தேம்பியழுகிறது தேசம்...

ஆக்கம்: கணிதன்
ஐயகோ....!
எம் ஜீவனழுகிறதே
மீள ஓர் முறை....

என்ன கொடுமையிது...
நோயுன்டதே - எம்
பேறறிவை....!

ஏன் இந்த துயர்
மீண்டும் _ எம்
நெஞ்சேற
விம்மிப் புடைக்கிறோம்..?

தூண் சரிந்ததோ..?
மீண்டும் எம்
நூலகம் எரிந்ததோ...?

தலைவனை
தம்பியென்றழைத்து
தத்துவம் சொன்னவரே
எரிமலையில் குடிகொன்ட
எம்மினிய
அறிவூற்றே......!
கரைந்து போனதே - மதிக்
கடலொன்றிங்கே....!

பகையோடு பேச
இனியேதுமில்லை
என்றெண்ணிப்போனீரோ...?
உம் பணி முடிந்ததென்று
உரைத்தவர் யார்....?
இடை நடுவில்
வழி தேடியன்றோ
நிற்கின்றோம்....!

தேசத்தின் குரலே......!
தேம்பி அழும் எமை
தேற்றி அறிவுரைக்க
வருவீரோ...?
ஆற்றலே....
அணையுடைந்த
ஆறாக விழி நீர்சொரிய
அனாதரவாய் வெடிக்கிறோம்...
விரைந்தனைக்க வருவீரோ....?

மறைந்த ஒளியே
மண்டியிடுகிறோம்...
சென்றவரே..எஞ்செம்மலே..
உம் மதியுரைத்த
வழி செல்வோம்..
நீர் விதைத்த உறுதியுடன்
ஆனையிடுகிறோம்...
விடியும் வரை வீழோம்.....!

நன்றி: யாழ்

Please Click here to login / register to post your comments.