செஞ்சோலைக் கிளிகள்

ஆக்கம்: தமித்தலட்சுமி
மார்கழி
பனித்துளியாய்
அழகு!
மலைத் தேனின்
அற்புத சுலையாய்
பேச்சு!
மானைப் போல்
துள்ளலாய்
ஓட்டம்!
மழலைகளாய்
பூத்ததே
செஞ்சோலைத் தோட்டம்!
தோட்டத்தின்
வேலியாய்
நல்லவர் கூட்டம்!
அன்பின் அரவணைப்பில்
அடைந்தது
அரும்புகள் தஞ்சம்!
இந்த செஞ்சோலைக்
கிளிகளைப் பார்த்து
புலிகள் என்றது சிங்களக் கூட்டம்!
சிரித்துக் கொண்டிருந்த
பூக்களை எல்லாம்
சின்னபின்னமாக்கியது வெறியரின் ஆட்டம்!
பூச்செண்டுகள்
வெந்தது
வெடிகுண்டுகளால்!
ரத்தம் குடிக்கும்
ஓநாய்க்குக் கூட
மழலையின் மகத்துவம் தெரிந்துவிடும்!
மனித மிருகமே!
மனித மிருகமே!
உன் உயிரின் அருமை நாளை புரிந்து விடும்!

நன்றி: தென்செய்தி, Sept 01, 2006

Please Click here to login / register to post your comments.