யாழ்ப்பாணம்... மட்டக்களப்பு... கொழும்பு... சிக்கலில் சிங்கள ராணுவம்!

நாட்டை ராணுவமயமாக்கி வருகிறார் ராஜபக்ஷே!

''இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரும் ஜனாதிபதி ராஜபக்ஷேவுக்கு நித்தமும் புத்தவிகார்களில் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ''உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்'' என்கிறார் ராஜபக்ஷே. அவருக்கும்பாது காப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கக்காத்து இருக்கிறது. கொண்டாட்டங்களில் மகிந்தாவின் அலறி மாளிகை ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதி களுக்கும் நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பதவி உயர்வு தரப்பட்டு உள்ளது. ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும், கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட அட்மிரலாகவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக ஏர் சீஃப் மார்ஷலாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டனர். இதில் சரத் பொன்சேகா வுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதை மற்ற இருவரும் விரும்பவில்லை.

தரைப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும்கடற் படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஆரம்பத்தில்இருந்து எதிரும் புதிருமான ஆட்கள். ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது கொழும்பு பத்திரிகையாளர்வட்டாரத் துத் தகவல். ''புலிகளை ஒடுக்குவது என்பது அவர்களுக்குக் கடல் பகுதியில் இருக்கும் ஆதிக்கத்தை அடக்குவதுதான். இதைக் கடற்படைதான் செய்துகாட்டியது. கடற் புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களைக் கடந்த இரண்டு வருடங்களில்நாங்கள் தான் அழித்தோம். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளில் ஒருவரைக்கூட கடல் எல்லை வழியாகத் தப்பிச் செல்ல விடாமல் தடுத்ததும் கடற்படையின் சாதனைதான்'' என்று கடற்படைத் தளபதி பொங்குகிறார். ''எங்களுக்கு விமானப் படைதான் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது'' என்று பாராட்டு தெரிவித்த சரத் பொன்சேகா, கடற்படைக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை. ''யுத்தம் நடந்த காலம் முழுவதும் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. கடைசியாக, கடந்த டிசம்பரில்கூட ஆயுதங் களைக் கொண்டுவந்தார்கள்'' என்று சொல்கிறார் சரத் பொன்சேகா. இந்த ஏட்டிக்குப் போட்டிகள் இப்போ தைக்கு முடிய வாய்ப்பு இல்லை. ஆனால், தனக்கு அடுத்து பொன்சேகாதான் என்பதைச் சட்டபூர்வமாக அறிவித்துவிட்டார் மகிந்தா. இன்றைய சூழலில் ஸ்ரீலங்காவின் நம்பர் டூ அந்தஸ்து அவருக்கு வந்து விட்டது. எனவே, அவர் வைத்ததுதான்சட்டம்.

பொன்சேகாவின் முதல் திட்டம், ராணுவ வீரர் களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. ''புலி களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்க வைக்க வேண்டுமானால், மொத்தம் 3 லட்சம் ராணுவ வீரர்கள் அவசியம். ஆனால், இன்று இரண்டு லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். ஒரு லட்சம் பேரைஜனவரிக் குள் எடுத்தாக வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார். ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது இலங்கை முழுவதும்.

கடந்த நான்கு ஆண்டு போரில் மட்டும் 5,500 ராணுவ வீரர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் வீரர்கள் உடல் உறுப்புகளை இழந்து ஊனமானார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் ராணுவத்தைவிட்டு ஓடியுள்ளார் கள். இவை தோராயமான புள்ளிவிவரங்கள்தான். ''2006-07 ஆண்டுகளில் 2ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 3 ஆயிரம் வீரர்களும் இந்த ஆண்டு மே வரை 2 ஆயிரம் பேரும் இறந்துள்ளார்கள். கடைசி நாளில் மட்டும் 800 வீரர்கள் பலியானார்கள்'' என்று அங்கு உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில்பேச்சுஉள்ளது.

