ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (44-90)

ஆக்கம்: தினமணி
44. மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!

அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், ""இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.

25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.

சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். ""இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது'' என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.

நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.

வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.

இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.

ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.

27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.

இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.

27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.

ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.

சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.

முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.

சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.

மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. ""நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது'' என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.

டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் ""நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?'' என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.

இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.

இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.

தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் ""கொட்டியாவ மறண்ட ஓன'' ""கொட்டியாவ மறண்ட ஓன'' (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.

மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.

45. திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!

ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன.

படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.

படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.

27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.

வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?

தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். ""இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.

வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை'' என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் ""தீவ்யன'' போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.

வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர். இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:

1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன்.

46. ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!

1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.

மே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.

ராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.

இறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.

முதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.

இக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.

அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் - நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி "முகாம்'களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.

ராணுவத்தின் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.

அப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.

அவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.

துணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.

மேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

அந்த அளவிற்கு அரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.

ராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.

அதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.

47. மட்டுநகர் சிறையுடைப்பு!

தீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று... தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் "மூளை' எனப்படுபவர்.

இந்த மத்தியூ பாராளுமன்றத்தில் புத்தமதப் பலாத்காரத்தை நியாயப்படுத்திப் பேசினவர் ஆவார்.

""சிங்களவர்கள் பல வருடங்களாகவே தளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையான இனமாக இருக்கும்போது அவர்கள் ஏன் ஆசியாவிலும் பெரும்பான்மையராக இருக்கக் கூடாது'' என்று கூச்சலிட்டார்.

சிங்கள இனவாத வெறியுடன் கூடவே பாசிச ஜெயவர்த்தனா அரசாங்கம் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடுத்த அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கடுமையான பலாத்காரத்துடன் ஒடுக்கியது. அதேசமயம் சிங்களவர்களின் அட்டூழியத்தைக் கண்மூடி மெüனியாகவே எதிர்கொண்டது.

தமிழர் வாழும் பகுதியில் பீரங்கி வண்டிகளைத் தெருக்களில் நடமாடவிட்டும், ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கவிட்டும் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொழும்புக்கு வெளியே பதின்மூன்று மாவட்டங்களில் ராணுவ சிவிலிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்க 10 மூத்த ராணுவ அதிகாரிகளையும், மூன்று உயர்மட்ட அதிகாரிகளையும் அரசு நியமித்தது.

இலங்கையின் 13,000 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தில் பாதிக்கு மேல் யாழ்ப்பாணப் பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு நிற்க வைக்கக்கூடிய பகுதியாக அது மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ராணுவ ஆட்சியாலும், நெருக்கடி நிலை சட்டங்களாலும் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக எவ்வித பின்விளைவு பற்றியும் பயமின்றி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதில் சர்வ சுதந்திரமாகச் செயல்பட ராணுவம் அனுமதிக்கப்பட்டது.

மேலும் பிரிவினை கோரும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்து ஓர் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இக்கலவரத்தின் உச்சகட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் சடலங்களை, அவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்காமல் புதைக்கவும், எரிக்கவும் அனுமதித்தது. லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமானது, இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில், இலங்கையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டத் திருத்தம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சட்டங்களைக் காட்டிலும் மிக மோசமான சட்டமாகும் என்று கூறுகிறது.

இச்சட்டத்தின்படி விசாரணை இன்றி 18 மாதம் சிறை வைக்கவும், விருப்பப்படி கைது செய்யவும், சந்தேகப்படும் யாரையும் மிக மோசமான சித்திரவதை வழிமுறைகளில் விசாரணை செய்யவும், நடைமுறையில் வரம்பில்லாத அதிகாரத்தை ராணுவத்திற்கு அளிக்கிறது.

இவ்வளவு வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நடத்தப்பட்ட ஜூலைக் கலவரம் சிங்களச் சிப்பாய்கள் 20 பேர் கொல்லப்பட்டதன் தொடர்நிகழ்வு என்று ஜெயவர்த்தன அரசும் வேறு சிலரும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால், தன்னை மறந்த நிலையில் ஜெயவர்த்தன ஜூலைக் கலவரத்தின் இரு வாரங்கள் கழித்து, பி.பி.சி நிருபருக்கு அளித்த பேட்டியில், ""இவ்வன்முறை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜூலை முதல் வாரத்தையடுத்து, கலவரத்தைத் தூண்டும் நோக்கில் தமிழருக்கு எதிரான உணர்வுடன் ராணுவம் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டது. இந்தச் செய்தியை வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள்'' என்று கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஏககாலத்தில், லண்டனில் இருந்து வெளியாகும் "கார்டியன்' இதழ், சிப்பாய்களின் கட்டுக்கடங்காத செயல் என்னவென்று ஏராளமான படங்களுடன் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

பேருந்து நிலையம் சென்று 18-20 வயதுள்ள மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒரு கிராமத்தில் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். அதன்பின்னர், அவர்கள் அனைவரும் முகாம் செல்லுமாறு உத்திரவு இடப்பட்டது.

பின்னர், அதே சிப்பாய்கள் சாதாரண உடையில் திரும்பவந்து ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து சுட்டுத்தள்ளிக் கொண்டே, கையில் கிடைத்தப் பொருள்களையெல்லாம் வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டே சென்றனர்.

இப்படிப்பட்ட வன்கொடுமை நடைபெற்ற பின்னர்தான் போராளிகள் இந்த இரக்கமற்ற சிப்பாய்களுக்குத் தண்டனை அளித்தனர் என்றும் "கார்டியன்' செய்தி வெளியிட்டிருந்தது(தகவல்: கு.வெ.கி.ஆசான், "ஈழ விடுதலைப் போர்' 1948-1996).

இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் இருவரும் "இலங்கையின் இனப்படுகொலைகள்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதியதுடன், அதை தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் அளித்தனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிர் தப்பிய 19 தமிழ் இளைஞர்களும் நிர்மலா நித்தியானந்தனும் ஜூலை 27-ஆம் தேதி இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். வெலிக்கடைத் தாக்குதலின்போது படுகாயமுற்றிருந்த இக்கைதிகள் ராணுவ வீரர்களினால் பஸ்ஸிற்குள் குப்புறப்படுத்திருக்கும்படிக் கட்டளையிடப்பட்டனர். அங்கு காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் இழிவான வார்த்தைகளினால் ஈழப் போராளிகளை ஏசியதுடன் அவர்களைத் தாக்கியும் துன்புறுத்தினர்.

வெறும் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாது அன்றிரவு முழுவதும் அங்கு வைத்திருக்கப்பட்ட இக் கைதிகள் மறுநாள் 28-ஆம் தேதி காலை மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு விமானப்படை விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில்கூட காயமுற்றிருந்த இக்கைதிகள் கீழே குனிந்தபடி இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.

ஜூலை 28-ஆம் தேதியும் அதற்குப் பின்னரும் சிங்களப் பிரதேசங்களிலிருந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 பேரும் மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போராளிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள புத்தவிகாரையில் கைக்குண்டுகள், பெட்ரோல், டயர் போன்றவை அங்கு முகாமிட்டிருந்த ராணுவத்தினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுநகர்ச் சிறைச்சாலை உட்பட மட்டுநகரை எரிப்பதற்காகச் சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் கொழும்பிற்கு மாற்ற சில நாள்களுக்குப்பின் அரசு முயற்சியெடுத்தது. சிங்கள அரசின் இம்முயற்சியை ஈழப் போராளிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முறியடித்தனர்.

இவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெளியே தொடர்வதற்காகவும் இனவெறி அரசு தம்மைக் கொல்வதற்கான முயற்சியைத் தவிடுபொடியாக்கும் எண்ணத்துடனும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படையினரின் முன்முயற்சியால் மட்டுநகர்ச் சிறையைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்தனர்.

மொத்தம் சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்து விடுதலைப் போராட்டத்தை மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்தனர். (சிறையில் இருந்த பிற விடுதலைக் குழுக்களும் இதில் இணைந்து பங்கெடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.) மட்டுநகர்ச் சிறையுடைப்புச் சம்பவமானது உலகின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரியது என்பதுடன், எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் கைது செய்யப்படாது தப்பிவிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.*

* -ஸ்ரீலங்கா, வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்-ஈழ மக்கள் செய்தி தொடர்பு வெளியீட்டிலிருந்து.

48. நிர்மலா சிறைமீட்பு!

தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட குற்றம்:

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல் அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும்.

இவர் குருநகரின் ராணுவ முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

1983 செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர் சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.

நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத் தீட்டினர்.

1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன் மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும் சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.

சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர். விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர்.

சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப் புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது. இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான சிறைக் கதவையும் உடைத்தனர்.

நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால் அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில் இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர்.

இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அத்தியாயமாயிற்று!

49. இலங்கை - இங்கிலாந்து - இஸ்ரேல்

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சியின்போதே, "தமது ஆட்சிக்குரிய பகுதிகளின் பாதுகாப்பு' என்று கூறி அந்நாட்டுக்கு ஏராளமான ராணுவ உதவிகளை இங்கிலாந்து அளித்தது. இவ்வகை ராணுவ உதவி என்பது வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஆகும். இவற்றைக் கையாள இலங்கையின் அன்றைய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இலங்கை - இங்கிலாந்து இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் காரணமாகவே 1955 வரை, இலங்கை ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடாக சேர முடியாமல் சோவியத் நாடு தனது "வீடோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இலங்கை - இங்கிலாந்து பாதுகாப்பு ஒப்பந்தப்படி திருகோணமலையில் கப்பற்படை, கட்டுநாயக்காவில் விமானப்படை என இங்கிலாந்து ராணுவத் தளங்கள் அமைய வழியேற்பட்டது. (பெüத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் - சந்தியாபிள்ளை கீத பொன்கலன் பக். 185) இந்த ஒப்பந்தத்தின் பலன், இலங்கை ராணுவத்தினருக்கு தொடர்பயிற்சி அளிக்கப்பட்டதுதான். 1983 வன்முறையின்போது இலங்கை அரசு இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் ராணுவ உதவிகளைக் கேட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை மறுத்த அதே நேரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அந்த நாட்டின் வெளி விவகாரத்துறை ஒப்புக் கொண்டது.

எவ்வித ஆயுத உதவியும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கூறி வந்த போதிலும் இலங்கைக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் இங்கிலாந்திலிருந்துதான் வந்தன. 1977-இல், செவர்டன் கம்பெனி என்ற ராணுவத் தளவாட நிறுவனம் கடற்காவலுக்கென 5 விசைப்படகுகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இரு அரசுகளிடையேயும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று 1980-இல் மேற்கொள்ளப்பட்டு, ராணுவத் தளவாடங்கள் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு ஆயுத விற்பனையைச் செய்ய முடியாது. ஆயுதங்கள் விற்பதானால், அந்நிய நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய, வர்த்தக இலாகாவின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதியின் காலம் ஓராண்டாகும்.

அரசு கனரக, ராணுவத் தளவாடங்கள் ஆலை இதே போன்று ஏற்றுமதியைச் செய்ய வேண்டுமானால், வெளி விவகார இலாகா அனுமதிவேண்டும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும். இது நடைமுறை. ஆனால் இங்கிலாந்திலிருந்து பல தடவை ராணுவத் தளவாடங்கள் இலங்கை வந்து சேர்ந்திருக்கின்றன.

இஸ்ரேலிய நாட்டுடன் இலங்கைக்கு சுமுகமான உறவில்லாத நிலை. பாலஸ்தீனிய அரசு உரிமை சார்ந்த ஐ.நா.வின் 242-வது தீர்மானத்தின்படி, ஒத்துப் போகாத இஸ்ரேலுடன் உலக நாடுகள் பலவும் தூதரக உறவைத் துண்டித்தன. அந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

1983-ஆம் ஆண்டில், இலங்கை அரசு கேட்ட இடங்களில் இருந்து ராணுவ உதவி கிடைக்கவில்லை. இதனையொட்டி, இஸ்ரேலிய உதவியும் நாடப்பட்டது என்று இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயின. உதவி கோரி அமைச்சரவைச் செயலர் இஸ்ரேலுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இலங்கை - இஸ்ரேல் உடன்பாடு ஏற்பட அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் வெர்னன் வால்டர்ஸ் பெரிதும் உதவினார்.

1984-இல், அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்தில் "இஸ்ரேலிய நலன் பிரிவு' ஒன்று தொடங்கப்பட்டது. ஆசியப் பகுதியில் இஸ்ரேலிய நலப் பணியாளர் பொறுப்பு வகித்த டேவிட் மத்நாய் இலங்கைப் பிரிவின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இஸ்ரேலிய ராணுவப் பிரிவினர் இலங்கை வந்து ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்க ஆரம்பித்தனர். இந்தச் செயல் முஸ்லிம்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. மட்டக்களப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள், அமைதியான முறையில் இஸ்ரேலியர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமுற்றனர். தொடர்ந்து அவசர கால ஒழுங்குவிதி 14(ஐஐ) பயன்படுத்தப்பட்டது. பத்திரிகைத் தணிக்கையும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலியரின் வருகை - ராணுவத்தினருக்கான பயிற்சி தொடர்பான செய்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழு கூடியபோது அதில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைவர்கள், இஸ்ரேலிய ராணுவப் பயிற்சிக்கும், மட்டக்களப்பில் ஏற்பட்ட மோதலுக்கும் கடும் கண்டனம் எழுப்பினர். "முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்க வேண்டும் - ஆதரிக்க விருப்பமில்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம்' என்று குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எச்சரித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ராணுவத்தினருக்கு இஸ்ரேலியரின் ஷின்பெய்த் என்னும் நிறுவனம் பயிற்சியளிப்பது உண்மைதான்' என ஒத்துக்கொண்டார். இஸ்ரேலிய நலன்பிரிவின் கொழும்பு பொறுப்பை கூடுதலாக கவனித்த டேவிட் மத்நாய் விடுவிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரியாக அக்ரயில் கார்பி' என்பார் பொறுப்பேற்றார்.

இஸ்ரேலியரின் இலங்கை வருகை "விசா' எதுவுமின்றி அனுமதிக்கப்பட்டது. இவர்களின் வருகையும், பயிற்சியும் இலங்கை ராணுவத்தினரின் செயல்பாடுகளில் நன்கு வெளிப்பட்டது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேலியரின் வெஸ்ட்பாங்க் தாக்குதலை அவை ஒத்திருந்தன.

தொடர்ச்சியான ஒரு மணி நேர ஊரங்குச் சட்டம் அமல் செய்யப்பட்டது. இளைஞர்கள் கைது, தொடர்ந்து விசாரணைக்காக பெற்றோர்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் உத்தரவு அறிமுகம் செய்யப்பட்டது. பொய்வாக்குறுதிகள், சிறையில் தள்ளுதல், மோசமான வழிமுறைகளைப் பயன்படுத்தி விசாரணை, கடற்கரை கிராமங்களில் குண்டுவீச்சு, கிராமங்கள் தீக்கிரை-என எல்லாமே இஸ்ரேலிய உத்திபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

50: இலங்கையின் சீன, பாகிஸ்தான் தொடர்புகள்!

இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்தின் யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டன. இது உலகம் அறிந்த செய்தி. காரணம் இதன் துறைமுகத்தின் பரப்பளவு ஆழம். இதன் பிறகு வல்லரசுகளின் கவனம் திருகோணமலை துறைமுகத்தின்மீது விழுந்தது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இதன் வெளிப்பாடு 1980-இல் அமெரிக்கத் தளபதிகள் கூட்டமைப்பு நடத்தும் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டர்ள்ற்ன்ழ்ங் எனும் சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெரிய வந்தது.

திருகோணமலை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்று' என்று ஜெனரல் டேவிட் சி.ஜோன்ஸ் (மநஅஊ) குறிப்பிட்டதை உலகம் கூர்ந்து கவனித்தது. ஆனால் ""இந்த வரி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது-இது ஒரு பிழை'' என்று அந்த சஞ்சிகை பதில் கூறியது. மழுப்பலாக பதில் கூறினாலும் அது அமெரிக்காவின் விருப்பம் என்பது வெளிப்பட்டது. 1981-இல் அந்நியப் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தங்குவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்கப்பல்களின் பல்வேறு காரணங்களைக் கூறி திருகோணமலை துறைமுகம் வருவதும் அதிகரித்தது.

1983-இல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வெய்ன்பேர்கர் கொழும்பு வருகை தந்தார். "தேநீர் விருந்து மட்டுமே. அதுவும் இந்த வழியாகப் போகும் வழியில் சிறு தங்கல்' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறிருக்க வேண்டுமென்பதில்லை.

ஏனென்றால் காஸ்பர் வருகையைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ ஜெனரல் வெர்னர் வால்டர்ஸ் வருகையும் அமைந்தது. அப்போதும் ராணுவ ஒப்பந்தம் ஏதுமில்லை என்றுதான் மறுக்கப்பட்டது. இந்த மறுப்புகளுக்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுக் குழுத் தலைவர் ஜோசப் ஆட்போ தலைமையில் ஆறு பேர் கொழும்பு வந்தனர். அவர்கள் ""லங்கையின் ராணுவ பாதுகாப்புக்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க சிபாரிசு செய்வோம். இலங்கை கடற்படை வசதி பெறுவதையும், தேவையான பயிற்சி பெறுவதையும் உறுதி செய்வோம்'' என்றும் அறிவித்தனர்.

திருகோணமலை துறைமுகத்தையொட்டி, ராணுவப் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் டன் பெட்ரோல் சேமித்து வைக்கும் 100 கிடங்குகள் உள்ளன. 1920-இல் இங்கிலாந்து இந்த கிடங்குகளைக் கட்டியது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த டாங்குகள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் இந்தியாவுக்கு சில டாங்குகள் உண்டு. அமெரிக்காவும் இந்த டாங்குகளைப் பயன்படுத்த விரும்புகிறது. திருகோணமலை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கென அமெரிக்கா நிறுவனத்திடம் 2500 ஏக்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் போட்ட 1951 மற்றும் 1985 ஒப்பந்தங்கள் உள்ளன. இதற்காக இலங்கையில் மேற்குக் கரையோரமுள்ள கிராமங்கள் நூற்றுக்கணக்கில் காலி செய்து தரப்பட்டுள்ளன. இந்த ஒலிபரப்பு மூலம் செயற்கைக்கோள் சாதனங்களுடனும் தொடர்பு கொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள சாதனங்களுக்கும் தகவல் அனுப்பலாம்; மறிக்கலாம்.

பாகிஸ்தான் இலங்கைத் தொடர்பு என்பது, பங்களாதேஷ் பிரச்னையை ஒட்டி உருவானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், இந்திய வான் எல்லை வழியாக பாக் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வருவாயைக் காரணம் காட்டி பாகிஸ்தானின் விமானங்கள், இலங்கையின் விமான நிலைய வசதிகளை பயன்படுத்திக் கொண்டன.

இந்தியாவுடன் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்ட திருமதி பண்டாரநாயக்காவின் செயல் சந்தேகங்களை எழுப்பியது. அது மட்டுமன்றி கிழக்கு பாகிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அந்தச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள் மூலம் தடைசெய்து, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று தொடங்கிய பாகிஸ்தான் நட்பு, 1983-க்குப் பிறகு அதிமாகியுள்ளது. 1984-இல் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது மற்றும் ராணுவத்தினர் பாகிஸ்தான் சென்று வந்தனர். அதே ஆண்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாலத்தீவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் திரும்பியபோது கொழும்பு வழியாக சென்றார்.

இதனைத் தொடர்ந்து 1985-இல் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாகிஸ்தான் சென்றார். பதிலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஜியா வுல் ஹக் இலங்கை வந்தார். அப்போது ஜியா வுல் ஹக் 20 கோடி டாலருக்கு பாகிஸ்தான் - இலங்கை இடையே வர்த்தகம் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.

இவையெல்லாம் வெளிப்படையான செய்திகள். ஆனால் பாகிஸ்தானில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு 1986-இல் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது ரகசியம். இந்தப் பயிற்சி அனைத்தும் கிளர்ச்சியை முறியடிக்கும் விதமான பயிற்சிகள் ஆகும். ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு கருப்பு உடை சீருடையாக அளிக்கப்பட்டது. அவர்களின் அணுகுமுறை கொடுமையானது; வித்தியாசமானது.

""இலங்கையின் இறையாண்மையில் அதன் ஆதிபத்திய உரிமையில் அந்நியர் தலையீடு கூடாது. இவ்வகையான தலையீட்டை ஏற்கவோ, அந்நாட்டைப் பிரிக்கவோ கூடாது'' என்று சீனா ஒருமுறை அதாவது 1983 வாக்கில் கருத்து தெரிவித்தது. இதன் பொருள் வெளிப்படையானது. இந்தியாவை முன்னிறுத்திச் சொன்ன கருத்துதான் அது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது.

1983-இல் ஆயுத உதவி கோரி இலங்கை கோரிக்கை வைத்த நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனையொட்டி, சீனம் அதிக அளவில் ஆயுதத் தளவாடங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தன சீனா சென்று பரிவர்த்தனைக்கு அடித்தளமிட்டார். தொடர்ந்து ஜெயவர்த்தனாவும் சீனா சென்றார்.

சீனா விமானப்படைக்குழு கொழும்பு சென்றது (1984). அதே ஆண்டில் தகவல் தொடர்புக்குப் பொறுப்பு ஏற்கும் தளபதி ஜெனரல் வீரசிங்காவுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலியும் சீனா சென்றார்.

சீன அதிபர் லீசின் கொழும்பு வந்தார். இலங்கையின் இறையாண்மை மக்களின் ஒற்றுமை குறித்து மட்டுமே அவர் பேசினார். ஆயுத உதவி குறித்து பேசவில்லை. ஆனால் அவை செயலில் நடைபெற்றன.

இது தவிர இதாலி, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தனிப்பட்ட ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஹெலிகாப்டர், விமானங்கள், கவச விமானங்கள், அதிவிரைவுப் படகுகள் முதலியவை வாங்கப்பட்டுள்ளன.

51. பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!

புத்தளத்திற்கு வடக்கே பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் முன்பே கண்டோம்.

மதுரையில் சங்கம் நடத்தியபோது பூதன் தேவனார் ஈழத்திலிருந்து வந்ததையும், பாடல்கள் பாடியதையும் சங்கப் பாடல்கள் அகநானூறு (88,231,307), குறுந்தொகை (189,343,360), நற்றிணை (365) தெளிவுபடுத்துகின்றன.

வேதாரணியம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் யாழ்ப்பாணத்தை அடுத்த தென்கணரவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், "பசுக்கறி' கேட்ட போர்த்துக்கீசியருக்கு போக்குக் காட்டி, சிதம்பரம் வந்து சேர்ந்ததுடன் அங்கு திருக்குளம் வெட்டி திருப்பணி செய்தவர் ஞானப்பிரகாசர் என்றும்,

முப்பதுக்குமேற்பட்ட அரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்து சென்னை மற்றும் சிதம்பரத்தில் அச்சகம், பாடசாலை நடத்தி அச்சொத்துக்களை இங்கேயே விட்டுச் சென்றவர் ஆறுமுகநாவலர் என்றும்,

சென்னைப் பல்கலையின் முதல் பட்டதாரிகளானவர்கள் கரோல் விசுவநாதப் பிள்ளையும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் என்றும்,

சென்னை மாகாணத்தில் பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடித்த அரிய நூல்களைப் பதிப்பித்ததுடன், உ.வே. சாமிநாதய்யருடன் சேர்ந்து செயல்பட்டவர் ஈழத்தின் சிறுப்பிட்டியைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும்,

தாகூரின், மகாத்மா காந்தியின், தனிச் செயலாளராக இருந்து, அடிப்படைக் கல்வி முறையை செயல்படுத்திய டாக்டர் அரியநாயகம், ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த சிவகுருநாதன், தஞ்சையில் பிறந்து, வாழ்ந்து யாழ்ப்பாணம் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை காங்கேயன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும்,

மூனப்புதூரில் பிறந்து மலையக் தமிழர்களின் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனவர் தொண்டமான் என்றும்,

இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர் சுவாமி விபுலானந்தர் என்ற காரணத்தால், அவரையே முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் செய்து அண்ணாமலை அரசர் கவுரவித்தார் என்றும்,

1927-இல் சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில்-எழும்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் யாழ்ப்பாணத்துக் கலைப்புலவர் நவரத்தினத்தின் மாமியார் மங்களம்மாள் (மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் பெரிய அம்மா) என்றும்,

தமிழறிஞர் தண்டபாணி தேசிகரின் குரு யாழ்ப்பாணம் மட்டுவில் க.வேற்பிள்ளை என்றும்,

யாழ்ப்பாணப் புறநகர் பாஷையூரில் பிறந்து, வளர்ந்து தமிழகத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியானவர் ஏ.சி.சி. அந்தோணிப்பிள்ளை என்றும்,

தமிழகத்தின் புகழ்பெற்ற தவில் கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் வசித்தது யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலடி என்றும், யாழ்ப்பாணத்திற்குத் தாய்த் தமிழகத்திடம் இருந்த தொடர்புக்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் கூறமுடியும்.

வரலாற்று ரீதியாக, வழிபாட்டு ரீதியாக உரிமைகளும், பண்பாட்டுப் பாரம்பரிய முறைகளும், பழமைகளும், உறவுகளும் பின்னிப் பிணைந்த வரலாறு, ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான வரலாறு.

அதேபோன்று, தமிழர் இசைமரபில் இலங்கைத் தமிழருடைய இசை மரபு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இலங்கை நாதஸ்வர தவில் இசை மரபு வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் தவில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், நாதஸ்வர சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் இலங்கையில் வாசித்து புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்கள் ஆவார்கள்.

அதுபோன்று, இலங்கையிலும் நாதஸ்வரத்தில் அளவெட்டி பத்மநாபன், தவில் வாசிப்பதில் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் சின்னராஜா, தட்டாரத்தெரு கருப்பையா போன்றோர்கள் முக்கியமானவர்கள். அளவெட்டி பத்மநாபன் தமிழகத்தில் பந்தநல்லூர் நாதஸ்வரக் கலைஞர் தெட்சிணாமூர்த்தியை குருவாக ஏற்று அவர் வழியில் வாசித்து இலங்கையில் பெருமை பெற்றார். யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி, வாசித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவருடன் இணைந்து தவில் வாசித்தவர்களுள் வளையப்பட்டி சுப்பிரமணியன், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு, நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி, பருத்தியப்பர் கோயில் செüந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் வருவாய் குன்றியதால் ஈழம் சென்று தங்கியிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, வருவாய் ஈட்டிப் பெரும் செல்வரானபின் அதே காரணத்தால் அங்கு வந்த கே.பி.சுந்தராம்பாளை அங்கு வைத்தே திருமணம் செய்து பின் இருவரும் தமிழகம் திரும்பினர்,

கும்பகோணம் தங்கவேல் பிள்ளையை, யாழ்ப்பாணத்தில் கோயில் விழாவிற்கு காரில் அழைத்து வரும்போது அவரைப் பார்ப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் மொய்த்துவிடும் என்று நினைவு கூர்கின்றனர், தற்போது வாழ்ந்து வரும் இசை மேதைகள்.

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம், திருவெண்காடு சுப்பிரமணியம், திருவிடைமருதூர் பி.கே.மகாலிங்கம், ராமலிங்கம், வேதாரண்யம் வேதமூர்த்தி, வல்லம் கிருஷ்ணன் போன்ற தமிழக இசை மேதைகள் இலங்கையில் வாசித்து பெருமை பெற்ற மாமேதைகள் ஆவார்கள்.

தவில் மேதைகளான திருமுல்லை வாசல் முத்துவீர சாமி, திருநகரி நடேசன், வடபாதிமங்கலம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருச்சேறை முத்துகுமாரசாமி, சுவாமிமலை கோவிந்தராஜ் ஆகியோருக்கு ரசிகர் கூட்டம் அங்கு நிறைய உண்டு.

இலங்கை வானொலி இம்மேதைகள் வாசிப்பதை பயன்படுத்தி கொண்டு தனது அலைவரிசைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒளிப்பரப்புவார்கள். தமிழக சினிமா பாடல்களில் உள்ள ராகங்கள், கீர்த்தனைகள், அதன் வடிவ அழகு, பாடலாசிரியர்கள் முதலியவற்றோடு ஒழுங்குபடுத்தி ரசிகர்களுக்கு வழங்கும் முறை இலங்கை தமிழ் வானொலியிடமிருந்து நம்மிடம் வந்த ஒன்றாகும். (கலைவிமர்சகர் தேனுகாவிடம் நேர்காணல்)

இவ்வாறு உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்ட தொப்புள்கொடி உறவுகளின் துன்பத்துக்கு தாய்த் தமிழகம் அளித்த பங்கு என்ன?

52. தி.மு.க.வின் முகவை மாநாடு!

இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால், இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

1983 இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.

இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை 18, 1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர். தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட், சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து எழுதின.

ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜூலை 26-இல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச் செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.

உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின.

இலங்கை அரசு இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப் பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின.

கொழும்பிலும் இதர நகரங்களிலும் வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது.

டாக்ஸி டிரைவரை தாஜா செய்து சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், ""இம்முறை சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்! கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது'' என்றார்.

தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை, "ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?' என்றனர் பத்திரிகையாளர்கள். ""அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்'' என்றார் அவர்.

பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.

""தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார் (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால் அல்ல. செயலால் பதில் தேவை...

""இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல் கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்'' என்று பேரணியின் முடிவில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும். அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன.

இன்னொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.கருணாநிதி.

ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார்.

ஜூலை 30-இல் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு தீக்காயம்.

கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள் கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ""இலங்கையின் கொடிய, காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்'' என்று கூறப்பட்டிருந்தது.

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.

""இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்'' என்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது.

""சர்வதேச அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்'' என்றும் கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, ""ஆகஸ்ட் 4 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப் போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்'' என்று அறிவித்தார்.

52: தி.மு.க.வின் முகவை மாநாடு!

இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால், இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

1983 இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.

இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை 18, 1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர். தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட், சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து எழுதின.

ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜூலை 26-இல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச் செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.

உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின.

இலங்கை அரசு இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப் பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின.

கொழும்பிலும் இதர நகரங்களிலும் வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது.

டாக்ஸி டிரைவரை தாஜா செய்து சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், ""இம்முறை சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்! கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது'' என்றார்.

தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை, "ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?' என்றனர் பத்திரிகையாளர்கள். ""அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்'' என்றார் அவர்.

பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.

""தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார் (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால் அல்ல. செயலால் பதில் தேவை...

""இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல் கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்'' என்று பேரணியின் முடிவில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும். அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன.

இன்னொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.கருணாநிதி.

ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார்.

ஜூலை 30-இல் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு தீக்காயம்.

கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள் கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ""இலங்கையின் கொடிய, காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்'' என்று கூறப்பட்டிருந்தது.

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.

""இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்'' என்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது.

""சர்வதேச அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்'' என்றும் கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, ""ஆகஸ்ட் 4 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப் போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்'' என்று அறிவித்தார்.

53: நியூயார்க் உலகத் தமிழர் மாநாடு!

தி.மு.க.வின் முகவை மாநாட்டின் கட்சித் தலைவர் மு.கருணாநிதி ஆற்றிய எழுச்சி உரை இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான பதிவு என்று சொல்ல வேண்டும்.

""1950-ஆம் ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டிப்பதற்காகத் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை சற்றேறக் குறைய இருபத்து ஐந்து ஆண்டு காலமாக இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மொழி உரிமைக்காக, தங்களுடைய இன உரிமைக்காக, தங்களுடைய பாதுகாப்பிற்காகப் போராடி, போராடி வேறு வழியில்லாமல் 1975 அல்லது 76-ஆம் ஆண்டுகளில் தங்களைக் காத்துக்கொள்ள தமிழர்களைக் காத்துக்கொள்ள, இனத்தைக் காத்துக்கொள்ள, இனி வேறு வழி கிடையாது - நாமும் ஆயுதத்தைதத் தாங்கித்தான் தீரவேண்டும் என்று படைக்கலம் ஏந்துகின்ற பட்டாளத்துப் பெருமகனாக மாறினான்.

1975 வரையில் பொறுத்துப் பார்த்தான். சகித்துக் கொண்டான். தாய்மார்கள் கற்பழிக்கப்பட்டதை, அவனுடைய சகோதரிகள் நடுவீதியில் வைத்து மானபங்கப் படுத்தப்பட்டதை அவன் சகித்துக் கொண்டே வந்தான். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்ற காரணத்தால் அந்தப் பொறுமை எல்லை தாண்டுகிற அளவுக்குப் பொல்லாத செயல்கள் இலங்கையில் சிங்கள வெறியர்களால் நடத்தப்பட்ட காரணத்தால் ஆயுதம் தாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது'' என்று இன்றைய விடுதலைப் போராளிகளின் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கான காரணத்தைப் படம் பிடித்துக் காட்டினார் கருணாநிதி.

அனைத்துக் கட்சிகளும் மாநில அரசும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு ஆகஸ்ட் 2-இல் நடைபெற்றது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. தண்ணீர் கொண்டு வரும் லாரிகள், ஆம்புலன்ஸ் வண்டிகள், காவல் துறை, பத்திரிகைத் துறை வாகனங்கள் தவிர வேறு வாகனங்களைச் சாலையில் பார்க்க முடியவில்லை. சென்னை விமான நிலையமும் மூடப்பட்டது. துறைமுகத்திலும் வேலையில்லை.

மாணவர்கள் ஆங்காங்கே ஜெயவர்த்தனவின் அடக்குமுறையை எதிர்த்துக் கொடும்பாவி கொளுத்திக் கண்டன ஊர்வலங்களையும் நடத்தினர்.

ரயில் நிறுத்தப் போராட்டத்தைத் தி.மு.கழகம் அறிவித்ததும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று மத்திய அரசு அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இலங்கைக் கொடுமையைக் கண்டித்து கூட்டம் ஒன்று நடத்தினர். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கலந்துகொண்டார். அவர் தனது பேச்சில் "ஜெனோசைட்' என்று அழைக்கப்படும் இனப்படுகொலை இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக வழக்கறிஞர் சமுதாயம் பாடுபட வேண்டும். அறைகூவல் விடுத்தார்.

இந்தக் காட்டுமிராண்டிச் சம்பவங்களுக்கு எதிராக உலக அரங்கின் கருத்தைத் திரட்ட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ்ச்சகோதர, சகோதரிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உலகம் தழுவிய சட்டபூர்வமான கிளர்ச்சியைத் துவக்கி மக்களின் உணர்வை தட்டி எழுப்ப வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது என்றாலும் "இப்பிரச்னையை' மனித உரிமைகள் என்ற கோணத்தில் நோக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற வன்முறை வெடிப்பு, ஒருபிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களைத் தாக்கிய நிகழ்ச்சி அல்ல. அங்கே அரசே ராணுவத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. அல்லது அந்த ராணுவம் தமிழர் என்று சொல்லப்படுவோரைக் கொன்று குவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இது எஉசஞஇஐஈஉ என்று சொல்லப்படுகிற ஓர் இனப்படுகொலையே ஆகும்.

ஆகையால், இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களையும், தமிழ் வம்சாவளியினரையும் காப்பாற்ற வேண்டிய கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அரசு எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போது, ""தலையிடக் கூடாது'' என்ற வாதத்தில் அர்த்தமில்லை'' என்றார் கிருஷ்ணய்யர்.

தி.மு.கழக செயற்குழு மீண்டும் ஆகஸ்ட் 7-இல் கூடியது. ஆங்கிலப் படிவத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை இரண்டு கோடிக் கையொப்பங்கள் முகவரியுடன் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்புவது என்று தீர்மானம் போட்டது.

அது போலவே ஆகஸ்ட் 4-இல் இயற்றிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் சட்டத்தை நகல் எடுத்து பட்டிதொட்டியெங்கும் எரிப்பது என்றும் தீர்மானித்தார்கள்.

காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் ஆறாயிரம் பேருடன், படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழருக்கு உதவிட மதுரையிலிருந்து ராமேசுவரம் வரை நடை பயணமாகச் சென்று கடலில் கட்டுமரத்தில் ஏறி இலங்கை செல்லும் தியாகப் பயணம் மேற்கொண்டார். அவர் தமிழக அரசால் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். மத்திய - மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்னையில் போதிய கவனம் எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து மு.கருணாநிதியும், க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை 10.8.83 அன்று துறந்தனர்.

ஜி.பார்த்தசாரதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தூதராக இலங்கை செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழகத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு 26.8.83 அன்று இலங்கைக்குச் சென்றார்.

1984 ஏப்ரல் 9-இல் சர்வகட்சித் தலைவர்களுடன் இணைந்து கண்டனப் பேரணி நடத்திய பிறகு, அமெரிக்க நாட்டின் கைப்பாவையாக உள்ள இஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை மேலும் வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ப.மாணிக்கம், வி.பி.சிந்தன், காஜாமொய்தீன், இராம.அரங்கண்ணல், தி.சு. கிள்ளிவளவன், இரா.குலசேகரன், கோ.கலிவரதன், வேணுகோபால், அன்பு வேதாசலம், தெள்ளூர் தர்மராசன், ஜெய்லானி, எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி, அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர் மாநாடு ஒன்று நியூயார்க், நான்வெட் நகரில் கூட்டப்பட்டது. மாநாட்டில் தலைமை ஏற்று காமராஜ் காங்கிரஸ் தலைவர் ப.நெடுமாறன் உரையாற்றினார். அந்த உரையில், ""ஈழ மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிரான கண்டனக் குரலை உலகம் முழுமையுள்ள பல்வேறு நாடுகளின் அரசுகளை, இலங்கை அரசின் இனவெறி ஆட்சியைக் கண்டிக்கும்படியான கவனத்தைத் திருப்பவேண்டும்.

புது தில்லியில் நடக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் சுதந்திர நாடுகள் மட்டுமன்றி, விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், தென் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இயக்கம், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், அகில ஆப்பிரிக்கக் காங்கிரஸ், மியோடிரிக்கா நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி, இஸ்லாமிய மாநாடு போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அதே போன்று தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். திருகோணமலையில் எந்த அந்நிய நாட்டின் ராணுவ தளமும் அமைய விடக்கூடாது. அது இந்தியாவிற்குப் பேராபத்தை உருவாக்கும்'' என்றார்.

""தமிழர்களை அருகில் இருந்து காக்க ஐ.நா. மன்றத்தின் சார்பில் அமைதிகாக்கும் படை அனுப்ப வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் பிளவுபட்டுக் கிடப்பது தமிழர்களின் சாபக்கேடாகும்.

பொது எதிரியான ஜப்பானியர்களையும், ஜெர்மானியர்களையும் எதிர்க்கப் பரமவைரியான மா-சே-துங்கும் ஷியாங்கே சேக்கும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். நாஜிகளை ஒழிக்க ஸ்டாலினும், ரூஸ்வெல்ட்டும் ஒன்று சேர்ந்தார்கள். அப்படி இருக்கும்போது ஏன் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான தமிழ் இளைஞர்கள் ஒன்று படக் கூடாது'' என்று அதே மாநாட்டில் கேள்வி எழுப்பினார் வை.கோபால்சாமி எம்.பி.

இந்த மாநாட்டில் கி. வீரமணி, செஞ்சி இராமச்சந்திரன், மலேஷியா திராவிடர் கழகச் செயலாளர் கே.ஆர்.இராமசாமி, இரா.செழியன், டாக்டர் ஜெய்னுதீன், செ.யோகேஸ்வரன், கரிகாலன், ஈழவேந்தன், வைகுந்தவாசன் (லண்டன்), மணவைத்தம்பி முதலியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை டாக்டர் வின்சென்ட் பஞ்சாட்சரம், வழக்கறிஞர் முதலானோர் செய்தனர்.

54. கண்டியின் கடைசித் தமிழ் மன்னன்!

ஜூலை 25, 1984-இல் சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில் இலங்கை தமிழினப் படுகொலை நினைவாக ""கண்ணீர் நாள்'' எனத் தி.மு.கழகத்தால் அனுசரிக்கப்பட்டது.

அன்று நடந்த கூட்டத்தில் மு.கருணாநிதி குறிப்பிட்டதாவது:

""அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து, சந்தித்து, இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசிப்பேசி, ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு யாருடைய முயற்சியினாலோ-எனக்குத் தெரியாது-அந்த இளைஞர்களே மனப் பக்குவப்பட்டு அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது; ஸ்ரீ சபாரத்தினம் தலைமையில் இயங்குகிற டொலோ என்கிற (பஉகஞ) இயக்கமும், பாலகுமார் தலைமையில் இயங்குகிற ஈரோஸ் (உதஞந) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையில் இயங்குகிற உடதகஊ என்கிற இயக்கமும் இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு-அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று-தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது-உழைக்கும்-மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது, முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாளர், விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமத்துவ நோக்கோடு-சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்; ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு இயக்கங்கள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (டகஞப), இன்னொன்று தம்பி பிரபாகரன் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (கபபஉ). அந்த இரண்டு இயக்கங்களும், இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து-அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து-யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம். அனைவரின் எதிர்பார்ப்பு'' என்றார்.

கூட்டத்தில் பேச வந்தவர்களும், கேட்க வந்தவர்களும் இக் கருத்தையே கருணாநிதி பேச்சுக்குப் பிறகு வலியுறுத்தினார்கள் என்பது உண்மை.

அதே கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,

""இந்தக் கண்ணீர் நாளில் நாம் குட்டிமணியை, தங்கதுரையை, ஜெகனை நினைத்துக் கொள்கிறோம். வெலிக்கடை சிறையில் நான் குட்டிமணியுடன் ஒன்றாக இருந்தேன்; ஒரே அறையில் இருந்தேன். அப்போது குட்டிமணிக்குக் குழந்தை பிறந்தது என்று செய்தி வந்தது. என் குழந்தை கருப்பாய் இருக்குமா? சிகப்பாய் இருக்குமா என்று என்னைக் கேட்டான். அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லை. இந்த நாளில் நாம் கண்ணீரைத்தான் சிந்துகிறோம். குட்டிமணி கண்ணையே சிந்தியவன்'' என்றார்.

கூட்டத்தில் இரா. செழியன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, செ. கந்தப்பன், தி.சு. கிள்ளிவளவன், செல்வேந்திரன், கோவை மகேசன், சிகாமணி, தெள்ளூர் தருமராசன், டி.ஆர். பாலு முதலியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

"இலங்கையிலே கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் பெயர் விக்கிரமராஜசிங்கன். அவனைப் பிரிட்டிஷார் போரில் தோற்கடித்துக் கண்டிப்பகுதியைக் கைப்பற்றினர். தோற்கடிக்கப்பட்ட விக்கிரமராஜசிங்கனுக்குக் கண்ணுசாமி என்ற பெயரும் உண்டு. வேலூர் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த அம்மன்னன் தனது 56-வது வயதில் மரணமடைந்தான். அவனது கல்லறை வேலூர் பாலாற்றங்கரையில் இன்றும் இருக்கிறது' என்று சென்னைக் கடற்கரையில் (8.8.83) நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். அது தொடர்பாக பெங்களூரில் வசித்த விக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப்பேரன் கே.ஜி.எஸ். ராஜசிங்கனைச் சந்தித்தபோது கிடைத்த தகவல்கள்:

இலங்கையை ஆண்ட (கண்டிப் பகுதியை) மன்னன் நரேந்திரசிங்கன் மணமுடிக்க அரச குடும்பத்துக்கு இணையான பெண்கள் கிடைக்கவில்லை. பட்டத்து அரசியாக சூரிய வம்சத்தைச் சேர்ந்த பிற தேசத்து அரச குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதெனத் தூதுவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மதுரையை (1709-இல்) நாயக்கர்கள் ஆண்டு வந்த நேரம். அவர்கள் சூரிய வம்சமானதால் நாயக்கர் குடும்பத்திலிருந்து பெண்ணெடுத்து அரசியாக்கிக் கொண்டான் நரேந்திரசிங்கன். அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. தனக்குப் பிறகு நாடாளவென்று மனைவியின் சகோதரனை மதுரையிலிருந்து வரவழைத்து பட்டத்திற்குரியவனாக்கினான். அவன்தான் கண்டியின் முதலாவது தமிழ் மன்னன். பட்டப் பெயர் ஸ்ரீ விஜயராஜசிங்கன்.

அவரும் எங்களுடைய வம்சத்திலேயே பெண் எடுத்தார். அவருக்கும் ஆண் வாரிசில்லை. அவர் இறந்த பின் அவரது தம்பி கீர்த்தி ஸ்ரீராஜசிங்கா மன்னரானார்.

அவர் அரசாண்ட சமயத்தில் இலங்கையில் புத்தமதம் வலுவிழந்திருந்தது. மீண்டும் அங்கே புத்தமதத்தைப் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் கீர்த்திஸ்ரீ தீவிரம் காட்டினார். தூதுவர்களைச் சயாம் நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து புத்த பிட்சுக்களை வரவழைத்து இலங்கையில் உள்ளோரைப் புத்த பிட்சுக்களாக மாற்றும் வேலையில் ஈடுபடுத்தினார்.

அப்படி முதன் முதலாக வந்த புத்தபிட்சு வெளிவத்தை சரணங்கரா என்பவராவார். இவரைக் கொண்டு, தமிழ்நாட்டில் தெய்வ விக்கிரகங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போல் புத்தரின் பல்லை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபடச் செய்தார். இன்றுவரையும் நடைபெறும் "பெரஹரா' எனப்படும் அவ்விழாவுக்கு அவரே மூலகர்த்தா!

கீர்த்தி ஸ்ரீராஜசிங்காவுக்கும் ஆண் வாரிசில்லை. அவருக்குப்பின் அவரது தம்பி ராஜ அதிராஜசிங்கா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டீஷாரும் பிரெஞ்சுக்காரர்களும் போர்ச்சுகீசியரும் கவனம் செலுத்தியதைப் போலவே இலங்கையின் மீதும் நாட்டம் கொண்டனர்.

ராஜ அதிராஜசிங்கா திடீரென இறந்துவிடவே, ஆண் வாரிசில்லாத நிலையில் அவரது ஆட்சியில் மந்திரியாக இருந்த பிலிமத்தலாவைக்கு மன்னராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, மன்னரின் மைத்துனரைப் பேருக்கு மன்னராக்கினார். அவரது பட்டப்பெயர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. மந்திரி பிலிமத்தலாவையின் ஆசை நிறைவேறாதபடி ஸ்ரீவிக்கிரமராஜ சிங்கன் சிறப்பாக ஆட்சி புரியவே, வெறுப்புற்ற மந்திரி கபடமாய்ச் செயல்பட ஆரம்பித்தார்.

பிரிட்டீஷார் கண்டியைக் கைப்பற்ற பல முயற்சி செய்து தோற்றுப் போயிருந்த நேரம். மன்னர் தமிழரானாலும் அதிகாரிகளாகச் செயல்பட்டவர்களில் சில சிங்களர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொடுமைகளில் மந்திரிக்கும் உடன்பாடு உண்டு.

கண்டியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த பிரிட்டீஷாருக்கு நண்பரானார் மந்திரி பிலிமத்தலாவை. கண்டி மன்னர் மீது பல அவதூறான கதைகளையும், அவரைக் கொடுங்கோலனாகச் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளையும் ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள். இவைகளுக்கு அந்த மந்திரி பேருதவியாக இருந்தார்.

ஒரு நாள் மன்னர் தெல்தெனியாவுக்கு அருகில் மெதமசநுவரா என்னுமிடத்தில் தன் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அங்கு பிரிட்டீஷார் திடீரென்று தோன்றி மன்னரையும் குடும்பத்தினரையும் சிறைப்படுத்தினார்கள். இது நடந்தது 18 பிப்ரவரி 1815-இல். அலவரடிக் குடும்பத்தினரையும் பிரிட்டீஷார் கொழும்புக்குக் கொண்டு வந்தனர். அங்கு ஓராண்டு காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்த ஓராண்டு காலம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிப் பலவகையில் பிரிட்டீஷாருக்கு இடைஞ்சல் செய்தனர். பிரிட்டீஷாருக்கு உடந்தையாக இருந்த மந்திரிக்கும் பதவி தராமல் மொரீஷியஸýக்கு அடித்து விரட்டினார்கள்.

மன்னர் கொழும்புவில் இருக்கும் வரை இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும் எனக் கருதி எச்.எம்.எஸ். கான்வாலிஸ், எச்.எம்.எஸ். ஆன் என்னும் கப்பல்கள் மூலம் மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனையும் குடும்பத்தினரையும் பிரித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். சென்னையை ஆண்ட பிரிட்டீஷ் அரசோ, அவர்கள் அனைவரையும் வேலூர் கோட்டைச் சிறையில் அடைத்து வைத்தது.

வேலூர் கோட்டையில் சப்-ரிஜிஸ்தரார் அலுவலகம் இருக்கும் இடத்தில் மன்னரின் குடும்பத்தினர் வழிபட்ட துளசிமாடம் இன்றும் இருக்கின்றது. மன்னர் சிறையிருந்த இடம் இன்றைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ட்ரெயினிங் ஸ்கூல் இருக்கிறதே அந்த இடம் தான்! அவர் வேலூர் கோட்டைச் சிறையிலேயே வசித்து 1836-ஆம் ஆண்டு ஜனவரி 30-இல் காலமானார்.

பாலாற்றங்கரையில் அவரை அடக்கம் செய்தனர்.

55. எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை!

ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப் பேரன் தன்னைப் பற்றியும் தனது மூதாதையர் பற்றியும் மேலும் பல தகவல்களைத் தந்துதவினார்.

பிரிட்டீஷார் எங்களது வம்சத்தவரை அரசியல் கைதிகளாக மதித்து, எங்களது குடும்பங்களுக்கு மன்னர் மான்யம் அளித்து வந்தனர். அது 1832 முதல் 1948 வரை தொடர்ந்தது.

பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் இது தொடர்ந்தது. சேனநாயகா பிரதமராக இருந்த சமயம் தில்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட விருந்து ஒன்றில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலங்கைக்குள் எங்களது சந்ததியினர் நுழையக் கூடாது என்று பிரிட்டீஷார் போட்டிருந்த தடையை ரத்து செய்யக்கூடாதா என்று கேட்டேன். அந்தத் தடை இப்போது இல்லை; இலங்கை வந்து வாழ விரும்பினால் உதவி செய்வதாகவும் சொன்னார்.

நான் இலங்கைக்குச் சென்று அசோசியேடட் பிரஸ்ஸில் நிருபராகச் சேர்ந்தேன். அசோசியேடட்பிரஸ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளில் தினசரிகளையும், வார இதழ்களையும் நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் பண்டாரநாயகா, அசோசியேடட்பிரஸ் நிறுவனத்தை தேசியமயமாக்கினார். அதற்குப் பிறகு அங்கே பத்திரிகைச் சுதந்திரம் இருக்காது என்று ராஜினாமா செய்தேன். லண்டனில் சிறிது காலம் பணியாற்றினேன்.

இப்போது நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். என் தந்தையார் கோவிந்தசாமி ராஜா தமிழக அரசில் நிதித்துறையில் பணியாற்றியவர். அவர் பிறந்ததே வேலூர் கோட்டைச் சிறையில்தான். அவருடைய தந்தை வெங்கடசாமி ராஜா இலங்கையில் பிறந்தார்.

நான் படித்தது சென்னையில்தான். பட்டுக்கோட்டை அழகிரிசாமி எங்களது வம்சாவளி. நானும் அவரும் அக்கா-தங்கையரை மணந்து கொண்டோம்.

கண்டியில் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலிருந்த சிங்கள மந்திரிகள், அரசு ஆணைகள் யாவற்றிலும் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்பதுதான் முக்கிய அம்சம். பல நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடித ஓலைகள் தமிழிலேயே இருந்தன என்பதும் வரலாற்றுச் சான்றுகள். இதற்கான ஆதாரங்கள் யாவும் கண்டி மியூசியத்தில் இன்றும் இருக்கின்றன. மந்திரியாய் இருந்த சிங்களவர்களுக்கும் பிரிட்டீஷாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழில் தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மன்னர்கள் இலங்கையில் தமிழர் பகுதியை மட்டும் ஆளவில்லை. அவர்கள் சிங்களவர் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளையும் ஆண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எங்களது வம்சாவளியினரே சரித்திரச் சான்றாகத் திகழ்கிறார்கள். எனவே சிங்களவருக்கு எவ்வளவு உரிமைகள் இலங்கையில் உண்டோ அதற்கு அதிகமாக தமிழர்களுக்கும் உரிமை உண்டு'' என்றார் கே.ஜி.எஸ்.ராஜசிங்கன் (குங்குமம் வார இதழ் 1983).

அஇஅதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஆகஸ்ட் 13-14, 1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள், சிங்களக் கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் நலன் காக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி "ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கருப்புச் சட்டை அணிய வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆகஸ்ட் 10-இல் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களில் அமைச்சர்கள் சோமசுந்தரம், கா.காளிமுத்துவின் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் குறித்து அக்டோபர் 17 அன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ""சோமசுந்தரமோ, காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள்.

அவர்கள் பேசுவதற்கு முன்பு என்ன கருத்துக்களைச் சொல்லப்போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் பேசுவார்கள். எங்களுக்குள் கருத்து ஒற்றுமை உண்டு. அப்படி கருத்து ஒற்றுமை இல்லை என்றால், இந்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம் (28.10.1983-தினமணி) என்று கூறினார்.

"தமிழர்கள் தலைவர்களிடம் நிபந்தனையுடன்தான் பேசுவேன்' என்று ஜெயவர்த்தன கூறியதாக ஆகஸ்ட் 30, 1983 செய்தியைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ஜெயவர்த்தனாவுக்கு ஒரு முதலமைச்சர் பதில் கூறி நேரடி அறிக்கை விடுவது மரபு இல்லை என்று தெரிந்தும், ஓர் அறிக்கை வெளியிட்டார்.

""தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள்; கட்டுண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தன தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம் என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, இருப்பது ஓர் உயிர்தான், போவதும் ஒரு முறைதான்' என்று அறிஞர் அண்ணா கூறியதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படுகொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்து கோடி தமிழர்களும் சீறிப் பாயக்கூடிய நிலையை ஜெயவர்த்தன நிச்சயமாக ஏற்படுத்தக்கூடாது என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும், அஇஅதிமுகவை நிறுவியவன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்களப் பேரினவாத அரசுக்கு, அமெரிக்க அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து அக்டோபர் 12, 1983 அன்று அமெரிக்காவின் போக்கைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. அன்றைய தினம் அமெரிக்கத் தூதரக துணை கான்சல் ராய் விக்டேக்கரிடம் ஒரு மனு ஒன்றினையும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தார். அந்த மனுவில், ""மனித உரிமைகள் குறித்து நாள்தோறும் பேசி வருகின்ற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், தனது பாதுகாப்பு அமைச்சரை ரகசியமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தது தமழக மக்களின் உள்ளத்தைப் புண்படுத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அமெரிக்கா ஆயுத உதவி அளிக்கும் அதேவேளையில், தனது நலனுக்காக இலங்கைத் தமிழர் பிரச்னையை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்த முயல்வதைக் கைவிட்டு, திருகோணமலையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும்'' (13 அக்டோபர் 1983 - தினமணி) என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

நெடுமாறன் படகு மூலம் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில், ""நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா- தடுப்புக் கருவிதான் இருக்கிறதா; ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.

அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்; ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது; வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.

உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம் (சட்டமன்ற உரை).

அக்டோபர் 1984-இல் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மட்டும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை தேற, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சமயம் பார்த்துப் பிரதமர் இந்திரா காந்தி ஒருநாள் அதிகாலை தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு மரணமுற்றார். இந்தச் சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியுற வைத்தது.

இந்திரா காந்தி சுடப்பட்டு மரணமடைந்தார் என்று கேள்விப்பட்டதும் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்திரா காந்தி, ஈழத் தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவார் என்று அவர்கள் நம்பியிருந்தனர்.

இந்திரா காந்தி சுடப்பட்டு வீழ்ந்த செய்தி மக்களுக்கு போய்ச் சேரும் முன்பாக அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரும் ராஜீவுக்கு பதவிப் பிரமாணமும் செய்வித்தார்.

இரவு பகலாக இந்திரா காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த காட்சிகளை இந்தியத் தொலைக்காட்சி அஞ்சல் செய்தது.

அடுத்த பதினோராவது நாளில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டுத் தேர்தலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.

மத்தியில் ராஜீவ் ஆட்சி. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், உடல்நலம் குன்றிய நிலையிலும் முதல்வராகத் தொடர்ந்ததும் இப்போது சரித்திரமாகிவிட்ட நிகழ்வுகள். அதனால் நாட்டு மக்களிடையே ஏகப்பட்ட பரபரப்பு.

அங்கே இலங்கையிலோ இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் சாதகமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் தமிழர்களைக் கொன்று குவிப்பதுதான் நின்றதா? இல்லை; அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

தமிழ் விடுதலைப் போராளிகளும் தங்களால் முடிந்த வரை எதிர்த்தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

56: பண்டாரியின் பாராமுகம்!

சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பெற தி.மு.கழகப் போராட்ட அறிவிப்பு மாநாடு ஒன்று 24.3.85-இல் நடந்தது.

