ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதை சுதந்திர தினத்தன்றே அரசு ஆரம்பித்திருக்கலாம்

சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உள்ள கிளர்ச்சியினைத் தூண்டும் வகையிலான பல அறிவிப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தார். நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் என்றும் இவற்றை நாம் எண்ணலாம். பொதுமக்களது தேசியத்துவ உணர்வுகளையும் அவர்களது நாட்டுப் பற்றினையும் தூண்டும் வகையில் ஜனாதிபதியினது உரை சிறப்பாக சுதி சேர்க்கும் வகையில் இருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால், மக்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை, என்பவற்றை அடுத்துக் கூறி எமது பொருளாதாரத்தை வலிமையாக்குவதன் மூலமாகவே எமது நாட்டை சுதந்திரமானதும் இறைமைமிக்கதுமான நாடாக தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு பயங்கரவாதத்தை வென்றெடுத்ததைப் போன்றே நாம் ஒன்றுபட்டு இவற்றிற்காகவும் செயற்பட வேண்டியுள்ளதெனக் கூறினார்.

நாட்டின் சென்மதி நிலுவையில் இடையூறுகள் நிலவும் இக்காலகட்டத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் ஜனாதிபதி அளித்த பொருளாதார சுபிட்சம் தொடர்பான உறுதிமொழிகள் மிக முக்கியமானவையாகும். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்றுமதிகளின் பெறுமதியை விட இறக்குமதிகளின் அளவு அதிகமாக இருப்பதனை பல மாதங்களாகவே அரசாங்கம் மறுத்துவந்தபோதிலும் தனிப்பட்ட பொருளியலாளர்கள் எச்சரிக்கை விடுத்தே வந்துள்ளனர்.

பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெற்றிகளால் இறக்குமதிகள் பெருமளவில் ஏற்பட்டு நாட்டில் வர்த்தக பற்றாக்குறை 2011 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 9 பில்லியன் ஐ.அ. டொலராகியது. அதனால் ஜனவரி 2012 ஆம் ஆண்டில் அந்நிய நாணய இருப்பு 6 பில்லியன் டொலர்களாக சுருங்கி விட்டது. ஜூலை 2011 ஆம் ஆண்டளவில் அந்நிய நாணய இருப்பு 8 பில்லியன் ஐ.அ. டொலராக இருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவற்றின் இறுதி விளைவாக மத்திய வங்கி நாணய மதிப்பிறக்கம் பற்றி அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களது வாழ்க்கைச் செலவில் எதிர்மறைவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது நாடு மிகவும் கடும் பாடுபட்டு அடைந்த வெற்றியினை அனுபவிப்பதனைத் தடை செய்யும் வகையில் அரசாங்கத்திற்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக ஜனாதிபதி முறையிட்டார். வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதத்தின் அடிப்படையிலான சதித்திட்டங்களும், பிரசாரங்களும் இன்னும் முற்றாக முறியடிக்கப்படவில்லை என்றும் கூறினார். அவ்வாறாக நடவடிக்கை வெளிநாடுகளில் ஏற்படுகையில் இங்கே உள்ள சிலர் எமது தாய்நாட்டை நிலைகுலையச் செய்ய வேறான குழப்பங்களை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த ஐம்பது வருடங்களில் ஏற்பட்ட அபிவிருத்தியினை விட கூடிய அபிவிருத்தியைக் கடந்த மூன்று வருடங்களில் தனது அரசாங்கம் சாதித்துவிட்டதாகவும் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதி தனது பக்கத்திலிருந்து நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் அடிப்படை ஏற்பாடுகள் பற்றி உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றமையினை இது எடுத்துக் காட்டுவதாகக் கூறலாம். ஜனாதிபதி வெளியிட்ட அதீதமான கூற்றுகள் அவருக்கு முன் நாட்டை ஆண்ட முன்னைய அரசாங்கங்களின் சாதனைகளைக் குறைவாக மதிப்பிடுவதற்காக இருந்திருக்க முடியாது.

1950 களில் செய்து முடிக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பரந்தளவிலான காடுகளை அளித்து நாட்டின் கிழக்குப் பகுதியில் விவசாயத்திற்காக பெருமளவான நிலம் திறக்கப்பட்டது. அத்துடன் அதன் மூலம் அப்பகுதி நாட்டின் அரிசிக் கிண்ணம் ஆகியதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலமற்றிருந்த குடியானவர்களுக்கு நிலவுரிமையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 1970 களில் மகாவலி திசை திருப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் மத்திய, வட மத்திய பகுதிகளில் பெருமளவான நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டன. பொருளாதாரத்தைத் திறந்து விட்டு, சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீடுகளைச் செய்ததன் மூலம் 1980 களில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கான வெளிநாட்டு மூலதனம் பெறப்பட்டது. இவுற்றோடு 1990 களில் பத்து இலட்சம் வீடுகள் திட்டமும் செய்து முடிக்கப்பட்டது.

