தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சென்னை,நவ. 3: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிதை நடையில் அவர் தெரிவித்துள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது:

எப்போதும் சிரித்திடும் முகம்-

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம் !

இளமை; இளமை; இதயமோ;

இமயத்தின் வலிமை ! வலிமை !

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்

பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி !

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய

உத்தம வாலிபன்- உயிரனையான்-

உடன்பிறப்பினையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்

தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய் ?

Please Click here to login / register to post your comments.