வைகோவுடன் உங்களுக்கு என்ன பிரச்னை?

ஆக்கம்: க.ராஜீவ்காந்தி
குறிப்பு: பாரதி ராஜளா விகடனுக்கு வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி - (ஈழம், தமிழ் நாடு சார்ந்த விடயங்களை மட்டும் இங்கு பிரசுரிக்கிறோம்)

பாரதிராஜாவின் முழுப்பேட்டி விகடன்.com உள்ளது.

நன்றி: தமிழ் கனேடியன்

''வைகோவுடன் உங்களுக்கு என்ன பிரச்னை?''

''வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியதுதானே? எதுக்கு தமிழ்நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதையாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க... திராவிடன், பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக்கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரிதான். எனக்குத் தமிழன்தான் முக்கியம்.''

''எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் செயல்பாடு...''

(கேள்வியை முடிக்கும் முன்பே ஆவேசமாக...) ''தமிழனைத் தமிழன்தான் ஆளணும்னு சொல்லிட்டேன். அதிலேயே இதற்கான பதில் அடங்கிவிட்டது. மத்தவங்களைப் பத்தி நான் பேச விரும்பலை.''

''பரபரப்புக்காக மேடைகள்ல அரசியல் பேசிவிட்டு, பாதியில் ஓடிவிடுகிறீர்களே?''

(ஆவேசமாக...) ''தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மேல நம்பிக்கை இழந்துட்டேன். அதுதான் காரணம். கருணாநிதி உண்ணாவிரதம், ஈழப் பிரச்னை... இப்படி எவ்வளவு பிரச்னைகள் பாதில முடிஞ்சு இருக்கு. கேட்டிருக்கீங்களா? இலங்கைப் பிரச்னைல மேடையில பேசினவங்கள்லாம் என்ன கிழிச்சாங்க? தமிழருவி மணியன், நல்லகண்ணு மாதிரி ஆளுங்களைத் தவிர்த்து, நாணயமான அரசியல்வாதிகள் யாரையாவது காட்டுங்க பார்ப்போம். எனக்குக் குரல் கொடுத்துட்டு ஒதுங்கித்தான் பழக்கம். ஏன்னா, நான் சேவல் மாதிரி. கூவி எழுப்பத்தான் முடியும். ஒவ்வொருத்தராப் போயி கொத்தி எழுப்ப முடியாது. கூவுறதைவெச்சு நீங்கதான் எழுந்திருக்கணும். நீங்க முழிச்சுக்கலைன்னா, நான் பொறுப்பு கிடையாது.''

Please Click here to login / register to post your comments.