தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் ஆயுதமாக விளங்கியவர் பாலசிங்கம் - கவிஞர் கனிமொழி புகழாரம்

மறைந்த ஆண்டன் பாலசிங்கம் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் ஆயுதமாக விளங்கினார் என்று கவிஞர் கனிமொழி கூறினார்.

இரங்கல் கூட்டம்

விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தினë மறைவுக்கு தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. இநத கூட்டத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் ஆண்டன் பாலசிங்கம், தமிழர்களின் பெருமைகளையும், வலிகளையும், துயரங்களையும் உலக மககளிடையே கொண்டுசென்றார்.

ஆயுதமாக விளங்கினார்

தமிழ் ஈழ விடுதலை போராடடத்தின் நியாயங்களை, தத்துவங்களை உலக நாடுகளிடையே எடுத்துச்சென்ற பெருமை அவருக்கு உண்டு. அவர் போர்க்களத்திற்குசென்று ஆயுதம் ஏந்தì போராடவில்லை. ஆனால், அவரே ஒரு ஆயுதமாக விளங்கினார்.

மறைந்த ஆண்டன் பாலசிங்கம் புதைக்கபëபடவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார். அவரை போல் மக்களின் நியாயங்களை உலக நாடுகளிடையே கொண்டுசெல்ல பல குரல்கள் உருவாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலாக மாற வேண்டும். அதற்காக இந்த நேரத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம். அந்த மக்களுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "விடுதலை புலிகள் தீவிரவாதிகள் அல்ல, பயங்கரவாதிகள் அல்ல, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியவர் ஆண்டன் பாலசிங்கம். விடுதலைப் புலிகள் பறறி தவறாக பிரசாரங்கள் செய்யப்படும் போது எல்லாம் அவர் அதை முறியடித்து தெளிவுபடுத்தினார்'' என்று கூறினார்.

ம.தி.மு.க. எம்.பி. செஞ்சி ராமச்சந்திரன் பேசும்போது, "விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துவைத்த சொல்வன்மை பெற்றவர் ஆண்டன் பாலசிங்கம்''என்று குறிப்பிட்டார். முன்னதாக, ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய குறுந்தகட்டை வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் இணை பொதுச்செயலாளர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., இயக்குனர் செல்வபாரதி, டாக்டர் வேலாயுதம், சாகுல் அமீது, விஜயா தாயன்பன், குலோத்துங்கன் உள்பட பலர் பேசினர்.

Please Click here to login / register to post your comments.