பாலாவின் மறைவு வேதனைக்குரியது' ஆறுமுகம் தொண்டமான் அனுதாபம்
வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்து இயம்பியவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு மிகவும் வேதனைக்குரியது என்று இ.தொ.கா.தலைவரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அன்னார் ஒரு சிறந்த ராஜதந்திரியாகவும், சமாதான பேச்சுகள் மூலம் வடக்கு, கிழக்கு பிரச்சினையை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.அவருடைய பேச்சாற்றலாலும் அவரது அணுகுமுறைகளினாலும் உலக நாட்டுக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெளிவு படுத்தப்பட்டது.
அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது சிறுபான்மை சமூகத்தினர் அனைவருக்கும் மாபெரும் இழப்பாகும் என்றும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பிரசுரித்த நாள்: Dec 17, 2006 13:02:18 GMT