காலாவதியும்! காலக்கெடுவும்!

சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் தனது இனவெறிப் போரின் உச்சக் கட்டத்தாக்குதல் இலக்காகக் கிளிநொச்சியைத் தேர்வு செய்து அதனைக் கைப்பற்ற காலக்கெடுவும் விதித்து சிங்களத்தின் முழுப்பலத்தையும் குவித்து கிளிநொச்சியைக் கைப்பற்ற சிங்களப் படைகள் மேற்கொண்ட நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதால் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தரைப்படைத்தளபதி சரத்பொன்சேகா ஆகியோர் விடுதலைப் புலிகளை அழித்துவிட விதித்த காலக்கெடுவும் காலாவதியாகிவிட்டது.

வடமத்தியமற்றும் சப்ரகமுவமாகாணங்களுக்கு நடைபெறவிருந்த மாகாணசபைத் தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெற இரு நாட்களுக்கு முன்பு சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தேர்தல் பரப்புரையின்போது 24 மணித்தியாலத்தில் இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடும் என சூளுரைத்திருந்தார். அவர்களால் இனி கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியவில்லை ஆனால் அவர்களால் இருமாகாண சபைகளையும் கைப்பற்ற முடிந்ததுவே தவிர வேறெதுவும் நடந்துவிடவில்லை.

விடுதலைப் புலிகளை இவ்வாண்டு இறுதிக்குள் அழித்துவிடுவோம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். அவர்களின் இவ்வாண்டு இராணுவ நடவடிக்கைகள் அவர்கள் திட்டமிட்டவாறு வெற்றிகளைப் பெறமுடியவில்லை. ஆனால் மூவாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்படவும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் காயமடைந்து அப்புறப்படுத்தப்படவுமே இத் தாக்குதல் வழிவகுத்திருந்தது எனலாம் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது என்பது அரசுப் படைகளுக்கு இயலாத காரியம் என்பதையும் இவ் இராணுவ நடவடிக்கைகள் உணர்த்தியிருக்கின்றன.

கடந்தவாரம் வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், நாச்சிக்குடா, கொக்காவில், முகமாலை, மணலாறு என ஆறுபோர் முன்னகர்வு மேற்கொள்ளப்பட்டன இதிலும் அரசுப் படைகளுக்கு பலத்த பின்னடைவே ஏற்பட்டுள்ளன. வெள்ளி - சனி ஆகிய நாட்கள் நடைபெற்ற முன்னேற்ற முயற்சியில் 33 படையினர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்தும் உள்ளதாக பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக களமுனைத் தகவல்களின் படி நூற்றுக் கணக்கான படைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவையாவும் இராணுவம் மேலும் முன்னேறுவது சாத்தியமற்றது அல்ல அது பேரழிவிற்குரியது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகள் விரித்தவலையில் இராணுவம் சிக்குண்டிருப்பது படைத்துறையின் வலுவை கணிசமாகக் குறைத்துவிட்டுள்ள நிலையில் இராணுவம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதோ அல்லது விடுதலைப் புலிகளை முற்றாகக் தோற்கடிப்பது என்பதோ கற்பனைக்கு அப்பாற்பட்டவிடயமே சிறிலங்கா அரசாங்கமே தமிழ்மக்களின் வாழ்விடங்களிற்குள் போரை கொண்டு வந்திருப்பதால் அந்த மக்களின் வாழ்வுரிமை முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது மடு, மாந்தை கிழக்கு துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட மக்கள் என அரைத்திட்டத்திற்குட்பட்ட மக்கள் தாங்கள் வாழ்விடங்களைவிட்டுவெளியேறி கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் தங்கினர் இப்போது அரசாங்கம் மிகமோசமான தாக்குதல்களை நடாத்தி கிளிநொச்சியில் இருந்த 2 இலட்சத்திற்குமேற்பட்ட மக்களையும் வெளியேற்றியிருக்கிறது.

இம்மக்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட விமானக்குண்டு வீச்சே முக்கிய காரணமாக அமைந்திருந்தது. சிறிலங்கா அரசும், இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து விடமுடியும் என நம்பி காலக்கெடுவிடுவிதித்து தாக்குதலை தொடங்கியது. ஆனால் காலக்கெடு காலாவதியாவிட்டது. புலிகளை அழிக்கமுடியாத போது மக்களை அழிக்கும் முகமாக எறிகணைவீச்சும், விமானக்குண்டுவீச்சும் மட்டுமே தொடர்கிறது. சிங்கள பேரினவாத முகம் தமிழர்களை அழித்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்தும் பௌத்த சிங்களவர்களை குடியமர்த்தும் கோர நோக்குடைய தாகவே தென்படுகிறது.அண்மைக்காலத்தில் குறிப்பாக வடக்கே வன்னிப் பிராந்தியத்தில் நடைபெற்ற. இனப்படுகொலைகளும் நில ஆக்கிரமிப்பும் தமிழகத்தில் உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றன.

