தாய்லாந்து நாட்டுச் சிறையிலிருக்கும் எமது தமிழ் உறவுகளின் கடிதம்

ஐயா!

இலங்கை அகதிகளாகிய நாம் தாய்லாந்து குடிவரவு, குடியகல்வு சிறையில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறோம் ஏற்கனவே நாம் எழுதிய கடிதம் தங்களை அடைந்திருக்கும் என நம்புகிறோம். இவ்விடயங்களை உங்களது ஊடக வாயிலாக வெளியிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த வெஞ்சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அகதிகளும் எமது சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் சில விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். நாம் சர்வதேச பொது நிறுவனங்களை உருக்கமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் குழந்தைகளையும் தாய்மார்களையும் இந்த வெஞ்சிறையில் இருந்து விடுவிக்க ஆவண செய்யுங்கள் என்பதாகும். உயிருக்கு பயந்து ஓடிவந்த நாம் செய்த குற்றம் என்ன? எமது உண்மை நிலமையை விபரித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள எமது உறவுகளான தழிழ் ஊடகங்கள் எமக்கு தோளோடு தோள் நின்று உதவிபுரியவேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.

அகதிகளுக்கான ஐநாவின் தூதுவராலய அதிகாரிகள் எம்மை கடந்த ஏப்பிரல் மாதம் 11 ஆம் திகதிக்கு பின்னர் சுமார் நான்கு மாதங்கள் சந்திக்கவில்லை. அர்கள் உள்ளே வர கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம். தங்களால் உள்ளே வர அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் அனுப்பியிருந்தார்கள்.

சொந்த நாட்டில் எமது வதிவிடங்களையும் சொத்துக்களையும் உறவுகளையும் விட்டு எமது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள சொல் லொண்ணாத் துயர்களை சுமந்து கொண்டு தாய்லாந்து நாட்டுக்கு வந்தோம் எம்மில் ஒருவருக்கும் ஒவ்வொரு துயரம் உண்டு. எதுவும் அறியாத எமது குழந்தைகள் எந்ந குற்றமும் செய்யாமல் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் நாம் செய்த ஒரே குற்றம் தாய்லாந்தில் உள்ள அகதிகளுக்ளான ஐநாவின் தூதுவராலயத்தில் பதிவு செய்தது மட்டுமே.

I.D.C என்று அழைக்கப்படும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு சிறை என்பது 40 ஒ 80 அடிகள் நீள அகலம் கொண்ட மண்டபங்களாகும். பெண்கள் பிரிவு சற்று பெரியது. பெண்கள் பிரிவில் பல நுற்றுக்கணக்கான வௌ;வேறு நாட்டு பெண் கைதிகளுடன் எமது பிள்ளைகளும், மனைவிமார்களும், சகோதரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். எமது பிள்ளைகளும், பெண்களும் நித்திரையை துறந்த பல இரவுகள் உண்டு. உறங்குவதற்கு இடமின்றி குழந்தைகளுடன் கால்ளை நீட்டி முடக்கக்கூட இடமின்றி படும் அவஸ்தைகள் பல, மனிதனேயம் படைத்தவர்கள் முடிந்தால் நேரடியாக வந்து பார்க்கலாம். பூட்டப்பட்ட இரும்புக் கதவுகள் திறக்கப்படுவதில்லை சூரிய ஒளியை தரிசித்து பல மாதங்கள் நோயுற்ற குழந்தைகளுக்கு மருந்து தேவையெனில் இரும்பு கம்பிகளுக்கு பின்னால் இருந்து ஆங்கிலம் அரைகுறையயாய் தெரிந்த தாதிமூலம் எவ்வித உடல் பரிசோதனையும் இன்றி வழங்கப்படுகின்றது. ஓடி விளையாடித்திரிந்த எமது குழந்தைகள் ஓரிடத்தில் முடக்கப்பட்டுள்ள பரிதாபம் எழுத்துக்களால் விபரிக்க முடியாது.

நாம் படும் அவஸ்தைகள் தமிழர்களாக பிறந்ததனாலா? சொந்த இடமும் துன்பம், வந்த இடமும் துன்பம் என்ற மோசமான நிலையில் இருக்கும் நாம் எமது நிலையை விபரிக்க எமது சகோதர தழிழ் ஊடகங்களை தவிர வேறு வழி தோன்றவில்லை.

கடந்த ஐ_லை மாதம் 12ம் திகதி தாய்லாந்நு பெட்கேசம் என்ற பகுதியில் 77ம் ஓழுங்கையில் தொடர்மாடி வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரும் இளைஞ்ன் ஒருவரையும் கைது செய்ய முற்பட்ட போது அதிலிருந்து தப்பியோட முயற்சித்த இலங்கை பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமாகியுள்ளார். மரணமான பெண் அகதி அந்தஸ்து கோரி அகதிகளுக்கான் ஐநாவின் தூதுவராலயத்தில் பதிவு செய்தவர் அவரின் விபரங்களை தாயிலாந்து அகதிகளுக்கான ஐநாவின் தூதுவராலயத்தில் பெறமுடியும்.

இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை பார்க்கவேண்டுமெனில் அவர்களின் உறவினர்ளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது. யாரையும் அறியாத இந்த நாட்டில் உறவினர்களை சிறையில் இருக்கும் எம்மால் எங்கே தேடிப்பிடிப்பது? எம்மீது அனுதாபங்கொண்ட ஒரு சில இலங்கையர்கள் எமது குழந்தைகள் போசாக்கின்மையால் அவதியுறுவதை அறிந்து (வதிவிட அனுமதி பொற்றவர்கள்) எமது குழந்தைகளின் நலன் கருதி பால், மற்றும் சில உணவுகளை வாங்கித் தருவார்கள் அதற்கும் கெடுபிடி உருவாகியுள்ளது.

எமது உண்மை நிலையை விபரித்து நடவடிக்கை மேற்கொள்ள எமது உறவுகளான தழிழ் ஊடகங்கள் எமக்கு தோளோடு தோள் நின்று உதவி புரிய வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்ளுகிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு UNHCR Bangkok

02-288120401-914-749502-2882230

Please Click here to login / register to post your comments.