அந்த மாநாட்டில் மு.கருணாநிதி பேசுகையில், ""பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்னையைத் தீர்ப்பதாக இந்திய அரசு எடுத்துக் கூறி அதற்கென முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட; நாம் அப்போதே சுட்டிக்காட்டி எச்சரித்தது போல, பேச்சு வார்த்தை என்கிற சாக்கில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாடுகளின் உதவியைப் பெற்று இலங்கைத் தமிழினத்தை அடியோடு அழிக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டுவிட்டார்...

இடையில் சில மாதங்கள் நின்றிருந்த கொடுமைகள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு, குழந்தைக் குட்டிகள் கொல்லப்பட்டு, இளையோர் முதியோர் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்தக் கோரத் தாக்குதல்களில் எஞ்சி இருப்போர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகம் நோக்கி அன்றாடம் அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் தி.மு.கழகம் தனது கடமையை ஆற்றிடப் பொதுக்குழுவில் சில முடிவுகளை எடுத்துள்ளது'' என்றார்.

வைத்த கோரிக்கை, இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மெத்தனமாக இல்லாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ராணுவத்தை அனுப்பி இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் ஆகும்.

தமிழ் ஈழத்தைத் தாம் அங்கீகரிப்பதாகத் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அத்துடன் மு.கருணாநிதி, காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டபோது கைதாகிச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

""நமது கழகம்'' சார்பில் எஸ்.டி.சோமசுந்தரம் மதுரையில் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கைக்கு வெடிமருந்துகள் நவீனரக துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளையும் ஏற்றிக் கொண்டு வந்த விமானம் ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காகத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.

இந்தச் செய்தி அறிந்த தமிழ்நாட்டுத் தலைவர்களும் மக்களும் பதறித் துடித்துப் போயினர்.

அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அந்த விமானம் பெட்ரோல் நிரப்பப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற மேலவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது தி.மு.கழக உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி (வைகோ), இலங்கையில் தமிழர்கள் கோழிக் குஞ்சுகளைப் போலக் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்று தமிழர்களின் வேதனையை எடுத்துக் கூறி மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தினார். அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் ஆலம்கான், "கோழிக்குஞ்சு சைவமா? அசைவமா?' என்று பிரச்னையின் ஆழத்தையும் அதன் கடுமையையும் புரிந்து கொள்ளாமல் நகைச்சுவை எனக் கருதி கிண்டல் செய்தார்.

இப்படி அமைச்சர் குர்ஷித் ஆலம் கான் கேட்டதும், ""இதயமற்றவரே, தமிழினம் அழிக்கப்படுகிறது என்ற செய்தி கிண்டலாகவும், கேலியாகவும் போய்விட்டதா? ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் புண்படுத்திவிடாதீர்கள்'' என்றார் வை.கோபால்சாமி எம்.பி.

இந்திய அரசின் வெளிவிவகாரச் செயலர் ரோமேவு பண்டாரி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து மாநிலங்கள் அவையில் வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் குர்ஷித் ஆலம்கான் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையைப் பற்றி விளக்கங்கள் கேட்டு, 30.3.85 அன்று நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுத் தலைவர் முரசொலி மாறன் எம்.பி., மேலவையில் கேள்வி எழுப்பிப் பேசினார்.

""இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பண்டாரியின் விஜயத்தைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றன. அதே சமயம், ஜி.பார்த்தசாரதியின் பழைய முயற்சிகளைக் கண்டித்திருக்கின்றன.

இலங்கையிலே இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற நமது வெளி விவகாரத் துறைச் செயலர் பண்டாரி, குசலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறாரே தவிர, இனப்படுகொலையைக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

எத்தனையோ முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன. உதாரணமாக, யாழ்ப்பாணம் ராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான இடம் என்ற போர்வையில் ராணுவத்தினர் அங்கிருந்து கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் தமிழர்களை தினமும் சுட்டுக் கொல்கிறார்கள்.

நமது செயலர் பண்டாரி இது குறித்துப் பேசினாரா? இந்தப் படுகொலைகளை எப்போது நிறுத்துவீர்கள் என்று கேட்டாரா?

இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஒரு குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. சிங்களவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதோடல்லாமல் ஆயுதங்களையும் அளித்து அவர்களைத் தமிழர்கள் அதிகமாக வாழுமிடங்களில் குடியேற்றுகிறது. இதன் மூலம் தமிழர்களின் மக்கள்தொகை அளவையே குறைத்துவிட முயற்சிக்கிறார்கள். அதற்காக, கூட்டம் கூட்டமாய் தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள்.

நமது வெளி விவகாரத் துறைச் செயலர் இந்த பாதகமான குடியேற்றக் கொள்கை பற்றி விவாதித்தாரா? தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களிலிருந்து துரத்தியடிக்கப்படுவதைக் கண்டித்தாரா?

அண்மையில்தான், ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகம், தீவிரவாதிகளைத் தாக்குவது என்ற பெயரால் ஏதுமறியாத தமிழர்களை வித்தியாசம் பாராமல் இலங்கை அரசு கொன்று குவிப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே அவையில் இந்திரா காந்தி அம்மையார் பேசும்போதுகூட இலங்கையில் நடப்பது ஓர் இனப்படுகொலை என்று குறிப்பிட்டார்.

இப்போது இலங்கை சென்று திரும்பியிருக்கிற நமது வெளியுறவுச் செயலர் பண்டாரி அந்த இனப்படுகொலையைக் கண்டித்தாரா? "எப்போது நீங்கள் இனப்படுகொலைகளை நிறுத்தப் போகிறீர்கள்?' என்று கேட்டாரா? இன்னமும் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தினால், இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கத் தலைப்பட்டாரா?

அப்படியெல்லாம் செய்ததாகத் தெரியவில்லை. அவர் இலங்கையிலே வாழும் தமிழர்களது உரிமைகளைச் சரணடையச் செய்திருக்கிறார் - இலங்கைத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் - என்று நான் குற்றம் சாட்டுகிறேன்'' என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் செங்கல்பட்டில் நடைபெற்ற கடையடைப்பு-உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெ.ஜெயலலிதா எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், இலங்கையில் அசம்பாவிதங்கள் தீவிரமானால் அனைத்து மக்களும் பதறிப் போகிற நிகழ்ச்சி அவ்வப்போது நடந்து கொண்டிருப்பது போல், தமிழ் ஈழத்தை எதிர்க்கும் தமிழகக் கட்சிகளிடமும் இந்தப் பதற்றம் தென்பட்டது. திமுக, அதிமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விட்டன.

57. அறிஞர் அண்ணாவின் தலையங்கம்!

அறிஞர் அண்ணா அவர்கள் 1958 ஜூன் 29, திராவிட நாடு இதழில், காலா காலமாகத் தமிழன் இலங்கையில் முறை வைத்துக் கொண்டு எவ்வாறு நசுக்கப்படுகிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக எழுதிய தலையங்கக் கட்டுரை இதோ...

""தெருக்களில் தமிழர்கள்மீது பெட்ரோலைக் கொட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகையில், ஜனங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். கடந்த மூன்று வார பயங்கர ஆட்சியில் முதல் சில தினங்களில் மாண்டவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 800 பேர் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் கலகங்களில் கொலையுண்டவர்கள். 400 முதல் 500 பேர் வரையிலாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அநேகரின் மதிப்பீடு.'' தமிழர்கள் தீவின் வடபகுதிக்கு ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் 20,000 பேர் தம் வீடு வாசல்களை விட்டு ஓடியிருப்பார்கள். இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது, தி.மு.க. அல்ல! லண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் ""டெய்லி டெலிகிராப்'' எனும் ஏட்டின் நிருபர். இலங்கையிலிருந்தால் இச்செய்திகளை அனுப்ப இயலாதென்று சென்னைக்குப் பறந்துவந்து, இங்கிருந்து ஜூன் 29-ஆம் தேதி இந்த விவரங்களை அனுப்பியிருக்கிறார். லண்டனுக்கு!! ""தினமணி'' ஏடு, இதனை எடுத்து, ஓரளவு போட்டிருக்கிறது. லண்டனிலிருந்து வெளிவரும் நியூ ஏட்டின் நிருபர் அவர். அவருக்கு, இவ்வளவு அக்கறை! பறந்துவந்து, சென்னையிலிருந்து எழுதி அனுப்புகிறார்!! இலங்கையிலிருந்து நடந்ததென்ன என்பதைப் பற்றிச் சரியான விவரம் யாருக்கும் கிடைக்கவில்லை. நிருபர் பறந்து வருகிறார், செய்தி எடுக்க! இந்தியாவின் ஹை கமிஷனராக இலங்கையில் வீற்றிருக்கும் கண்டேவிய என்பார் பறந்தும் வரவில்லை-அதிகாரியையாவது அனுப்பி விவரம் தெரிவித்ததாகவும் தகவலில்லை!! நெஞ்சு கொதிக்குமளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும் ஓராயிரம் செய்திகள் வருகின்றன. இலங்கைத் தமிழர்படும் அவதிகள் பற்றி... ஆவலுடன் அச்சமும் இங்குள்ள ஒவ்வொருவரையும் பிடித்தாட்டுகிறது. அங்கே, தமிழர்களின் நலன் பேணும் பொறுப்பிலிருப்பவரோ, பேசாதிருக்கிறார். அவரை அந்த வேலைக்கு அனுப்பிய தில்லி பீடமோ ஏதும் செய்யவில்லை. தில்லியின் அடிவருடி போல் விளங்கும் சென்னை அரசோ ஆகட்டும் பார்க்கலாம் போக்கிலேயே உள்ளது. தி.மு.க. உதித்த நாள் முதல், ""தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகளிலே எல்லாம் கூடிய வரையில் ஒரு தமிழரையாவது ஹை கமிஷனராக நியமிக்க வேண்டும்; அப்போதுதான், தானாடா விட்டாலும் தன் சதையாடும்; கொஞ்சமாவது தமிழர் தம் பிரச்னை புரியும்'' என்று கூறிவருகிறோம். நடைபெற்றுள்ள பல மாநாடுகளில் தீர்மானம் மூலமும் அரசுக்கு மக்கள் குரலை எடுத்துக்காட்டி வந்துள்ளோம். தில்லி எவ்வளவு தான் செவிடாக இருந்தாலும் ஒரு தமிழர் ஹை கமிஷனராக இருந்தால் அடிக்கடி சங்காவது ஊதிக் கொண்டிருப்பாரல்லவா, என்கிற சபலம் நமக்கு. அங்கே இந்தியத் தூதராக ஒரு வடவர் இருக்கிறார்! வடவர்களுக்குத்தான் தென்னாட்டின் பிரச்னைகள் என்றாலே புரிவதில்லையே!! சென்ற கிழமை பிரஜா சோஷியலிஸ்டு கட்சியின் பொதுக்காரியதரிசி எனப்படும் என்.ஜி. கோரே என்பார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுப் பல ஊர்களிலே பேசியிருக்கிறார். அகில இந்திய ரீதியிலிருக்கும் ஓர் இயக்கத்தின் காவலர் அவர்! அவரிடம் ""இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றித் தங்கள் கருத்து யாது?'' என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். ""அந்தப் பிரச்னையின் முழு விபரமும் எனக்குத் தெரியாது. எனவே நான் அதைப் பற்றி அதிகம் சொல்லுவதற்கில்லை'' என்று பதிலிறுத்திருக்கிறார். கோரே அவர்களின் கூற்றில் அடங்கியிருக்கும் அடக்கத்தை நாம் பாராட்டுகிறோம். ""விபரம் அறியேன்'' என்று வெளிப்படையாக அவர் வெளியிட்ட தன்மையை மெச்சுகிறோம். அதே சமயத்தில் ஒரு அகில இந்தியக் கட்சிக்குத் தமிழர்களின் பிரச்னை குறித்து எந்தளவுக்குப் புரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் நாம் உணரத் தவறக் கூடாது. கோரேக்கு மட்டுமல்ல, அ.இ. கம்யூனிஸ்டு கட்சியின் டாங்கேயானாலும் அஜாய்குமாரானாலும், அகில இந்தியக் காங்கிரசின் நேருவானாலும், தேபரானாலும் அவர்களுக்கெல்லாம் தமிழர்களின் பிரச்னை பற்றி அறிந்திடும் ஆவலும் அக்கறையும் அதிகம் இருப்பதில்லை. ஏனெனில் இந்தியா ஒரு உபகண்டம், அதிலும் தென்னகம் ஒரு மூலையில் கிடக்கிற பகுதி. இதன் துயரங்களையும் சோகங்களையும் நாம்தான் ஒருவருக்கொருவர் கட்டி அழுதுகொள்ள வேண்டுமே ஒழிய வடவர்களை நம்புவதிலும் அவர்கள் மூலம் பரிகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. இலங்கையில் தமிழர்களுக்கேற்பட்ட அளவுக்கு இன்னலும் துன்பமும் ஒரு பத்து மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும் ஏற்பட்டிருக்குமானால் அவர்களது உள்ளமெலாம் பதறும். நேரு அவர்கள் "குளு'வுக்குப் போய் குளிர்ச்சி தேட மாட்டார்! கொதிக்கிறதே உள்ளம் என்று குமுறுவார்; அலறுவார்; அறிக்கைகள் விடுப்பார்; இலங்கைக்கு அதிகாரிகளையும் அனுப்புவார்!

பெட்ரோலைக் கொட்டி எரிக்கப்பட்டனர்.
மாண்டோர் தொகை. 300-க்கு மேலிருக்கும்.
வீடுவாசல்களை விட்டு ஓடினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்டனர்.
சூறையாடப்பட்டன. இப்படிச் செய்திகள் வருகின்றன. திடுக்கிடுகிறோம்; திகைக்கிறோம். ஏனைய அகில இந்திய கட்சிகளைப் போலன்றி இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னை நமக்கு நன்றாகப் புரிகிறது. அங்குவாழ் தமிழர் தம் உழைப்பும் வியர்வையும் இலங்கையின் வளத்துக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறதென்பதை நம்மால் அறிய முடிகிறது. இலங்கையும் தமிழகமும், இன்று நேற்றல்ல. சரித்திர காலந்தொட்டுச் சகோதர நாடுகளாகும்!

அங்கு இப்போது நடைபெறும் அமளிகளை இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களர் அனைவரும் விரும்புவர் என எண்ணுவதில்லை. படிப்பாளிகளும் நாகரிக மேன்மையும் நிரம்பிய அங்கு, வெறி கொண்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதல்ல; நல்லோரும் இருப்பார்கள். அதனை உணர்ந்த காரணத்தால்தான் கடந்த 22-ஆம் தேதி, நாடெங்கும் "இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்' நடத்திய தி.மு.க. பின்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. சம்பந்தப்பட்டோர் அனைவரது பார்வையிலும் படட்டும் என்று மீண்டும் அதனை இங்கு வெளியிடுகிறோம். இலங்கையிலுள்ள ஒரு சில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி உயிரையும், உரிமையையும், உடமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ் தமிழர்களின் நிலை கண்டு இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது.

நீண்ட காலமாக இலங்கையைத் தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.

அந்தப்படிக்கு இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அந்த வகைக்கு இந்தியப் பேரரசினரைச் செயல்படத் தூண்டுவதற்கு ஆவனவெல்லாம் செய்யுமாறு சென்னை அரசியலாரை இந்தப் பொதுக்கூட்டம் வற்புறுத்துகிறது.

இலங்கைத் தமிழர்தம் பிரச்னையில், சுமுகம் ஏற்படவேண்டுமென்பதில், தி.மு.க. எவ்வளவு அக்கறையும் விருப்பமும் கொண்டிருக்கிறது என்பதை, தீர்மானத்தின் வாசகங்கள் விளக்கும்.

தில்லியும் சென்னையும் எவ்வளவுதான் இலங்கைவாழ் தமிழருக்கு இதுநாள் வரையில் "துரோகம்' செய்திருந்தாலும், இனியேனும் கொஞ்சம் சிரத்தை கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்''.

1958-இல் அறிஞர் அண்ணா அவர்கள் பிரச்னை எப்படி இருந்ததோ அதேபோன்ற பிரச்னைகள் இன்றும் கடுமையாக உருமாறி இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியா-தமிழ்நாடு-இலங்கை ஆகிய மூன்றிலுள்ள ஆட்சியாளர்களின் போக்கு மட்டும் மாறவே இல்லை. இருந்தாலும் தாய்த்தமிழகத்தின் தமிழ் இனமான உணர்வுள்ள தமிழர்கள் அனைவருமே தமது துக்கத்தைச் சுமந்து கொண்டு இலங்கைத் தமிழனுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

58: அச்சத் தீவாக மாறிய கச்சத்தீவு

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் ராஜீய உறவு இருக்கிறது என்பதையும், அமெரிக்கா, வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்த இரண்டு நாடுகளையும் பாதுகாக்கக் கூடிய கடமையில் இருக்கிறது என்பதையும் 1984 மே 25-ஆம் தேதியன்று அமெரிக்கத் தூதுவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி தெளிவாக்கியது. ""இஸ்ரேலின் நலனைக் காக்கும் பிரிவு ஒன்று இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அது இஸ்ரேலிய அதிகாரிகளின் மேற்பார்வையில் இயங்கும்'' என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இலங்கைக்கு இஸ்ரேலினது மொஸôத்தின் வருகை பற்றி யாருக்கேனும் கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருக்குமானாலும் அதனையும் இலங்கைப் பாதுகாப்பு மந்திரி அதுலத் முதலி அடியோடு போக்கிவிட்டார்.

""தமிழர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதத்தை எதிர்க்கச் சிங்கள மக்கள் அனைவருக்கும் ஆயுதம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இல்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சியான "ஷின்பெத்'தின் உதவியின் மூலம் விரிவான உளவு வலைப் பின்னலைக் கட்டமைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் இஸ்ரேலிய உளவு ஏஜெண்டுகள் மூலம் சிங்கள வீரர்கள் பெற்ற பயிற்சியானது மிகச் சிறப்பான ஒன்றாகும். இதுவரை இப்படி ஒரு பயிற்சியை அவர்கள் பெற்றதில்லை...'' இப்படி அதுலத் முதலி பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

இவரால் புகழப்படும் "மொஸôத்'தின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், நெஞ்சம் நடுங்கும்; உதிரமும் உறைந்துவிடும்.

1970-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவால் வெளியேற்றப்பட்டவர் டேவிட் மாட்னி என்ற இஸ்ரேல் நாட்டு ராஜதந்திரி.

இவர் இலங்கையில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்குக்காக உளவு வேலை பார்த்த குற்றத்திற்காகத்தான் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இவரை இலங்கையை விட்டுத் துரத்தி அடித்தார். அதே டேவிட் மாட்னி, இலங்கை வந்தவுடன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் ""எங்கள் நட்பை நாங்கள் புதுப்பித்துக் கொண்டது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழ் மக்களோ அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தார்கள். மொஸôத் இலங்கைக்குள் இறங்கிய சில நாள்களிலேயே, தமிழர்களின் ரத்தம் ஆறாக ஓடியது. சித்திரவதைக் கொடுமைகள் உச்சநிலைக்கு வந்துவிட்டன. ராணுவமே இத்தகைய கொடுமைகளில் இறங்கலாமா... சொந்த மக்களைக் கொன்று குவிக்கலாமா என்று கேட்டதற்கு இலங்கை அரசின் பதில் என்ன தெரியுமா...?

"இலங்கை ராணுவத்தை நாங்கள் நவீனமயப்படுத்துகிறோம்' என்பதுதான்!

இதுபற்றி ஜூன் மாதம் 2-ஆம் தேதி வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியா இதழ்:

""இஸ்ரேல்-இலங்கை உறவு புதுப்பிக்கப்பட்டவுடன் சிங்கள ராணுவத்திற்கு மிகக் குறுகிய காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப ரீதியாகவும், தந்திரோபாய ரீதியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது'' என்று கூறுகிறது.

மேலும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறிப் பயிற்சி அளிக்க இலங்கை அரசு தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா...?

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள, ஒரு காலத்தில் இந்தியாவிற்குச் சொந்தமாய் இருந்த ""கச்சத்தீவு''.

இந்தக் கச்சத் தீவைத்தான் இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தாரைவார்த்துக் கொடுத்தது.

கச்சத் தீவை இப்படி அநியாயமாக தானம் கொடுக்கலாமா என்று கேட்டபோது, இந்திரா காந்தி அரசு சொன்ன காரணம்:

""லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும்-இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கு ஓர் அடையாளமாகவும்தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது'' என்பதே!

இந்த விளக்கத்தைச் சொல்லி அப்போது தமிழக மக்கள் கிளப்பிய எதிர்ப்புக்குரலை வெற்றிகரமாக அடக்கிவிட்டார் இந்திரா காந்தி. எந்தக் கச்சத் தீவை இலங்கைக்குப் பட்டா செய்து கொடுத்து, இந்திய-இலங்கை நட்புறவை வளர்க்கப் போவதாக மார்தட்டினாரோ அதே கச்சத் தீவு இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாக, இந்திய மக்களுக்கு அச்சம் தரும் அச்சத் தீவாக மாறிவிட்டது.

கச்சத் தீவில் சிங்கள ராணுவம் பயிற்சி மேற்கொண்ட பிறகு இலங்கையின் ஒடுக்கு முறையின் கொடூரம் கடுமையாக அதிகரித்தது.

வல்வெட்டித்துறை, மன்னார் போன்ற கடற்கரைப் பகுதிகளில், விடுதலைக்குப் போராடும் தமிழ் இளைஞர்களை ஒடுக்குவது என்ற பெயரால் கடற்கரைப் பகுதியில் ""துடைத்து ஒழிக்கும்'' திட்டம் ஒன்று நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

""துடைத்து ஒழிப்பது'' (Search and destroy) என்பது பாலஸ்தீனர்களையும் அரபுக்குடிகளையும் விரட்டி அடிக்க யூதர்கள் கடைப்பிடித்த ராணுவ நடவடிக்கை.

அதன்மூலம் எண்ணற்ற பாலஸ்தீனிய பகுதிகளும் அகதிகள் முகாம்களும் பீரங்கியின் துணையோடு கொளுத்தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் வெகுதொலைவிற்கு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்ட அதே கதை இலங்கையில் கோலாகலமாக மொஸôத்தின் பாணியைப் பின்பற்றி நடந்தேறியது.

குறிப்பாகச் சொல்வதானால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ""நாடற்ற (யூத) மக்களுக்காக, மக்களற்ற நாடு'' என்ற முழக்கத்தை முன்வைத்து யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சொந்த நாடு அவர்களிடமிருந்து எப்படி அபகரிக்கப்பட்டதோ அதேபோல பாரம்பரிய தமிழ்க் குடிகளிடமிருந்து அவர்களது ஈழ மண் சிங்களவர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

59. சுதந்திர நாள் விருந்தினராக அமிர்தலிங்கம்!

இலங்கையில் 1983-இல் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, உயிருக்குப் பயந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். இவர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் அகதி முகாம்கள் திறக்கப்பட்டன.

அகதிகள் என்றால், அவர்களிடம் என்ன உடைமைகள் இருக்கும் என்பது வெளிப்படை. இதனால் தமிழக அரசுக்குத் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஓர் இரவுக்குள் தங்குமிட வசதி அமைத்துக் கொடுப்பதுடன் உணவு, குழந்தைகளுக்கு ரொட்டி, பால், குடிநீர், மருந்துகள், மின்சார வசதி, கழிப்பிட வசதி மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களான துணி வகைகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அகதிகளல்லாத இலங்கைத் தமிழ்க்குடிகளும் பிற நாடுகளில் குடியேறியதைப் போன்றே தமிழகத்திலும் குடியேறினர். இவர்களால் அரசுக்கு நேரடிச் செலவினம் எதுவுமில்லை. ஆனாலும் இலங்கையில் தமிழர்கள் பயமின்றி வாழக்கூடும் என்கிற நிலைமை ஏற்பட்டாலொழிய அவர்களால் இங்கிருந்து வெளியேற முடியாது என்கிற நிலைமை. இவ்வாறு அகதிகளும், இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் - கிழக்குப் பாகிஸ்தானிய மக்களுக்காக வங்கதேசம் அமைக்க இந்தியா எடுத்த போர் நடவடிக்கை போன்று, இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு தாயகத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று இந்தியத் தலைமைக்கு நெருக்குதலை அளித்தனர். யாரும் திட்டமிட்டு ஏற்படுத்தாமலே இந்த எண்ணம் மக்களிடையே தன்னிச்சையாக எழுந்தது என்பதுதான் உண்மை.

கலவரங்கள் எல்லைமீறிப் போன நிலையில் பிரதமர் இந்திரா காந்தி, "அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்தான் என்றாலும் இதைப் பார்த்துக் கொண்டு இந்தியாவால் சும்மா இருக்க இயலாது' என்றார்.

அவரின் பதில் இருவேறு நிலைகளைக் கொண்டிருந்தது. வேறொரு நாட்டில் ஏற்படும் குழப்பங்களைப் பார்த்து கருத்து தெரிவிக்கும் பாணியிலும், அதேசமயம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான குழு, பிரதமர் இந்திராவைச் சந்தித்து அளித்த மனுவில், "இலங்கையின் கொடிய காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமாகத் தள்ளிவிட முடியாது' என்று உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் சிங்களவர்கள் கொழும்பில் அமைந்திருந்த இந்திய நிறுவனங்களை, வங்கிகளை அடித்து நொறுக்கித் தீயிட்டுப் பொசுக்கினர். காலிப் பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த இந்தியத் தூதரக காரை மறித்தனர். காரில் இருந்தவரை இறங்கச் செய்தனர். அவரை ஒரு தமிழர் என்று நினைத்துத் தாக்க முற்பட்டனர்.

அவர் தான் தமிழரல்ல - ஆனால் இந்தியன் - ஒரு அதிகாரி என்று சொல்லிப் பார்த்தார். பயன் இல்லை. கொடுமையாகத் தாக்கப்பட்டார். அவரின் கார் உருட்டிவிடப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்த அதிகாரியின் பெயர் மாத்யூ ஆப்ரகாம். "ரா' அமைப்பில் ஓர் அதிகாரி. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனக்கு நேர்ந்த துன்பத்தை இந்தியத் தலைமை அதிகாரி கிரிஷ் சந்திர சக்சேனாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தியத் தலைமைக்கு கோபம் வரவழைக்க இது ஒரு சரியான சான்றாதாரமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களால் தூதுவர் அலுவலகம் நிறைந்து வழிந்தது.

இச்சம்பவங்களை அடுத்து, பிரதமர் இந்திரா காந்தி, "இலங்கையில் ஏற்பட்டுள்ள இனமோதல் இந்தியாவையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியா பிற நாடுகளைப் போன்று நடந்து கொள்ள முடியாது என்று இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு (13 ஆக, 1983) கண்டனம் தெரிவித்தார்.

அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தது, 1968-இல் தான் உருவாக்கிய "ரா' (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஹய்க் அய்ஹப்ஹ்ள்ண்ள் ரண்ய்ஞ்) என்கிற அமைப்பு திரட்டித்தந்த தகவல்களின் அடிப்படையில்தான். இந்த அமைப்பு பிரதமரின் நேரடித் தலைமையில் இயங்குவதாகும். பிரதமரின் பார்வைக்கு வைக்கப்படுகிற தகவல்களின் பேரில் எடுக்க வேண்டிய முடிவை அவரே அறிவிப்பார்.

பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில், அண்டை நாடுகளிடையே இருந்த நெருக்கத்தின் காரணமாக எழுதப்படாத சில விதிகளை நடைமுறைப்படுத்தி வந்தார். அதில் ஒன்று - தெற்காசிய நாடுகளில் சிக்கல்கள் எழும்போது, அதனைத் தீர்க்கும் விதத்தில், உதவி கோரப் பட்டால், அந்தக் கோரிக்கை முதலில் இந்தியாவிடம்தான் வைக்கப்பட வேண்டும் என்பதாகும். அதன்பின்னரே அதன் அண்டை நாடுகளுடன், தொடர்பு கொள்ளலாம். அப்படி உதவி கோரும் நாடு இந்தியாவுக்குப் பகை நாடாக இருக்கக் கூடாது - என்பது மிக முக்கியம்.

இலங்கையில் 1971-இல் ஜனதா விமுக்தி பெரமுனா நடத்திய கலவரத்தை இவ்வகையில்தான் இந்தியா தனது படைகளை அனுப்பி அடக்கியது. ஆனால் 1983 இனக் கலவரத்தில் இந்தியாவைத் தவிர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமன்றி இப்பிராந்தியத்திற்கு அப்பாலுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் ஆயுதம் மற்றும் ராணுவ உதவியை இலங்கை கோரியுள்ளது என்றும் - எந்தெந்த விதமான உதவிகள் கோரப்பட்டுள்ளனவென்றும் ‘தஅர’ அமைப்பு தகவல்களைத் திரட்டித் தந்திருந்தது.

இவை மட்டுமன்றி, கலவரத்தால் தமிழர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், பெரும் எண்ணிக்கையில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவது குறித்தும் கிடைக்கப்பெற்ற பிற தகவல்களின் அடிப்படையிலும்தான், இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவை எச்சரித்தார்.

