அமைதியாக வாழ்ந்திருந்த இரு இன மக்களை இரு துருவங்களாக மாற்றிய சிங்களம் மட்டும் சட்டம் இன்றும் நினைவில் கொள்ள..... அன்றைய ஞாபகம் .... இங்கே!

1956 யூன் 5 , இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே பிளவை உண்டாக்கின்றார். அன்றுதான் தனிச் சிங்களச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதுவரை ஆங்கிலமே ( இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும்) ஆட்சி மொழியாக இருந்தது.

தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்று தமிழரசுக் கட்சியினர் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிரே காலி முகத் திடலில் (அப்போது நாடாளுமன்றம் காலிமுகத்திடலுக்கு எதிரேயே இயங்கியது. பழைய நாடாளுமன்றக் கட்டிடம் இப்போதும் உள்ளது) சத்தியாக்கிரகம் இருந்தனர். அர சியல், கட்சிவேறுபாடுகளை மறந்து ஜி.ஜி.பொன்னம்பலம் , சுந்தரலிங்கம் ஆகியோரும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டனர்.

நூறுக்கு மேற்பட்ட காடையர் கூடினார்கள்

சத்தியாக்கிரகத்தைக் குழப்பும் நோக்குடன் சிங்கள அமைச்சர் ஒரு வரின் தலைமையில் ஐநூறுக்கு மேற்பட்ட காடையர்கள் காலிமுகத்திடலில் கூடினர். எள்லாளன் துட்டகைமுனு யுத்தம் என்று காடையர்கள் கோஷம் எழுப்பினர்.

சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கி சிங்களத்தில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர் தமிழரசுக் கட்சியினர். துண்டுப் பிரசுரம் விநியோகித் தவர்களைத் தாக்கத் தொடங்கினர் காடையர். சில காடையர் சிங்களக் கொடியை அசைத்தவாறே தாக்குதல்களை நடத்தினர்.அமிர்தலிங்கம் மற்றவர்களை விட மோசமாகத் தாக்கப்பட்டார். அமிர்தலிங்கத்தின் மண்டை பிளந்து இரத்தம் வடிந்தது.

நாடாளுமன்றத்திற்கு வந்துகொண்டிருந்த பிரதமர் பண்டாரநாயக்கா கண்டும் காணாதது போல் புன்முறுவலுடன் சென்றார். அப்போது உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரதமரிடம் என்ன செய்வது என்று கேட்க, நீங்கள் ஒன்றி லும் தலையிடவேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார் பிரதமர்.

நேரம் நண்பகலானது. நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகும் நேரம். அமிர்த லிங்கமும் சுந்தரலிங்கமும் தலையிலும் கழுத்திலும் கட்டுக்களுடன் நாடாளு மன்றத்தினுள் நுழைந்தனர்.அப்போது பிரதமர் இது என்ன யுத்தத்தில் அடைந்த விழுப்புண்களா என்று கேட்டார். ஆம் என்றார் சுந்தரலிங்கம் . தனிச் சிங்கள மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது காலஞ்சென்ற இடதுசாரித் தலைவர் கொல் வின். ஆர். டி. சில்வா தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவு படுவதைத் தவிர்க்க முடியாது. இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டுமானால் இரண்டு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்குங்கள் என உரையாற்றினார். "" ஒரு மொழி இரு நாடுகள் , இரண்டு மொழி ஒரு நாடு'' என்ற இவரது உரை சரித்திர முக்கி யத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

ஆனால் இதே கொல்வின் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை உருவாக்கிய போது சிறுபான்மையினருக்கு இருந்த அற்ப சொற்ப உரிமைகளையும் இல்லாமல் செய்தார். தனிச் சிங்களச் சட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழ்ப் பிரநிதிகளும் இடது சாரிகளும் எதிர்த்து வாக்களித்தனர்.

ஐ.தே.க ஆதரித்து வாக்களித்தது. காலி முகத் திடலில் சத்தியாக்கிரகிகங்கள் மீது தாக்குதல் நடத்திய காடையர் கூட்டம் கண்ணில் தென்பட்ட தமிழர்கள் மீதும் தாகக்குதலைத் தொடங்கியது. ஏன் தமிழர்களைப் போன்ற உருவ அமைப்புடைய சிங்களவர்களும் தாக்கப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான கலவரம் எங்கும் பரவியது. அம்பாறையில் கர்ப்பிணிப் பெண்கள் , குழந்தைகள் உட்படப் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலி யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் கொல்லப்பட்டனர். தாண்டவன்

Please Click here to login / register to post your comments.