மண் என்று ஒரு படம் - ஈழ கிராமத்தின் கதை

ஆக்கம்: வெங்கட் சாமிநாதன்
நம்மை அறியாது தான் சில விஷயங்களில் நாம் சில செயல்களைச் செய்து விடுகிறோம். பழகிய பாதையில், மற்றவர் வெற்றி கண்ட பாதையில் செல்வது ஆபத்தற்றது. அப்படித்தான் நினைத்துச் செயல்படுவதாக எண்ணிக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஏதாவது நிகழ்ந்து விடுகிறது. வரப்பில் நடந்து வரும்போது சற்றுக் கால் தடுமாறி வயýல் கால் வைத்து விடுவது போல. அல்லது அடர்ந்து மேலெழ முயலும் நீராவி மூடியைத் தூக்கி எறிந்தால், எப்படி ஏன் என்று சிந்திக்கத் தொடங்கினால் ஒரு புதிய பாதையின் தொடக்கம் நிகழ்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ நிகழும் இப்பாதை விலகல் விளைவிக்கும் தாக்கத்தைப் பொறுத்து, பெறும் வரவேற்பைப் பொறுத்து, புதிய பாதைகள் உருவாகின்றன.

இப்படித்தான் சில நல்லதுகள் மின் வெட்டுப் போல் தெறிக்கின்றன. தற்செயலாகத் தான். அதை விருபிப் பின் சென்றால், நல்லது. ஆனால் அப்படி நிகழுமா என்பது தெரியவில்லை. பொறி பறப்பது தெரிந்தால் தானே, அது நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்தால் தானே, அதைப் பின் தொடரலாம். சரி, சரி, இப்படியும் தான் இருக்கும் என்று துடைத்து எறிந்து விட்டு, பழைய நிலையிலேயே நாம் இருந்து விட்டால்...?

ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி, கோýவுட் கோர்ட் என்று. புதிதாக வெளிவந்திருக்கும் படத்தின் நடிகர்கள், இயக்குநர்களைப் பேட்டி காணும் நிகழ்ச்சி. தொகுப்பாளர் கேள்வி கேட்பார். பார்வையாளர் இருபது பேர் இருப்பார்கள். அப்படி எதுவும் சிக்கலான, சங்கடமான கேள்விகள் கேட்டுவிட மாட்டார்கள். இதுவும் ஒரு பழகிய தடத்தின் சமாச்சாரம்தான். பேட்டிக்கு அழைக்கப்படுபவருக்கு விளம்பரம். மாதிரிக்கு என ஒரு சில நான் பார்த்திருக்கிறேன். நாம் போற்றிக் காத்து வரும் சினிமா பார்வை, மதிப்பீடுகளுக்குள்ளேயே தான் சுழன்று வரும். அனேகமாக எல்லாமே பாராட்டப்படும். வியந்து இதை எப்படிச் செய்தீர்கள் என்ற வகையில்தான் கேள்விகள் இருக்கும். தனுஷை யாரும், "நீ ஒரு ஒல்ýப் பிச்சான், ஒண்டியா எப்படிப்பா பத்துப் பேரைச் சமாளிச்சே, கராத்தேயும் குங்ஃபூவும் எப்போ கத்துக்கிட்டே?" என்று கேட்டதில்லை. எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் இப்படிக் கேள்விகள் கேட்டு விட முடியாது. நாம் கேட்பதில்லை. "ஐயா உங்க மூச்சிலே தமிழ் இருக்கா?" என்று ரஜனி சாரைக் கேட்பார்களா யாரும்? ஆனால் இப்படி ஒரு அதிசயம் ஒரு வாரம் நிகழ்ந்தது, தற்செயலாக.