எச்சரிக்கையின் கடுமை காரணமாக, ஜெயவர்த்தனா தனது ஆட்சியை அப்புறப்படுத்த இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களத் தீவிரவாதிகளும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குழுவும் முயல்கின்றன என்ற தகவலை ஆதாரமாக வைத்துத்தான் பிற நாடுகளின் உதவிகள் கோரப்பட்டதாக பதில் அளித்தார்.

இந்தப் பிரச்னையில் "தமிழர்கள்' என்ற வகையில் தமிழ்நாடு முழு அளவில் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்தியாவிடம் உதவி கோரப்படவில்லை என்றும் விளக்கினார். தற்சமயம் தனது ஆட்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என்று அறிந்து கொண்டதும் உதவி கோரும் குழுக்களின் பிற நாட்டுப் பயணம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தத் தகவல் சரியானதுதானா என்று தில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்தபோது, ஜெயவர்த்தனாவின் கூற்றுச் சரியில்லை என்பது தெரியவந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிடமும் தொடர்பு கொண்டு, "இலங்கை இனப் பிரச்னையில் ஒதுங்கியிருக்கும்படி, கேட்டுக் கொண்டதுடன், "இதைமீறி ராணுவ உதவி செய்தால், அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர நாளன்று 1983-ஆம் ஆண்டின் சுதந்திர நாள் விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ.அமிர்தலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இது இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்றைய தினம் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் உரையாற்றும்போது, "இலங்கையில் இனப்படுகொலை திட்டமிட்டு நடைபெறுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இராது' - என்று குறிப்பிட்டார். இதற்கு முந்தின நாள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் குழுவினரை இந்திரா காந்தி சந்தித்தபோது, ஆதியோடந்தமாக செல்வா காலம் தொடங்கி, தற்போதைய நிலவரம் வரை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை ஆகஸ்ட் 17-இல் மீண்டும் தொடர்பு கொண்டு, "இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது - ஆனால் இலங்கை வன்முறைகள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிற செயலாக அமைந்துவிட்டது - இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதும் கவலை அளிக்கிறது' என்றும் இந்திரா காந்தி தெரிவித்தார்.

பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளையும், அங்கே தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுவதையும் ஆதாரப்பூர்வமாகக் கேட்டறிந்தபோது, உண்மையிலேயே பதறிப்போனார். இந்தியப் பிரதமர், அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய ஈழத் தமிழர்களிடம் அவர்களது போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவும் உண்டு என்று தெரிவித்ததுடன், தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் உடனடியாக இறங்கத் தலைப்பட்டார்.

பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை The old fox என்று விமர்சித்ததன் மூலம் தெரியவருவது என்னவென்றால், அவர் நம்புதற்கு உரியவர் அல்ல என்பதுதான்.

60: போராளிகளுக்குப் பயிற்சி முகாம்!

1983-இல் ஏற்பட்ட இனக் கலவரத்தையொட்டிய தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு ஜெயவர்த்தனா உடன்படமாட்டார். அப்படி உடன்பட வைக்க வேண்டுமானால் ரகசியமான மாற்றுத் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று, பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கை வகுப்பாளர்களான பாதுகாப்பு ஆலோசகர் ராமேஷ்வர் நாத் காவ் மற்றும் பிரதமரின் அலுவலக நிர்வாகிகள் நினைத்தனர்.

பலவகையிலும் ஆலோசித்து பிரதமர் இந்திரா காந்தியின் பார்வைக்குப் பாதுகாப்பு ஆலோசகர் காவ் "மிகவும் ரகசியம்' என்று எழுதப்பட்ட ஒரு கோப்பை வைத்தார். அந்தக் கோப்பில் இருந்த செய்தி இதுதான்: "ஜெயவர்த்தனா, இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க ராணுவ நடவடிக்கையே தீர்வு என்று செயல்பட்டால் பிரதமர் இந்திராவுக்கு இருவகையில் பாதிப்பு ஏற்படும். ஒன்று அரசியல் நெருக்கடி, மற்றது தெற்கில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து.

அரசியல் நெருக்கடி என்பது தமிழகத்தில் இருந்து உருவாகும். கூட்டணியின் புதிய நண்பரான எம்.ஜி.ஆர். நெருக்குதல் கொடுப்பார். தமிழகத்தில் மக்கள் இலங்கைப் பிரச்னையால் கொதிப்படைந்து இருக்கிறார்கள். இலங்கை மீது இந்தியா படையெடுத்துத் தாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இரண்டாவது, அமெரிக்கா பக்கம் சாய்ந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு கண்டுவிட்டால் அது இந்தியாவின் தெற்கே, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது கவனத்துடன் அணுக வேண்டிய பிரச்னை - என்று குறிப்பிட்டதுடன், ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால் பேச்சுவார்த்தை என்ற உத்திக்கிடையே போராளிக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்து அவர்களை பலசாலிகளாகவும் உருவாக்க வேண்டும்' - என்றும் தெரிவித்திருந்தார், காவ்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்கள் இலங்கையில் முகாமிட்டிருக்கும் நேரத்தில், இரு வழிகளில்தான் ஜெயவர்த்தனாவைப் பணியவைக்க முடியும் என்று இந்திராவும் நம்பினார். காரணம் கிழக்கு பாகிஸ்தானில் கிடைத்த வெற்றி. முக்தி வாகினி என்கிற போராளிக் குழுவினர் அதற்குப் பயன்பட்டனர்.

அதேபோன்ற "ரகசியத்திட்டப்படி' செயல்படுமாறு தனது "மூன்றாவது ஏஜென்சிக்கு' உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதே அந்த ரகசியத் திட்டமாகும். இந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்குமாறு நெருக்குதல் அளிக்க வேண்டும். அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அவரது நாடு சிதறுண்டு போகும் என்று உணர்த்தவே பயிற்சித் திட்டம் என கொள்கைத் திட்டம் உருவாயிற்று. (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி. சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)

இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நாம் அரசியல் ரீதியாக ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தை நடத்த நிர்பந்திக்கும் அதேவேளையில், போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் - என்று கூறியதாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆருக்கு இந்த அணுகுமுறை திருப்தி தரவில்லை. அவர், ""இது போதாது; இலங்கை மீது படையெடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் உள்ளக்கிடக்கை'' என்றார்.

""அப்படியென்றால் தமிழர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் ஏற்கெனவே சிங்களவர் பிடியில் உள்ளனர். காமினி திசநாயக்கா என்கிற அமைச்சர் பேசியதை நாம் கவனிக்க வேண்டும்: எங்கள் மீது படையெடுக்க இந்தியாவுக்கு 24 மணி நேரம் தேவைப்படும் என்றால், அனைத்து தமிழச்சிகளையும் - தமிழ் சிசுக்களையும் - குழந்தைகளையும் கொன்று முடிக்க எங்களுக்கும் அதே 24 மணி நேரம் போதும் என்று பேசியிருக்கிறார்'' எனக் கூறி முதல்வர் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆர். இந்திராவின் நிலைப்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்து, பயிற்சி அளிப்பதற்கான வேலையில் உடனே ஈடுபடுவதாக கூறினார். (பண்ருட்டி ராமசந்திரன் நியூஸ்டுடே மே 2000-இல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து)

மூன்றாவது ஏஜென்சிக்கு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் காவ் தலைமை ஏற்கவும், பிரதமரின் அலுவலக இயக்குநர் சங்கரன் நாயர், "ரா' அமைப்பின் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா உள்ளிட்ட குழுவினர் அவரின் கீழ் இயங்கவும் ஆரம்பித்தனர். போராளிக் குழுக்களுக்கு பயிற்றுவிக்கும் பொறுப்பு "ரா'வின் சென்னை அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது. (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு பக்-10) அவருக்கு உதவி செய்யும் இலங்கைத் தமிழராக சந்திரகாசன் (தந்தை செல்வாவின் இரண்டாவது மகன்) இருந்தார். குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவருக்கும் இவர் வழக்கறிஞராக இருந்ததால், குழுக்களின் நிலையை அறிந்தவர் என்பதால், இந்தப் பணி வழங்கப்பட்டது. (ஆதாரம்: அதே வெளியீடு)

பயிற்சி பெறப்போகும் முதல் குழுவாக "டெலோ' அமைந்தது. டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணன் இதனைத் தேர்வு செய்வதற்கு காரணம் இந்தியா சொல்வதை நிறைவேற்றும் ஓர் இயக்கமாக அது இருந்தது என்பதுதான் (ஊழ்ர்ய்ற்ப்ண்ய்ங் 1985) ஈ.பி.எல்.ஆர்.எஃப். இயக்கம் இடதுசாரி என்பதாலும் ஈராஸ் இயக்கம் சிறு குழு என்றும் ஒதுக்கப்பட்டது.

இதன் பின்னர் இவ்விரு இயக்கங்களின் யாழ்ப்பாண அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ""இந்தப் பயிற்சியை இயக்கத்தவர் பெறாவிட்டால் அழிந்து போவோம்'' என்று கூறினார்கள். "அப்படியென்றால் ஈழம் கோரிக்கையைக் கைவிடச் சொல்லி இந்தியா சொன்னால் என்ன செய்வீர்கள்' என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. "இதுதான் நிலைப்பாடு என்றால் நமது இயக்கத்தவர்கள் டெலோவில் இணைந்து விடுவார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வே இல்லை. அவர்கள் எதையாவது செய்துவிட்டு சாகத் துடிக்கிறார்கள்' என்று கூறினர்.

இவ்வகையில் வாக்குவாதங்கள் இயக்கங்களிடையே நடைபெற்ற நிலையில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணனைச் சந்தித்து பயிற்சிக்கு இசைந்தார்கள். (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி.சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)

பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரனை சந்திரகாசன் தொடர்பு கொண்டபோது, "ரா' என்னிடம் நேரில் தொடர்பு கொண்டால் பேசுகிறேன்'' என்று கூறிவிட்டார். உமா மகேஸ்வரன் இதற்கு சொன்ன காரணம் "சந்திரகாசன் நம்பிக்கைக்குரியவர் அல்ல; அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட்' - என்பதாகும். பின்னர் உமா மகேஸ்வரனும் இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போது சென்னையில் இல்லை. பேபி சுப்பிரமணியம், சீலன் இருவர் மட்டுமே சென்னையில் இருந்தனர். மதுரையிலும் மேட்டூர் கொளத்தூரிலும் சென்னையிலுமாக நடைபெற்று வந்த இவர்களின் பயிற்சி முகாம்களுக்குப் பொறுப்பு ஏற்று அவர்கள் சென்னையில் இருந்தனர்.

பேபி சுப்பிரமணியத்தை சந்திரகாசன் தொடர்பு கொண்டார். அவர் மூலம் பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய போது ""இந்தியா உதவாக்கரைப் பேர்வழிகளுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுகிறது. டெலோ 1981-இல் இருந்து களத்திலேயே இல்லை. ஈரோசும் அப்படித்தான். ஈரோஸ் குழுவினர் தானாக எதையும் செய்யவும் மாட்டார்கள்; மற்றவர்கள் செய்தால் அதைச் செய்ய விடவும் மாட்டார்கள்'' என்று கருத்து தெரிவித்த பிரபாகரன் "ரா' பிரிவினர் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டால் யோசிக்கலாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் சென்னையில் நடைபெறும் நிகழ்வுகளை சரியான கோணத்தில் அணுகி, தனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரபாகரன், லண்டனில் இருந்த பாலசிங்கத்தை சென்னை செல்லச் சொன்னார். பாலசிங்கத்தின் வரவுக்குப் பிறகு சில தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தன.

61 : பிரபாகரனின் சென்னை வருகை!

பாலசிங்கமும் அவரது மனைவி அடேலும் சென்னை வந்து இறங்கினர். அவர்களை வரவேற்ற பேபி சுப்பிரமணியம் இருவரையும் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். தற்போதைய நிலையை பேபி, பாலசிங்கத்துக்கு விளக்கினார்.

பாலசிங்கம் The Liberation Tigers and the Freedom Struggle என்ற பிரசுரத்துக்கானவற்றை எழுதினார். அதில் இயக்கத்தின் கொள்கை, பயிற்சி அளிப்பது, தாக்குதல், நிதி சேகரிப்பு முதலானவை இடம் பெற்றிருந்தன. பாலசிங்கம் தங்குவதற்கென சாந்தோமில் இரண்டு அறை கொண்ட வீடும் எடுக்கப்பட்டது. தமிழக உளவுத் துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு அவரை "ரா' அதிகாரிகள் முன் நிறுத்தினர்.

இந்த உரையாடலுக்குப் பின்னர், பிரபாகரன் சென்னை வருவதன் அவசியம் குறித்து தகவல் அனுப்பினார். ஏற்கெனவே பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜாமீனில் இருந்து தப்பிய காரணத்துக்காக கைது செய்யும் முயற்சி ஏதும் இதில் இருக்குமோ என ரகுவும், மாத்தையாவும் சந்தேகம் கிளப்பினர்.

எனவே முதலில் அவ்விருவரும் தமிழகம் வந்து பாலசிங்கத்திடம் விவாதித்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகப் போலீஸôர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று பாலசிங்கம் உறுதி கூறினார்.

தொடர்ந்து பிரபாகரன், ""ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஆதரவுப் போக்கு காரணமாகவே, இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க முன் வருகிறது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வந்தால், அவரின் ரஷிய ஆதரவுப் போக்கு வெளிப்பட்டால் இந்தியாவின் நிலைமை மாறிவிடும் என்பதுதான் எங்கள் சந்தேகம். நமக்கோ ஈழம் வேண்டும். இந்தியாவின் ஆயுதப் பயிற்சியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புகளின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே இந்திய அரசு காலந்தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவியும் - பயிற்சியும் தர முன்வந்ததை ஏற்றுக் கொள்வோம்'' (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு - 1987) என்று கூறியதுடன் சென்னைக்கு வரவும் சம்மதித்தார்.

இதையொட்டி பிரபாகரன் தமிழகம் வந்தார் "ஒரு நள்ளிரவில் பாண்டிச்சேரியில் "ரா' அதிகாரிகளை பிரபாகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபாகரன் பாலசிங்கம் மற்றும் "ரா' அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் தம்பியும் (பிரபாகரன்), பாலுவும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்' என்று அடேல் பாலசிங்கம் எழுதிய ‘பட்ங் ஜ்ண்ப்ப் ற்ர் ஊழ்ங்ங்க்ர்ம்’ நூலில் குறிப்பு உள்ளது.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவது போன்று பிரபாகரன் வரலாற்றை எழுதியுள்ள நாராயணசாமியும் தனது நூலில், ""டெலோ இயக்கத்தினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து தனது கோபத்தை பிரபாகரன் வெளிப்படுத்தி அதற்கான காரணகாரியங்களையும் விளக்கினார். பிரபாகரனை வசப்படுத்தும் நோக்கில் "ரா' அதிகாரிகள் அவருக்கு சந்திப்பின் நினைவாக ஒரு பரிசு என்று கூறி 7.6 ம்ம் ஜெர்மன் லுகர் துப்பாக்கியை பரிசாக அளித்தார்கள்'' என்று கூறியிருக்கிறார்.

எல்.டி.டி.ஈ.-யைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவானது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், "500 பேர் கொண்ட மந்தையை வைத்திருப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாடும் மன உறுதியும், துணிச்சலும் கொண்ட 50 பேர் போதுமானது' என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு டேராடூன், தில்லி உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதிகளில் பல இடங்களில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். அவர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகளை தமிழக அரசு செய்தது. உணவுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் பொருள்கள் வழங்க ஏற்பாடாகியிருந்தது, வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை போதாது என்று மூன்றாவது ஏஜென்சி மூலம் இந்திரா உணர்ந்ததும், ஒவ்வொரு குழுவினரும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி "ஆட்கள்' சேர்த்தார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே நடந்ததால், அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சப்பட வைத்தது.

62. ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!

பிரதமர் இந்திராவும் இந்திய அரசும் இலங்கைப் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருப்பதும், தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராவதையும் பார்த்த ஜெயவர்த்தன அரசு நிஜமாகவே பயப்படத் தொடங்கியது.

போதாக்குறைக்கு, இலங்கை இனப் பிரச்னை ஐ.நா.வில் பெருமளவில் விவாதிக்கப்பட்ட சம்பவமும் ஜெயவர்த்தனாவை நெருக்கிற்று.

1961-இல் இதேபோன்று தமிழர்கள் தாக்கப்பட்டபோது, "இலங்கையில் தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற - உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்பவும் - காலதாமதமின்றி ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றனர்' என்று அண்ணா ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பினார்.

அதேநிலையைப் பின்பற்றி, இலங்கை இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி வந்தார். எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்திரா காந்தி தனது தலைமையில் ஒரு குழு சென்று ஐ.நா.வில் முறையிடுவது என்று முடிவெடுத்தார். அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரனையும் இடம்பெற வைத்தார், முதல்வர் எம்.ஜி.ஆர்.

பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான குழுவில் ஜி.பார்த்தசாரதி, பி.சி.அலெக்சாண்டர், பண்ருட்டி ராமச்சந்திரன், வைகுந்தவாசன் மற்றும் வெளிவிவகாரத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடம்பெற்றனர். இந்திரா காந்தி அமெரிக்காவில் ஐந்து நாட்கள் தங்கி, ஐ.நா. கூட்டத்திற்கு வந்திருந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தூதர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கை பிரச்னைத் தொடர்பாக விளக்கினார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவும் நேரம் ஒதுக்கி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பெரஸ் டி.கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப் பிரச்னையில் என்ன இருக்கிறது என்பதே அப்போதுதான் புரியவந்தது. இந்தியா-இலங்கை என இரு நாடுகளின் பிரச்னையாக மட்டுமே இருந்த இலங்கைத் தமிழர் பிரச்னை - உலகம் முழுவதும் சர்ச்சை செய்யப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை சம்பந்தப்பட்டதாக மாறியது அப்போதுதான்.

1983 அக்டோபரில் தொடங்கி 84 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் 70 நாட்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு இலங்கை இனப் பிரச்னைகளை விளக்கினார். "மக்களாட்சி நெறியினைக் கொள்கையாக ஏற்றுள்ள இலங்கையில், தமிழர்களின் பாதுகாப்புக்கும் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் உறுதி அளிக்கப்பட்டு, மற்ற குடிமக்களுக்குச் சமமாக, முழுமையாகக் குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமே, இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்திட சுமுகமான தீர்வுகாண இலங்கை அரசு முன்வர வேண்டும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார். (அக். 21, 1983)

பண்ருட்டி ராமச்சந்திரன் மேலும் கூறுகையில், "மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியானது நமீபியாவில், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் போன்றது' என்று விளக்கினார்.

இப்படிக் கூறியதும் இலங்கை பிரதிநிதி ஐ.பி. ஃபொன்úஸகா, "இந்தியாவில் நெல்லி' பகுதியில் இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின்போது உங்களின் உள்நாட்டுப் பிரச்னையில் இலங்கை தலையிட்டதா? நீங்கள் மட்டும் எங்கள் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுகிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இந்தியாவில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் அரசு செயல்படுகிறது அவர்களைப் பாதுகாக்க ஆவன செய்கிறது. உங்கள் நாட்டின் நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது? இலங்கையில் நடப்பது இனப் படுகொலை. அதனால் அகதிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள். லட்சக்கணக்கில் தோட்டத் தொழிலாளர்களாக குடியுரிமை இல்லாமல் அவர்கள் பல நூற்றாண்டு காலமாக அவதிப்படுகிறவர்கள்' என்று எடுத்துரைத்தார்.

"இலங்கையில் இருந்து இனப்படுகொலை காரணமாக லட்சக்கணக்கில் அகதிகள் ஓடிவருகிறார்கள் என்றும் இதனால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் திடீர் செலவுகளையும், விவரமாக எடுத்துரைத்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இவரது உரை ஐ.நா. மன்றத்தில் பிரெஞ்சு, ரஷிய, சீன, அரபி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கபட்டபோது, பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இலங்கைப் பிரதிநிதி ஃபொன்úஸகா வெட்கித் தலைகுனிந்தார்.

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஃபெரஸ் டி. கொய்லர், இலங்கையில் தமிழர் பிரச்னை என்பது மனித உரிமைகள் மீறலாக இருக்கிறது' என்பதை ஒப்புக்கொண்டார்.

ஐ.நா. சபையில் தமிழர் பிரச்னையை எடுத்துக்கூறி, அது வெற்றியடைந்ததையொட்டி தமிழகம் திரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனை, முதல்வர் எம்.ஜி.ஆர். விமான நிலையம் சென்று, ஊர்வலமாக அழைத்து வந்தார்.

இலங்கை இனப் பிரச்னை ஐ.நா. வரை சென்றதும், போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்த செய்கையும் ஜெயவர்த்தனாவைத் தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வைத்தன.

63: ஜெயவர்த்தனா தில்லி வந்தார்!

இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் நடத்திய பேச்சுவார்த்தையையொட்டி கொழும்பிலிருந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனாவின் தம்பி எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா புது தில்லி வந்தார்.

தமிழர் - சிங்களவர் இடையே சமாதானம் பேச, இந்தியா நடுவராக இருப்பது குறித்தும், நிவாரணப் பணிகளில் ஈடுபட ஏற்படும் செலவுத் தொகைக்கான நிதியுதவி பெறுவது குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். அவரிடம் பத்து லட்சம் டாலர் இந்தியா வழங்குவதாகப் பிரதமர் இந்திரா காந்தி சம்மதம் தெரிவித்தார்.

இதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி, தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அப்பேச்சுவார்த்தை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன், அதன் விவரத்தையும் வெளியிட்டார்.

அதன்படி, ஓரளவு சுயாட்சியுடன் கூடிய, திட்டமிடப்பட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பது; வன்முறைகளில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தல், மன்னிப்பு வழங்குவது குறித்து பேசுதல்; யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது; தமிழ்மொழியையும் தேசிய மொழியாக அறிவிப்பது; தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதும், தடுப்புக் காவலில் உள்ளோரை விடுவிப்பதும் என அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே இந்திரா காந்தி "இந்த அம்சங்கள் தமிழர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அமையாது' என்று கருத்துத் தெரிவித்து, "அதே சமயம் இலங்கையின் ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாகவும்' கூறியதுடன் இலங்கை உள் விவகாரங்களில் "இந்தியா, தலையிடாது - மத்தியஸ்தர் பொறுப்பை மட்டுமே வகிக்கும்' - என்றும் உறுதிபட ஜெயவர்த்தனாவிடம் தெரிவித்தார்.

தொடர் நிகழ்வுகளாக இலங்கைத் தமிழர்த் தலைவர்களை இந்திரா காந்தி மீண்டும் சந்தித்து உரையாடினார். "ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தோட்டப் பகுதிகளை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி வந்த தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டைமான் உள்பட பலரும் இந்த உரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் செப்டம்பர் 1, 1983 அன்று, பிரதமர் இந்திரா காந்தி, "தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் - இலங்கை அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியாக, இந்தியா தூதுவர் ஒருவரை அனுப்ப இருப்பதாக' அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம், "நிபந்தனைகள் எதையும் அரசு விதிக்கவில்லை என்றால் - அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார்' - எனத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அ.அமிர்தலிங்கத்தை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது, "பேச்சுவார்த்தைகளில் எங்களது கட்சி நம்பிக்கை இழந்தபோதிலும் - இந்தியாவின் நடுவர் முயற்சிக்கு மதிப்பளித்து வந்திருப்பதாகவும்' அவர் கூறினார்.

புது தில்லியில் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவையும் அ. அமிர்தலிங்கம் சந்தித்தார். அவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டவை என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதராக, இந்திய வெளி விவகார கொள்கை வகுப்புக் கமிஷனின் தலைவராக இருந்த ஜி. பார்த்தசாரதி கொழும்பு சென்றார். அவர் இந்திரா காந்தியின் செய்தியாகக் கொண்டு சென்றது என்னவென்றால், "பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாகவும், அது முடியும் வரையிலும் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில், மக்கள் அச்சமின்றி வாழ ஏற்ற பாதுகாப்புச் சூழலை உருவாக்குவது அவசியம்' - என வலியுறுத்தியதாக யூகச் செய்திகள் வெளியாயின.

இது தவிர, ஜி.பார்த்தசாரதி மேலும் இரு தடவைகள் கொழும்புப் பயணம் மேற்கொண்டார். அவரின் இரண்டாவது விஜயத்தின் போது (நவம்பர் 2-ஆம் தேதி) அவருக்கு அங்கே ஒரு சங்கடம் நேர்ந்தது. அதே நாளில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் கொங்டா பெய் மற்றும் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் வால்ரஸ் ஆகிய இருவரும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்தச் செய்கை வல்லரசு நாடுகள் இலங்கைக்கு அனுசரணையாக இருப்பதை, இந்தியாவுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

அதைவிடவும் இலங்கை மீது இந்தியா அதிரடியாகப் போர் தொடுத்துவிடுமோ என்ற அச்சமும் ஜெயவர்த்தனாவுக்கு இருந்தது என்று இலங்கைப் பத்திரிகைகளே அப்போது கருத்து தெரிவித்தன.

முன்பு ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களுடன், (அ) தமிழர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் பிரதேச சபை (ஆ) காவல் துறை சம்பந்தமான அதிகாரத்தை பிரதேச சபையிடம் ஒப்படைப்பது (இ) மத்திய அரசாங்க சேவையிலும் ராணுவத்திலும் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் (ஈ) இனக் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்குதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியது.

இவ்வகையான மாற்றங்களுடனும், 26 ஜூலை 1957-இல் ஏற்பட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை மற்றும் 24 மார்ச் 1965-இல் ஏற்பட்ட டட்லி - செல்வா உடன்படிக்கையின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி மாநாட்டில் வைப்பதற்கென 14 அம்சத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த திட்ட வரையறை, புது தில்லியில் 1983 நவம்பர் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கு முன்பாக புது தில்லி வந்திருந்த எஸ்.தொண்டைமான், அ.அமிர்தலிங்கம் ஆகிய மூவருடனும் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக உருவானதாகும். இதனை உருவாக்குவதில் ஜி. பார்த்தசாரதியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு இலங்கை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது:

64: 14-அம்சத் திட்ட வரைவு!

இலங்கையில் ஈழத் தமிழ் அகதிகள் 1983, டிசம்பர் 1-ஆம் தேதிய ஜனாதிபதியின் கூற்றின் ஆறாம் பத்தியின் நியதிகளின்படி கொழும்பு, புதுதில்லி கலந்துரையாடல்களின் முடிவாலெழுந்த பின்வரும் பிரேரணைகள் அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு கருத்தில் எடுத்துக் கொள்வதற்குப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பிரேரணைகள் இலங்கையின் ஐக்கியம், முழுமை தொடர்பானவையாகும்; அத்துடன் அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைவனவாகும்.

1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தீர்மானங்களால் அவை உடன்பட்டு, அந்த மாவட்டத்தினுள்ளே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் (மக்கள் தீர்ப்பினால்) அங்கீகரிக்கப்படின், ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு அதிகமான பிரதேச சபைகளாக இணைவதற்கு அனுமதிக்கப்படுதல்.

2. முறையே வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் மாவட்ட சபைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தமை காரணமாக, அவை இயங்காதிருப்பதனால் அந்த ஒவ்வொரு மாகாணத்தினுள்ளும் அவைகளின் இணைப்பை ஏற்றுக் கொள்ளல்.

3. தீர்மானிக்கப்படுமிடத்து, ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பிரதேச சபையைக் கொண்டிருக்கும். ஒரு பிரதேச சபையில், பெரும்பான்மை வகிக்கும் கட்சியின் தலைவர் அந்தப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஜனாதிபதியால் முறைமையாக நியமிக்கப்படும் மரபு நிலை நிறுத்தப்படும். பிரதேசத்திற்கான ஓர் அமைச்சர் குழுவை முதல் அமைச்சர் அமைப்பார்.

4. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் பிரதேசங்களுக்குக் கை மாற்றம் செய்யப்படாத எல்லா விஷயங்களுக்கும், அத்துடன், பொதுவாக முழுக் குடியரசினதும் இறைமை, முழுமை, ஐக்கியம், பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதுகாத்தல் தொடர்பான மற்றெல்லா விஷயங்களுக்கும் முழு மொத்தமான பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பர்.

5. பிரதேசத்தின் சட்ட அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரிமையாக்கப்படும். அவை பிரதேசத்தின் உள்ளகச் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், நீதி நிர்வாகம், சமூக, பொருளாதார அபிவிருத்தி கலாசார விஷயங்கள், காணிக் கொள்கை ஆகியன உள்பட, சில விதித் துரைத்த நிரற்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாகச் சட்டங்களை ஆக்கவும் நிறைவேற்றி அதிகாரங்களைச் செயற்படுத்தவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிரதேசங்களுக்குக் குறித்தொதுக்கப்பட வேண்டிய விஷயங்களின் நிரல் விவரமாகத் தயாரிக்கப்படும்.

6. வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கும் பிரதேச சபைகள் அதிகாரம் பெற்றிருக்கும். அத்துடன், கடன்கள் வாயிலாக வளங்களைத் திரட்டுவதற்கும், அந்த வரும்படிகள் குடியரசால் கொடுக்கப்படும் மானியங்கள், ஒதுக்கீடுகள், உதவித் தொகைகள் ஆகியன கொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்திற்கெனத் தாபிக்கப்படும் திரட்டிய நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ நிதி ஆணைக்குழுவின் விதப் புரைகளின் பேரில் நிதி வளங்கள் பிரதேசங்களுக்குப் பங்கீடு செய்யப்படும்.

7. ஒவ்வொரு பிரதேசத்திலும் மேல் நீதி மன்றங்களின் அமைப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கையின் உயர் நீதிமன்றம், முன் முறையீடுகளை ஏற்று ஆராய்தலையும், அரசியல் யாப்புச் சார்ந்த சட்ட அதிகாரத்தையும் செயற்படுத்தும்.

8. (அ) பிரதேசத்தின் அலுவலர்களையும் ஏனைய பகிரங்க ஊழியர்களையும் (ஆ) பிரதேசத்துக்குத் துறைமாற்றுக்காளாத்தக்க அத்தகைய ஏனைய அலுவலர்களையும் பகிரங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதாக ஒவ்வொரு பிரதேசமும் பிரதேச சேவை ஒன்றினைக் கொண்டிருக்கும், ஆட்சேர்ப்புக்கும், பிரதேச சேவையின் உறுப்பினர் தொடர்பான ஒழுக்காற்று அதிகாரிகளைச் செயற்படுத்துவதற்கும் பிரதேச பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்றை ஒவ்வொரு பிரதேசமும் கொண்டிருக்கும்.

9. இலங்கையின் ஆயுதப்படைகள் தேசிய இனத்தின் நிலையைப் போதுமானளவு பிரதிபலிப்பனவாக இருக்கும். வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ளகப் பாதுகாப்புக்கான போலீஸ் சேவைகள் அந்தப் பிரதேசங்களின் இனத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கும்.

10. திருகோணமலைத் துறையையும், துறைமுகத்தையும் நிர்வகிப்பதற்கு மத்திய அரசின் கீழ் துறைமுக அதிகாரி சபை ஒன்று நிறுவப்படும். துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கான விஷயங்களும் சபைக்குக் குறித்தொதுக்கப்படும் அதிகாரங்களும் மேலும் ஆராயப்படும்.

11. காணி நிர்ணயம் பற்றிய ஒரு தேசியக் கொள்கை, காணிக் குடியேற்றத்தை எந்த அடிப்படையில் அரசு மேற்கொள்ளல் ஆகியன ஆய்ந்து நிறைவேற்றப்பட வேண்டியனவாகும். பெரிய செயற்றிட்டங்கள் மேல் உடன்பாடு ஏற்படுதற்கு உட்பட்டுக் குடிநிலைச் சம நிலையை மாற்றாதவாறு இனவிகித சமத்தை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றத் திட்டங்கள் யாவும் அமைதல் வேண்டும்.

12. அரச கரும மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பான அரசியல் யாப்பையும் ஏனைய சட்டங்களையும் அத்துடன், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை தொடர்பான அதே போன்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்படுதலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம்.

13. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு மாற்றங்களையும் சட்ட மாற்றங்களையும் தயாரிப்பதற்கு மாநாடு ஒரு குழுவை நியமித்தல் வேண்டும். அரசாங்கம் தனது செயலகத்தையும் அவசியமான சட்ட அலுவலகங்களையும் வழங்கும்.

14. சட்டவாக்க நடவடிக்கைக்காகப் பாராளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்படுதற்கு முன்னர், அனைத்துக் கட்சிகள் மாநாட்டுக் கருத்து இணைக்கங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அநேகமாக ஏனைய கட்சிகளது நிறைவேற்றுச் சபைகளினாலும் கருத்துக் கெடுத்துக் கொள்ளப்படும்.

இந்தப் 14-அம்சத் திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கையில் இத்தனை ரத்தம் சிந்தப்பட்டிருக்காது. ஒரு தேசம் என்கிற கட்டுக்குள் சிங்களரும் தமிழரும் ஒற்றுமையாக சம உரிமைகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அதுவல்லவே சிங்கள இனவாத அரசின் நோக்கம். தில்லியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் நல்ல பிள்ளைகளாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தவர்கள், கொழும்பு திரும்பியபோது தங்கள் சுய உருவத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர்!

65: ஜெயவர்த்தனாவின் புதிய 14 அம்சத் திட்டம்

அதுநாள்வரை "அனைத்துக் கட்சி மாநாடு' என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, "வட்டமேஜை மாநாடு' என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, பிரதமர் இந்திரா காந்திக்குச் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட - ஒப்புதல் பெறப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு மாற்றப்பட்டு புதிய 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் விவாதம் நடைபெறும் திடீர் என அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த மாநாட்டில் பங்கேற்க இயலாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கூறிவிட்டது. "நிபந்தனைகள் விதிக்கப்படா விட்டால் கலந்து கொள்வதாக ஏற்கெனவே கூறியிருந்தோம். புதிய 14 அம்சக் கோரிக்கையில் முதல் அம்சமே எங்களை வெளியேற்றப் போதுமானதாக உள்ளது' என்று கூட்டணி கூறி வெளியேறியது.

இலங்கை அரசு கெஜட்டில் வெளியான புதிய 14 அம்சத் திட்ட வரைவு வருமாறு:

1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட "ஆ' இணைப்பு (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்-ஆ) ஒரு 14 அம்ச திட்டம் ஆகும்.

1. ""தனிநாடு'' கோரிக்கையை கைவிடுதல்.

2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது.

3. மேலே கூறியபடி அமைக்கப்படும் பிரதேச சபைகள் ஒவ்வொன்றிலும் பெரும்பான்மையை பெறுகிற கட்சியின் தலைவர், அந்த பிரதேசத்திற்கு முதலமைச்சராக, குடியரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதலமைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச் செய்வது.

4. ""பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத'' விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பிலும், பாராளுமன்ற தலைவரது பொறுப்பிலும் இருக்கும்.

5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படுகின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும்.

அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும்.

அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும்.

வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெறவும் சபைக்கு அதிகாரம் உண்டு.

6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல்.

7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதிகாரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும்.

8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.

9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங்களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக் குழுவிடமிருக்கும்.

10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம் பெறும்.

11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.

12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும்.

13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசியலமைப்பு ஷரத்துகளும் சட்டங்களும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்களும் அப்படியே.

14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கையாளப்படுவது எதிர்க்கப்படும் என்பதில் ஒற்றுமை காணப்படும்.

- இவ்வாறு புதிய 14 அம்சத் திட்டவரைவு கூறியது.

இவ்விரு இணைப்புகளுக்கும் (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இடையே முக்கிய மாற்றங்கள் பல இருக்கின்றன. இரண்டாவதாக வெளியிடப்பட்ட "ஆ' அதாவது ‘ஆ’ இணைப்பில்,

(1) ஒரே மாகாணமாக வடக்கு - கிழக்குப் பகுதிகள் இல்லை என்றும் அவை தனித்தனியே இருக்கும் என்று கூறுகிறது.

(2) சட்டம் ஒழுங்கு பற்றிய குறிப்பில் பின் இணைப்பில் மாகாணம் சார்ந்ததாகக் கூறப்படவில்லை.

(3) குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரம் மைய அரசிடமே இருக்கும் என்கிறது இரண்டாவது இணைப்பு.

இவ்வகையான மாற்றங்கள் தமிழர்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரை இம்மாநாட்டில் பங்கேற்க வைப்பதில் ஜி. பார்த்தசாரதி பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முடிவில் கூட்டணி சார்பில் அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், ஆர். சம்பந்தன் கலந்துகொண்டனர். அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கு பெறும் என்று சொல்லப்பட்டிருந்ததற்கு மாறாக சமயப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆர். பிரேமதசா, எம்.சி.எம். கலீல், திருமதி ஆர்.என். புலேந்திரன், தமிழர் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி. பொன்னம்பலம் (ஜூனியர்) வி.சி. மோதிலால் நேரு, டி. மகேந்திரராச - இ.த.அ.ச. (சமஷ்டி) சார்பில் ஜி. கணேசலிங்கம், பி.எஸ். சூசைதாசன், எம்.ஏ. மகதூப் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ். தொண்டமான், ஜே. பெரியசுந்தரம், எம்.எஸ். செல்லசாமி - கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பி. சில்வா, பீட்டர் கெனமன், சரத் முத்தெடுவக, ஐ.தொ.கா. சார்பில் ஏ. அஸிஸ், ஜி. குணதாசா, ஜெய சிங்கா, பி.ஆர்.ஏ. செüமிய மூர்த்தி, எஸ்.எஸ்.எல்.பி. சார்பில் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா, பெர்னார்ட் சொய்சா, எஸ். செந்தில்நாதன் மற்றும் மகா சங்கம், கிறிஸ்துவ குழு, இந்துக் குழு என மூன்று மூன்று பேர், அரசு சார்பில் அதுலத் முதலி, கே.டபிள்யூ. தேவநாயகம், எம்.எச். முகமது பங்கேற்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஜேவிபியும் கலந்துகொள்ளாவிட்டாலும் அதன் அங்கத்தினரில் பலர் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்றனர். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவோ இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார். ஜேவிபியின் பிரதிநிதியான தினேஷ் குணவர்த்தனா மாநாட்டில் இருந்து விலகிக் கொண்டார். தங்களது கருத்து ஏற்கப்படவில்லை என்று அவர் காரணம் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ "இம்மாநாட்டின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், தேர்தலைச் சந்திக்க வேண்டும்' என்று கூறியது. அதன்படி பண்டார நாயக்கா "இலங்கையின் சகல கட்சிகளும் ஏற்கத்தக்க ஓர் ஒப்பந்தத்தை நாட்டின் எல்லைக்குள் விவாதித்துத் தீர்மானிக்க வேண்டுமே தவிர அயல்நாட்டின் தலையீடு அல்லது வற்புறுத்தலின்பேரில் எடுக்க முடியாது'' என்றார்.

இவ்வாறாக முதலில் தயாரிக்கப்பட்ட 14 அம்சத் திட்டம் கைவிடப்பட்டு, அதில் மாற்றம் செய்து தமிழர்களின் எண்ணங்கள் நிராசையாக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஓராண்டு (ஜனவரியில் தொடங்கி டிசம்பர் வரை) பேச்சுவார்த்தை நாடகம் திடீர் என முடிவு எதுவும் எடுக்காமலே முடிவுற்றுவிட்டது. (பெüத்த சிங்களமும் சிறுபான்மையினரும் - சந்தியா பிள்ளை கீதபொன்கலன்)

இந்த ஓராண்டு பேச்சுவார்த்தை காலங்களில் போராளிக் குழுக்கள் பல இடங்களில் தாக்குதலைத் தொடுத்தன. சிங்களவ குடியேற்றங்களிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங், கேகார் சிங் ஆகியோரால் 1984 அக்.31-இல் சுடப்பட்டு இறந்தார். இவரின் திடீர் மறைவு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. காரணம் ஜெயவர்த்தனாவுக்கு இந்திரா காந்தி எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்திரா என்ன செய்வாரோ என்ற பயமே ஜெயவர்த்தனாவை அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் ஓட வைத்தது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல.

பிரதமர் இந்திரா காந்தி சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பொருள் பொதிந்தது என்று ஜெயவர்த்தனா நம்பினார். அந்த உரையின் ஒரு பகுதி வருமாறு:

"இலங்கையில் காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழருக்கும் இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் குறஇத்து கவலைப்படுகிறேன். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், காட்டுமிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கும் அறிக்கைகள் வெளியிடுவதைவிட எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்' (2.1.1983) என்று கூறியிருந்தார்.

இந்தப் பேச்சுதான் ஜெயவர்த்தனாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது; அந்த அச்சம் அகன்ற நிம்மதியில் அவர் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டிக் கொண்டே ராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்.

1984-ஆம் ஆண்டு இறுதியில் தேசிய பாதுகாப்பு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி, லலித் அதுலத் முதலி கையில் ஒப்படைத்தார். அவர் பொறுப்பு ஏற்றதும் - பயிற்சி பெற்ற ஒவ்வொரு புலிக்கும் 100 வீரர்கள் வீதம் இங்கே பயிற்சி அளிக்கப்படுவார்கள், என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதேநேரம் புத்தத்துறவிகளும், பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவருக்குத் தேவையில்லை என்று வீராவேசம் காட்டினர். சிங்கள இனவாத பத்திரிகைகளோ, "1985-ஆம் ஆண்டு தை மாதம் புலிகள் சுதந்திர நாடு பிரகடனம் செய்யப் போவதாக' செய்தி வெளியிட்டு சிங்களவருக்கு வெறி ஏற்றின.

இவ்வாறாக ஜெயவர்த்தனாவின் பேச்சுவார்த்தையின் நாடகம் அற்ப ஆயுளில் முடிந்து போனது.

66: விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!

சிங்கள பேரினவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இயக்கங்கள் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம் என்ற கருத்து ஈழத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் விருப்பமாக இருந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஐக்கியம்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக (14.5.1972) மலர்ந்தது.

அதேபோன்று ஆயுதப் போராளிகளின் அமைப்புகள் 37 என்பது இலங்கை அரசின் கணிப்பு. அதிலும் முன்னிலையில் இருப்பது எல்.டி.டி.ஈ., டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், பிளாட் ஆகிய அமைப்புகள்தான். இவ்வமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

"அருளர்' என அழைக்கப்படும் அருட்பிரகாசம் அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைக்க பலகட்ட பேச்சுவார்த்தைகளை இயக்கங்களிடையே நடத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கமும் முயன்றார். ஆனால் கூடிக் கலைவது என்பதே தொடர்ந்தது.

பத்மநாபாவின் முயற்சியால் ஈழ தேசிய முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப் ஊழ்ர்ய்ற்-உசஊ) உருவாக்கப்பட்டது. இதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். டெலோ இயக்கங்கள் அங்கம் வகித்தன.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இதில் இணையாமல் இருந்தார். அதனால் இம்முயற்சியை விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்நிலையில் இந்நிகழ்வை அறிவது அவசியம்.

"1981-இல், புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டு தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து செயல்பட பிரபாகரன் முடிவெடுத்தார். 1981-இல், நீர்வேலி வங்கிக் கொள்ளையில், "டெலோ' இயக்கம் ஈடுபட்டு வெற்றியடைந்தது. இதன் காரணமாக போலீஸ் கெடுபிடி கடுமையானதும் தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் வழியில் சிங்களப் போலீஸôரிடம் பிடிபட்டார்கள். பிரபாகரனும் மற்றவர்களும் தப்பித்தனர்.

தங்கதுரை, குட்டிமணி ஆகியோருக்கும் பிரபாகரனுக்குமிடையே இருந்த நல்லுறவு, அவர்கள் சிறைப்பட்ட பிறகு மற்றவர்களிடம் இருக்கவில்லை. தங்கதுரை, குட்டிமணி ஆகியோரை சிறையிலிருந்து தப்புவிக்க பிரபாகரன் வகுத்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் "டெலோ' இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தயக்கம் காட்டினார்கள்.

எனவே பிரபாகரனும் அவரது தோழர்களும் 1981-ஆம் ஆண்டின் இறுதியில் "டெலோ'விலிருந்து பிரிந்தார்கள். டெலோவிலிருந்தபோது சிங்களப் போலீஸôரிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணத்தை டெலோவிடமே பிரபாகரன் ஒப்படைத்தார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)--பழ. நெடுமாறன்)

மேற்கண்ட சம்பவம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஒன்றிணைவது என்பதில் பிரபாகரனுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு அவர் தடையாக இருக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

1984-ஆம் ஆண்டில் டாக்டர் பஞ்சாட்சாரம் நியூயார்க்கில் உலகத் தமிழ் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். அதன் நோக்கம் இலங்கை போராளி இயக்கங்களை ஒன்றிணைப்பதுதான். டாக்டர் பஞ்சாட்சாரத்தின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபாகரன் எழுதிய கடிதத்தில்,

""விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து தேசிய அரசியல் ராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தெரிகிறது. இவ்வித ஒற்றுமை முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த இன்னொரு கருத்து, ""தமிழ்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசாமல் நேரடியாகக் களத்திற்கு வந்து ஒன்றுபட்டுப் போராடுவதற்கு சகல குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்'' என்பதாகும்.

அதுமட்டுமின்றி, ""ஒற்றுமைக்கு நல்லெண்ணச் சூழல் அவசியம். ஒருவரையொருவர் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். நம்மிடையே உள்ள வெறுப்புணர்வைக் களைய வேண்டும். சொல் அளவில் இல்லாமல் சகோதர விரோத யுத்தம் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஆகவே சகல புரட்சிகர விடுதலை அமைப்புகளுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், போர்க்களத்தில் குதியுங்கள். நமது பொது எதிரியை ஒன்றிணைந்து எதிர்ப்போம். அப்போது முழு தேசமுமே நமக்கு பக்கபலமாக நிற்கும். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்--பழ. நெடுமாறன்)

இக்கடிதம் நியூயார்க் மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் பத்திரிகைகளிலும் அக்கருத்து வெளியாகி நல்ல பலனைத் தந்தது. 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழீழ இயக்கத் தலைவர் வே. பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் (டெலோ) சிறி சபாரத்தினம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் கா. பத்மநாபா, ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) தலைவர் வே. பாலகுமார் ஆகியோர் ஒன்று கூடி ஓர் அறிக்கையினை வெளியிட்டனர்.

"தமிழீழப் போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!!' என்று தலைப்பிட்ட அவ்வறிக்கையில், ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தேசிய விடுதலை முன்னணியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் முடிவு செய்துள்ளன என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.

1984-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட ஈழத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைப்புலிகள் தவிர மூன்று முக்கிய விடுதலை அணிகளின் கூட்டமைப்பாகும். தமிழீழ விடுதலை இயக்கம் (பஉகஞ) ஈழப் புரட்சி அமைப்பு (உதஞந) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (உடதகஊ) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவிக் களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

ஈழத்தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியது' என்று குறிப்பிட்ட அறிக்கை, இக்குழுக்களின் ஒன்றிணைப்பான அணிக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப் கண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ஊழ்ர்ய்ற் -உசகஊ) என்று பெயரிட்டுக் கொண்டதோடு, கீழ்க்காணும் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுவது எனவும் தீர்மானித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அவை வருமாறு:-

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு, சோஷலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தமிழ்நாட்டில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து, அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.

""தற்போது ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்னை குறித்து ஒன்று கூடிக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது என்றும், ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கெதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயற்படுத்துவதெனவும் தீர்மானித்துள்ளோம்.

எமது இந்த ஒருமைப்பாடு விரிவுபட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்''--இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"இயக்கங்களுக்கிடையே ஐக்கியம் ஏற்பட்டதும் சிங்கள அரசு மிகவும் பயந்துபோனது. 1986-ஆம் ஆண்டு, ஜூலை 28-ஆம் தேதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப்.-ம், எல்.டி.டி.ஈ.-யும் இணைந்து யாழ்ப்பாண கோட்டை மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில் லெப். கர்னல் விக்கிரம நாயக்காவும், செனிவரட்னாவும் கொல்லப்பட்டு, கர்னல் கப்பு ஆராய்ச்சியும் கேப்டன் ஜெயவர்த்தனாவும் வேறு ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இவை தவிர எவ்வளவோ பட்டியல் போட முடியாத தாக்குதல்களையும் இந்த ஒன்றிணைப்பு அணி நடத்தியது. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்--புஷ்பராஜா)

உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்த இணைப்பு முயற்சி நல்லதொரு நிறைவை அளித்தது.

67: அணுகுமுறை மாறுகிறது!

ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழர் பிரச்னையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் பழுத்த அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் என்ன விரும்புவாரோ அதே திசையில் சிந்தித்த அதிகார வர்க்கத்தினர், ராஜீவ் காந்தி காலத்தில் தங்களது - விருப்பு வெறுப்புக்கேற்ப அவரை மாற்றுவதற்கு முற்பட்டனர்.

இந்திரா மறைவினால் புது தில்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பாதிப்புகளால் ராஜீவ் காந்திக்கு இலங்கை இனப் பிரச்னை என்பது இரண்டாம் பட்சமாகவே அமைந்தது. இச் சூழல் புது தில்லியின் அதிகார வர்க்கத்துக்கு ஏற்றதாயிற்று. இலங்கை இனப் பிரச்னையில் "தமிழர் நலன்' என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு "இந்திய நலன்' என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் முன்வைக்கப்பட்டது.

"இலங்கை சிங்கள அரசின் மீது ஒரு நெகிழ்வுத் தன்மையும், தமிழ்ப் போராளி இயக்கங்கள் மீது கண்டிப்பான அணுகுமுறையும் கடைபிடிக்கப்பட்டது. ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்துக்கு பாக் ஜலசந்தியை போராளிக் குழுக்கள் பயன்படுத்துவதை இலங்கை-இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் கண்காணிக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு புதிய நிலை உருவாகும் என போராளிக் குழுக்கள் முன்பே கணித்திருந்த காரணத்தால் அவர்கள் எதற்கும் தயாரான நிலையிலேயே இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

ஜெயவர்த்தனவும் வாங்கிக் குவித்திருந்த ஆயுதங்களை நாசகார வழிகளில் தமிழர்கள் மீது பிரயோகித்தும், தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத் திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றுவதிலும் குறியாக இருந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் என்பது தீவிரமானதும் மிகப்பெரும் அளவில் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவில் வந்து குவிந்தனர்.

சிங்களவர் குடியேற்றத்தைத் தகர்க்க எண்ணிய போராளிகள், அசோகர் காலத்திய புனித போதிமரம் உள்ள, பழமையும் பெருமையும் கொண்ட முந்தைய தலைநகரமான அநுராதபுரத்தில் நுழைந்து சுமார் 150 பேரைத் தாக்கி அழித்தது, ஜெயவர்த்தனவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவிலியன்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கையுடைய விடுதலைப் புலிகள் முதல் தடவையாக இச் செயலைச் செய்து உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினர். இத்தகைய அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவக் குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்தப் போவதான அறிவிப்புகளை அப்போதுதான் ஜெயவர்த்தன செய்திருந்தார். சிங்களவரின் பகுதியில், சிங்களவரின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஜெயவர்த்தன எப்படி தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத்தை நிகழ்த்தி, அவர்களைப் பாதுகாப்பார் என்ற கேள்வி அம் மக்களிடையே பரவலாக எழுந்தது. இப்படி ஒரு தயக்கத்தை சிங்களவர் மத்தியில் எழுப்பினால் மட்டுமே, குடியேற்றம் தடுக்கப்பட முடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஜெயவர்த்தன கையாண்ட நாடகம்தான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை என்பது. அரசியலுக்குப் புதியவரான ராஜீவ் காந்தியை தான் விரும்பியபடி ஆட்டி வைக்கலாம் என்பதும் அவரது உள்ளக்கிடக்கையாக இருந்தது. இக் கருத்து நிறைவேற அவர் வீசிய இன்னோர் அஸ்திரம் ஜி.பார்த்தசாரதியின் வெளியேற்றத்தில் முடிந்தது.

ஜி.பார்த்தசாரதி ஒரு பிராமணத் தமிழர் என்பதால் இலங்கை இனப் பிரச்னையில் அவர் இந்திய நலனை விடுத்து, தமிழர் நலனை நாடுவதால், இரு நாடுகளிடையே உள்ள உறவு சிக்கலாகிறது என்று ஜெயவர்த்தன தரப்பிலிருந்து திரும்பத் திரும்ப பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜி.பார்த்தசாரதியால் நடுநிலையாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். உண்மையில், ஜி.பார்த்தசாரதி இந்திரா காந்தியின் கருத்துக்களையே பிரதிபலித்தார். ஜி.பார்த்தசாரதிக்கு இலங்கைப் பிரச்னையின் அத்தனை பரிமாணங்களும் அத்துபடி. அவர் இந்திய நலன் மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

இந்தியாவின் மத்தியஸ்தர் முயற்சியில் நடுவராக இருந்து செயல்பட்ட ஜி.பார்த்தசாரதிக்குப் பதில் ரொமேஷ் பண்டாரி என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் பணியில் அமர்ந்ததும் உடனடியாக கொழும்புப் பயணத்தை மேற்கொண்டார்.

கொழும்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர், ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். அவரோ, "இலங்கை இனப் பிரச்னை தீராததற்கு இந்தியாதான் காரணம். ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் இந்தியா வழங்கியதால் இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியா போராளிகளுக்கு உதவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று தெரிவித்தார். கூடவே, ரொமேஷ் பண்டாரிக்கு மதிப்பு மிகுந்த, உயர்வகை அன்பளிப்பும் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அப்போது போராளிக் குழுக்கள் குற்றம் சாட்டின.

இதனைத் தொடர்ந்து, ஜெயவர்த்தனவின் வெளியுறவு ஆலோசகர் எட்மண்ட் விக்கிரமசிங்கா புது தில்லி வந்து பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ரொமேஷ் பண்டாரி திரும்பவும் கொழும்பு சென்றார். இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஜெயவர்த்தன - பிரதமர் ராஜீவ் காந்தி சந்திப்பு புது தில்லியில் நிகழ்ந்தது.

கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன இரண்டே வார காலத்தில், தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தம் உணர்த்தும் உண்மை "இலங்கை நிதியுதவி கூட்டிணைப்பின்' (அண்க் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் ஸ்ரீப்ன்க்ஷ) கூட்டம் அண்மையில் நடைபெற உள்ளது என்பதாகும்.

இந்த நிதியுதவி அமைப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் காலத்தில், திடீரென இலங்கையில் ஓர் அமைதிச்சூழலைத் தோற்றுவிப்பதை ஜெயவர்த்தன வாடிக்கையாகக் கொண்டிருந்தார். போர்ச்சூழலில், அதன் பாதிப்புகளைக் காரணம் காட்டி, நிதியுதவியைக் குறைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலேயே அவர் - போர் நிறுத்தம் செய்து, அமைதிச் சூழலை "பொய்யாக' ஏற்படுத்த விரும்பினார்.

அதே உத்தியைப் பின்பற்றித் தற்போதும் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் இவ்வறிப்பு வெளியானதால், ராஜீவ் விருப்பப்படி வெளியிடப்பட்டதாக அவரையும் நம்ப வைத்தார் ஜெயவர்த்தன.

மேலும், இலங்கை இனப் பிரச்சினை தமிழர்கள் சார்ந்த பிரச்னை என்பதால், இந்த சமரசப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறக்கூடாது என்கிற நிபந்தனையையும் ஜெயவர்த்தன முன்வைத்தார். எனவே, இந்தியாவின் நட்பு நாடான பூட்டான் தேர்வு செய்யப்பட்டு, அந் நாட்டின் தலைநகர் "திம்பு' பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டது. இதன்படி பேச்சுவார்த்தைக்கு வசதியாக நான்கு கட்டமாக சில நடைமுறைகளை இலங்கை அரசும், போராளிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

(அ) வீதிகள், வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறுத்தி, அத்துமீறப்படாத பகுதிகள் என்கிற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் (ஆ) தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி வைப்பது என்றும், (இ) நீதித் துறையினர் முன்பாகவே பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையைச் செய்வது என்றும் (ஈ) ரோந்துக்குரிய நடவடிக்கைகளுக்காக வாகனங்களை தருவித்தல், காவல் நிலையங்களுக்கு கருவிகள் அனுப்பி வைப்பது கூடாது என்றும் முடிவாயின.

இதேபோன்று போராளிகள் தரப்பில், (அ) தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆயுதங்கள், பொருட்கள் எடுத்துச் செல்வதையும் (ஆ) வடக்கு-கிழக்கில் மக்களைத் தாக்குவதை நிறுத்துவது (இ) அதேபோன்று அரசு அலுவலகங்கள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது, (ஈ) வெளியிலிருந்து ஆட்களையும், பொருட்களையும் தருவிப்பது கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையனைத்தும் மூன்று வாரங்கள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, இலங்கை ராணுவனத்தினருக்கும் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்க தாக்குதலைத் தொடரக் கூடாது என்றும், ஊரடங்குச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதேபோன்று போராளிகள் குழுவினர் பாதுகாப்புப் படையினர் செல்லும்போது தாக்குவது கூடாது என்றும், பொது நிறுவனங்களைத் தாக்குவதும் குண்டு வைத்துத் தகர்ப்பதுமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் குண்டுகளைப் புதைப்பது ஆயுதங்களை எடுத்துச் செல்வது கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாம் கட்டமாக, போர் நிறுத்தத்தை இருவரும் கடைப்பிடித்தல். போலீஸôர் துணையுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், தடுப்புக் காவல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் போன்றவற்றை அரசுத் தரப்பில் செய்வது என்றும்,

நான்காம் கட்டமாக பேச்சுவார்த்தைகளின்போது எழுப்பப்படும் விவாதங்கள் முடிவு எட்டப்படும் வரையில் அப்பேச்சு விவரத்தை பகிரங்கப்படுத்தாமல் இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதுமான கட்டுப்பாடுகளைக் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டன.

