எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிது - க.வே.பாலகுமாரன்

ஆக்கம்: க.வே.பாலகுமாரன்

வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றியும் பல வேளைகளில் மீட்டல்களாக அமைவதை வாசகர்கள் அவதானித்திருப்பர்.

எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். இவ்வாசகத்தைக்கூட இப் பத்தியில் மீண்டும் எழுதவேண்டியுள்ளது. "நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊர்க்கின் உணர்க்கு இறுதியாகிவிடும்" இக்குறளைக்கூட சந்திரிக்கா + ரத்வத்தைக் குழுமம் ஆட்டம்போட்ட பொழுது 1998களில் தலைப்பாக இட்டோம். இப்போது அதே வார்த்தைக்கு மீளவும் உயிர் கொடுத்து அவரையும் இணைத்து "அவர் ஏறி விழுந்த அதே மரத்தின் நுனிக்கொம்பர்" ஏறும் இராசபக்ச சோதரர் பற்றி எழுதவும் அதே குறளே மிகப் பொருத்தமாகின்றது.

புதிய வரலாற்றினைப் படைக்கப்போவதாகக் கூறிக்கொள்வோரே பழைய வரலாற்றின் மிகத் தெளிந்த பக்குவமான பாடங்களைக் கற்க மறுக்கையில் மறக்கையில் யார்தான் என்னசொல்லக் கூடும். அப்படியாயின் என்ன வேறுபாடு அன்றைக்கும் இன்றைக்கும் என யாரும் வினாவலாம்.

அப்போது (சந்திரிகா காலம்) போர்ச்செலவு 5 பில்லியனுக்கும் 10 பில்லியனுக்கும் இடைப்பட்டதாக ஏறியது. இப்பொழுது 10 - 20 பில்லியனுக்கு இடைப்பட்டதாக எகிறுகிறது. இதை இன்னொரு வகையில் கூறினால் 1980களில் சியாமாசெட்டி விமானம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர். 2000ல்மிக் 27 இருபது மில்லியன் டொலர். இப்போதோ 20 - 25 மில்லியன் டொலரில் மிக் 29 கொள்வனவு பற்றிப் பேசப்படுகின்றது. இது மலையைக் கொல்ல்ல எலியைப் பிடிக்கும் கதைதான். இது காலம் சொல்லு;லும் கதையல்ல்லவா. ஆயினும் அல்லது இருந்த பொழுதும் உண்மைகள் உறங்குவ தில்லை. எமது சூரியனுக்கு கீழே உள்ள்ளவற்ற்றில் மிகக் குழப்ப்பமானதும்

புரிந்து;துகொள்ள்ள முடியாததும் அவரவருக்கு;கு உண்i;மைதான் என முதுமொழி இருந்தாலும், உண்மைகள் வெளிவந்தவண்ணமே உள்ளன. நல்லறிவை நல்வழியை யாராவது சொல்லிய வண்ணமே உள்ளார்கள்.

மகிந்தரின் போக்கின் அதி அபாயத்தையும் நாசகார அரசியலையும் உச்ச மடமையைப் போர்வெறியின் மிகு விபரீதத்தை பொருண்மியம் தாழ்ந்துபோகும் கெடுநிலையையும் யாராவது சொல்லிக்கொண்டேயிருக் கிறார்கள். "இரத்தவெறி" என்கிற பயங்கரத் தலைப்பில் 29.08.2007 தினக்குரல் தலையங்கத்தில் கூறிய கருத்துக்கள் முத்தாய்பானவை. "போர் இன்று சமுதாயத்தைக் குரூரமயப்ப்படுத்த்திவிட்டுள்ளது. படுகொலைகள் குறித்து மக்கள் உணர்ச்ச்சியற்ற்றவர்க்களாகிப் போயுள்ள்ளனர். பழிவாங்கும் மனோபாவம் வேகமாக அதிகரிக்க்கின்ற்றது. எந்த்தத் திசையில் திரும்பினாலும் இரத்த்தவெறிகொண்டு சமுதாயம் அலைவதையே காணமுடிகின்ற்றது. மக்க்களின் உணர்வுகள் செத்துப்போய்வ்விட்ட்டன."

