அறிவியல் துறையில் அசோகச் சக்கரவர்த்தி

மாவீரன் அலெக் சாண் டருக்கு அடுத்து வரலாற்று ஆர்வலர்களால் அதிகம் போற்றப்படுவது மெளரிய வம்சத்தை நிறுவிய சந்திரகுப்தரின் பேரனான பேரரசர் அசோகரையே.

வடக்கே இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி, கிழக்கே பங்களாதேஷ், அசாம் வரையிலும், தெற்கே அந்தரா, கேரளா வரையிலும் பரந்து விரிந்து இருந்த மெளரிய சாம்ராஜ்யத்தை பேரரசர் அசோகர் ஆட்சி செய்தார்.

இவர் ஆட்சியில் நடந்த கலிங்கப் போரை யாராலும் மறக்க முடியாது. ஏறக்குறைய கி. மு. 260 ல் கலிங்க நாட்டுக்கும் (இன்றைய ஒரிசா மாநிலம்) அசோக ருக்கும் இடையே நடந்த போரே கலிங்கப்போர் ஆகும். பல போர்களை கண்டு வெற்றி வாகை சூடிய அசோகரே, கலிங்கப் போரின் முடிவில், இனி போரே வேண்டாம் என்று அஹிம்சையை நாடி புத்த மதத்தை தழுவியதன் மூலம், கலிங்கப் போர் எவ்வளவு கொடூரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருந்து இருக்க வேண்டும் என்று நம்மால் உணர முடிகிறது. இந்தப் போரில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேலானோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் அசோகரை புத்த மதத்திற்கு மட்டும் மாற வைக்க வில்லை. அவரை ஒரு திறமைவாய்ந்த அமைப்பையும் உருவாக்க வைத்தது. அந்த அமைப்பின் பெயரே ‘Nine Unknown Men’ இந்த அமைப்பே உலகின் மிகவும் பழமையான இர கசிய அமைப்பு என்று கூறப்படுகிறது.

கலிங்கப் போரில் நடந்த உயிர் சேதத்திற்கு மனிதனின் அறிவே காரணம் என்றும். இது போன்ற மனித இனத்துக்கு தீங்குவிளைவிக்க கூடிய அறிவை சாமான்ய மனிதனும் அறிந்து இருந்தால், விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்றும் அசோகர் நம்பினார்.

இந்த அறிவைப் பாதுகாக்க அவர் அமைத்த அமைப்பே. ‘Nine Unknown Men’ என்கின்ற அமைப்பு. இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னாளில், அறிவை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவரவர் துறைகளில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து அதை வளர்க்கவும், தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும் ஆணை இடப்பட்டது.

கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிர்களால் மனிதனுக்கு உள்ள நன்மைகளும் தீமைகளும் பற்றி ஆராயும் துறையும் இதில் அடங்குகிறது.

விமானங்கள் செய்வது எப்படி என்று ஆராயும் துறையும் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளது.

இராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றதாக இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. இராமாயணத்தை கதையாகவே வைத்துக் கொண்டாலும், விமானம் என்ற ஒரு கருதுகோளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன் வைத்தவர்கள் இந்தியர்கள்.

ஒளியின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது எப்படி, ஒளியை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி, என்று இந்த துறையை சேர்ந்தவருக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது.

இந்த இரகசிய அமைப்பு, பெயருக்கு ஏற்றாற் போல், மிகவும் இரகசியமானது. இதில் இருக்கும் ஒன்பது பேருக்குமே கூட ஒருவரை ஒருவர் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த இரகசிய அமைப்பை பற்றி முதலில் எழுதியவர் தல்போட் முண்டி என்ற ஆங்கில நாவலாசிரியர். இவர் 25 ஆண்டுகள் காவல் துறை அதிகாரியாய் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘The Nine Unknown’ என்ற நாவலில் தான் முதன் முதலில் இந்த இரகசிய அமைப்பு பற்றிய தகவல் வெளியானது.

பின் 1960ல் வெளியான Louis Pauwels and Jacques Bergier எழுதிய ‘The Morning of the Magicians’ என்ற நாவலில், 1860ல் இந்தி யாவில் பணிபுரிந்த Louis Jacolliot என்ற ஒரு பிரெஞ்சு நாட்டு நீதிபதி இந்த இரகசிய அமைப்பை பற்றி அறிந்திருந்தார் என்று கூறுகின்றனர். இவர்கள் இதில் குறிப்பிட்டு இருக்கும் மற்றும் ஒரு தகவல் நம்மை ஆச்சரியம் அடைய செய் கின்றது.

இந்த இரகசிய அமை ப்பை சேர்ந்தவர்கள் மனி தர்களுடன் பழகுவதில்லை. அறிவியல் நன்கு அறிந்த வர்கள், மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் என்று இவர்கள் யாரை நினைக் கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

‘swastika’ மற்றும் யூதர்களின் சின்னம் நடசத்திரம். இரண்டுமே இந்து மதத்தின் பழம் பெரும் சின்னங்கள்.

இந்த இரகசிய அமைப்பை பற்றி ஆராயும் சிலர், அசோகர் இந்த அமைப்பை ஆரம்பிக்க வேறு ஒரு காரணமும் இருக்கிறது என்று கூறுகின்றனர். அது 15000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆயுதங்களால் அழிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மீதங்களை இவர் கண்டுபிடித்தார் என்றும் அதை அவர் இராமர் ஆண்ட பூமி என்று நம்பினார் என்றும் கூறப்படுகின்றது.

அட்லாண்டிஸ் என்ற இடம் ஒரு பெரிய கண்டமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இருக்க வேண்டும். இதை பல நாட்டு மேதைகளும் பல நூற் றாண்டுகளாக தேடி கொண்டு இருக்கின்றனர். இந்த அட்லாண்டிஸ் தான் தமிழ் பாடப் புத்தகத்தில் வந்த குமரி கண்டம் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்போதைக்கு இது இன்றைய இந்தோனேசியாவும் அதன் தீவுகளுமே அட்லாண்டிஸ் என்று நம்பப்படுகிறது.

Please Click here to login / register to post your comments.