இவை யாவும் இந்திய அரசுத் தரப்பு அதாவது ரொமேஷ் பண்டாரி எடுத்துக் கொண்ட முயற்சியினால் உருவானவை ஆகும். இந்த அட்டவணை ராஜீவ் - ஜெயவர்த்தன சந்திப்பின்போது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்ட நகல் போராளிக் குழுவின் ஒன்றிணைப்புக்கு (உசகஊ)அனுப்பி வைக்கப்பட்டது.

68: திம்பு பேச்சு வார்த்தை!

திம்பு பேச்சுவார்த்தை ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

""இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையையும், நல்லுறவையும் ஏற்படுத்தும் பணியையும் மதிப்பதோடு, எமக்களித்த வாக்குகளையும் உறுதிகளையும் ஏற்பதோடும், தமிழர் தேசிய பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய திட்டவட்டமான யோசனைகளை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கு வேண்டி அதற்கு உகந்த சூழலையும், அமைதியை நிலைநாட்டுவதற்குரிய நிபந்தனைகளையும் உருவாக்குவதற்கு உதவ, குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக இங்கு கைச்சாத்திடும் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த நாம் கூட்டாக தீர்மானித்துக் கொண்டோம்.

குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக சம்மதிக்கும் அதேவேளையில், முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்ட அமைப்பினுள் அடங்கும் ஒழுங்குகளும் நிபந்தனைகளும் எம்மை சமநிலை அற்றவர்களாக்குகின்றது. சிந்திப்பதற்குரியவை எமது மாற்று யோசனைகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டிருந்தன.

(அ) (1) போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் அளிக்கிறோம்.

(2) புதிய சிங்கள குடியேற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக, வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நிறுத்துவதற்கு வலியுறுத்துவது வேடிக்கையானது. இந்தப் பகுதிகளில் ராணுவத்தாலும் சிங்கள ஆயுதந்தாங்கிய குடியேற்ற வாசிகளாலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்வது? இவ்வகை அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.

(3) முதல் கட்ட அட்டவணை, காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலைகள் தொடருமானால் அவை ஒப்பந்த மீறலாக கருத வேண்டும்.

(ஆ) அரச பயங்கரவாத - அவசர காலச் சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் மூன்றாவது சட்டம் 2-வது பிரிவில் உள்ளபடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸôரிடம் ஒப்படைப்பது சரியல்ல.

(இ) (1) போர் நிறுத்தம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களுக்குள் அதாவது இப் பேச்சுவார்த்தை (ஜூலை 8, 1985-இல்) தொடங்கும் நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் அரசியல் தீர்வுக்கான "செயல் திட்டத்தை முழுமையாக அளிக்க', இலங்கை அரசு முன்வர வேண்டும்.

(2) இப்பேச்சுவார்த்தைக்கு "செயல்திட்ட வரைவை' ஏற்றுக்கொள்வதையே நாங்கள் நிபந்தனையாக வைக்க விரும்புகிறோம். தமிழர்களின் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வுக்கு இடமளிக்காமல், அவர்களை ஏமாற்றி பேச்சுவார்த்தை நாடகம் என நடத்தி, இறுதி முடிவு எட்டப்பட்டாலும் அவற்றைக் குப்பையில் போடுகிற சிங்கள அரசுகளின் செயல்களால் பெற்ற அனுபங்களே இவ்வாறு நிபந்தனை வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

நான்காவது கட்டத்துக்குண்டான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதில் நல்ல யோசனைகளை எமது பார்வைக்கு வைக்க வேண்டுகிறோம்.

(அ) போர் நிறுத்த கால எல்லை நீட்டிப்புக்குச் சம்மதிக்க முடியாது.

(ஆ) போராளிக் குழுக்களைத் தீவிரவாதிகள் (Militant) என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியை "தமிழரது அரசியல் தலைமை' என்றும் குறிப்பிடப்படுவதையும் நாங்கள் மறுக்கிறோம்.

இந்த யோசனைகள் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, இவற்றை இலங்கை அரசுக்கு அறிவித்து அவர்களும் ஏற்றால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது.

இப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக பூட்டான் மன்னர் அனைவரையும் வரவேற்று தேநீர் விருந்து அளித்தார். போராளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் நீண்ட நெடுநாளைக்குப் பின்னர் ஒருவரையொருவர் அப்போதுதான் சந்தித்ததால், ஓர் இளகிய சூழல் நிலவியது.

பின்னர், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (PLOT) சேர்ந்து ஒரு குழுவாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு ((EROS) அடங்கிய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENLF)-யினர் ஒரு குழுவாகவும் வந்திருந்தனர்.

இதில் ஒவ்வொரு அமைப்பும் தலா இருவர் வீதமும் சிங்கள அரசின் சார்பில் ஜெயவர்த்தனவின் தம்பி ஹெக்டர் ஜெயவார்த்தன தலைமையில் ஒரு குழுவும் பங்கேற்றது.

அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தம், வரதராஜ பெருமாள், சத்யேந்திரா, ராபர்ட், ரத்தினசபாபதி, ராஜிவ்சங்கர், சித்தார்த்தன், வாசுதேவா, திலகர், யோகி உள்ளிட்ட 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை. தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத் தரப்பில் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த புஷ்பராஜா எழுதியிருப்பதாவது:

"எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை. பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக்.417).

இந்த இழுத்தடிப்புப் பேச்சு 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் திடீரென மாற்றப்பட்ட தமிழர்களின் விருப்பங்களுக்கெதிரான பழைய 14 அம்சத் திட்டத்தையொட்டியே அமைந்தது. இது போராளிக் குழுக்களுக்கு வெறுப்பைத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கமும் வெறுப்படைந்தார். காரணம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று அம்மாநாடு "திடீர்' என ரத்தான சம்பவத்தில் அவரும் ஒரு பங்கேற்பாளர்.

வட்ட மேஜை மாநாட்டிலேயே உரிய அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அமைப்பு என்கிற ஏற்பாடு இல்லை. அரைகுறையான அதிகார ஒப்படைப்புத் திட்டத்தையும் ஸ்ரீமாவோ, புத்த பிக்குகள் சங்கத்தினர், ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாதிகள் எதிர்த்த காரணத்தால் பின்வாங்கியதாக ஜெயவர்த்தன நாடகமாடினார். அதே திட்ட அடிப்படையில் இப்பொழுதும் பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.

69: திம்பு பேச்சுவார்த்தையும் போராளிகளின் நிலைப்பாடும்!

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு (EROS)மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) ஆகியவற்றின் அங்கத்தவர்கள் ஒருங்கிணைந்து ஓர் அறிக்கையினை (திம்பு பிரகடனம்: 1985 ஜூலை 13), பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். பின்னர் இந்த அறிக்கை பத்திரிகைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.

அவ்வறிக்கை வருமாறு:

தமிழ் தேசிய பிரச்னைக்கான பயனுள்ள தீர்வு எதுவாக இருந்தாலும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்டையாகக் கொண்டிருக்க வேண்டும்.

(1) இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

(2) இலங்கையில் தமிழர்களுக்கென்று இனங் காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளது என்பதை அங்கீகரித்தல்.

(3) தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

(4) இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினதும் பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.

இக் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பல்வேறு அரசாங்க முறைகளை வகுத்துள்ளன. எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதனால் எழுந்துள்ள இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, நாம் சுதந்திரமான அரசொன்றைக் கோரியுள்ளதுடன், அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.

இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் அளித்துள்ள ஆலோசனைகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. எனவே 1985 ஜூலை 12-ஆம் தேதி எமது அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்.

எனவே, சமாதானத்துக்கான எமது உளப்பூர்வமான விருப்பத்தின் காரணமாக, மேற்குறிப்பிட்ட எமது கோட்பாடுகளுக்கிணங்க முன்வைக்கும் ஆலோசனைகளை நாங்கள் பரிசீலனை செய்வோம் - என்று கூறி அனைத்து அமைப்பின் அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் இலங்கை அரசு இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு சரியான திட்டங்களுடன் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதன் மூலம் ஈழமே தீர்வு என்கிற நிலையிலிருந்து கீழிறங்கியதுடன், இதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு இலங்கை அரசையும் உட்படுத்தினர்.

காரணம் போராளிகள் எப்போதும் சமரசத் தீர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்று இலங்கை அரசுகள் அது எந்த அரசாக இருந்தாலும் கூறி, அவை ஒவ்வொன்றும், இந்தியாவையும் பிற உலக நாடுகளை நம்ப வைத்திருந்தன. இதன் காரணமாகவே, இப்போது முடிவெடுக்கும் நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளினர்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 1985 ஆண்டில், ஆகஸ்டு 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி முடிவடையும் காலக் கெடுவைக் கொண்டிருந்தது. இப் பேச்சுவார்த்தை தொடங்கியதுமே அரசுத் தரப்பு நான்கு முக்கிய கோட்பாடுகளை முற்றிலுமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பே திம்பு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்த்தியது.

இதனால் எரிச்சல் அடைந்தது இலங்கைத் தரப்பு அல்ல; மாறாக - தமிழ்ப் போராளிகள் மீது இந்திய அரசு அதிகாரிகள் கடும் கோபம் கொண்டனர்.

இதே நேரத்தில் அதாவது திம்பு பேச்சு முடிவடையும் நாளுக்கு முந்தின நாள் (16-ஆம் தேதி) வவுனியா ராணுவ முகாம் அருகே உள்ள மதகொன்றின் கீழ் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் வவுனியா நூல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அந்த நூல்நிலையத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தீயும் வைக்கப்பட்டது.

நூலகத்தில் இருந்த ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் தீக்காயத்துக்கு ஆளாயினர். கடைகள், கட்டடங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தில் இரண்டாயிரம் பேர் அகதிகளாயினர்.

இந்நடவடிக்கையினால் கோபமுற்ற போராளிக் குழுக்கள் போர் நிறுத்த காலத்தில் சிங்கள ராணுவத்தினரின் செயல் ஓர் ஒப்பந்த மீறல் என்று வாதிட்டனர். இதனை ஏற்க இலங்கை அரசுத் தரப்பு மறுத்தது.

இந்திய அதிகாரிகள் போராளிக் குழுவினருக்கு நெருக்குதல் கொடுத்தனர். தொடர்ந்து, போராளிக் குழுக்களின் அங்கத்தவர்கள் உடனடியாக தங்களது நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இந்திய மத்தியஸ்த பார்வையாளர்களிடம் அளித்தனர்.

அந்த அறிக்கையில், "இலங்கைத் தரப்பில் அளிக்கப்பட்ட யோசனைகளில் மாவட்ட சபைக்கு அதிகாரம் என்று கூறப்படுகிறது. உண்மையில் மாவட்ட சபைகளுக்கு நிர்வாகப் பொறுப்புகளே இல்லை. கீழ்மட்ட சட்டங்களைத் தயாரிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட நிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவும் கூட ஜனாதிபதியின் அதிகார வரம்புக்குட்பட்டதுடன் அவரது அங்கீகாரத்தையும் பெற்றாக வேண்டும்.

அதுதவிர, மாவட்ட சபைகளுக்கு உரிய நிதி கிடையாது. ஜனாதிபதி நியமிக்கும் கமிஷன் ஒன்று மாவட்ட சபைகளுக்குத் தேவையான நிதியை சிபாரிசு செய்து, அதையும் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் வைத்துள்ள யோசனைகள் மத்திய இலங்கை அரசை வலுப்படுத்துபவையாகவே உள்ளன. மாவட்ட சபை நிர்வாக அமைப்பிலும் தமிழ் மக்களை அடக்கும் நோக்கமே அதிகம்' - என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், "தமிழர் தேசிய இனத்துக்குரியவர் அல்ல - அவர்களுக்குத் தாயக உரிமையும் இல்லை - சுயநிர்ணய உரிமையும் கிடையாது - மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உரிமையும் கிடையாது என்று இலங்கை அரசு மறுக்கிறது. பொதுவான சர்வதேச சட்டத்தின் மறுக்க முடியாத அம்சங்களில் சுயநிர்ணய உரிமையும் ஒன்று - அது மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் "பயனுள்ள கருத்துப் பறிமாறல்' நடைபெறும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் பயன் இல்லை' என்றும் அறிக்கை கூறியது.

அறிக்கையின் இறுதி அம்சமாக கூறப்பட்டது என்னவென்றால், "நாம் முன்வைத்த நான்கு முக்கிய கோட்பாடுகள் - தமிழ் மக்களது அடிப்படையானதும் - அத்தியாவசியமான உரிமைகளுக்குப் போராடும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையும் ஆகும். 1950-ஆம் ஆண்டில் சமஷ்டியாட்சி கோரியதால் அடக்குமுறையும் பாகுபாடும் தலைதூக்க, தவிர்க்க முடியாத நிலையில் ஈழமெனும் சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கை உருவானது. ஆயிரக்கணக்கான தமிழர் மாண்டு, பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களை இழந்து, உழைப்பு, வசதிகள் இழந்து, அழிந்து, இன்னல்கள் அனுபவித்தது அனைத்தும் தமிழ் மக்கள் சம உரிமையோடும் - சுதந்திரமாகவும் இருப்பதற்காகவே.

""ஆகவே குரோதமின்றி பொறுமையோடு இன்று நாம் திம்புவிலிருந்து பிரகடனப்படுத்துவது, தமிழ் தேசிய இனம் சார்பில் அல்லாது பேச்சுவார்த்தைகள் திம்புவிலோ அல்லது வேறு எங்குமோ நடைபெறுவது இயலாது. பேச்சுவார்த்தையின்போது நாம் வெளிப்படுத்திய மூலக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நியாயமான பேச்சு நடத்த இலங்கை அரசு தயாரா என்பதைத் திட்டவட்டமாக கூறும்படியும் கேட்கிறோம்.

நாம் பேச்சுவார்த்தை நடத்தி வரும்பொழுதே எமது இனத்தை பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசின் நோக்கம் வெளிப்படுகிறது. கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தினரால் வவுனியாவிலும் இதரப் பகுதிகளிலும் அப்பாவி மக்கள் 200 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம் தாயகத்தில் தமிழ் மக்கள் சமாதானத்துடன், பாதுகாப்பாக வாழ முடியாத வேளையில் சமாதானப் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருப்பது கேலிக்கூத்தாகும். சமாதானப் பேச்சை நாம் நிறுத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படை நிபந்தனையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிவிட்டதனால் பேச்சுவார்த்தைகளே நடைபெற முடியாதிருக்கிறது''-என அவ்வறிக்கை கூறியது.

இந்த அறிக்கையை இந்திய அரசுத் தரப்புக்கு அளித்து பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி, போராளிக் குழுவினரைச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் போராளிக் குழுவினர் இந்தச் சந்திப்புக்குத் தயங்கினர். இந்திய அதிகாரிகள் நெருக்குதலை அதிகரிக்க அதிகரிக்க அவை வாக்குவாதத்தில் முடிந்தது.

70: ஒரே கல்லில் பல மாங்காய்!

பேச்சுவார்த்தை தடைபடக் காரணமானவர்கள் என்ற நினைப்பில் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம், டெலோ இயக்கத்தவர்களான சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியவர்களை இந்தியா நாடு கடத்தி, ஜெயவர்த்தனவுக்கு தீவிர நண்பனாயிற்று.

இந்தச் செயல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தி.மு.க., திராவிடர் கழகம், தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் (பழ.நெடுமாறன்) மற்றும் டெலோ அமைப்பில் உள்ளவர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பலர் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

"தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டிய நிலையில் உள்ள இந்தியா, சிங்களவருக்குத் துணை போவது ஏன்?' - என்று தமிழகமெங்கும் கண்டனக் குரல் எழுந்தது. இந்த ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாகவும் வெளியேற்றப்பட்ட பாலசிங்கம், சந்திரகாசன், சத்யேந்திரா மூவரையும் அமெரிக்கா கொண்டு சென்ற நிலையில், அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படாத நிலையிலும் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டார்கள். இச்செயலைக் கிண்டல் செய்து "அமெரிக்காவுக்கு ஓர் இலவசப் பயணம் - இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும்' என்று ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கேலிச்சித்திரம் பலரையும் பேச வைத்தது.

திம்பு பேச்சின் பலன் என்று எதுவும் இருக்குமானால் அந்தப் பலன் யாவும் ஜெயவர்த்தனாவையே அடைந்தது. போராளிக் குழுக்களை இந்திரா வளர்த்தார்; ஜெயவர்த்தனவோடு சாமர்த்தியமாக ராஜீவ் காந்திக்கு அவர்களுடன் பிணக்கு ஏற்பட வைத்து விட்டார். மாறுபட்ட கருத்துகளைக் கூறி, அபிப்பிராய பேதம் ஏற்பட வைத்து, போராளிக் குழுக்களின் புதிய அமைப்பான உசகஊ - க்கும் சோதனை ஏற்படுத்திவிட்டார்.

அதுமட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனிமைப்படுத்தி, அவ்வமைப்பை ராஜீவை மேலும் நெருங்க வைத்துவிட்டார். ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழர்-மலையகத் தமிழர்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியதுடன், நேரு காலத்தில் இருந்த கொள்கையை மாற்றி மலையகத் தமிழரில் பெரும்பாலோரை இந்தியாவுக்கு அனுப்ப வகை செய்ததன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தவர் என்று முன்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைச் சொல்வார்கள். இப்போது ஜெயவர்த்தன அதே அணுகுமுறையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.

திம்பு பேச்சுவார்த்தைக்கிடையே போர் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு போராளிக் குழுக்களும், ராணுவத்தினரும் தங்கள் நிலையில் இருந்து வெளிவரக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் வவுனியா சம்பவம் உணர்த்துவதென்ன? ராணுவ முகாம் அருகே உள்ள மதகடிக்குக் கீழே குண்டு வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதைக் காரணம் காட்டி வவுனியா நூல் நிலையம் எரிக்கப்பட்டதில் 200 பேருக்கு மேல் சாவு. இதன் பின்னணி பற்றி இந்திய தரப்பு ஆராயவே இல்லை; பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட!

சுதந்திர தமிழ் அரசுக்காக போராடுகின்ற போதிலும் வெவ்வேறு அரசாங்க முறைமையான வடிவமைத்துக் கொள்ள இலங்கை அரசு வைக்கின்ற தீர்வுத் திட்டத்தை பரிசீலனைக்கு ஏற்கத் தயார் என்று போராளிக் குழுக்கள் அறிவித்துவிட்டன. இதற்குரிய விடையை அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயவர்த்தன அரசு அதற்குத் தீர்வுத் திட்டம் அளிக்க தயாராக இல்லாத நிலையில் - வவுனியா பகுதியில், ராணுவ முகாம் அருகே உள்ள மதகடியில் வெடிகுண்டு வைத்து, வெடிக்கச் செய்து நூல்நிலையம் எரிப்பும் நடத்தியாயிற்று. போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என போராளிகள் கோபப்பட்டு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவார்கள் என்று திட்டமிட்டே, ராணுவமும் ஜெயவர்த்தன அரசும் செய்த சதிவேலை அது என்பதை "இந்திய மத்தியஸ்த தரப்பு' கவனத்தில் கொள்ளவே இல்லை.

மாறாக, தீர்வுக்கு ஒத்துவராதவர்கள் என்று கூறி, போராளிக் குழுவினர் மீது கோபம் கொண்டனர்.

போராளிக்குழுக்களின் தயவின்றி, அவர்களை முன்னிலைப் படுத்தாமலே இலங்கை அரசுடன் தீர்வுத் திட்டம் ஒன்றுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி தீவிரம் காட்டினார். ஜெயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தன - ராஜீவ் காந்தி ஆகிய இருவர் மட்டுமே முன்னின்று தயாரித்த திட்ட அடிப்படையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் 31 ஆகஸ்ட் 1985 அன்று வெளியிட்ட குறிப்பில், "எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி, வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இதன் அடிப்படையில் ஓர் ஒப்பந்தத்துக்கான பேச்சு நடத்தலாம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரேயொரு அம்சம் இலங்கை அரசு முதன்முதலாக "அதிகாரப் பகிர்வின் ஓர் அளவாக மாகாணம் என்பதை ஏற்றுக்கொண்டது' என்பதுதான்.

71 - தோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தை!

ஆனாலும், திம்பு பேச்சின்போது அளிக்கப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகளின் பிரகாரம் இல்லை என்று தமிழர்கள் இவ்வரைவை ஏற்கவில்லை. இந்நிலையில், இந்திய அரசின் முயற்சியை முற்றிலுமாக நிராகரிக்க மனமில்லாத தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றவர்களுடன் பேசி 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் நாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.

அக்கடிதத்தில் (அ) தமிழர் பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு (ஆ) காணி பங்கீட்டதிகாரம் (இ) சட்டம் ஒழுங்கு பற்றிய அதிகாரம்-ஆகிய மூன்று அம்சங்களையும் விட்டுக்கொடுக்க தமிழர் அமைப்புகள் விரும்பவில்லை என்று தெரியப்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழர் குழுக்களை அழைத்து ராஜீவ் காந்தி பேசிப்பார்த்தார். முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை. சலிப்படைந்த ராஜீவ் "தமிழர்கள் பக்கம் தீர்வு குறிப்புள்ளது; அவர்கள்தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்தார்.

இந்தத் தேக்க நிலையைப் போக்க தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதமர் இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் கூட்டப்பட்ட வட்ட மேஜை மாநாட்டில் பேச உருவாக்கப்பட்ட "இணைப்பு - இ' திட்ட அடிப்படையில், இந்தியாவின் முயற்சி வீண் ஆகக்கூடாது - என்கிற எண்ணத்தில் இத்திட்டத்தை இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கின்றோம் (தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியீடு - 1988) என்று கூறி 1 டிசம்பர் 1985 அன்று அளிக்கப்ப்பட்ட திட்டத்தில் திம்பு பேச்சில் கூறப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

அத்திட்ட வடிவு வருமாறு:

1. இலங்கையானது மாநிலங்களின் கூட்டரசாக அமையவும்,

2. வடக்கு-கிழக்கு மாநிலங்களில் மொழிவாரி அரசாக அமையவும்,

3. மாநிலங்களின் எல்லை, அம்மாநிலத்தின் ஒப்புதல் இன்றி மாற்றாமல் இருக்கவும்,

4. நாடாளுமன்றத்தில் அங்கத்தவம் மொழி, இன மக்களின் விகிதாச்சார அடிப்படையில் அமையவும்,

5. முஸ்லிம்கள், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வகை செய்யவும்,

6. எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் பாதிக்கும் சட்டம் இயற்றும்போது, நாடாளுமன்றத்தில் அந்த இன பெருவாரி உறுப்பினர்கள் சம்மதம் பெற வழி செய்யவும்,

7. அரசமைப்புச் சட்டங்களில் - அது குடியுரிமைச் சட்டமாக இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்து 1981-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இலங்கையில் வசித்தவர் அனைவருக்கும் குடியுரிமை வாய்ப்பு வழங்கவும்,

8. தமிழ் ஆட்சிமொழியாகவும்,

9. ராணுவம், அரசு சேவை மற்றும் வேலைவாய்ப்பில் இனவாரி மக்கள்தொகை அடிப்படையில் அதன் விகிதாச்சாரத்தை ஒட்டி அரசமைப்பில் ஏற்பாடு செய்யவும்,

10. இந்தியாவில் ஒரு மாநிலத்துக்குண்டான அரசமைப்புப்படி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், நிதி அதிகாரம், ஆணைக்குழு அமைத்தல், நீதிமன்றப் பணிகள், சேவை அமைப்புகளுக்கு உட்பிரிவுடன் சட்டவடிவம் அமைக்கவும்,

11. மொழிவாரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொகுதிகள் பங்கீடு செய்யவும்,

12. மலையகத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு, அவர்கள் வாழும் பகுதிகளை இணைத்து கிராமச் சேவைப் பிரிவு, அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்டங்கள் அமைக்கவும்,

13. மொழிவாரி மாநிலங்கள் அமையும் போது, அம்மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்கள் தாம் வாழும் பகுதிகளைத் தவிர்த்து, வேறு மாநிலங்களில் வேலை நிமித்தம் வசித்தால் அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் சகல உரிமைகளும் கிடைக்க வகை செய்யவும்,

14. மேற்கண்ட அனைத்துக்கும் உரிய சட்டங்களை இயற்றி அங்கீகரித்தலும் - தேவையான அளவில் அரசமைப்புச் சட்டத்திலும் மாற்றம்-திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் வேண்டும். இதுதவிர,

15. தமிழ் மாநிலம் அமைவதற்குண்டான பல்வேறு காரணங்களை விளக்கியும், சிங்களவக் குடியேற்றங்களினால் ஏற்படும் மனித இழப்புகளைப் போக்கவும், மாநிலத்துக்குத் தேவையான அதிகாரங்கள் பற்றியும் உரிய தனித்தனி அட்டவணைகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் திட்டவரைவுக்கு இலங்கை அரசு மிக நீண்ட பதிலொன்றை ஏராளமான கேள்விகளுடன் எழுப்பி இந்திய அரசுக்கு அனுப்பியது. அதில் குறிப்பிடத்தக்க ஆட்சேபணைகள் என்ன?

(1) இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் "சமஷ்டி அரசு' - என்பது நடைமுறையில் இருக்கும் "ஒற்றையாட்சி' அரசுமுறைக்கு நேர் எதிரானது.

(2) மொழிவாரி மாநிலம் அமைப்பதானால் இதில் இரண்டு பகுதிகள் போக, மற்ற ஏழு மாகாணங்களை என்ன செய்வது? அவைகளும் நாளடைவில் பிரிக்கப்பட வேண்டுமா?

(3) இந்தத் திட்டத்தை இலங்கை அரசு ஏற்றால் "ஈழம்' என்கிற சொல்லைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அளித்ததாக ஆகிவிடும்.

(4) இத்திட்ட வரைவு இலங்கை பல துண்டுகளாகப் பிரிபடும் என்பதை உணர்த்துகிறது. ஆகவே, தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்ட ஆலோசனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று இலங்கை ஒதுக்கித் தள்ளியது. திம்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தது என்பதை இந்த அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின!

72. துயர்தீர்க்கத் தலைப்பட்ட எம்.ஜி.ஆர்!

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இலங்கை அரசைக் கண்டித்து உண்ணாநோன்பு இருந்த எம்.ஜி.ஆர் (24-3-1985) ஒன்றிணைந்த போராளிகள் குழுவினர் (ENLF) அளித்த திட்டத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்டத்தையும் ஏற்க மறுத்த இலங்கை மீது இந்தியாவுக்கு உடனடியாக கோபம் வராததற்குக் காரணம், அன்றைய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரிதான். அவரின் தவறான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களால் இந்தியத் தலைமை மெüனமாயிற்று. இதன்மூலம் இந்தியா, இலங்கைக்குச் சாதகமாக நிலை எடுத்தது என்பது வெளிப்படையாயிற்று.

அதுமட்டுமன்றி,

(அ) பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா - மூவரையும் நாடு கடத்தியது,

(ஆ) இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி அளித்த வரைவுத் திட்டத்தை கிடப்பில் போட்டது,

(இ) தமிழர் தேசிய இனமல்லவென்றும், அதனால் - அவர்களுக்கென தனிநாடு இல்லை என்ற இலங்கையின் கருத்தை போராளிகள் ஏற்க கட்டாயப்படுத்தியது-

(ஈ) சிங்கள அரசின் (நிறைவேற்ற விரும்பாத) மாகாண அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

பண்டாரியை, இலங்கையின் விருப்பத்திற்கேற்ப இயங்குபவர் என்று போராளிகள் குற்றம்சாட்டினர். பண்டாரியைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் இந்தியத் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட விரும்பாததே என்றும் கொள்ளலாம். இது வேறு யாருக்குப் புரியாவிட்டாலும், ராஜீவ் காந்திக்குப் புரிந்தது.

இந்தச் சமயத்தில், பிரதமரின் கொள்கை வகுப்பாளர்கள் "இலங்கை விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைவது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல' என்று அளித்த ரகசியக் குறிப்பு அவருக்கு உவப்பாக இருந்தது - என்று தமிழீழ ஆதரவாளர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.

அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகிய மூவரும் நாடு கடத்தப்பட்ட சமயத்தில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குன்றிய நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"நானும் முதல்வர் எம்.ஜி.ஆரும் புளோரிடாவில் இருந்தோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தமிழகம் திரும்பினோம். வந்த உடன் மத்திய அரசைத் தொடர்புகொண்டு, எங்களிடம் அந்தப் பிரச்னையை விட்டு விடுங்கள், நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாடு கடத்தப்பட்டவர்களைத் திரும்ப அழைக்க வழிவகை செய்தார், எம்.ஜி.ஆர். அப்போது வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரிதான் இருந்தார். ரொமேஷ் பண்டாரி ஒன்று கிடக்க வேறொன்று செய்பவர். அப்பவே நம்ம ஆட்கள் (போராளிகள்) ஜெயவர்த்தனாவிடம் வைர அட்டிகை வாங்கிட்டார்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க... அவரை நம்ப முடியாது!'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் குறிப்பிட்டார்' (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே.தங்கநேயன்) என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மேலும் கூறுவதாவது,

"ஜெயவர்த்தனாவின் ஒரே நோக்கம் ராணுவத் தீர்வுதான்; இதில் மாற்றமே இல்லை - என்று உறுதியாயிற்று. இனிப் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காது என்று எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். இதைத் தான் வெளியிட்ட அறிக்கை மூலமும் எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியதாவது-

"இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும் வகையில், இலங்கை அரசும், ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கெüரவமான வழிக்குத் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்' என்று குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர். முதல் தவணையாக, உடனடி உதவியாக ரூபாய் இருபது லட்சத்தை நன்கொடையாக அளித்தார். அதுதவிர, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்து லட்சமும், அஇஅதிமுக சார்பில் மூன்று லட்சமும், தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு லட்சமும் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அரசு ஊழியர்களிடையே நிதியும் திரட்டினார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பங்களிப்பாக அளித்த ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சாந்தஷீலா, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். காவல் துறை சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கான காசோலையை காவல் துறை தலைமை இயக்குநர் வி.ஆர்.லட்சுமிநாராயணன் வழங்கினார் (17-10-1985).

ஆனால் ஜெயவர்த்தன, சமாதானப் பேச்சு என்ற போக்குக் காட்டிக்கொண்டே தான் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களைப் பெருமளவில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். இந்த ஆயுதங்கள் முதன்முதலாக வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மக்கள், அகதிகளாக சொந்த நாட்டிலேயே முகாம்களில் தங்கினர். அங்கும் பாதுகாப்பில்லை. பெருவாரியான மக்கள் உயிருக்கு அஞ்சி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர்.

73: சாகும்வரை உண்ணாவிரதம்!

ஜெயவர்த்தன அரசில் கப்பல் போக்குவரத்து, வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டதும், போராளிகள் மீது தாக்குதல் தொடுப்பதாகக் கூறி, அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் தொடுப்பது அதிகரித்தது. இதுகுறித்து ஜெயவர்த்தன கூறுகையில், "போராளிகள் ஈழமே தீர்வு என்கின்றனர். இந்த நிலையில் ராணுவத் தீர்வையே சரியென்று நினைத்து அதுலத் முதலி செயல்படுகிறார்' என்று வாதிட்டார்.

பருத்தித் துறை, தீக்கம் பகுதியில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஆறு போலீஸ் கமாண்டோ படையினர் கொல்லப்பட்டதையொட்டி, அரசுப் படையினர் வீதிக்கு வந்து கண்ணில் கண்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததுடன் வல்வெட்டித் துறையும் சுற்றிவளைக்கப்பட்டது.

வடமராட்சி ஹாட்லி கல்லூரியின் லேபரட்டரியையும், நூலகத்தையும் கொளுத்தி அழித்தனர். இந்த எரிப்பில் 7,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின. அப்பாவிகள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒதியமலையில் (வவுனியா) 20 பேருக்கு மேற்பட்டோரும், ராணுவ முகாமில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் என்று காரணம் கூறி என்கவுண்ட்டர் முறையில் 115 பேரும் கொல்லப்பட்டனர் (1984 நவம்பர், டிசம்பரில்).

தொடர்ந்து வடமராட்சியில் ராணுவ மேஜரும் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகக் கூறி, 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இளைஞர்களாகப் பார்த்து 25 பேரைப் பிடித்து சமூகக் கூடம் ஒன்றில் அடைத்து, குண்டு வைத்து கொலை செய்தனர். மேலும் 12 பேரைப் பிடித்து வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்றனர்.

உச்சகட்ட சம்பவமாக குறிகாட்டுவான் கடற்பகுதியில் பயணிகளுடன் வந்த "குமுதினி படகை' வழிமறித்து அதிலிருந்த பயணிகள் அனைவரையும் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் சுட்டுக் கொன்று குவித்தது கடற்படை. இந்தத் தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 34 பேர். படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகும் (1985 மே 18).

29 ஏப்ரல் 1985 நாவற்குழி ராணுவ முகாமிலிருந்து வெளியேறிய வீரர்கள், அருகில் உள்ள அரியாலை கிராமத்தில் நுழைந்து, அக்கிராமத்தை துவம்சம் செய்தனர். அங்கு வசித்த குழந்தைகள், முதியோர் என்ற வித்தியாசமின்றி கொன்று குவித்தனர். இதில் திருமணமாகி இரண்டு நாள்களான தம்பதியும் அடங்குவர்.

மகிந்தபுர, தெஹிவத்த பகுதியில் போராளிகளால் 5 சிங்களவர்கள் கொல்லப்பட்டதையொட்டி, திருகோணமலை அல்லை குடியேற்றப் பகுதிகள் 50 அப்பாவி தமிழர்களை பாதுகாப்புப் படை கொன்றழித்தது (1985 மே 31-இல்). மண்டைத் தீவு கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 37 மீனவர்களும் தாக்குதலில் பலியாயினர் (ஆதாரம்: ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஷ்பராஜா).

அதே நூலில் கூறப்பட்டுள்ள இன்னொரு தகவல் அதிர்ச்சியளிக்கும். கைது மற்றும் இந்த வகைச் சம்பவங்களில் சிக்கியவர்கள் 1,12,246 பேர் என்றும் கொலைச் சம்பவங்களில் இறந்தோர் 54,053 பேர் என்றும் காணாமல் போனவர் 25,266 பேர் என்றும், பாலியல் வன்முறைக்கு பலியானவர் 12,437 பேர் என்றும் இடம்பெயர்ந்தோர் 23,90,809 பேர் என்றும் காயப்பட்டோர் 61,132 பேர் என்றும் "பிரான்சிலிருந்து தமிழர் மனித உரிமைகள் மையம்' என்னும் அமைப்பின் ஆய்வு மூலம் (1956-2004 காலங்களில்) புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எரிமலை இதழ் மே 2005-இல் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

1986-ன் தொடக்கத்தில் எஸ்.தொண்டைமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) சமாதானத்துக்குரிய ஆண்டாக 1986-ஐ அறிவித்து, பிரஜா உரிமைக் கோரியும் சமாதானம் வேண்டியும் பிரார்த்தனை இயக்கம் என்ற பெயரில் தொடர் இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்தார். ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்தப் பிரார்த்தனை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.

இதை முறியடிக்கும் விதத்தில் ஜெயவர்த்தன, 95 ஆயிரம் நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதை சட்டமாக்கவும் முயன்றார்.

இலங்கையின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இதனைக் கண்டித்த அதே வேளையில் சட்டம் நிறைவேறியது. இதனால் தொண்டைமான் கட்சிக்கு கூடுதலாக பாராளுமன்றத்தில் 15 இடங்கள் கிடைத்து விடும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்தன.

இதன் எதிரொலியாக சிங்களவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டும் கலவரம் அடங்கவில்லை. ஏற்றுமதியாக இருக்கும் தேயிலைப் பொதிகளில் பயங்கரவாதிகள் நஞ்சு கலந்துவிட்டனர் என்று வதந்தி கிளப்பப்பட்டதால், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாக தேயிலை ஏற்றுமதி முடங்கும், அந்நியச் செலாவணி கையிருப்புக் குறையும் என்பதையும் சிங்கள பேரினவாதிகள் கவனத்தில் கொள்ளவே இல்லை.

சிங்களவர் பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆங்காங்கு குண்டுகள் வெடித்தன. எண்ணெய்க் கிடங்குகள் வியாபார நிறுவனங்கள் தீக்கிரையாயின. முதன்முறையாக சிங்களவர் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு ஏராளமான பேர் கைது செய்யப்பட்டனர். வடக்கிலும் வன்முறை பரவியது.

தொடர் நிகழ்வாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நின்றிருந்த, த்ரீ ஸ்டார் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமுற்றனர். இந்த விமானம் மறுநாள் காலை 128 பேரை ஏற்றிக் கொண்டு "மாலத் தீவு' செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய தந்தி நிலையம் தாக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். கொழும்பில் நடந்த இந்தத் தாக்குதல்களால், அங்கு வசித்த தமிழர்கள் அனைவரும் சந்தேக வலையில் சிக்கினர். பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கவில்லை; மூடப்பட்டன. அரசு நிறுவனங்களும் மூடப்பட்டன.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் லங்க சமசமாஜக் கட்சியும், இலங்கை மக்கள் கட்சியும் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளால், நாட்டில் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் முடங்கிவிட்டது என்று குரல் எழுப்பின.

இலங்கைக்கு ஏற்றவாறு நிலைப்பாடு எடுத்தும் ஜெயவர்த்தன இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் எவ்வித அதிகாரப் பகிர்வுக்கும் உடன்படாமல் தமிழர்கள் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியதும், ராஜீவ் காந்தியை சிந்திக்கத் தூண்டின.

இந்த சிந்தனைப் போக்குக்கு தமிழகத்தில் நிலவிய எதிர்ப்பும், அவரது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் சார்ந்த விமர்சனமும் முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனைச் சமாளிக்க, தனது அன்னை இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாட்டுக்குத் திரும்பி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அம்மக்கள் விரும்பும் தீர்வினை நிறைவேற்றும் வகையில் உருப்படியான ஒரு திட்டத்துடன் வரும்படி ஜெயவர்த்தனாவை நெருக்கத் தலைப்பட்டார்.

1986 ஜூன் 25-இல் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த வரைவுத் திட்டத்தை வாபஸ் வாங்கும் வரை - சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மகா சங்கத்தைச் சேர்ந்த புத்தபிக்குகள் மிரட்டினர். மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையில் இலங்கை தத்தளித்தது!

74: மாகாண சபை மசோதா!

இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரம் பரவலாக்கல் குறித்த வரைவுத் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மாநாட்டைக் கூட்டினார் ஜே.ஆர். ஜெயவர்த்தன. இந்த மாநாடு 25-6-1986 அன்று கொழும்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஆதரிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் நவசமாஜக் கட்சியும், தமிழர்களின் விருப்பங்களில் சிலவற்றில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். ஆயினும், தமிழர்களுக்கென சில உரிமைகளை வழங்கலாம் என்ற கருத்துகள் கொண்டிருந்ததால், அனைவரும் ஏற்கத்தக்க தீர்வு ஒன்றை எட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று அந்த இரண்டு கட்சிகளும் அதிபரை நெருக்கின.

இலங்கையின் சீரழிந்த பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அமைதியின்மை ஆகியவற்றைப் போக்க தமிழ்ப் போராளிக் குழுக்களிடம் பேசுவதற்காகத் தான் தமிழ்நாட்டுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார் குமாரணதுங்கா. அவரின் தமிழ்நாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவருக்கு மட்டும் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தது.

இந்த மாநாட்டின் நோக்கம் மாகாண சபை உருவாக்கத்தில் - சிங்களக் கட்சிகளிடையே ஒத்த கருத்தை உருவாக்குவது ஆகும். இம்மாநாட்டில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட ஏனைய குழுக்கள் கலந்து கொள்ள வாய்ப்புத் தரப்படவில்லை. மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடரும்வரை பேச்சுகளில் பங்கெடுப்பது சாத்தியமில்லை என்பதால் அ.அமிர்தலிங்கம் மாநாட்டில் பங்கேற்க மறுத்தார்.

மாநாட்டில் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, நவசமாஜக் கட்சி, இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கலந்து கொண்டன. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய முன்னணியும் புறக்கணித்தன. தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் போராளிகள் குழுவினர் பங்கேற்காவிட்டால் அது தீர்வினை எட்டாது என குமார் பொன்னம்பலம் (தமிழ் காங்கிரஸ்) கூறி ஒதுங்கிக் கொண்டார்.

ஜெயவர்த்தனாவின் வரைவுத் திட்டம் இலங்கை அரசு கெஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா முடிவுரையாக குறிப்பிட்ட விஷயங்கள்தான் இவ்வரைவுத் திட்டத்துக்கான முன்னுரையாகும்.

அந்த முடிவுரையில் "மாகாண சபை' என்கிற அம்சத்தை இதற்கு முன்பு இருந்த இலங்கை அதிபர்கள் எந்தெந்தக் காலத்தில் எல்லாம் முன்வைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சோல்பரி - டொனமூர் ஆணைக் குழுக்களும், 14 ஜூலை 1926-இல் நடைபெற்ற மாணவர் காங்கிரஸில் எஸ்.ஆர்.டி.பண்டார நாயக்கா உரையாற்றியபோதும் இதுபற்றிக் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, ஒரு சமஷ்டி அரசு பற்றி கண்டி பிரதானிகள் சங்கம் 1927-இல் டொனமூர் ஆணைக் குழுவிடம் யோசனை கூறியதாகவும், அதனை ஒரு மாகாணத்தில் பரீட்சித்து பார்க்க வேண்டும் என்று தங்களது 1928-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதாகவும், அதன்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள், கண்டிப் பிரதேசம், தெற்கு-மேற்கு மாகாணங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், பண்டாரநாயக்கா உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது 1948-இல் மாகாணசபை மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அவர் பிரதமரான சமயத்தில் (1957) பிரதேச சபை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் (1957 மே 17-இல் வரைவு கெஜட்டில் பதிவாயிற்று) பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இதுபற்றி பேசப்பட்டதாகவும், உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஜெயவர்த்தன அதில் குறிப்பிட்டிருந்தார்.

அவர், வரைவுத் திட்ட முடிவுரையில் மேலும் விவரிக்கையில், டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது என்றும், ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும்,

பின்னர் 1977-இல் தேர்தல் அறிக்கையில் யுஎன்பி மாவட்ட சபைகள் மசோதா தாக்கலாகி, நிறைவேறியது என்றும், அதே தொழிற்பாட்டையில், "மாகாண சபை' அம்சம் தற்போதும் தொடர்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மசோதா இலங்கை அரசுக்கும் காலஞ்சென்ற இந்திரா காந்தியின் இந்தியப் பிரதிநிதியான ஜி. பார்த்தசாரதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில், 1984-இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி வட்ட மேஜை மாநாட்டிலும், திம்புப் பேச்சிலும், தில்லியின் இணக்கத்திலிருந்து உருவானவை ஆகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வரைவுத் திட்டத்திலும் "தனி ஈழம்' தவிர்க்கப்பட்டதுடன் ஒற்றையாட்சியை வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாகாண சபை அமையவும், நகர்ப்புறத்தில் நகரசபைகளும், ஒவ்வோர் அரசாங்க முகவர் (ஏஜிஏ) பிரிவிலும் கிராமிய மட்டத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட பிரதேசசபை அமையவும் சட்ட வடிவு வகை செய்கிறது.

மாகாண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் அவர்களின் தகுதி, நியமனம், நீதிமன்றம், காவல்துறைத் தலைவர், சட்டம், நிதி அதிகாரம், தேர்தல் குறித்து 18 அம்சங்களை உள்ளடக்கி, அதன் உள்பிரிவுகளையும் விளக்குகிறது.

பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, வெளிவிவகாரம் உள்ளிட்ட 27 வகை அதிகாரங்கள் மத்திய அரசைச் சார்ந்தது என்றும், சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை சில அதிகாரங்கள் மாகாண சபைக்கும், மாவட்ட சபைக்கும் பரவலாக்கப்படும் என்றும், காவல்துறை தேசியப் பிரிவு, மாகாணப் பிரிவு என இரு அடுக்குகள் கொண்டதாக இருக்கும் என்றும் வரைவு கூறியது.

இந்த வரைவில் காணி உடைமை மாற்றங்கள் தெளிவற்றதாக இருக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணி பல திருத்தங்களைக் கூறியது. அவையும் உள்படுத்தப்பட்டு அரசியலமைப்பில் திருத்தம் (1985 செப்டம்பர்) கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சில ஐயப்பாடுகளைத் தெரிவித்து, அனைத்து முடிவுகள், செயல்களில் "தேசியக் கொள்கை' என்பதும் மாகாணத்தில் மத்திய அரசு தற்போது பயன்படுத்தும் நிலங்கள் தவிர, இதர நிலங்களை மாகாணத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்றும், மாகாணத்தின் பொறுப்பில் காணி உடைமை மாற்றத்தை விட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலும் பதவி மாற்றம் நிகழ்ந்தது. பிரச்னைக்குரிய ரொமேஷ் பண்டாரி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி வெளியுறவுச் செயலாளரானார். பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் ஒரு குழு, கொழும்பு சென்றது. இலங்கைக்குழுவில் சிதம்பரம் தவிர்த்து ஏ.பி.வெங்கடேஸ்வரன், ரொமேஷ் பண்டாரி, அரசியல் சட்ட நிபுணர் எஸ். பாலகிருஷ்ணன், வெளிவிவகார அமைச்சகச் செயலாளர் ரஞ்சன் மாத்தையா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவ்வருகையால் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்பட்டது.

75: மதுரையில் டெசோ மாநாடு!

தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (பஹம்ண்ப் உங்ப்ஹம் நன்ல்ல்ர்ழ்ற்ங்ழ்ள் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக திமுக தலைவர் மு.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்கள்:

* இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு,

* இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது,

* போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது,

* தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது,

* இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது - ஆகியனவாகும்.

இந்த 5 உறுதிமொழிகளை "டெசோ' அமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி - பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, மக்கள் ஏற்பதை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

இந்த அமைப்பில் தி.மு.க., தி.க., தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகியவை அங்கம் வகித்தன. இக்கட்சிகள் தனித்தனியே ஈழப் பிரச்னைக்காக ஆதரவு தெரிவித்தாலும், உலக அரங்கில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பு தனது பணிகளை மேற்கொண்டிருந்தது.

மதுரையில் 4-5-1986 அன்று கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி., இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸôம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், பிளாட், புரோடெக் ஆகிய இலங்கைத் தமிழர் அமைப்பு பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.

மதியம் நடந்த கூட்ட அரங்கில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை நிலைமைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீர்மான விவரங்களை விவாதித்து முடிவுக்கு வந்தனர். சுமார் நாலரை மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தீர்மான விவரங்களை திமுக தலைவர் மு.கருணாநிதி வாசித்தார்:

* இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு தனது அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும், மத்தியஸ்தர் நிலையிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகாமல் இலங்கைத் தமிழர்களோடு நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புள்ள நாடு எனும் அடிப்படையில் அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் முயலும் வண்ணம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து தமிழ் மக்கள் சமத்துவத்தோடும், பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் வாழ வழிசெய்ய வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

* மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலைச் செயலில் ஈடுபட்டு தமிழர்களை அழிப்பதற்கு தனக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தும். ஆதலால் இலங்கைக்கு எத்தகு நிதியுதவிகளையும் அளிக்க வேண்டாம் என்று நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் சர்வதேச நிதியுதவி நிறுவனங்களையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

* இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இனப் படுகொலைச் செயல்கள் அதனுடைய பொய்யான தகவல்களையும் மாறுபாடான செய்திகளையும் மீறி, உலகத்தின் நாகரிக மக்களின் கண்முன்னால் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி விட்டன. ஆகவே, இந்தப் பிரச்னையை உலக அமைப்புகளான ஐ.நா. மன்றம், காமன்வெல்த் மாநாடு, அணிசேரா நாடுகள் அமைப்பு ஆகியவனவற்றில் மிகத் தீவிரமாக எழுப்பி, தீர்வு காணுமாறு இந்திய அரசாங்கத்தை இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மாநாட்டின் துவக்க உரையில், அந்த நாடுகளிடம் சொல்ல வேண்டும் என்று இந்திய அரசிடம் நாம் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த நாடுகளிடமே நேரடியாக கேட்கத் தொடங்கி விட்டோம். அந்த நிறுவனங்களையே நேரடியாக கேட்கத் தொடங்கிவிட்டோம்.

அதையும் மீறி இலங்கையிலே படுகொலை தொடர நிதியை வழங்கி, அதைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு, அதன் கொலை வாளுக்கு உடந்தையாக இருக்க முனையுமேயானால், அந்த நாடுகள் எங்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்றும் - இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்ற அத்துணை மக்களின் அதிருப்தியையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்-என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார்.

அவர் தனது வரவேற்புரையில், "தமிழ்நாட்டு அளவிலேதான் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்று சொல்பவர்களின் வாயை அடைப்பதற்காக இந்திய அளவில் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக - இது மேலும் மேலும் வளரும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாட்டில் என்.டி. ராமராவ் தமிழில்தான் பேசினார்.

தமிழர்களை மட்டுமே பாதிப்பதால் இப் பிரச்னையில் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் முக்கியத்துவம் தருவதில்லை - கவனம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது... இப்பிரச்னையில் தமிழர்கள் மாத்திரமல்ல, இந்திய நாடே இலங்கைவாழ் தமிழர்களின் கவலையைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே, நீங்கள் பங்கேற்றுக் கொண்டது தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தவும் பயன்படும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

கடந்த ஆண்டு ஜெனிவாவில் கூடிய ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் இப் பிரச்னையை அர்ஜென்டினா எழுப்பிட முனைந்தபோது பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி இந்தியா அதனைத் தடுத்துவிட்டது. கடைசியாக அரைகுறை மனதுடன் இந்த ஆண்டு (1986) ஜெனிவாவில் இந்தியா பிரச்னையை எழுப்பியதே தவிர, இதுகுறித்து பிறநாடுகளோடு பேசி விளக்கிட எந்த முயற்சியும் எடுக்காததால் உரிய பலன் எதுவும் கிட்டவில்லை...

1983 ஜூலையிலிருந்து இலங்கை காவல் துறையும் ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ராணுவத் தீர்வு காணப் போவதாக பிப்ரவரி மாதம் ஜெயவர்த்தனா பிரகடனம் செய்தார். அதை நிறைவேற்றும் வகையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஆணையிட்டார். "பாதுகாப்புப் பிரதேசங்கள்' என்று வரையறுத்துக் கொண்டு ராணுவம் தமிழர்களை அழிக்கத் தொடங்கியது. ஆகாய மார்க்கத்திலும், கடல் மார்க்கத்திலும், தரை மார்க்கத்திலும் முப்படைகளும் தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று - சொத்துக்களைச் சூறையாடியது...

இலங்கைப் பிரச்னை குறித்து இந்திய அரசுக்கு ஒரு திட்டவட்டமான கொள்கை கிடையாது. ஏனோதானோ என்ற இந்தப் போக்கினால் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனா விரித்த வலையில் இந்தியா விழுந்ததன் விளைவு - அந்நியச் சக்திகளைப் பயன்படுத்த அவருக்கு மேலும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை ராணுவம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வர அனுப்பப்படுகிறது - பாகிஸ்தான் மட்டுமல்ல இஸ்ரேலிய மொசாத்தும், பிரிட்டனின் எஸ்.எ.எஸ். படையினரும் - தென்னாப்பிரிக்கா ஒற்றர் படையினரும் மற்றும் அதிரடி குண்டர் படையினரும் இலங்கை அரசுக்கு துணை நிற்கும் நிலை...

இலங்கை மனப்பூர்வமாகவோ, நேர்மையாகவோ பேச்சுவார்த்தையில் ஈடுபடாத வரையில் எந்த மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அதில் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. ஏமாற்றுக் கலையில் வல்லமை மிக்க ஜெயவர்த்தனா இந்தியத் தூதுக் குழுவை வரவேற்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச நிதி உதவி ஸ்தாபனம்' கூட்டம் நடைபெறும் நேரத்தில் தனக்கு நிதியுதவியைப் பெறுவதற்காக இலங்கை இனப் பிரச்னையில் அரசியல் தீர்வு காண தீவிர முயற்சி எடுப்பதாகக் காட்டிக்கொள்ள இலங்கைக்கு ஓர் "அலிபி' தேவை. இந்த ஆண்டு அந்த "அலிபி' நாடகத்தை இந்தியாவே நடத்திவிட்டது. இந்தப் பெரும் உதவி செய்த ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா நன்றியுள்ளவராக இருப்பார்... என்றும் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்களிடையே அவர் பேசுகையில், இவ்வகையான மாநாடு முதல் தடவையாக நடைபெறுகிறது. தமிழர் பிரச்னைகளை விளக்குவதற்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படும். அடுத்த மாநாடு ஆந்திரப் பிரதேசத்திலும் - புது தில்லியிலிலும் நடத்தப்படும்! என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார். மாநாட்டின்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் - டெலோவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கசியவும், ஸ்ரீசபாவுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்றும், சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து தமிழர் பிரச்னையில் செயல்பட வேண்டும் எனவும் என்.டி.ஆர்., வாஜ்பாய் போன்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டெசோவின் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் "தாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவதையொட்டி உறுதி அளிக்கவேண்டும்' என்றும் கேட்டதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அ.அமிர்தலிங்கம், எல்டிடிஈ சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக இரத்தினசபாபதி, டிஇஎல்எம் சார்பாக ஈழவேந்தன், ஈபிஆர்எல்எப் சார்பாக வரதராஜபெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவா ஆகியோர் "இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக' உறுதியளித்தார்கள்.

76. 'டெசோ' மாநாட்டில் தேசியத் தலைவர்கள்!

மதுரையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் கலந்துகொண்டு ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு:

""இந்த மக்கள் மகாசமுத்திரத்தில், ஒவ்வொருவர் முகத்திலும் கவலையைக் காண்கிறேன். இலங்கையில் நம் தமிழ்க்குடிமக்கள் படும் கஷ்டத்தை நினைக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே வன்முறையைக் கடைப்பிடிக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்குகிறது...

சிறுபான்மையினருக்கு அன்பு காட்டி, கட்டிக்காத்து, பெரும்பான்மையினரையும் வளர்ப்பது எந்த அரசிற்கும் தலையாய கடமையாகும். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகளில் அவர்களுடைய மொழி, மதம், இனம், இதர உரிமைகள் காக்கப்பட வேண்டியது போக, அவர்களிடமிருந்து சாதாரண குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடப் பறித்து ஆதரவற்றவர்களாகச் செய்யும் முறையை என்னென்பது?

சிறுபான்மை-மைனாரிட்டி வர்க்கத்தினர் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நீதி அல்லவா? இதை இலங்கை அரசாங்கம் மறந்தது ஏன்? இது நியாயமா? இது தர்மமா? இது பொறுக்குமா?

தர்மத்தின் பெயரால், சட்டத்தின் பெயரால், குடியரசு, ஜனநாயகம் என்ற உயர் அரசியல் முறையின் பெயரால், பண்பாட்டின் பெயரால், இந்த மாபெரும் அநீதிக்குத் தீர்வு காண அறைகூவல் விடுக்கிறேன். பரிகாரம் -பிராயச்சித்தம் செய்யக் கோருகிறேன்.

இங்கே நாம் விடுக்கும் அறைகூவல் அனைவரது காதுகளிலும் விழவேண்டாமா? அனைவரது இல்லங்களிலும் எதிரொலிக்க வேண்டாமா? சுதந்திரம் நமக்கு உயிர் என்று சொல்லிக்கொடுத்தது சீவகசிந்தாமணி. உயிர் கொடுக்கும் தமிழரின் சுதந்திரம் பறிபோகக்கூடாது''

என்.டி.ராமராவ் தமிழில் பேசியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஏ.பி.வாஜ்பாய் பேசியதாவது:

""இலங்கையிலே தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துயரத்தையும் -அதன் காரணமாகத் தமிழர்கள் எல்லாம் கொண்டிருக்கும் வேதனையையும் மனதில் கொண்டு அவைகளில் பங்குகொள்வதற்கு இங்கே வந்திருக்கிறேன்.

இலங்கையிலே தமிழர்கள் படுகிற அவதி உங்களை மட்டுமல்ல, இந்தியாவையே பாதிக்கக்கூடிய பிரச்னையாகும். அந்தத் தமிழர்களின் அவதி நம்முடைய அவதி. அவர்களுடைய கஷ்டம் நம்முடைய கஷ்டம். அந்நாட்டுத் தமிழர்களுடைய ரத்தம் நம்முடைய ரத்தம். அவர்களுடைய உணர்வுகளோடு நாங்களும் ஒன்றுபட்டு இருக்கின்றோம் என்பதைக் காட்டிக்கொள்ள நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயவர்த்தனாவிற்கு இந்த மாநாடு ஓர் எச்சரிக்கையாக விளங்க வேண்டும். இந்தக் கூட்டத்தைக் கண்டபிறகாவது மத்திய அரசு தனது மெத்தனப்போக்கைக் கைவிட வேண்டும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்தியா, இலங்கையிலே நடைபெறும் மனித வேட்டைகளைப் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டிருக்காது என்பதை மெய்ப்பிக்க வேண்டும்''

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (எஸ்) பிரிவுத் தலைவர் உண்ணிக்கிருஷ்ணன் கூறியதாவது:

""இலங்கைத் தமிழர்கள் அங்கே போய் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் அவர்கள் தாங்கள் மானத்தோடு வாழ ஓர் இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள்.

