தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வும் அபிலாசைகளும்

ஆக்கம்: வி.எஸ்.நவமணி (தமிழாக்கம்)
சி.வி. விவேகானந்தன் நவம்பர் 19 “சிலோன் டுடே' (Ceylon Today) பத்திகையில் Tamils Pine for a Poilitcal Solution என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் சாராம்சம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் குறிப்பாக அமெரிக்க சென்று வந்த பொழுது தெற்கு கொதித்தது. உள்நாட்டில் பேசித் தீர்க்க வேண்டியதை வெளிநாட்டில் பேசுவதா? எங்கள் இறைமையை மாற்றானிடம் அடகு வைப்பதா? விற்பதல் என்றெல்லாம் வெகுண்டெழுந்தார்கள்.

வீட்டிற்குள் நடக்கும் விடயமாக இருந்தாலும் அது தீர்க்கப்படாவிட்டால் வெளியில் வந்து விடும். இது இயற்கை தீர்வு கிடைக்காதவன் மாற்றானிடம் உதவி கேட்டு அலைய வேண்டியுள்ளது. அவ்வாறே நாட்டுப் பிரச்சினையும், இதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உண்டு. இலங்கை வரலாற்றிலேயும் இதற்கான சான்றுகள் உள்ளன.

கோட்டை இராச்சியத்தைப் புவனேகபாகு ஆட்சி செய்த பொழுது அவனது தம்பி மாயாதுன்னை, சிறு பகுதியை தனக்குத் தரும்படி கேட்டான். அவன் கேட்டது அதிகாரப் பகிர்வை. கிடைக்காதவிடத்து பெரும்படை கொண்ட அண்ணணோடு மோதினான். அண்ணன் புவனேகபாகு ஒரு கடுகளவு பிரதேசத்தையும் மாயாதுன்னைக்குக் கொடுக்க மறுத்து கடைசியில் கோட்டை இராச்சியத்தை மாயாதுன்னைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததோடு தானும் டொன் ஜுவன் தர்மபால என்ற பெயரோடு கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்டான்.

அந்த வரலாற்று நிகழ்வு மீளவும் நடைபெறுகின்றது. சில மாற்றங்கள் சில தோற்றங்கள் வேறுபடுகின்றன. இன்றைய சூழ்நிலையில் ஐ.தே.க. பல பிரச்சினைகளை ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதாகவும் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்வதாகவும் பயறுத்திக் கொண்டிருக்கின்றது.

பறிமுதல் சட்டத்தின் சாராம்சத்திற்கு எதிராக பொதுநலவாய சமூகத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற ஐ.தே.க. முயற்சித்தது.

அவ்வாறெல்லாம் மற்றவர்கள் முயற்சிப்பது சரியென்றால் ஏன் த.தே.கூ. செய்யக் கூடாது?

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் வில் என்று வர்ணித்தார்கள். அன்றைய காலத்தில் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியாக அங்கீகக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தேர்தலில் பங்குபற்றியிருக்கலாம். ஆனால் தேர்தல்கள் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன என எண்ணியதனால் அவர்கள் தேர்தலில் பங்குபற்றவில்லை. அவர்கள் ஜனநாயக விழுமியத்தில் அக்கறைகாட்டாது ஆயுத கலாசாரத்தை முன்னெடுத்தார்கள். அது சரியா, பிழையா என்பதல்ல பிரச்சினை. அப்படியான சூழல் ஏன் ஏற்பட்டது என்பது தான் இன்றைய கேள்வி.

சிங்களத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர்களையும் ஏமாற்றியே வந்துள்ளார்கள். கதைப்பதோ எல்லாம் கொடுப்பதாக ஆனால் தருவதோ ஒரு துரும்பளவிலும் இல்லை. தமிழர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் ஒன்றையும் ஒரு போதும் நிறைவேற்றியதே இல்லை. ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன, உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டன.

காலத்துக்குக் காலம் செய்து கொள்ளும் உடன்பாடுகள் அனைத்தையும் மீறுவதும் அவர்களது வரலாற்று நடைமுறை.

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது சோல்பரி அரசியல் அமைப்புக் கொண்டுவரப்பட்டது. அந்த அரசியல் அமைப்பின் மூலம் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனமாகவும் மற்ற எல்லோரும் சிறுபான்மை இனமாகவும் கணிக்கப்பட்டனர். சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக சோல்பரி அரசியல் அமைப்பு பறைசாற்றியது.

சோல்பரி அரசமைப்பில் 29ஆம் உறுப்புரை உருவாக்கப்பட்டது. அதன் மூலமும் செனட் சபை மூலமும் சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படும் மேம்பாடடையச் செய்யப்படும் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டது.

