`தமிழ்த் தேசியத்தை நேசித்த அதிகாரபூர்வமான குரல்'
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தமிழ்த் தேசியத்தை நேசித்த அதிகாரபூர்வமான குரல் என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியம் சம்பந்தமாக தெட்டத் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த, அதிகாரபூர்வமாக தமிழ்த் தேசியத் தலைமைக்கு ஆலோசனை வழங்கவல்ல `தேசத்தின் குரலாய் சர்வதேசமெல்லாம் அதிகாரபூர்வமாக ஒலித்த குரல்' தனது இறுதி மூச்சுவரை தமிழ்த் தேசத்தின் துயரத்தை தாங்கி நின்று ஓய்ந்துவிட்டது.
தமிழ்த் தேசத்தை, தமிழ்த் தேசியத் தலைவரை நேசித்த, விசுவாசித்த அதிகாரத்தோடு பேசவல்ல, உலகறிந்த நறுக்கென்று பதிலளிக்கவல்ல தெளிவுகொண்ட ஒருவராக திகழ்ந்தவர் கலாநிதி பாலசிங்கம்.
இன்றைய உக்கிர நிலையடைந்துள்ள இனப்பிரச்சினையின் நிலைப்பாட்டில் சர்வதேச பேச்சுவார்த்தைக்கான தீர்வாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய டாக்டர் பாலசிங்கத்தின் மறைவு சர்வதேச ஏற்பாட்டாளர்களின் பேச்சுவார்த்தையின் இக்கட்டான சந்தர்ப்பங்களிலான சந்திப்புக்கு ஓர் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரசுரித்த நாள்: Dec 17, 2006 12:58:48 GMT