புலிகள் வழங்கியுள்ள 'வெளி"

ன்னதான் நடக்கின்றது சிங்களதேச அரசியலில்? எல்லாமே வழமைக்குத் திருப்பிக் கொண்டிருப்பது போலவும் எல்லோரும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது போலவும் ஒரு தோற் றப்பாடு காண்பிக்கப்படுகின்றது. இதற் கெல்லாம் அடிப்படையாக அமைவது அமைதி முயற்சிக்கு மகிந்தர் அத்திவாரக் கல்லை ஆழமாக இட்டிருப்பதுதான் என்று வேறுகூறப் படுகின்றது. எனவே மகிந்தரின் கரத்தைப் பலப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு எல்லாக் கட்சிகளும் முண்டியடித்து முன்னேறு வதையும் நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசியலில் ஆழும் தரப்போடு கட்சிகள் இணை வதும் பிரிவதும் பின் இணைவதும் என்பதும் வழமையென்றாலும் இம்முறை பிரதான எதிர்க் கட்சியிலிருந்து பெருந்தொகை மாறுதலும் கடச் p வேறுபாடிலல் hமல ; மடடு; மலல் கட்ச்சிக் குள்ளு;ளும் வேறுபாடு இல்ல்லாமலும், நான் முந்தி, நீ முந்தி என இணைய முற்படுவதும சற்று வியப்பாகத்தான் உள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால் எதிரி யார், நண்பன் யார் என்பது தெரியாத நிலையும் ஒரே கட்சி யின் பல்வேறு கிளைகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின் அனைவரும் ஒரே கட்சியில், ஆளும் கட்சியில் இணைவதும் எழுதப்படாத விதியாக மாறுகிற விசித்திரத்தையும் காணமுடி கின்றது. இன்னொரு வகையில் மேலோட்டமாக அவதானித்தால் சிங்களத்தில் என்றும் உருவாக முடியாதெனக் கூறப்பட்ட தேசிய அரசாங்கமொன்றே இயல்பாக உருவாகிற ஒரு பிறழ்நிலையை யும் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலை படிப்படியாக உருவாக எது பிரதான காரணம்? மகிந்தரின் அமைதி முயற்சிதான் காரணம் என்பது உண்மையா? அவ்வாறா யின் இக்கட்சிகள் யாவும் இணைந்து ஒரு தீர்வை நோக்கி நகருமா? மகிந்தரின் அரசாங்கமே ஒரு சருவகட்சி மாநாடாக ஃஅர சாங்கமாக மாறுமா? பொறுத் திருந்து பார்க்கவேண்டிய நிகழ்வு களிவை.

இத்தீவில் சனநாயக வழிமுறையில் போராடி உரிமை களைப் பெறமுடியாத நிலையில் சனநாயக சக்திகள் எனக்கூறப் படுவோரை உண்மையிலே ஷஷசனநாயக மயப்படுத்த|| சனநாயகத்திற்கு விரோதமானது என இப்போலி சனநாயக நாயகர் களால் வருணிக்கப்படும் ஆயுதப் போராட்டப் பாதையில் பலகாலம் பயணித்த விடுதலைப்புலிகள் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22இல் போரை இடை நிறுத்தியபின் நாம் காணும் அரசியற்கோலங் களிவை. இங்கு எழும் பிரதான கேள்வி இதுதான். சனநாயக சக்திகள் எனக்கூறப்படும் இக்க்கட்ச்சிகள் உண்மையிலே சனநாயகப் படுத்த்தப்ப்பட்டு;டுள்ள்ளனவா? அல்ல்லது சனநாய கப் பங்கு;கு தேக்க்கத்தை அடைந்து;ு மேலும் நகரமுடியாத நிலையில தேஙக்க்விடட்ட் னவா? தேங்கியதன் விளைவே இன்றைய அரசியற்கோலங்களா? எனவே சிங்கள அரசியலின் இன்றைய செல்நெறி நிலையை இப் பின்னணியில் வைத்தே கவனித்தல் வேண்டும்.