ஆனால் அந்த அரசியல் அமைப்பின் கீழேதான். 1947இல் இருந்து 72 வரை சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டன. செனட் சபை ஒழிக்கப்பட்டது. நூறு வருடங்களுக்கும் அதிகமாக இலங்கையைத் தமது தாயகமாகமாகக் கொண்டு வாழ்ந்த இந்திய வம் சாவளி மக்கள் குறிப்பாகத் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. (1948) அதன் பின்பு 1949 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட் டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் மூலம் மலையகத் தமிழர் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1947இல் வாக்களித்த மலையகத் தமிழர்களுக்கு 1952இல் வாக்களிக்க மறுக்கப்பட்டது. அவர்கள் நாடற்றவர்களானார்கள்.

1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் தமிழ் மக்களின் கல்வி, கலாசாரம், உத்தியோகம் என சகலதும் பறிக்கப்பட்டன.

அச்சட்டத்தின் கொடூரத்தினால் தமிழ் மக்கள் அல்லற்பட்டார்கள்; ஒடுக்கப்பட்டார்கள். அதனாலே அந்த அடக்குமுறைக்கெதிராக ஜனநாயக வழியிலே பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அத்தகைய போராட்டங்களும் இராணுவத்தின் துப்பாக்கி முனையிலே அடக்கப்பட்டன. சத்தியாக்கிரகம் உண்ணாவிரதப் போராட்டம் இவை போன்ற பல போராட்டங்களைத் தமிழ் மக்கள் நடத்தினார்கள் போராட்டம் செய்தவர்கள் இரத்தம் சிந்தினார்களே தவிர வேறு பலனேதும் காணவில்லை.

சட்ட நிரூபண சபையினால் 1944 ஆம் ஆண்டளவில் சிங்களமும் தமிழும் அரசாங்க மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் 1946 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழையும் சிங்களத்தையும் எவ்வாறு அரச கரும மொழியாக்க வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்ற கூட்ட அமர்வு அறிக்கைகள் விடுக்கப்பட்டன. பண்டா செல்வா ஒப்பந்தம் 1957 ஜூலை 27 ஆம் திகதி கையெழுத்தானது அதன் மூலம் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் எனத் தம்பட்டமடித்தனர். ஆனால் அதில் கையொப்பமிட்ட பண்டாரநாயக்கவே அதைக் கிழித்தெறிந்தார்.

தமிழ் மக்களின் உண்ணாவிரதப் போராட் டம், சத்தியாக்கிரகப் போராட்டம் அனைத் தும் ஈவிரக்கிரமின்றி அடக்கப்பட்டதையும் தமிழர்கள் இரத்தம் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டதையும் கண்ட, தந்தை செல்வா 1960 ஆம் ஆண்டளவில் தேர்தல்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஆத ரவு தெவிப்பதன் லம் தமிழ் மக்களின் உமைகளைப் பெறலாம் என்று எண்ணி னார்.

1960 ஆம் வருடம் தேர்தலின்போது, சி.பி.டி. சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளித்தது. அப்போது பண்டார செல்வா ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. இதனால் டட்லி சேனாநாயக்கவின் அரசை ஸ்ரீலங்க சு.கட்சியுடன் இணைந்து தோல்வியுறச் செய்தனர்.

1960 ஜூலை தேர்தலிலும் ஸ்ரீ.ல.சு.க வை தமிழரசுக் கட்சி ஆதரித்தது. அப்போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமை வகித்தார்; தேர்தல் காலத்திலே பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். ஸ்ரீமாவோ அமோக வெற்றியடைந்தார். வெற்றியடைந்த பின் கொடுத்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டார்.

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின் நீ யாரோ நான் யாரோ இதுதான் சிங்களத் தலைவர்களின் வரலாற்று இலக்கணம்.

1965 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசு அமைப்பதற்கு தமிழரசுக் கட்சி முன்னின்று உழைத்தது. டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் உடன்பாடனது. அதன் பிரகாரம் தேசிய அரசு உருவானது.

அந்த தேசிய அரசாங்கத்தில் 1968 ஜூன் மாதம் 3 ஆம் திகதி மாவட்ட சபை சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. அச்சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை சம சமாஜக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி மூன்றும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தன.

“டட்லியின் வயிற்றில் மசாலை வடை' போன்ற இனவாதக் கோஷங்கள் எழும்பின. தேசிய அரசு மாவட்ட சபை சட்ட மூலத்தைக் கைவிட்டது. டட்லி செல்வா ஒப்பந்தம் தூக்கியெறியப்பட்டது.

1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் சோல்பரி அரசியல் அமைப்பில் மீந்திருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்தெடுத்தது.

தனிச் சிங்களச்சட்டம் அரசியலமைப்பு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதன் மூலம் எங்கும் மொத்த சிங்கள உணர்வு தூண்டப்பட்டது.

