைது செய்வதற்காக பலதிட்டங்கள் வகுத்து அமரர் ஜீ.ஜீ.இருந்த இடத்தைச் சுற்றி குறித்த மெல் அமரர் ஜீ.ஜீயை சந்திக்க முன் கைது செய்வதற்காக பொலிஸ் காவல் போடப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் றொய்ஸ் டி மெல் இருந்த இடம் பலருக்கு தெரியாது. அவர் றொய்ஸ் டி மெல்லை புதுமணத்தம்பதிகள் செல்லும் கார்போல் சோடிக்கப்பட்டு, றொய்ஸ் டி மெல் தனது துணைவியாருடன் புதுமணத் தம்பதிகள் போல் காரில் சென்றார். அக்காருக்கு முன்னுக்கும் பின்னுக்குமாக இரு கார்கள் சென்றன. அம் மூன்று கார்களும் புதுமணத் தம்பதிகள் ஊர்வலமாக செல்வது போல் ஜீ.ஜீ., இருந்த இடத்திற்குச் சென்ற மூன்று கார்களும் உட்சென்று றொய்ஸ் டி மெல்லை இறக்கிவிட்டு மூன்று கார்களும் திரும்பிச் சென்றுவிட்டன. அமரர் ஜீ.ஜீ., தனது காரில் றொய்ஸ் டி மெல்லையும் அழைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டத்தரணியுடன் பொலிஸ் தேடும் ஒரு சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு சரணடையச் சென்றால் கைது செய்ய முடியாது. அதுவும் அமரர் ஜீ.ஜீ.யுடன் சந்தேக நபர் சென்றால் எந்தப் பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்ய எத்தனிக்க மாட்டார்கள். மிகவும் முக்கியமான இவ்வழக்கில் றொய்ஸ் டி மெல் உட்பட பல எதிரிகள் விடுதலையானது என்பதை அமரர் ஜீ.ஜீ.அவர்களின் சட்டத்திறமையை யாரும் அறிவர். அவ்வழக்கின் தீர்ப்பு 240 பக்கங்கள் கொண்டது. அவ்வழக்கு 67 ஆவது ?.ஃ.கீ. கச்ணூணாண் 9 - 18, 193 - 432 ஆகிய பக்கங்களில் புதிய சட்ட அறிக்கைப் புத்தகத்தில் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.

சிவில் வழக்கின் திறமையும் நன்றிக்கடனும்

அவர் சிவில் வழக்குச் சட்டத்தரணியல்ல. கிறிமினல் வழக்குச் சட்டத்தரணியன் என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிவில் வழக்கிலே அவருடைய திறமையைப் பற்றியும் இன்று ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அவருடைய மரண இறுதிக் கிரியை நடைபெற்ற சமயம் ஒருவர் அவருடைய உடலைப்பார்த்து "அறிவுக் கடலே! ஐயா அடங்கி ஒடுங்கி அமைதியாய் உறங்கின்றாயே! இனிமேல் என்று தான் காண்பேன்? எங்கே காண்பேன் என்று தலையில் அடித்து அடித்து அழுகின்றார் ஒருவர். அவரைப் பார்த்து பக்கத்தில் நின்ற ஒரு அன்பர் ஏன் இவ்வாறு அழுகின்றீர்கள் என்று கேட்டபோது, மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி கூறியது பின்வருமாறு! தனக்கு நூறு ஏக்கர் காணி உண்டென்றும், தான் கால்நடை வளர்ப்பதும், விவசாயம் செய்வதும் தான் தன் தொழில் என்றும் ஐயா 1937 களில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பெரிய பணக்காரனோடு ஏற்பட்ட காணி எல்லை வழக்கு ஒன்றை சுலபமாக வெற்றி பெற வழி சொல்லித் தந்தார். அதன்படியே நானும் செய்தேன். பணக்காரன் வழக்கையே கைவிட்டுப் போய் விட்டான் என்று கதறி அழுதபடியே சொன்னார். சிதையும் தீ மூண்டு சுவாலைவிட்டு எரியத் தொடங்கியது. இருவரும் கண்ணீர் கடலில் மூழ்கினார்கள்.

இருவரும் உரையாடிய படியே நின்ற இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். வழக்கு விபரத்தைக் கேட்ட போது, வழக்கில் சமமாக்கப்பட்டவர் மற்றவருக்குக் கூறியதாவது:

தனக்கெதிரான வழக்காளி பிறந்தது வளர்ந்தது எல்லாம் மலேஷியாவில். அவருடைய தாய் தந்தையர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். மலேஷியா சென்று அவ்வூர் பிரஜைகளாகி ஊரை மறந்துவிட்டனர். எனது காணிக்கு அருகில் அவர்களுக்கும் ஏராளமான நிலம் உண்டு. எல்லை காண முடியாது. காணியை விற்றுவிட்டார்கள். நானும் 100 ஏக்கர் காணி வாங்கிக் கொண்டேன். ஐயாவுடைய அறிவுரையாலேயே வழக்கும் இல்லாமல் 100 ஏக்கர் காணியும் நியாயமான விலைக்குப் பெற்றுக் கொண்டேன் என்றார். ஐயா சிவில் வழக்குப் பேச மாட்டாரே! என்றார் மற்றவர். ஆமா! காணி அளவுகாரர் (உலாந்தா) காணி அளக்க வரும்போது உனது எல்லையைப் பலப்படுத்தி வை என்றார். அதாவது, எல்லைக் கல்லு இல்லாத இடத்தில் பனை வடலியை நட்டு விடு. நாலு ஐந்து நாட்களுக்கு முன்னர் நட வேண்டும். எட்டு பத்து வருட வளர்ச்சி உள்ளதாக இருக்க வேண்டும். கவனமாகச் செய். காணி அளக்க வருபவரிடம் நீயும் ஒரு கொப்பி கேட்டு வாங்கு என்றார். அவர் சொன்னபடியே செய்து இடையிடையேயும் சிறு வடலிகளை நட்டு விட்டேன். வழக்காளியால் எல்லையையே காட்ட முடியவில்லை. எல்லையில் உள்ளவர்களுடைய பெயரும் சொல்ல முடியவில்லை, தடுமாறினார். அளவை எல்லாம் முடிந்து போகும் போது ஐயாவுடைய பெயரைச் சொல்லி அவரை எனது வக்கீல் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டேன். இச்செய்தி அன்றைய தினமே ஊரவரால் பறை சாற்றப்பட்டது. எதிரி மறுநாளே வழக்கை வாபஸ் செய்வதாக

Please Click here to login / register to post your comments.