இரண்டு புதியவர்கள் இருந்தார்கள், அந்த வார கோýவுட் கோர்ட்டில். பின்னர்தான் எனக்குத் தெரிந்தது அம்மூவரில் ஒருவரை நான் முன்னரே தெரிந்திருக்கிறேன் என்பதை. ராஜ்குமார். காமிராமேன். சென்னை வந்த புதிதில், ஆறு வருஷங்களுக்கு முன் ஆயிஷா என்ற ஒரு சின்ன படம். அதில் அவர் காமிராமேனாக இருந்திருக்கிறார். சரி. இவர்கள் மண் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். இதற்குப் பின் இருந்த இயக்குநர், உந்து சக்தியாக இருந்தவர், ராஜேந்திரன் என்பவர். யாழ்ப்பாணத்துக்காரர். ஆனால் அவர் மலேசியாக்காரர் இப்போது. லண்டனிலும் இருந்தவர். அங்கும் தொழில் செய்தவர். கடந்த 20 வருடங்களாக அல்லாடப்படுபவர்கள் ஈழ மக்கள். அவர்கள் கடைசியாக ஒரு இடத்தில் தங்கும் முன் எங்கெங்கெல்லாம் அல்லாடி கடைசியாக ஒரு இடத்தில் வேர் ஊன்றுவார்கள் என்று தெரியாது. இத்தகைய அல்லாடல்களுக்கு இடையே தான், கலையும் நாடகமும் கவிதையும் இணைய இதழ்களும் தமிழும். இவையெல்லாம் உடன் செல்லும். நாம் சுகமாக ஒரே இடத்தில் வசதியாக இருந்துவிட்டதால், தமிழ்நாட்டிலேயே இருப்பதால், தமிழேகூட நமக்கு அவசியமாக இருப்பதில்லை. 'ஏங்ப்ப்ர் ஸ்ண்ங்ஜ்ங்ழ்ள், இப்போ நாம ம்ங்ங்ற் பண்ணப்போற" என்றுதான் நமக்குப் பேச்சே தொடங்கும்.

ஒரு கிராமத்தின் கதையை நான் சொல்ல முயன்றேன் என்றார் இயக்குநர், யாழ்ப்பாணம் ராஜேந்திரன். கடந்த 25 ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை என்னும் அளவுக்கு நடந்து வரும் கலவரங்களால், ஈழத்தின் நகரங்களும் கிராமங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கலவரங்களுக்கு முன் இருந்த கிராமம், இப்போது எந்த நிலையில் காணப்படுகிறது, ஈழம் என்னவாகியிருக்கிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கிராமத்தை 25 வருடங்களுக்கு முன் விட்டுச் சென்றவன். காதல் வசப்பட்டவன். பின் திரும்பி வருகிறான். இடையில் எங்கெங்கோவெல்லாம் அலைந்து அல்லாடப்பட்டவன். இது தான் கதை. கிராமத்து மக்களை வைத்தே கிராமத்தின் பின்னணியிலேயே 'மண்' படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.

ஈழம் இப்போதுள்ள கலவரங்களுக்கு இடையில் உங்களால் படம் எடுக்க முடிந்ததா? இலங்கை அரசிடமிருந்து உங்களுக்கு ஏதும் தடைகள் ஏற்படவில்லையா? என்று கேட்கப்பட்டது. "தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சுதந்திரம் அங்கு இல்லை. முதýல் ஸ்க்ரிப்ட் அரசுக்குத் தரப்படவேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் வேண்டும். அங்கு இந்த ஒப்புதல் ஒரு அமைச்சகம் சம்பந்தப்பட்டதல்ல. ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதலும் வேண்டும். இங்கு அப்படியான விதிமுறைகள் கிடையாது. வெளிப்புறம் படம் எடுக்கும் போது அந்த இடத்து நிர்வாகத்திடம் படம் எடுக்க அனுமதி பெற்றால் போதும். ஸ்க்ரிப்ட் உங்கள் சுதந்திரம் இங்கு. ஆனால் எங்களுக்கு அந்த மாதிரியான தடைகள் எதுவும் எழவில்லை. கிராமம் அடைந்துள்ள மாற்றத்தைத்தான் இது சொல்வதால் அரசியல் தடை எதுவும் இல்லை. இது போரைப் பற்றிய படமோ கதையோ அல்ல. வாழ்க்கையைப் பற்றியது. அது பெற்றுள்ள மாற்றங்களின் முறை பற்றியது என்றும் சொன்னார்.

மக்களிடம்தான் சில தயக்கங்கள் இருந்தன. அங்கும் தமிழ்ப் படங்கள், பிரபலம் பெற்றவை. தமிழ்ப் பட நடிகர் þ நடிகைகள் வெகுவாகப் புகழ் பெற்றவர்கள். விஜய் அங்கு மிகப் பிரபலம் பெற்றவர். ஆக, இங்கு கிராமத்தில் எடுக்கும் படம், யாரும் தெரிந்த நடிகர்கள் இல்லாத படம் எப்படி இருக்குமோ என்ற கேள்விகள் அவர்கள் மனத்தில் இருந்தன. ஆனால் நாங்கள் புதியவர்களையும் கிராமத்து மக்களையுமே வைத்துப் படம் எடுத்தோம். இதில் எட்டு புதியவர்கள் நடிக்கிறார்கள். அவர்களில் சிங்களர்களும் உண்டு.

