பாரம்பரிய மற்றும் பல்கலாச்சார அமைச்சின் பாரளுமன்ற செயலாளராக நியமனம் பெற்றார் திரு ஹரி ஆனந்தசங்கரி

ஆவணி 31ம் திகதி 2018 அன்று திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாரம்பரிய மற்றும் பல்கலாச்சார அமைச்சின் பாரளுமன்ற செயலாளராக நியமனம் பெற்றார்.

2015ம் ஆண்டு ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியது தொடக்கம் ஹரி அவர்கள் பாரளுமன்றத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகத்திலுமே செயற்திறன் மிக்கவராகத் திகழ்கின்றார்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்ட ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் மிகவும்சிறப்பாக செயற்படுவார் என்பது கண்கூடு.

அவரது கடந்த பல தகாப்சகால செயற்பாடுகள் அவரது ஒழுக்கத் தத்துவத்தையும்,நேர்மைத்துவத்தையும், நெறிமுறை தவறாத வாழ்க்கை முறையையும் மட்டுமன்றி அவர் பொதுவாழ்வின் மீது வைத்துள்ள அக்கறையும் பறைசாற்றி நிற்கின்றது.

எம் நல்வாழ்த்துகள்.

Please Click here to login / register to post your comments.