இவ்விடத்தில்தான் புதியதொரு அற்புதமான பரிமானமொன்று புலப்படுகின்றது. தறN; பாது இத்த்தீவீவீவின் அரசியல் அதிகாரத் தில் நிலவும் ஷஷவெளி|| பற்ற்றியதே இப்ப்பரி மானம் . 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் புலிகளால் வழங்கப்பட்ட இவ் ஷவெளி| பல்வேறு காலகட்டங்களாக விரிகின்றது. இவ் ஷஷவெளியின் முதலாவது கட்டம். 2003ஆம் ஆண்டு மார்ச் 18 - 21ஆம் நாட்களில் யப்பானில் நடைபெற்று, ஆறாம் சுற்றுப் பேச் சோடு முடிந்தது. புலிகள் மடங்கிவிட்டார்கள் என்கிற தவறான கணக்கில் அவசரப்பட்டு 2003 ஏப்பிரல் 14, 15 ஆம் திகதிகளில் அமெரிக்கா தலைமையில் வோசிங்டனில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் சருவதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததோடு புலிகளை ஓரங்கட்டிப் புலிகளின் செலவில் தமது கணக்கில் வரவுவைக்க ரணில் முயன்ற போதே இம் முதற்கட்டம் முடிவிற்குவந்தது. இதன் பின்னரும் ஷவெளி| நீடிக்கப்பட்டு இப்போது மகிந்தர் காலத்தில் 2ஆவது கட்ட மாக ஜெனிவாப் பேச்சோடு விரிகின்றது. இவ் ஷவெளி| வழங்கப்பட்டதன் முழுப் பரிமானத்தை யும் சருவதேசம் புரிந்த நிலையில், சிங்களமோ இது பற்றி எவ்வித கவனமும் எடுக்காததோடு புலிகள் தமக்கு எவ்விதம் ஷவெளி| வழங்க முடியும் என்கிற விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

யப்பானிய தூதரின் காட்டமான அறிக்கைகள், (இரண்டு அறிக்கைகள் ஷஷஇடித்துரைத்து|| வெளிவந்துள்ளன) நோர்வே அமைதித் தூதர் சூல்கெய்மின் சற்றுச் சினமும், வெறுப்பும், சலிப்பும் கலந்த அவதானிப்புக்கள், “இலங்கை யைவிட சூடானிலே அதிக கவனம் நோர்வே செலுத்தும்|| “நோர்வே வெளியேறத் தீரீரீர்ம்மானிக்கு;குமேயானால் அதற்கு;குப் பதிலாக அனுசரணைப் பொறுப்ப்பினை ஏற்ப்பதற்கு;கு வேறு எந்த்த நாடுமே தயாரிலலை. நோர்வே எவ்வாறு இலங்கையில் நடத்தப்படு கின்றது என்பதை நேரடியாக மற்ற நாடுகள் கண்டிருக்கின்றன”) கடுமை யானது என்பதில் ஐயமில்லை. எப்போதுமே காத்து வந்த சூல்கெம் தான் பட்ட சொல்லிழுக்கு காரணமாக இவ்வாறு பேசினா லும் இதற்கப்பாலும் பிரதான காரணமாக இருப்பது - புலிகள் தற்போது வழங்கியிருக்கும் ஷஷவெளி பற்றிய ஆழமான புரிதலை அவர் கொண்டிருப்பதே. ஏனெனில் இவ் வெளியை வெறுமனே அரசியலுத்தியாக, இராசதந்திர செயற்பாடாக, காலக்கெடுவாகப் பார்க்க முடியாது. இங்கே அரசியல்,அறவியல், அறிவியல் எல்லாமே தொடர்புபடு கின்ற்றன. வரலாற்றில் காலமும், வெளியும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பதற்குச் சீனாவின் இவை குறித்த சொற்களின் பிரயோ கத்தின் பிரபலம் புரியவைக்கும். அதுபோலவே அறிவியலிலும் காலம், வெளியென்பன எத்தகைய முதன்மை வகிக்கின்றன என்பதும் தெரிந்தவைதான். எனவேதான் அறிவால் வாழும் இவ்வுலகம் சிங்களத்தின் இவ் ஷவெளி| பற்ற்றிய அறிதல் மறுப்பு;புக்க்கண்டு;டு பெரிதும் கலவரமடைகின்ற்றது.