விசையுடன் ஏற்பட்ட உந்தல்

கடந்த மூன்று வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட பெரிய பொருளாதார திட்டங்கள் அவற்றின் உள்ளார்ந்த வளங்களுக்கு ஏற்றவகையில் முழுத் திறனுடன் செயற்பட ஆரம்பித்ததுடன் நாட்டில் அபிவிருத்தி ஏற்படும் என ஜனாதிபதி கற்பனையாக அனுமானித்திருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக அம்பாந்தோட்டைக்கு உலகின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான கப்பல்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் சேவைகளைப் பெற வந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால், துறைமுகத்தினுள் நுழையும் இடத்தில் உள்ள பாறைகள் தடையாயிருப்பதாலும் அவை இன்னும் அகற்றப்படாதிருப்பதாலும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் கப்பல்கள் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. அதனைப் போன்றே நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரியினைப் பயன்படுத்தி சக்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் அதன் ஆரம்ப நிலையில் அடிக்கடி தீ சடுதியாக ஏற்படுவதால் அதனைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த பின்னரே முழு உற்பத்தித் திறனைப் பயன்படுத்தியும் உற்பத்தியிலீடுபட முடியும்.

வீதி வலைப் பின்னல் அமைப்புகளின் அபிவிருத்தியினை தெற்கு விரைவு வீதியினை அடிப்படையாகக் கொண்டவகையில் மதிப்பீடு செய்யலாம். கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டமும் கையிருப்பில் உண்டு. காலி வீதியில் சில விருத்திகள் ஏற்பட்டுள்ளமையினை உதாரணமாகக் கொள்ளலாம்.

இவ்வாறான திட்டங்களை சரிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறும் விசையுடன் ஏற்பட்ட உந்தல்களால் பொருளாதாரம் சாதனைகளை ஏற்படுத்திக் கொள்ளப்போவதாகக் கூறலாம்.

ஜனாதிபதியினது உறுதிமொழிகளை நம்பத் தயாராக இருக்கும் இலங்கை மக்களை நம்பவைப்பது அரசாங்கம் எதிர்நோக்கும் சவால் என கூறுவதற்கில்லை. இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கூறியதைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றிருப்பதால் அரசாங்கம் அளிக்கும் உறுதிமொழிகளை அது நிறைவேற்றக்கூடியது என்னும் நம்பிக்கை மக்களிடம் நிலவுகின்றது. அதனால் மக்கள் அரசாங்கத்தின் உறுதிமொழிகளைத் தொடர்ந்தும் நம்பத்தயாராகவே இருப்பார்கள். பிரச்சினை அதுவல்ல. அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய தேவை உண்டு. அதுதான் பிரச்சினையாகும்.

யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்களை தொடர்பானவையே அழுத்தங்களை ஏற்படுத்தும் பிரதான பிரச்சினையாகும். இவ்வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தினை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் தனது கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கை இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆவன செய்யும் என பல முறைகள் உறுதி கூறியிருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழு மிக பரந்தளவிலானதும் சிறந்ததுமான பல்வேறு சிபாரிசுகளை தான் கண்டறிந்தவற்றின் அடிப்படையில் செய்திருந்தது. பிரித்தானியாவின் அலைவரிசை 4 இனால் காட்டப்பட்ட யுத்தப் படுகொலைகளைக் காட்டும் வீடியோப் படம் உள்ளிட்ட மனித உரிமைகள் மீறுவதான குறித்த சம்பவங்கள் உள்ளடக்கிய புலனாய்வுத் தகவல்களை அவை கொண்டிருந்தன.

ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பொலிஸ் மற்றும் பொதுச் சேவைகள் என்பவற்றை அரசியல் தலையீடற்ற வகையில் நல்லாட்சிக்கு உட்படுத்துவதனை உள்ளடக்கியும் தமிழ் மக்களது குறைகளைத் தீர்த்து வைக்கக்கூடியதான சீர்திருத்தங்களை உள்ளடக்கியும் செய்யப்பட்டிருந்தன. அவ்வாணைக்குழு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிய தனது சிபாரிசுகளில் தற்போதைய மாகாண சபை முறையில் ஏற்பட வேண்டிய மேம்பாடுகள் பற்றியும் மத்திய அரசு அதிகார பரலவாக்கம் செய்வது பற்றியும் கீழ் மட்டத்திற்கு அதிகார பரவலாக்கத்தினைக் கொண்டு செல்லும் வகையிலான அரசியல் தீர்வுகளுக்கான வழிகாட்டல்களையும் அது கூறியுள்ளது.