16.08.2007 அன்று அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறியதைப் பாருங்கள். "சருவகட்சி ஆலோசனைக்குழுவால் இணக்கப்பாடு எட்டமுடியாத நிலை தோன்றியுள்ளது. வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் தீர்வுகான முன்வராது என்று விடுதலைப்புலிகள் கூறிவருகின்றனர். இலங்கை அரசோடு கையொப்பம் இடுவதில் பயனில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சி எதிர்க்கட்சியாகும்போது அந்தக்கையொப்பம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்ற புலிகளின் குற்றச்சாட்டு அர்த்தப்படுத்தப்பட்டு விடுதலைப்புலிகளின் பிரிவினைக்கோட்பாடு மேலோங்கிவிட விடக்கூடாது. தென்னிலங்கைக் கட்சிகளிடையே இனச்ச்சிக்கலைத் தீர்க்க்க இணக்க்கப்பாடொன்ற்றில்லை என விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தோடு தர்க்கிக்கின்றனர். இந்த தர்க்க்கம் உண்மையாகிவிடக்கூடாது." (வீரகேசரி 17.08.2007)

இக்கூற்றை சாதாரணதொரு கூற்றாக நாம் கணிக்கமுடியாது. வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம். இவ்வாறு அவர் கூறிய பின்னரும் சருவகட்சிக் குழுக்கூட்டம் பின்போடப்பட்டும், பிரதமர் தலைமையில் இயங்க பணிப்பு விடப்பட்டும், வரவு செலவுத்திட்டத்தின் பின்னே தீர்வுத்திட்டம் பற்றிப் பார்த்துக்கொள்ளப்படும் என அறியப்பட்டுள்ளது. அதற்கிடையில் எவ்வளவு மாறாட்டங்கள், பொய்மைக் கதைகள் கட்டிவிடப்படும் என்பதை எவரும் அறியார். ஆனால் சாதாரண சிங்கள மக்களை முற்றிலுமாக இலக்குவைத்து அவர்களைப் பேரினவாதத் தாலாட்டாலேயே தொடர் உறக்க நிலையிலே வைத்திருப்பது குறித்து இப்போது சிங்கள சமூகத்திடையே விவாதம் தொடங்குகிறது. சிலராவது மனம் பொறுக்காமல் உண்மை நிலையை உணர்த்தத்தொடங்கியிருக்கிறார்கள்.

அவற்றினைப் பதிவு செய்வதே எம் நோக்கம்.

தொடர்ந்து பேரினவாத மயக்க மருந்து சிங்களவர்களுக்கு ஊட்டப்படுவது, போர்வெறிகொண்டு அலைவது, புலிப்பூச்சாண்டி காட்டுவது, தேசப்பற்றாளர் போல் கர்ச்சிப்பது, ஒற்றையாட்சியெனக் கொக்கரிப்பது எல்லாமே எதற்காக? இதற்காகத்தான் என விடை சிங்களத் தரப்பாலே முன்வைக்கப்படுகின்றது. எனவே இக்கட்டத்திலாவது சிங்கள மக்கள் உண்மையை உணர்வார்களா? விடை காலத்தாயின் கையில்.

இன்று சிங்களத்தின் தலைவிரித்தாடும் ஊழலின் உச்ச அளவை ஆளும் தரப்பாலே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கோப் (COPE) எனப்படும் அரச நிறுவனங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழுவின் தவிசாளரும், சனாதிபதி சட்டத்தரணியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்பியுமான விஜயதாச ராஜபக்ச அண்மையில் 20 அரசாங்க நிறுவனங்களில் 600 கோடி வரையிலான ஊழல்கள், மோசடிகள் பற்றி அறிக்கையை வெளியிட்டு பூகம்பத்தையே உருவாக்கினார்.