“ஒரு மொழி இரண்டு நாடு; இருமொழி ஒரு நாடு” என்று கொல்வின் 1956 இல் நாடாளுமன்றத்தில் கர்ஜனை செய்தார். தெருவெல்லாம் முழக்கம் செய்தார். அவரே 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் “பிதா மகன்” தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்த இவரே 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் புகுத்தினார்.

1977 இல் வெற்றி பெற்ற ஐ.தே.க. தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவற்றை அடையாளம் கண்டது. குடியேற்றத்தில் தமிழ் மொழி உபயோகத்தில், தொழில் வாய்ப்புகளில் கல்வியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன் வந்தது.

இதற்காக ஆணைக்குழுவென்று அமைத்து ஆணைக்குழுவின் தீர்வின் பிரகாரம் செயற்படவுள்ளதென 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தலில் ஏழு மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் ஐ.தே.க.வுக்கு அமோக ஆதரவளித்தனர். தேர்தலின் பின் அவர்களித்த வாக்குறுதி காற்றிலே பறக்கவிடப்பட்டது.

1977 தேர்தல் முடிந்த பின் 1972 அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றம் கூடியது. 1972 ஆம் ஆண்டு தமிழர்கள் விடுதலை கூட்டணி தனி நாடு கோரிக்கையை முன் வைத்து தமிழ் மக்களிடம் ஆணைக்கோரியது. வடக்கு கிழக்கு யாழ். தமிழ் மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கினர். என்றாலும் 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றது. ஒற்றைய ஆட்சித் திட்டத்திற்கு அடிபணிந்தது. ஐ.தே. கட்சி கொண்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை அங்கீகரித்தது.

1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புத் திட்டத்தின் கீழும் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்து வகித்து வந்தது.

சங்கிலியன் தோப்பில் “சுதந்திர தமிழீழ நாடாளுமன்றத்தை அமைப்போம்” என்ற சூளுரையை மறந்து கைவிட்டனர். பௌத்த சிங்கள தேசத்துடன் ஒன்றாகக் கலந்து வாழ நடவடிக்கை எடுத்தது.

அதன் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி சபை கொண்டு வரப்பட்டது. தமிழீழம் கேட்டவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டனர். அன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு மாவட்ட சபைகள் தீர்வாக அமையும் என்று பத்திரிகைகள் பறைசாற்றின.

யாழ் மாவட்ட சபைக்கு தலைவராக செனட்டர் நடராஜா தெரிவு செய்யப்பட்டார். பதவியேற்பு வைபவத்தன்று தாறை, தப்பட்டடைகள் முழங்க பிரதேச சுயாட்சியே கிடைத்து விட்டது போன்ற உணர்வில் மக்கள் மிதந்தார்கள். ஆனால் அதே செனட்டர் நடராஜா, மாவட்ட சபைக்கு ஒரு அதிகாரம் இல்லை. ஒரு மேசையும் கதிரையும் வாங்குவதற்கு கூட அதிகாரம் இல்லை எனக்கூறி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். அதன் பின்னர் மாவட்ட அபிவிருத்திச்பைத் தேர்தல் நடத்தப்படவும் இல்லை. மாவட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்ந்தியங்கவும் இல்லை.

மாவட்ட அபிவிருத்ச் சபை தேர்தல் நடந்த பொழுது தமிழ் மக்களுக்கு வரலாறு காணாத அழிவொன்று ஏற்பட்டது. யாழ். நூல் நிலையம் எரிக்கப்பட்டது. தமிழரின் அறிவுக்களஞ்சியமான பல்லாயிரம் அரிய நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், ஓலைச் சுவடிகள், ஆவணங்கள் முற்றாக எரிந்து சாம்பலாயின.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், பொது மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த பேரழிவுக்கு காரணமானவர்களைக் கண்டு பிடிக்கவோ தண்டிக்கவோ இல்லை.

அன்றைய ஆட்சித்தலைவர் ஜே. ஆர் ஜெயவர்தனாவோ அதற்கு பின் இற்றைவரை மாறி மாறி வந்த ஆட்சித்தலைவர்களெவருமோ இதுவரை இந்த மிலேச்சதனத்திற்கு மன்னிப்பு கேட்டதாக இல்லை.

இவ்வாறான வரலாற்றுத் தவறுகளினால் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது அடம்பிடித்ததினால் தான் வட்டுக்@காட்டை தீர்மானம் பிறந்தது. பயங்கரவாதம் பிறந்தது. பிரபாகரன் உருவாக காரணமாயிற்று.

இன்று அரைநூற்றாண்டு காலமாக இந்த உரிமைக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று வழங்காதிருக்கும் வரை இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளினானதே.

