காத்தாடி இவரல்ல
காலா! நீ கற்றறிவாய்!!

ஆக்கம்: கனடாவிலிருந்து வல்வை சகாறா
ஈர்விழிகள் நீர் கசிய
இதயப்பூக் கனக்கிறது.
மார்தட்டி நிமிர்ந்த இனம்
மௌனித்துக் கிடக்கிறது.
வேர் வெம்பி விம்மும் ஒலி
காற்றேறி அலைகிறது.
சீர் ஓங்கும் தமிழீழச்
சின்னமதும் உறைகிறது.

தீர்வெழுதி உனைத்தின்றோன் - எம்
திசை தெரியாதென்றானா? - ஷெல்த்
தூர் தெறிக்கும் எம்தேசத்
துயர் புரியாதென்றானா?
நீறிட்ட நெருப்பெரியும் - எம்
போர் முற்றம் வந்தானா?
பீறிட்டுப் பாயும் தமிழ்
குருதி நிறம் கண்டானா?

ஏன் எடுக்க வந்தான்? - இவன்
எல்லைகள் மீறி....
ஏன் எடுக்க வந்தானிவன
் எல்லைகள் மீறி?

வான் உயரும் மாவீரம்
வதைத்த உணர்வாலா?
சாண் எட்டு சக்தி காணச்
சிந்தை வெந்ததாலா?
தூண் சாய்த்து தமிழ் வெல்லத்
துடித்து எழுந்ததாலா?
கூன் வென்று தாயீழம்
முடி கொள்வதாலா?

ஏன் எடுக்க வந்தான்? - இவன்
எல்லைகள் மீறி....
ஏன் எடுக்க வந்தானிவன
் எல்லைகள் மீறி?

கூத்தாடி அனுப்பி வைத்தான்!
அட..! எமதர்மா! கூட்டிப்போ!!
காத்தாடி இவரல்ல...
காலா! நீ கற்றறிவாய்!!
வாய்த்தாயே.. நீ முற்றும் அவர்
வாய் சாற்றும் வழி நித்தம்.- இனிப்
பூத்தூவித் தொழுவாயே! - உன்
புலன் வெல்லும் இவர் சித்தம்.

ஈரெட்டுப் பதினாறு
இளமை இவர் தத்துவம்.
கூர் வாளும் முனை மழுங்கும்
மதி இவரின் வித்துவம்.
பார் விட்டுப் பறிக்கும் - உன
் பாசம் வெறும் பத்திரம்.
யாரென்று உணர் மனதில்
பாலா பசுஞ் சித்திரம்.

நன்றி: தமிழ் நாதம்

Please Click here to login / register to post your comments.