சனவரி 12இல் 26 அரச நிறுவனங்களின் பலகோடிஊழல் பற்றி நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்றாகிவிட்டது.

அண்மையில் கொழும்பில் முக்கிய கூட்டமொன்றில் குடிமக்கள் வேண்டுவது ஊழல் அற்ற அரசே என்ற தலைப்பில் மிக துணிகரமாக, நேர்மையாக அவர் உரையாற்றினார். தன்முன்னே கூடியிருந்தோரை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். "நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு சாதாரண குடிமகனாகவே உங்கள் முன பேசுகின்றேன். நீங்களும் இவற்றுக்கெல்ல்லாம் பொறுப்ப்பாளிகள் தான். சனநாயகம் என்பது மக்கள் பங்கேற்ப்பினையே குறிப்பது. அப்ப்படியானால் உங்க்கள் பங்கேற்பின் விளைவென்ன்ன. நான் சொல்வேன் ஒன்றுமே இல்லை. இக்கூற்று உங்களைக் காயப்படுத்தக்கூடும். ஆனால் இதுதான் உண்மை.

ஏதாவது என் கண்முன்னே மிகத் தவறாகச் சட்டவிரோதமாக நடக்கையில் அதைத் தட்டிக்கேட்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாவிட்டால் நான் இருந்து என்ன பயன். சட்ட அமைப்புக்கள் சில பாராமுகமாக நடப்பதைப் பார்க்கின்றோம்.

எமது நாடு ஊழலின் உச்ச நிலைக்குத் தள்ள்ளப்ப்பட்டுவிட்ட்டது. இதறகு காரணம் எனன் ? சட்டத்த்தின் ஆட்சி எனப்படும் சனநாயகப் பண்பை எமது மக்க்கள் பேணாமையே"

தொடர்ந்து அவர் பேசியதாவது, மகியங்கணையைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியான சைமன் நான்கு தேங்காயைத் திருடியமைக்குத் தண்டனை ஆறுமாதக் கடுங்காவல். ஆனால் பலகோடி ஊழலை எனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளேன். பெயர், பதவி நிலைகளெல்லாம் எனது அறிக்கையில் உள்ளது.

    கழிவிரக்கம் கொண்ட கட்டுரை களும், கடிதங்களும், தலையங்கங்களும் சிங்களத்தில் இப்போது வெளி வரத்தொடங்குகின்றன. உள் முரண்பாடுகளாலும் அரசியல் சதிகளாலும் சிங்களம் கொதித்த வண்ணமே உள்ளது. வரலாற்றின் சுருக்குச் சிங்கள தேசத்தின் கழுத்தை மேலும் மேலும் இறுக்குகின்றது. இவை பற்றி ஏதும் கவலைப்படாது. மகிந்தர் தனது குடும்ப ஆட்சியைப் புதிதாக நிலைநாட்டத் தேர்ந்தெடுத்த காலம் அகாலம்.

நான கேட்கின்றேன் இதில் ஒருவரையாவது சிறையில் தள்ள்ள உங்க்களால் முடியுமா? 450 பில்லியன் (45ஆயிரம் கோடி) வருமானம் கொண்ட நாட்டில் 150 பில்லியனுக்கு ஊழல் நடக்கின்றது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" இக் கேள்வியை அவர் ஓய்வு பெற்ற மூத்த காவற்துறையாளர்களுக்கும் சருவதேச அமைப்பொன்றும் ஏற்பாடுசெய்த கூட்டத்தில் கூடியிருந்தோரை நோக்கிமட்டும் எழுப்பவில்லை. சிங்கள மக்களை நோக்கிய கேள்வியிது.

