இலங்கை சிக்கல் : தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்து வதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் சென் னையில் நேற்று உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை முன்பு நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பேசிய ஜி.கே.மணி, இலங் கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப்படை உதவியோ மத்திய அரசு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு குறைந்த வட்டியில் இந்தியா கடன் வழங்குகிறது என்றும், இந்த கடன் தொகை இலங்கையில் உள்ள தமிழர் களைக் கொன்று குவிப் பதற்கு அந்நாட்டு அரசு பயன்படுத்துவதாகவும் மணி குற்றம் சாட்டினார்.

இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவருக்கு பாகிஸ்தானில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டதை வடஇந்தியத் தலை வர்கள் எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பி வருவதாகவும், ஆனால், இலங்கைத் தமிழர் களைப் பாதுகாக்க நடவடிக் கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Please Click here to login / register to post your comments.