"புதியவர்களை நடிக்க வைப்பதில் சிரமமில்லையா?" என்று கேள்வி. படம் ஆரம்பிக்குமுன் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். நான் லண்டனில் பல செய்திப் படங்கள், குறும்படங்கள் தயாரிப்பில் பங்கு கொண்ட அனுபவம் கொண்டவன். அதற்கான பயிற்சியும் பெற்றிருக்கிறேன். இது போன்ற ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக மனத்தில் இருந்தது. 15þ20 நாட்கள் பயிற்சி கொடுத்த பின் வெகு திருப்திகரமாக அவர்கள் நடித்தார்கள். சந்தோஷமாக நடித்தார்கள். கிராமத்து மக்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்தார்கள். காமிராமேன் ராஜ்குமார், அவர்களுடன் தங்கியிருந்து அவர்கள் பயிற்சி பெறும்போது உடனிருந்ததால், தனக்குப் படம் எடுப்பதில் ஏதும் சிரமமிருக்கவில்லை என்றார். 'ஆயிஷா' படத்தில் சம்பந்தப்பட்டவரைத் தேடி இப்படியான அர்த்தமும் வாழ்க்கைப் பிரதிபýப்பும் கொண்ட படங்களில் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று நான் சந்தோஷப்பட்டேன்.

ஏன் நீங்கள் இதற்கு விளம்பரமே கொடுக்கவில்லை? என்று பார்வையாளரிடமிருந்து கேள்வி பிறந்தது. "மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் இது. முப்பத்தைந்தே நாட்களில் எடுக்கப்பட்ட படம். எங்களால் விளம்பரத்திற்கு மற்றவர்கள் செலவழிப்பது போல கோடிக்கணக்கில் செலவழிக்க முடியாது. படம் பார்த்தவர்கள் வாய் வழியாக செய்தி பரவும். இப்போது ஒரு சில இடங்களில் வெளியாகியிருக்கிறது. இப்படியே செய்தி பரவி, எங்களுக்குப் போட்ட பணம் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், அதற்கான விளம்பரம், பின் அதற்கான வருமானம் போதும். இப்படித்தான் நாம் எடுக்க விரும்பும் படங்கள் எடுப்பதும், அது நிலைப்பதும் சாத்தியம் என்றார் ராஜேந்திரன்.

'பாடல்கள் உண்டா உங்கள் படத்தில்?' என்று கேட்டார் ஒரு பார்வையாளர். உண்டு. 'இதில் நான்கு பாடல்கள் உண்டு' என்றார். பாலாஜி என்னும் டான்ஸ் மாஸ்டர் உதவியதாகச் சொன்னார். எனக்குச் சரியாக நினைவில்லை. பாலாஜி உதவினார் என்றால் டான்சுக்கா, பாட்டுக்கா? தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. படம் பார்த்தால்தான் தெரியும், பாலாஜியும் பாடல்களும் இப்படத்தில் பெறும் இடம் என்ன என்று.

மண் ஒரு சிறிய அளவில் வெற்றி பெற்று விடும். அதில் செலவழிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும். அது பின்னும் வேறு ஒரு முயற்சிக்கு வித்தாகும், இப்படியான தொடர்ந்த முயற்சிகள் ஒரு புதிய மரபை உருவாக்கலாம் என்று நம்பலாம். ஒரு சினிமா நடிகருக்கு 25 கோடி ரூபாயும் கொடுத்து, துருக்கியில் போய் டான்ஸ் ஆடச் செய்து படம் எடுத்தால், அதற்கேற்றபடி தான் மற்றவைகளும் செய்தாக வேண்டும். மண் அப்படியில்லை. இது தொடரக்கூடிய சாத்திய எல்லை வட்டத்துக்குள் செயல்படுகிறது. அது சரி, சாத்தியம் என்றால், ராஜேந்திரன் என்னும் ஒரு ஈழ மண்ணுக்காரருக்கு மாத்திரம் இப்படி எண்ணங்கள் உதிக்க வேண்டும்? லண்டனிýருந்தும் மலேசியாவிýருந்தும் இங்கு ஓடி வந்து தன் மண்ணின் வாழ்வைப் பதிவு செய்யத் துடிக்க வேண்டும்?

இதுதான் மண்ணின் குணம். வேறென்ன சொல்ல. இது ஏதும் ராக்கெட்டில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் செல்லும் பயணம் இல்லை. இருப்பினும். நமக்கு டான்ஸ் பார்ட்டியோடு ஸ்விட்ஸர்லாந்துக்குத்தான் பயணம் செல்லத் தோன்றுகிறது. மண்ணின் குணம்!

Please Click here to login / register to post your comments.