தமிழக அரசே நேரடியாக களமிறங்கியிருக்கிறது. கலைஞர் மு.கருணாநிதி மிக தீவிரமாக ஈடுபாடுகாட்டுமளவு நிலைமை மாறியிருக்கிறது. ஈழத்தில் இடம்பெறும் இனப்படுகொலையை என்ன விலை கொடுத்தாலும் தடுத்து நிறுத்துவோம் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இருவாரகாலத்துள்போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா தலையிடவேண்டும் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலன கட்சித்தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு இந்தியா தலையிட்டு தீர்வு காணாவிட்டால் புதுவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிவிலக நேரிடும் என்றும் தீர்மானம் நிவேற்றப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் புதுடில்லியில் இராஜதந்திரமட்ட சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. போர்நிறுத்தம் ஏற்படவேண்டுமென தமிழக அரசு வலியுறுத்திவதுபோன்று டெல்லிக்குஅழுத்தம் கொடுக்கப்பட்டு வரும்நிலையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இதற்கு எதிர்வரும் 28ம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.சிறிலங்கா அரசாங்கம் புலிகளை அழிக்க காலக்கெடுவும் தமிழக முதல்வர் போர்நிறுத்தம் ஏற்படக் காலக்கெடுவும் விதித்திருப்பது நல்ல எதிர்பார்ப்பாகும் இதில் யார்வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவதில் அரசியல் நோக்கர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்தியப்பிரதமர் நேரடியாகவே தொலைபேசியில் மகிந்தவுடன் உரையாடிய அந்தப் 10 நிமிடத்தில் போர் தீர்வகாது போரை நிறுத்தி அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுமாறும் தமிழ்மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றும் கோரியுள்ளார்.

ஆயினும் மகிந்தராஜபக்ச இதனை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பது போர அவர் வெளியிடும் அறிக்கைகள் உள்ளன.போர்நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அடம்பிடிக்கும் மகிந்தராஜபக்ச இந்திய இராஜதந்திர அழுத்தங்களிற்குப் பின்னர் சற்று அதிதீவிரமான தாக்குதல்களையே தொடங்கியுள்ளனர். போரைநிறுத்தி இந்தியாவின் யோசனைக்குப்பின்னரே சிறிலங்காப் படைகள் வடக்குப் போர்முனைகளில் ஒரே தடவையில் 6 தாக்குதல்களைத் தொடங்கியது.போர்வெறிகொண்டு அலையும் சிறிலங்காவின் நிலைப்பாட்டை எளிதில் மாற்றிவிட இந்தியாவில் முடியாதுபோனது இந்திய இராஜதந்திரத்திற்கு கிடைத்த தோல்வியா? தமிழக அரசியல்களின் நிலைப்பாட்டை நிறைவேற்ற இந்திய நடுவன அரசால் முடியாது போனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கையில் தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இராஜினாமாக் கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துவிட்டனர்.ஏனைய கட்சி உறுப்பினர்கள் தீர்மானப்படி இராஜினமாச் செய்வார்களா? அல்லது அதற்குள் மாற்றம் ஏதும் ஏற்படுமா?இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக தி.மு.க - காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா? இதனைச் சாட்டாக வைத்து அரசியல் கூட்டில் மாற்றம் நிகழுமா போன்வற்றை கட்சிகள் ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் கருணாநிதி விதித்த காலக்கெடுவிற்குள் (28) இலங்கை அரசுபோர் நிறுத்தத்திற்குள் வர இந்தியா தலையிடவேண்டாம் அல்லது விடின் நடுவன் அரசியல் இருந்து தி.மு.க. அமைச்சராக விலகவேண்டும்.

மிகவும் ஒரு நெருக்கடிக்குள் தி.மு.க உள்ளது. அல்லாது போனால் இலங்கை நிலவரம் புதிய திருப்பத்தை ஏறபடுத்தவேண்டும். இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாற்றப்படவேண்டிய தேவையையே தமிழக நிலவரம் எடுத்துக்காட்டுகிறது.அதனைச் செய்ய நடுவன் ஆட்சியாளர் மறுப்பவர்களானால் மேலும் புதிய நெருக்கடி நடுவண் அரசிற்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நன்றி: சங்கதி

Please Click here to login / register to post your comments.