புலிகளால் வழங்கப்பட்டிருக்கும் இவ் ஷஷவெளி|| பல்லாயிரமாண்டுகாலப் பாரிய வரலாற் றுத் தவற்றினைச் சரிசெய்ய ஒரு ஆன்ம தேடலை ஆரம்பிக்கச் சிங்களத்தால் பயன் படுத்தப்பட வேண்டும். தாம் பௌத்தர், பௌத்த நெறிகளைப் பின்பற்றுவோர் என உலகிற்கு உரத்துக்கூறும் சிங்களவருக்கு இப்போது அதனை நிரூபிக்க வாய்ப்பு. அண்மையில் இலண்டனில் ஐஐளுளு எனப்படும் போர் நுண்திறன் கற்கைநெறி ஆய்வுமையத்தில் மங்கள பின் வருமாறு முழங்கினார். ஷஷநாங்கள் பௌத்தர்கள்.

2500 வருடத்திற்கு மேலாகப் பௌத்த நெறி களைப் பின்பற்றுபவர்கள். வெறுப்பை வெறுப் பால் வெல்லமுடியாது. அதை அன்பாலே வெல்லமுடியுமென நம்புகின்றவர்கள்||. மகிந்தர் சொல்கின்றார் “போரை ஒருபோதும் தீர்வாகப் பௌத்தர்கள் முன்வைக்கமாட்டார்கள்.” புத்தர் மனவெளி பற்றி அதிகம் கூறியிருக்கின்றார். கி.மு 500களில் சீனாவில் வாழ்ந்த ஞானியான லாவோட்சு ஷஷதாவோயிசம்|| எனப்படும் இயற்கை சார் வாழ்க்கை முறையைப் புகுத்தியவர். அவர் வெளியின் முக்கியம் பற்றிக் கூறுவது உலகப் புகழ்பெற்ற வார்த்தைகள்.

ஆடுகால் முப்பதும்
சக்கரத்தின் மையத்தில்
இணைகின்றன.
ஆனால் சக்கரத்தின் பயன் அதன்
வெற்று;றுப் பகுதியால்
கிடைக்கின்றது.
பாண்டம் பாண்டமாக
களிமண் வனையப்படுகின்றது
ஆனால் பாண்டத்தின் பயன்
அதன் வெற்று;றுப் பகுதியால்
கிடைக்கின்றது.
வீட்டுச் சுவர்களில்
வாயிலுக்காகவும், சன்னலுக்காகவும்
வெற்று வெளியை விடுகின்றோம்.
ஆனால ; இவை வெற்று;று வெளி
என்பதாலே பயன்படுகின்றன.”

எனவே ஊரை, உலகை ஏன் தம்மையே ஏய்க்கப் புத்தரையே முன்னிறுத்திய சிங்கள பௌத்தர்களுக்கு இப்போது தமது பௌத்த நெறியைச் செயலில் காட்ட ஷவெளி| வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கள தேசத் திற்கு இப் பரிமானத்தைப் புரிய முடியாமலிருக் கின்றது. அவர்கள் மனங்களிலே இதனைப் புரிவதற்கான ஷஷவெளி|| கிடையாது. அவர்கள் மனவெளியெங்கும் காழ்ப்பும், வெறுப்பும், ஐய மும், அவநம்பிக்கையும் நிரம்பிக்கிடக்கின்றன. இதுவே இன்றைய உலகின் துயரம்.

சிங்கள தேசம் தன்னைத்தானே இன்று சபித் துக்கொள்கின்றது. ஒரு வேளையிலே பல முகம் காட்டி அம்பலமாகின்றது. எனவே சிங்களதேசம் சனநாயகப்படவில்லை; தன்னை யுணரவில்லை; இருந்தும் புலிகள் ஷஷவெளியை|| நீடிக்கின்றார்கள். யுத்தமென்பது வெளியற்று மூடப்பட்ட நிலை. அமைதியென்பது வெளியா கின்றது. ஏன் சிங்களத்தால் இதைப் புரிய முடியவில்லை? ஏனெனில் இற்றைவரை தமிழ் மக்களுக்குக் காலக்கெடு விதித்தவர்களுக்கு இப்போது தமக்கே காலவெல்லை விதிக்கப்படு வதை ஏற்கமுடியவில்லை.