அரசாங்கத்திடம் அரசியல் ரீதியான உடன்பாடு இருக்குமானால், எளிமையாகவும் சுலபமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதான சிபாரிசுகளை உள்ளடக்கிய வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை காணப்படுகிறது. அவ்வாறான சிபாரிசுகளில் தேசிய கீதத்தினை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பது தேசிய நிகழ்ச்சிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறல் என்பன உள்ளடங்குகின்றன."தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் சமாந்தரமாக ஒரே மெட்டில் இசைப்பதனை பேணி ஆதரிக்க வேண்டும்' என நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு இலக்கம் 9.277 கூறுகிறது.

அத்துடன் அதன் சிபாரிசு 9.285 இன் படி “தேசிய தினத்தன்று வேறான நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுமையான முரண்பாட்டினை பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டொருமைப்பாடு மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளல் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் அதன் மூலம் எமது ஒன்றிணைந்த அர்ப்பணிப்பின் வாயிலாக இந்நாட்டில் இதுபோன்ற இரத்தம் சிந்தல் இனிமேலும் எப்போதும் ஏற்படாது என்பதனை உறுதி செய்தல் வேண்டும்' எனப்படுகிறது.

பொருத்தமான சந்தர்ப்பம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற தருணம் சுதந்திர தின கொண்டாட்டமாகவே இருந்திருக்கும். பெருமளவிலான இலங்கையர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ள இராஜ தந்திரிகளும் சுதந்திரதின நிகழ்ச்சிகளை அவர்களது தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்திற்கு சமுகமளித்து நேரடியாகவும் பார்த்துள்ளனர். அரசாங்கம் தேசிய கீதத்தினை சிங்களத்திலும் தமிழிலும் இசைத்திருக்கலாம்.

இலங்கையின் குடித்தொகையில் கால்பங்கினளவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு இதன் மூலம் அவர்கள் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தப்படுகின்றனர் என்ற ஒரு எதிர்மறையற்ற செய்தியினைக் கொண்ட சென்றிருக்கும். அத்துடன் யுத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுபடுத்துவதற்கான சைகையினைக் காட்டித் துயரற்றுள்ள மக்களுடைய மனங்களில் அமைதியை ஏற்பட வழி செய்திருக்கவும் முடியும்.

நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழு தனது

அறிக்கையில் "இந்நாட்டில் இனப்பிச்சினைக்கு அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டியவர்கள்' என கூறியிருப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் தமது மன சாட்சியின் படி நடப்பவர்களை அனைவரும் இக்கூற்றினை தமது கவனத்தில் கொள்ள தவறக்கூடாது. எனவே ஆணைக்குழு கூறியவற்றினை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டதாகவும் கூறலாம். ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று முதல் நாம் பெருமளவான காரியங்களைச் செய்துள்ளோம்.

இருந்த போதிலும் ஜனாதிபதி இவ்வாறு ஆணைக்குழு அறிக்கை மீது ஈடுபாடு காட்டிய போதிலும் எவ்வாறு முன்னைய சந்தர்ப்பங்களில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைத்து வந்தனரோ அதே போன்றுதான் சுதந்திர தின விழாவிலும்தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டமை சிங்களம் மட்டும் என்ற 1956 ஆம் ஆண்டு சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டமை முதலாக ஏற்பட்ட தமிழ்சிங்கள வேற்றுமை உணர்வு முரண்பாடு வேறெந்த பிரச்சினைகளை விடவும் இவ்விரு மக்களிடையே கூடியளவில் பாதிப்பினை ஏற்படுத்தியதாயிற்று. ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த செய்துள்ள தீர்மானம் ஒருபுறமிருக்கத்தக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

மூன்று தசாப்த யுத்தத்தில் தமது உயிரிழந்தவர்களைப் பற்றி ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்ட போது அவர் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த தேசப் பற்று கொண்டவர்களைப் பற்றியும் கூறியுள்ளார். அவர் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்த கொடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கூற வில்லை.

சுதந்திர தினத்தன்று நாட்டிடமும் சர்வதேச சமூகத்திடமும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கடந்த கால நிலைவரங்களிலிருந்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வாய்ப்புகளை ஜனாதிபதி தவறவிட்டு விட்டமை பெரிதும் துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த சில இடைக்கால சிபாரிசுகளைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமையினைப் பற்றியும் ஆணைக்குழு குறிப்பிட வேண்டிய தேவை காணப்பட்டது.

பெரும் தாமதமின்றி வெகு விரைவில் தனது வார்த்தைகளைத் தொடர்ந்து செயல்களும் ஏற்படும் என்பதனை நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி சர்வதேச சமூகங்களிடமும் தெரிவிக்கும் இன்னும் ஓர் சந்தர்ப்பத்தினைக் கண்டறிந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் வீணாகிவிட்டன என்னும் நிலைக்குச் சென்று விடக் கூடாது.

Please Click here to login / register to post your comments.