சண்டே ரைம்சின் கட்டுரையாளரும் சட்ட அமைப்பொன்றின் உதவி நெறியாளருமான பின்றோ ஜெயவர்த்தனா மிகத் தெளிவாகவே கூறினார். "சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் குலைந்ததிற்கும் ஊழலுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இது மனித உரிமைத் தராதரம் பேணப்படுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது."

நீதித்துறை ஊழல் பற்றி அவர் பேசுகையில் "இவை வெறுமனே பணத்தோடு மட்டும் தொடர்புபடவில்லை. பல தீர்ப்புக்கள் சட்டத்தின் ஆட்சியைக் கணக்கில் எடுக்காது வெறுமனே அரசியல் காரணங்களுக்காக வளர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்"

இவை எல்லாம் உணர்த்துவதென்ன? அடிமடியில் தீப்பற்றி எரியத்தொடங்குவதையல்லவா? இவ்வாறாக கழிவிரக்கம் கொண்ட கட்டுரைகளும், கடிதங்களும்,; தலையங்கங்களும் சிங்களத்தில் இப்போது வெளிவரத்தொடங்குகின்றன. உள் முரண்பாடுகளாலும் அரசியல் சதிகளாலும் சிங்களம் கொதித்த வண்ணமே உள்ளது. வரலாற்றின் சுருக்குச் சிங்கள தேசத்தின் கழுத்தை மேலும் மேலும் இறுக்குகின்றது. இவை பற்றி ஏதும் கவலைப்படாது. மகிந்தர் தனது குடும்ப ஆட்சியைப் புதிதாக நிலைநாட்டத் தேர்ந்தெடுத்த காலம் அகாலம்.

"ஒரு தவறான சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ள ஏணியில் ஏறுமவர் விரைவில் தனது முடிவைக் காண்பார். ஏனெனில் வரலாற்றின் விதிகளைப்புரியாது பகுத்தறிவற்று, வாழும் சமகாலத்தோடு தொடர்பற்று, ஒரு இறுதிநேர சருவாதிகாரி போல அவர் செயற்படுகின்றார். வரலாற்றில் மிக இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஜே.வி.பி மிக தரமான முடிவொன்றை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளது.பிறர்க்கு வைத்தபொறியில் தானே சிக்கியது தவிக்கின்றது. மக்களின் எதிர்ப்பைப் புரிந்து கூட்டணி அமைத்த ரணில் + மங்கள கூட்டோ கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது உள்முரண்பாடுகளால் அறிக்கைகளை விட்டே ஆட்சியைக் கைப்பற்றும் கனவு காண்கின்றது. பிணங்களில் மொய்க்கும் இலையான்களாக ஜே.எச்.யூ மொய்த் திடப்பறக்கின்றது. சரி தமிழர்கள் தானே கொல்லப்படுகின்றார்கள் நாம் கொல்லுகின்றோம்தானே என சிங்களவர் ஒருவகை மன விகாரத்தில் வாழ்கின்றார்கள்.

எம் மக்களோ வரலாற்றின் அத்தனை வடுக்களையும் தாங்கி, விடியும் என காத்திருக்கிறார்கள். வரலாற்றின் மிக அற்புதமான தருணம் ஒன்றிற்காக விடுதலை இயக்க்கம் காத்திருக்கின்றது. ஆகவே இனி நடக்கப்போவது என்னவென்பதை அறிய வரலாறே காத்துநிற்கின்றது.

"காலம் காலமாய் இரத்தக்கறை படிந்த,துருப்பிடித்த இதயத்தைத்துருவி ஆராயுங்கள் மஞ்சள் அங்கிகளுக்குள்ளும் மழித்த தலைகளுக்குள்ளும் புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட புத்தரின் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள் உங்கள் இதயத்தை செதுக்குங்ளகள்" என சு.வி.வரிகள் சொன்னதைத் தவிர வேறு என்ன சொல்ல இயலும்.

Please Click here to login / register to post your comments.