1979ஆம் ஆண்டு யூலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை ஜே.ஆர் கொண்டுவந்தபோது இத்தீவின் எல்லா வெளிகளும் மூடப்பட்டன. தமிழ் மக்களின் மனவெளியெங்கும் ஷஷஇண்டு இடுக்கில்லாமல்|| அவலத்தீ பற்றியெரிந்தது. அவர்களின் நில வெளியிலிருந்து அவர்கள் தொடர்ந்து விரட்டப்பட்டார்கள். 1979ய+லை 11ஆம் திகதி ஜே.ஆர் தமிழ்மக்கள் இருப்பிற்கே காலக்கெடு விதித்தார். பிரிகேடியர் வீரதுங்காவை அழைத்து 1979, 04 -31ஆம் திகதிக்கு முன் புலிகளை அழித்துவிடுமாறு ஆணையிட்டார். இன்பத்தை யும், செல்வரத்தினத்தையும் கொன்று அவர்கள் மண்டையோட்டினைச் சிதைத்து பண்ணைப் பாலத்தடியில் வீசியபோது தாயக வெளி யெங்கும் பிரபாகரன் அலைந்தார்; உலவினார்; கரந்துறைந்தார். இக்கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அவரிடமே வின வினோம். அவரோ வழமைபோல புன்சிரிப்புடன் மிகச் சாதாரணமாகக் கூறினார். விரல்விட்டு எண்ணக்கூடிய தனது இன்னுயிர்த் தோழர் களைக் கூட்டிக்கொண்டு வன்னித்தாயின் அடர்ந்த காட்டுவெளிதனிலே காப்புத்தேடி வந்திறங்கிய வரலாற்றினை அவர் விளக் கினார். சிங்களப் பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்கும் பொறுப்பினைத் தனது மனவெளி யில் தானே ஏற்ற அவர் தானே தனது தோழ ருக்குப் பயிற்சி வழங்கலானார். பயிற்ச்சி ஆசிரியனாக அன்று;று அவர் தொடங்க்கிய பணி இன்று;று கிளிநொச்ச்சியில் சருவதேச இராஜதந்திரிகளுக்குக் கற்கைநெறி பயிற்றுவிப்பதில் வந்து முடிந்துள்ளது.

இவ்வாறாக இந்தியப் படை இங்கு வரப் போவதாகக் கதைஅடிபட்ட காலகட்டத்தில் ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்து அது முடி வதற்கு முன் தமிழரை அழிப்போம் என்ற வர்கள், ஒரு இரவு முடிவதற்குமுன் புலிகளை இல்லாது செய்வோம் என்ற இந்தியத் தளபதி கள், புலிகளை வன்னிப்பரப்பிலே கால் தரிக் கவே இடமில்லாமல் செய்வோம் என ஜெயசிக் குறு காலத்திலே கூறிய இராணுவ வல்லு நர்கள் எல்லோருமே தமிழ் மக்களுக்குக் காலக்கெடு விதித்தவர்கள்தான்.

இப்போது எல்லோருக்குமே ஷஷகெடு|| விதிக்கும் நிலையில் புலிகள் உள்ளார்கள். இதுவே வரலாற்றன்னையின் தீர்ப்பு. எனவே இங்கே இந்த நூற்றாண்டின் மிகப் பாரிய கேள்வியெழுகின்றது. இவ் ஷஷவெளி|| பயன் தருமா? அல்லது பாழாகுமா? தனது ஷஷகாலத் துயர்|| எனும் அற்புதமான கவிதை நூலில் கவிஞர் வில்வரத்தினம் எம் மக்களின் மன வெளியெங்கனும் எதிரொலிக்கும் நீதியின் குரலை ஒலிக்கின்றார்.

ஷஷகூவிக் கூவி பரவெளியெங்கும்
அலையும் அவன் குரல்
உனது கதிர்களில் ஊடறுத்து
அதிரவில்லையா?
ஒளிக்க்கனி நாடி
சிறகடித்த்த பறவைகளின்
சங்க்கீதத்தை
எரிந்த்த சாம்ப்பரின்் மீட்டுத்தா
இருள் படிந்த்த புதைவுகளின்று;றும்
புதிய குருதிப் பொலிவோடு
இவள் பிள்ளைகளை எழுப்பித்தா
ஒளி நிறை வாழ்வின்
உன்னதத்தை எமக்குத்தா.”

Please Click here to login / register to post your comments.