கண்ணி வெடிகளில் சிக்கி கால்களை இழந்தவர்கள் மீண்டும் ராணுவத்தில் இணைய முடியாது என்பதால், அவர்களுக்கு ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கி மறு வாழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்ஷே.

கருணா தன்னுடன் உள்ளவர்களை ராணுவத்தில் இணைக்க முயற்சி எடுத்து வருகிறார். 540 பேருக்கு விண்ணப்பங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். பழைய போராளிக் குழுக்களில் இருந்தவர்களும் விண்ணப்பித்து வருகிறார்கள். ''இவர்களை வைத்து தமிழ் ராணுவப் படையணி அமைக்க சரத் பொன்சேகா திட்டமிட்டு உள்ளார்'' என்று ஆர்வக்கோளாறாக கருணா சொல் லப் போக, ''அப்படி எந்தத் திட்டமும் இல்லை'' என்று அடுத்த நாளே மறுத்துவிட்டார் கோத்தபய.

ராணுவத்துக்கு ஆள் எடுப்பு விவகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ''யுத்தம் முடிந்தாலும் அரசு யுத்த பீதியைத் தக்கவைத்துள்ளது. தற்போது யுத்தம் இல்லை. அரசாங்கத்தின் எதிரிகள் அழிந்துவிட்டார்கள். ஆனால், அரசுக்கு எதிரி ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் இருக் கிறது. ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கப் போவதாகச் சொல்கிறீர்கள். இதில் தமிழ், முஸ்லிம், சிறுபான்மையினர் எத்தனை பேர் இருப்பார்கள்? அல்லது முழுவதும் சிங்களர்களைத்தான் சேர்த்துக் கொள்வீர்களா?'' என்று கேட்டபோது, எந்தப் பக்கத் தில் இருந்தும் பதில் இல்லை. ''ராணுவத்தைப் பரவ லாக்கிக்கொண்டே போவது தமிழருக்கு மட்டுமல்ல, சமாதானத்தை நேசிக்கும், ஜனநாயக வழியில் சிந்திக் கும் சிங்களவர்க்கும் மோசமானது'' என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் சுட்டிக் காட்டியதற்கும் பதில் இல்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரண்டு பெரிய ராணுவத் தலைமையகங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன் கீழ்தான் தமிழர் வாழும் முகாம்களை ஒப்ப டைக்கப் போகிறார்கள். ''மீண்டும் அப்பகுதியில் தீவிர வாதக் குழுக்கள் தோன்றாமல் இருக்க ராணுவம் அங்கு நிரந்தரமாக இருந்தாக வேண்டும்'' என்று சரத் பொன்சேகா சொல்லிவிட்டார். இப்போதைக்கு ராணுவ நடமாட்டம் குறைவதாகத் தெரிய வில்லை.

புலிகள் அமைப்பு முற்றிலும் துடைத்து எறியப் பட்டதாக ராணுவம் சொன்னாலும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு காடுகளில் இப்போதும் சில பல போராளிகள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படு கிறது. ஒரு காலத்தில் தமிழ்ப் பகுதியின் முதல் அமைச்சராக இருந்து இன்று ஒரிஸ்ஸாவில் எங்கோ தங்கி இருக்கும் வரதராஜப்பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில், இதை உறுதிப்படுத்தியுள்ளார். ''காட்டுப் பகுதியில் மறைந்துள்ள புலிகள் சரண டைய வேண்டும்'' என்று அரசு அறிவித்து உள்ளது. அதைவிடப் புலிகளின் சில முக்கிய உளவுத் துறை ஆட்கள் இன்னமும் கொழும்புப் பகுதியில் ஊடு ருவி இருப்பதாகவும் ராணுவம் அச்சப்படுகிறது. இந்நிலையில் ஐந்து மணிக்கே அடங்க ஆரம்பித்து விடுகிறது கொழும்பு. அத்தனை கடைகளையும் இருட்டுவதற்கு முன் அடைத்துவிடுகிறார்கள்.