தீர்வுக்கான முன்மொழிவுகள்:

மத்தியிலிருந்து பரிதியை நோக்கிச் செல்லத்தக்கதான அரசியல் பகிர்வுடனான ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

(அ) அவர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளல்

(ஆ) 1. குடியேற்ற நாட்டு சக்திகள் பிரதானமாக ஐக்கிய இராஜ்ஜியம் அவர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டிருந்தன.

(இ) 2. கண்டி ஒப்பந்தத்திலிருந்து டொனமூர் ஆணைக்ககுழு வரை அவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தார்கள்.

(ஈ) 3. 1918 ஆம் ஆண்டு டிசெம்பர் 7 ஆம் திகதி சிங்களத்தலைவர்கள் சேர். பொன்னம்பலம் அருணாசலத்ததுடனான உடன்பாட்டினை முறித்துக் கொண்டபோது அவர்கள், தமிழ் மக்கள் எண்ணிக்ககையில் குறைந்தவர்களாயிருந்தாலும் சிங்களவர்களைப் போல் அன்றி வலிமையுடையவர்களாவார்கள். அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என வெளிப்படையாக தெவித்திருந்தார்கள்.

(உ) 4. 1987 ஜூலை 29 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பராம்பரியமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

(ஊ) ஆ. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரே அரசியல் அலகாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

(எ) 1. கண்டி உடன்படிக்கையில் இருந்து டொனமூர் ஆணைக்குழு வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்கள் தமிழ் மொழி பேசும் சமஷ்டி அலகாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(ஏ) 2. பி. சி. உடன்படிக்கை

(ஐ) 3. 1987 ஜூலை 29 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம்

(ஒ) சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தை இலங்கையின் அரச கரும மொழியாக அங்கீகரித்தல்

(ஓ) 1. 1987 ஜூலை 29 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம்

(ஃ) மத்தியிலிருந்து பரவிச் செல்;லக்கூடியதான அதிகார பகிர்வு வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல்

(M) 1. அதிகாரங்கள் கண்டறியப் பட்டு அதற்கான வரைவிலக்கணம் அறியப்பட்டு பொறுப்பளிக்கப்பட்டவுடன் எவ்வழிகளிலேனும் பிரிக்கப்படாமல் குறைக்கப்படாமல் மீள எடுக்கப்படாமல் வலுவிழக்கச் செய்யப்படாமல் பாதுகாக்கப்படல் வேண்டும்.

(N) 2. எவ்வித இடையூறும் அற்ற, அவர்கள் தங்கள் பிரதேசங்களை எல்லாவழிகளிலும் அபிவிருத்திச் செய்து கொள்ளக்கூடிய உள்ளக சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும்.

யாப்புக் கட்டமைப்பு :

1 அமெக்கா, கனடா, சுவிற்சலாந்து, பெல்ஜியம், ஆகிய நாடுகளில் உள்ளதைப் போன்றதா வேறெதும் பொருத்தமான நாடுகளில் உள்ளதைப் போன்றதொ ஆன சமஷ்டி முறையினை தேவையான திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்வது இலங்கையின் தேவையை நிறைவு செய்யும் அல்லது

2. ஒற்றை ஆட்சி மற்றும் சமஷ்டி முறையிணைந்ததான ஆட்சி முறையொன்று தமிழக அரசுக்கு உள்ள அதிகாரங்கள் போல் அமைந்த இந்திய மாதிரி.

2. 13 ஆவது யாப்புத்திருத்தத்தை முழுமையாக அல்படுத்துதல்

ஒற்றையாட்சி முறை :

1. ஸ்கொட்லாந்து மாதிரி: வடக்கு கிழக்கு மக்களுக்காக தனியான ஒரு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளது போன்ற அதிகாரங்களை அளித்தல் .

2. ஸ்கொட்லாந்து தனக்கென சொந்;த நாணயங்களையும் மத்திய வங்கி ஒன்றிணையும் கொண்டிருக்கின்றது.

3. ஸ்கொட்லாந்து தனக்கென தனியான குற்றவியல் மற்றும் குடிசார் சட்டங்களை கொண்டுள்ளதுடன் சட்டமியற்றும் அதிகாரங்களையும் கொண் டுள்ளது.

4. வடக்கு கிழக்குக்கான இந்த நாடாளுமன்றம் பூரண உள்ளக சுயாட்சியை கொண்டிருத்தல் வேண்டும் .

5. புதிய யாப்பொன்று அமைக்கவோ, திருத்தங்கள் செய்யவோ மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.

6. தமிழ் மக்களின் உரிமைகளைப் பொறுத்த விடயங்களை தமிழ் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். இதனை கட்டாயமாக கடைப்பிடித்தல் வேண்டும். யாப்பிலும் இது சேர்க்கப்படல் வேண்டும்.

Please Click here to login / register to post your comments.