பெரும்பாலான ராணுவ வீரர்கள், புலிகளின் ஆளுமையில் இருந்த பகுதியில் தினமும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அனைத்து ராணுவ வீரர்களுக்கும் தமிழர் பகுதியில் உள்ள இடங்களை இலவசமாக வழங்க இருப்பதாக அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அதுதான். உயிர் இழந்த ராணுவ வீரர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக் கடி வாட்டுகிறது. உலக வங்கியிடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்டது இலங்கை. அதுபற்றி இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என்று ஆறப்போட்டுவிட்டது உலக வங்கி. எனவே, ராணு வத்துக்கும் நாட்டுக்கும் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள் என்று மக்களிடம் கையேந்தும் நிலையும் வந்துவிட்டது.

''போர், போர் என்று சொல்லி இதுவரை கணக் கில்லாமல் ராணுவத்துக்குச் செலவு செய்து வந்தீர் கள். இனிமேல் இதை விசாரணை செய்ய வேண் டும். இங்கு நிறைய ஊழல் நடந்துள்ளது'' என்று எதிர்க்கட்சிகள் குரலை உயர்த்த ஆரம்பித்து உள்ளன. வவுனியா, மயிலீட்டி ஆகிய இரண்டு ராணுவ ஆயுதக் கிடங்குகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்குப் பின்னணி இந்த முறைகேடுகள்தான் என்கிறார்கள். ''ஆயுதங்கள் வாங்கப்பட்டது, பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இனி தலைமைக்குக் கணக்குகளைக் கொடுத்தாக வேண்டும். அந்த முறைகேடுகளை மறைப்பதற்காகத்தான் விபத்து நடந்து அழிந்ததாகச் சொல்கிறார்கள். எதிர்பாராத விபத்தாக இருந்தால் யாராவது இறந்திருக்க வேண்டுமே'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். ராணுவத் தலைமையகம் இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

புலிகளுக்கு உதவி செய்ததாக ராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மனித வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்காக சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்ட புலியான கிரி, தனக்கு உதவி செய்த ராணுவ அதிகாரிகளைச் சொன்னபோது, அதிகார வட்டமே அதிர்ந்துபோனதாம். மேலும், மேலதிகாரிக்குப் பிடிக்காத சிலரையும் புலிகளுக்குத் தகவல் தந்தவர்கள் என்று கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கைதான அதிகாரிகளில் ஒருவர், 'எனக்கு ராணுவத்தில் உரிய முக்கியத்துவம் தராததால் புலிகளுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன்'' என்று சொல்லி இருக்கிறார். இது போன்ற விசாரணைகள் ராணுவ வீரர்கள் மத்தியில் கிலி ஏற் படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டைவிட, வரும் ஆண்டில் ராணுவத்துக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சரத் பொன்சேகா கோரிக்கை வைத்துள்ளார். டிசம்பரில் ஜனாதிபதி தேர் தல், அடுத்த பிப்ரவரியில் பொதுத் தேர்தல் என்று அடுத் தடுத்த மெகா செலவுகள் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கின்றன. ''சர்வதேச நாடுகளின் நம்பிகையைப் பெறு வதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது'' என்ற தனது வேதனையை வெளிப்படையாக ராஜபக்ஷே சொல்லிக் கொண்டு இருந்தபோதுதான், 'மோசமாக வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் 22-வது இடத்தில் இலங்கை இருக்கிறது' என 'ஃபாரின் பாலிசி' இதழ் பட்டியல் போட்டுள்ளது. 117 நாடுகளின் தர வரிசை இது.

புத்தரின் போதனைகளில் அசோகருக்கு அதிகம் பிடித் தது இதுதான்: 'ஒரு யுத்தத்தில் தோற்றவர்களைவிட வென்றவர்கள்தான் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்!'

Please Click here to login / register to post your comments.