இலங்கையிலே, தங்களுடைய மண்ணிலே, தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாழவேண்டுமென்றுதான் கேட்கிறார்கள். அதிலே என்ன தவறு இருக்கமுடியும்?

பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் மீது ஜெயவர்த்தனா ஒரு யுத்தப் பிரகடனமே செய்திருக்கின்றார். இலங்கையிலே தமிழர்களுக்கு நடக்கின்ற கொடுமை இங்கேயிருக்கக்கூடிய நமக்கும் ஆபத்து வரவிருக்கின்றது என்பதற்கான அறிகுறி.

ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து துரதிருஷ்டவசமாக இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் நிலைமையை, பிரச்னையைப் புரிந்துகொள்ள அவர் மறுக்கிறார். இலங்கைத் தமிழர்களே, தொடர்ந்து போராடுங்கள். இறுதி வெற்றி உங்களுக்கே''

அகாலிதளப் பிரதிநிதியான பல்வந்த்சிங் ராமுவாலியா எம்.பி. பேசியதிலிருந்து:

""இலங்கையில் போராடும் தமிழர்களின் வீரத்திற்கு என்னுடைய வணக்கம். இலங்கையில் காற்று உள்ளவரையிலும், நீர் உள்ள வரையிலும், நிலம் உள்ள வரையிலும் தமிழர்களின் கலாசாரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும். ஆயிரம் ஜெயவர்த்தனாக்கள் வந்தாலும் அவர்கள் போவார்களே தவிர, அவர்களுடைய முயற்சியால் உங்களது கலாசாரத்தை, தனித்தன்மையை அழித்துவிட முடியாது. தமிழர்களே, உங்களுடைய போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றென்றும் உண்டு''

மாநாட்டில் டாக்டர் சுப்ரமணியன்சுவாமி பேசியது:

""இலங்கையில் தவித்துக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நான் கூறுகிறேன் -என் குரல் உங்களுக்குக் கேட்குமானால், நான் சொல்வதைக் கேளுங்கள் -கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதும் உங்கள் பக்கம்தான். நாங்கள் விரைவில் உங்களுக்கு உதவ வருவோம். ஜெயவர்த்தனாவே கேளும். உமது முதுமைப் பருவத்தில் உமது மூளை மழுங்காமல் இருந்தால், உமது காதுகள் செவிடாகாமல் இருந்தால் கேளும். தமிழர்கள் தனியாக இல்ல. அவர்கள் பக்கம் 80 கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு நீர் செய்யும் கொடுமைகளுக்குப் பிரதியாகத் திரும்ப அனுபவிக்கும் நேரம் வந்தே தீரும்''

கர்நாடக அரசுக் கொறடா பெருமாள் பேசுகையில், ""இந்திய ஒருமைப்பாட்டில் ராஜீவ் காந்திக்கு அக்கறை இருக்குமானால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு கண்டிட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசக்கட்சி பொதுச்செயலாளர் உபேந்திரா எம்.பி. பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை என்று ராஜீவ் காந்தி சொல்வாரானால், நடுநிலை நாடுகள் மாநாட்டில் நமீபியா பிரச்னையை, பாலஸ்தீனப் பிரச்னையை அவர் எதற்காக எழுப்பினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அத்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை.

இப்பொழுது சிதம்பரம் தலைமையில் சென்றிருக்கிற குழுவின் பேச்சுவார்த்தைகளும் எந்த முடிவுக்கும் கொண்டு வரபோவதில்லை. அப்படி முடிவிற்கு வந்தாலும் நிச்சயமாக அதனை ஜெயவர்த்தனா நிறைவேற்றப்போவதுமில்லை. கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது ஜெயவர்த்தனாவுக்கு வாடிக்கை'' என்றார்.

காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத் காபூலி எம்.பி. பேசும்போது, ""இலங்கைத் தமிழர் பிரச்னை -இங்கேயுள்ள தமிழர்கள் பிரச்னை மாத்திரமல்ல; இந்தியா பூராவும் இருக்கின்ற மக்கள் குமுறி எழவேண்டிய -கவலைக்குரிய, பிரச்னை என்பதால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் வழிகாண வேண்டும்...

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொன்று குவிக்கப்படுவதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டாக வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டில் பேசும்போது, ""எங்கள் தமிழர்கள் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இது ஏதோ தமிழ்நாட்டுப் பிரச்னை என்று பிரதமர் ராஜீவ் காந்தி இதுவரை சுட்டிக்காட்டி வந்தாலும் -தேசவிரோத சக்தி என்று சொன்னாலும் இப்போது வாஜ்பாய், பகுகுணா மற்றும் பல்வேறு தலைவர்கள் எங்களோடு குரல் கொடுக்கும்போது இனி என்ன சொல்ல முடியும்...

மத்திய அரசே இனிமேல் தயவுசெய்து செப்படி விளையாட்டுக்களையெல்லாம் விளையாட வேண்டாம். எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாங்கள் ஒருக்காலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இல்லாவிட்டால் அந்த முயற்சியில் நாங்களும் அழிந்துபோகத் தயாராகிவிட்டோம்'' என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ப.நெடுமாறன் பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஓர் அகில இந்திய வடிவம் கொடுக்கவும், இந்தியா முழுவதிலுமுள்ள அனைவரின் ஆதரவையும் இப்பிரச்னைக்குத் திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்னை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்னைகளில் ஒன்று என்பதை எடுத்துக்காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது...

இந்திய அரசின் முயற்சியால் 1985-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு ஒரு மோசடி நடவடிக்கையாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் கண்டேன். போர் நிறுத்த உடன்பாடு அமலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று மாத காலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்கள். லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாமல் இந்தியாவில் இரண்டு லட்சம் பேரும், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் அகதிகளாகச் சிதறிக் கிடக்கிறார்கள்... இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை இந்தியாவின் தேசியப் பிரச்னையாகக் கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழர் பகுதிகளில் நேரில் சென்று 23 நாள்கள் சுற்றிப்பார்த்து அறிந்து வந்து சொல்கிறேன். அழிவின் விளிம்பில் நிற்கும் அந்த மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியாதான். அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றமுடியும் -காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.கே.ஏ. அப்துல் சமது பேசும்போது, ""அந்த நாட்டில் ஒரு சமஷ்டி அரசியல் இருக்கவேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் ஆசைப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாததினாலேயே, இலங்கைத் தமிழர்கள் பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிமைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

77: சார்க் மாநாடும் விடுதலைப்புலிகளின் ஆயுதப் பறிப்பும்!

உண்மையில் "விடுதலைப் புலிகள்' என்பது பிரபாகரன் சார்ந்த இயக்கம் மட்டுமே. இலங்கையில் போராளிக்குழுக்கள் பல இருப்பினும், தமிழகப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களைப் பொறுத்து அவையனைத்துமே "போராளி' என்பதைக் குறிக்க, "விடுதலைப் புலிகள்' என்றே குறிப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிப்படையாக ஆதரித்தார். ஏனைய போராளிக்குழுக்களால் ஏற்பட்ட பிரச்னைகளும், பொதுமக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் செய்ததாகத்தான் கருதப்பட்டன. அதனால் விடுதலைப் புலிகளை ஆதரித்த முதல்வர் எம்.ஜி.ஆர். நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்க நேர்ந்தது.

1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளியன்று சென்னை சூளைமேட்டிலும், தஞ்சை ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின.

சூளைமேட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கும், ஒரு போராளிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப் போராளி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து மேலும் சிலருடன் வெளிப்பட்டார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி அதைப் பிரயோகிக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி வாலிபர் ஒருவர் இறந்தார்.

இதனால் அந்தப் போராளியைக் கைது செய்ய நேர்ந்தது. அவர் பெயர் டக்ளஸ் தேவானந்தா. அப்போது அவர் ஈபிஆர்எல்எஃப் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தார். பின்னர் ஈ.பி.டி.பி. என தனி இயக்கம் கண்டு இலங்கை அரசில் அவரும் தற்போது ஓர் அங்கமாக உள்ளார். என்றாலும் அவரைப் பற்றிய செய்தி வெளியாகையில் "விடுதலைப்புலி சுட்டதில் ஒருவர் மரணம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேநாளில் ஒரத்தநாட்டில் "பிளாட்' இயக்கத்தைச் சேர்ந்த இருவர், குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததால் அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. இந்தச் செய்தியும் விடுதலைப்புலி குடிபோதையில் கலாட்டா என்றுதான் வெளியாயிற்று.

மேற்கண்ட இரு சம்பவங்களும் தமிழின விரோதிகளின் சதியால் நடந்த சம்பவங்களே! இச்சம்பவங்களில் கைதானவர்கள் விரைவிலேயே விடுதலையானார்கள். இதற்கு மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்றும் தகவல்கள் வெளியாயின. இந்த உயர் அதிகாரி ஏன் நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது!

இந்த இரு சம்பவங்களின் காரணமாக, 3.11.1986 அன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் - இருவரும் சென்னைக் கோட்டையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, ஈழப் போராட்டத்தைக் களங்கப்படுத்தும் "போலி இயக்கங்களின்' மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

தொடர்ந்து, பெங்களூரில் நடைபெற இருந்த தெற்காசிய மாநாட்டுக்கு வரும் ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு சில குறிப்புகள் அடங்கிய மனுவினையும் அளித்தனர்.

இதேநேரத்தில், முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புது தில்லி வருமாறு மத்திய அரசு அழைத்திருந்தது. அதனையொட்டி (7.11.1986) அவர் தில்லி சென்றிருந்தபோது போராளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 15.11.1986-இல் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கலந்துகொள்ள இருப்பதால், போராளிகளால் அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் வரக்கூடாது என்றும் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் ஏர் லங்கா விமானத்துக்கு வைக்கப்பட இருந்த "பார்சல் வடிவிலான' வெடிகுண்டை, வேறு ஏதோ பொருள் என்று ஒதுக்கி வைத்திருந்தாலும், குண்டை வைத்த பானாகொடை மகேசன் குழுவைச் சேர்ந்த ஒரு போராளி தொலைபேசியில் விடுத்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் இருந்த காரணத்தாலும் குண்டு வெடித்தது. அதில் 21 பேர் இறந்தார்கள்.

இந்தச் சம்பவமும் சென்னை சூளைமேடு, தஞ்சை-ஒரத்தநாடு உள்ளிட்ட சம்பவங்களும் அண்மையில் நடைபெற்றிருந்த காரணத்தால், இவ்வியக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க, டிஜிபி மோகன்தாசுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டாரே தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை.

ஆனால், டிஜிபி மோகன்தாசோ, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார். தொடர்ந்து பிரபாகரனை வீட்டுக் காவலிலும் வைத்தார். இந்தச் சம்பவங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு, அந்தக் காட்சி இலங்கை ரூபவாகினியிலும் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்தச் செய்தி, தமிழகப் பத்திரிகைகளிலும் வெளி வந்தது. இதனைக் கண்ட எம்.ஜி.ஆருக்கு டிஜிபி மோகன்தாஸ் மீது சந்தேகம் எழுந்தது. தனக்கு நேர்ந்த உடல்நிலையைப் பயன்படுத்தி மோகன்தாஸ் "மற்றவர்களுக்கு செவி சாய்க்க' ஆரம்பித்து விட்டாரோ என்கிற ஐயப்பாடு அவருக்கு எழுந்தது.

சார்க் மாநாட்டுக்கு இடையில், ஜெயவர்த்தனாவுடன் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தபடியால் எம்.ஜி.ஆரும் பெங்களூருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பிரச்னையில் தனக்கு உதவியாகப் பிரபாகரனையும் பெங்களூர் வரவேண்டும் என்றும் அவர்களை அழைக்கும்படியும் மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.

15.11.1986 அன்று சார்க் மாநாடு தொடங்கியது. ராஜீவ் காந்தியும் - ஜெயவர்த்தனாவும் சந்தித்து இலங்கைப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள். ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆர். கருத்தையும் கேட்டார். "இலங்கையில் வலிமையான இயக்கம் விடுதலைப் புலிகள்தான். களத்தில் நின்று போராடுவது அந்த அமைப்புதான். அவர்களின் கருத்தைக் கேட்பது நல்லது' என்றார் எம்.ஜி.ஆர்.

இதன்பேரில் மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பிரபாகரன், அன்டன் பாலசிங்கம், திலகர் ஆகியோர் தனி விமானத்தில் பெங்களூர் சென்றனர். சற்றும் எதிர்பாராத இந்தத் திருப்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக, மறுநாள் பத்திரிகைகள், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ஜெயவர்த்தனாவை எம்.ஜி.ஆருடன் பிரபாகரனும் மற்ற தலைவர்களும், சந்தித்ததாகச் செய்தி வெளியிட்டன.

தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டி.ஜி.பி. மோகன்தாசுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முடிவு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

78: பிரபாகரனின் பட்டினிப் போர்!

சார்க் மாநாட்டின்போது விடுதலைப் புலிகளையும் கலந்தாலோசிக்க வைத்த எம்.ஜி.ஆரின் சமயோஜிதம், போராளிகள் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் ஆர்வம் காட்டுபவர்களின் பாராட்டைப் பெற்றது என்றாலும், ஒரு சிலரால் கடுமையாக விமர்சிக்கவும் செய்யப்பட்டது. 18.11.1986 அன்று சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வருக்காக, அன்றைய உணவு அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து விளக்குகிறார்.

"இந்தியப் பிரதமர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரதமருக்குத் தேவையான, அவர் விரும்புகிற காரியங்களில் கலந்து கொள்வதற்குத்தான் நேற்றும் அதன் முன்தினமும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார்கள். பிரதமரை இரண்டு முறை முதலமைச்சர் சந்தித்தார்கள். அப்போது போராடுகிற இலங்கைத் தமிழர்களுடைய உணர்வுகளையும், இங்கே உள்ள தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் எடுத்துச் சொல்கிற அளவுக்கு, அந்தத் தீர்வுக்கு பிரதமருக்கு உறுதுணையாக இருந்தார்கள். இந்தியப் பிரதமரோடு நாம் பேசும்போது, நமக்குத் துணையாக போராளிகள் இருந்தார்கள். நாங்கள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ மற்றும் போராளிகள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ வந்த செய்திகள் சரியானது அல்ல' என்றார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோதனைகள் சூழ்ந்த நேரத்திலும் சவால்களை எதிர்கொண்டபோதும் எம்.ஜி.ஆர். தனது கொள்கையை விட்டுக்கொடுத்து யாருக்கும் அடிபணிந்ததில்லை.

அதே நேரத்தில், "விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை வீட்டுக் காவலில் வைக்கவும், ஆயுதப் பறிப்புக்கும் மத்திய அரசு உத்தரவிடவில்லை' என்று அப்போதைய பாதுகாப்பு இணையமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்படியானால் அந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் கேள்வி எழுப்பப்பட்டது.

எம்.ஜி.ஆர். - பிரபாகரன் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியை டிஜிபி மோகன்தாஸ் மேற்கொண்டதால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு யார் மீதும் பழிபோடாமல் எவ்வளவோ சிக்கல்களுக்கும் மத்தியில் ஆயுதப் பறிப்புக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

பிரபாகரன், இதற்கிடையில் தன்னிடம் பறித்த ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்புக் கருவிகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி 22.11.1986 அன்று சாகும்வரை தண்ணீர் கூட அருந்தாத உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதன் காரணமாகத் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கூறியதாக வானொலி, தொலைக்காட்சிகளில், "விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் - தகவல் தொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்டது இந்திய அரசின் உள்துறைக்குத் தெரியாது. இது அதிர்ச்சியாக உள்ளது' என்று செய்தி வெளியானது. இதுவும் மறைமுகமாக எம்.ஜி.ஆர். மீது பழிசுமத்துவதாக ஆயிற்று.

பிரபாகரனின் பட்டினிப் போர் இரண்டாவது நாளாக தொடர, எம்.ஜி.ஆர். தனது அதிரடி நடவடிக்கையாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் பறிக்கப்பட்ட ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், தனக்குத் துரோகம் இழைத்த டிஜிபி மோகன்தாசை, காவல் துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி, காவலர் வீட்டு வசதி வாரியத்திற்கு அவரைப் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார். (ஆதாரம்: எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன்).

இதே சம்பவத்தை பழ.நெடுமாறன் தனது "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)' என்கிற நூலில் எழுதும்போது வேறொரு தகவலைத் தருகிறார். அது வருமாறு: ""பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டார். வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு சிங்கள அரசுடன் ஒரு உடன்பாட்டிற்குப் பிரபாகரன் ஒப்புக்கொண்டால் பின்னர் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக இந்திய அரசின் சார்பில் ஆசை வார்த்தை காட்டப்பட்டது. இதில் எப்படியும் பிரபாகரனை ஒப்புக்கொள்ள வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அரசு செயல்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

""தெற்காசிய மாநாடு முடிந்து தனது நாட்டிற்குப் புறப்படவிருந்த ஜெயவர்த்தனாவை 3 மணி நேரம் தாமதிக்கும்படி பிரதமர் ராஜீவ் காந்தி வேண்டிக் கொண்டார். அவரும் தனது பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கு தங்கினார். இந்த 3 மணி நேரமும் பிரபாகரனுக்குக் கடும் சோதனையாக இருந்தது. தனது லட்சியத்தை எள்ளளவும் விட்டுக் கொடுக்க பிரபாகரன் தயாராக இல்லை. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வற்புறுத்தியும் அவர் இணங்கவில்லை'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன்.

பெங்களூர் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அரசு கொடுத்த திட்டத்தையொட்டி தமிழர் விடுதலைக் கூட்டணியால் அளிக்கப்பட்டிருந்த பதில்களும் பரிசீலிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த நிலையில் இலங்கை அரசு, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோரிக்கையைக் கிடப்பில் போட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மத்தியில் திருகோணமலையை சிங்களர் மாவட்டமாக்கும் திட்டமொன்றை முன் வைத்தது. இத்திட்டத்தைத் தமிழர்கள் முற்றாக நிராகரித்தார்கள்.

இரு இந்திய அமைச்சர்கள் குழுவினரின் முன் இலங்கை அரசால் (19-12-1986) வைக்கப்பட்ட தீர்வில் (அ) அம்பாறையைத் தவிர்த்து கிழக்கு மாகாணம் அமைத்தல் (ஆ) கிழக்கு மாகாணத்துக்கு மாகாணசபை நிறுவுதல் (இ) வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் நிறுவனரீதியாலான இணைப்பு (ஈ) வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பூர்வீகமாக வாழ்கின்ற மக்களின் கருத்து அறிதல் (உ) ஜனாதிபதியால் நியமிக்கப்படும் துணை ஜனாதிபதி பதவியை உருவாக்கி, அதில் சிறுபான்மையினரை அமர்த்துதல் (ஊ) கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து முஸ்லிம் எம்.பி.க்கள், இந்தியா வந்து, இந்தியப் பிரதிநிதியின் முன்னிலையில் தமிழ்த் தலைவர்களுடன் தொடர்புள்ள விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் -ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த "ஊ' பகுதி அம்சம் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாகவே தங்களின் நிராகரிப்பை, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தெரிவித்தனர். இலங்கையும் இத் தீர்வில் இருந்து உடனடியாகப் பின்வாங்கியது. தமிழர் அமைப்புகளுக்கு இத் தீர்வு பற்றிய தகவல் எதுவும் இந்திய-இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்படவே இல்லை. (ஆதாரம்: ஐசஈஐஅ’ந நதஐகஅசஓஅ ஊஐஅநஇஞ க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓட்ஹக்ண்ஹழ்-டஹஞ்ங் 160-163).

பேச்சு வார்த்தைகளால் இனி பயனிருக்காது என்பது போராளிக் குழுக்களுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசுக்கும் தெளிவாகவே தெரிந்து விட்டது!

79: எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!

ஈழத் தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். நடத்திய பேரணி ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து ஜெயவர்த்தனா செயல்படுவதன் மூலம் இனி பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்பது உறுதியாயிற்று. இதன் காரணமாக தமிழர்கள் பகுதியில் பயம் தொற்றிக் கொண்டது.

போராளிகள் இயக்கங்களில் களத்தில் நிற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இரண்டு அமைப்புகளையும் பலப்படுத்துவது என்றும், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்துவது என்றும் எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி ரூபாயும், ஈரோஸ் அமைப்புக்கு ரூ.1 கோடி ரூபாயும் வழங்குவது என்றும் முடிவு செய்து அவ்வமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல, அந்த அமைப்பிலுள்ள பெண் வீராங்கனைகளையும் சட்டமன்றத்தில் பாராட்டியது முக்கிய வரலாற்று நிகழ்வாகும். எந்தெந்த விஷயங்களை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வரை ஆலோசித்து முடிவு செய்து, அவ் விளக்கத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சார்பில், பண்ருட்டி ராமச்சந்திரன் அளிக்க உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்றப் பேரவையில் 27.4.1987 அன்று பண்ருட்டி ராமச்சந்திரன் நிகழ்த்திய உரை வருமாறு:

""இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசும் அவர்களோடு நெருங்கிய நண்பர்களும் அதை அறிந்தோ அறியாமலோ, அதேபோல இந்திய திருநாட்டிலேயுள்ள சில பத்திரிகைகளும், சில நேரங்களில் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் கூட சில சம்பவங்களைச் சரியான முறையில் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில்லை. ஆகவே, அந்த பனிப்படலத்தை நீக்கி, உண்மை நிலையை விளக்க வேண்டுவது இந்த அரசின் தலையாய கடமையாகும்.

இலங்கை அரசை எடுத்துக்கொண்டால் கடந்த கால அனுபவம் என்னவென்றால், இன வெறியையும், மத வெறியையும், மொழி வெறியையும் மையமாக வைத்து செயல்படுகின்ற ஓர் அரசைத்தான் நாம் இலங்கையில் பார்க்கிறோம். இதற்கு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை.

சில தினங்களுக்கு முன் இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதம அமைச்சர் பிரேமதாசா, அண்மையில் திருகோணமலையிலும், கொழும்புவிலும் நடந்து விட்ட வெடிகுண்டு சம்பவங்கள் பற்றி பேசினார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் அவர் பேசியபோது இலங்கை அரசினுடைய உண்மையான சொரூபம், (ட்ரு கலர்ஸ்) என்ன என்பதை நாமெல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசியிருக்கிறார். அவர் பேசுகின்ற பொழுது சொன்னது:

‘‘ரட்ங்ய் ற்ட்ங் ப்ண்ஸ்ங்ள் ர்ச் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங் ஹழ்ங் ண்ய் க்ஹய்ஞ்ங்ழ், ஜ்ங் ஹழ்ங் ய்ர்ற் ல்ழ்ங்ல்ஹழ்ங்க் ற்ர் ஞ்ர் ண்ய் ச்ர்ழ் ஹ ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய். எமது மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை'' இந்த "எமது மக்கள்' என்றால் யார்? இதுவரையில் ராணுவத்தினாலும், காவல் துறையினராலும் வடபுலத்திலேயும், கிழக்கு மாகாணத்திலேயும் கொல்லப்பட்ட தமிழர்கள் அல்ல. திருகோணமலையிலே, கொழும்புவிலே நடந்த வெடிகுண்டு சம்பவங்களின் விளைவாக சிங்களவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றவுடன் ஒரு நாட்டின் அரசு, அந்த அரசின் சார்பிலே பேசுகின்ற பிரதமர் என்ன சொல்லுகின்றார் என்றால், "எமது மக்கள்' என்று.

"எமது மக்கள்' என்றால் யார்? எமது மக்கள் என்பது சிங்களவர்கள் என்றால் ஏனைய தமிழ் மக்கள் யார்? அவர்கள் அந்த நாட்டு மக்கள் அல்லவா? மண்ணின் மைந்தர்கள் அல்லவா?

மேலும் அவர் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்பொழுது க்ஷங்ஸ்ரீஹன்ள்ங் ஜ்ங் ஜ்ஹய்ற் ச்ழ்ண்ங்ய்க்ள்ட்ண்ல் ஜ்ண்ற்ட் ஐய்க்ண்ஹ ஜ்ங் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்ற்ழ்ஹஹ் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங்(இந்தியாவோடு நட்புறவு வேண்டுமென்பதற்காக எமது மக்களை நாங்கள் கைவிடமாட்டோம்) என்று கூறுகிறார். ஆகவே அவர் சிங்களவர்களின் பிரதமராக இருக்கிறாரே தவிர, சிங்களவர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே தவிர, இலங்கையிலே உள்ள அனைத்து மக்களினுடைய பிரதமராக இருக்கிறாரா என்பதை நாம் தயவுசெய்து எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

எப்பொழுது ஒற்றுமை வரும்? எல்லோரும் ஒன்று என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றபொழுது ஒற்றுமை வரும். அவர்களே ஒன்றாக நினைக்காமல் தமிழ் மக்களை வேறாக நினைக்கின்ற பொழுது நீங்களும் நானும் சேர்ந்தா இலங்கையில் ஒற்றுமையை உருவாக்கப் போகிறோம்? இதை இலங்கையிலே இருக்கின்ற சிங்கள மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்த மக்களின் சார்பிலே நடைபெறுகிற ஒரு அரசின் சார்பில் ஜெயவர்த்தனா இன்றைக்குப் பேசுகிறபொழுது ரங் ஹழ்ங் ச்ர்ழ் ல்ங்ஹஸ்ரீங். ரங் ஹழ்ங் ச்ர்ழ் ற்ஹப்ந்ள் (நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்குத் தயாராய் இருக்கிறோம்) என்று கூறுகிறார். ஆனால் இதே ஜெயவர்த்தனா 1983-ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்றபொழுது, மக்களுக்கு விடுத்த அறிக்கையிலே அவர் பேசுகிறபொழுது சிங்கள மக்களை எண்ணித்தான் "எமது மக்கள் ஆபத்துக்கு உள்ளானால் நான் சும்மா இருக்க முடியுமா? எமது மக்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்டார்.

இவர்கள் ‘‘ஞன்ழ் டங்ர்ல்ப்ங்’’ எமது மக்கள் என்கின்றார்களே. அப்படியானால் ஏனைய மக்கள் யார்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்லவா? (பட்ங்ய் ஜ்ட்ர் ஹழ்ங் ற்ட்ங் ர்ற்ட்ங்ழ் ல்ங்ர்ல்ப்ங்?) இந்த உள்ளுணர்வு அவர்களுக்கு இருக்கின்றவரை அவர்கள் பேச்சுவார்த்தையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்வதை எந்த அளவிற்கு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

பிரேமதாசா இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகிறபொழுது, "எங்களுடைய எதிரிகளை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களானால் நாங்கள் வேறுபுறத்திற்குத் திரும்புவோம்' என்று சொல்கிறார்.

ஆகவே, அங்குள்ள தமிழ் மக்களை அங்குள்ள குடிமக்களாக அவர்கள் கருதவில்லை. அந்த நாட்டு மக்களாக எண்ணவில்லை. அவர்கள் உள்ளக்கிடக்கையை அவர்களாகவே ஆத்திரம் வந்தவுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த உள்ளத்தில் தமிழ் மக்களை அந்நிய மக்களாகப் பகைவர்களாகக் கருதுகிறார்களே தவிர வேறு அல்ல.

அப்படிக் கருதுகின்ற வரையிலும் எப்படி அந்த நாட்டிலே ஒற்றுமை வளரும்? எப்படி இறையாண்மை இருக்கும்? அதை நாம் போய் எப்படி உருவாக்க முடியும் என்பது நிச்சயமாக இந்த அரசுக்குத் தெரியவில்லை.

அந்நாட்டுப் பிரதமர் பிரேமதாசா மேலும் கூறுகிறார். ""அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயார் இல்லை. அரசியல் தீர்வு வேண்டுமென்று எந்த நண்பராவது சொன்னால் அந்த நண்பர்தான் எங்களது மிகப் பெரிய எதிரி'' என்கிறார். அரசியல் தீர்வு என்று சொல்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரர்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; ஊண்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ங்ய்ங்ம்ஹ் என்கிற உணர்வு வருகிறது என்றால் இந்திய அரசையும், நம்மையும் பற்றி அவர்கள் எத்தகைய மனப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவேதான் அங்கே இலங்கை மக்களின் சார்பிலே நடைபெறுகின்ற அரசினுடைய இர்ய்ற்ங்ய்ற் ஹய்க் இட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்அதைப் பொறுத்துத்தான் பேச்சுவார்த்தையுடைய தன்மைகள் அமையும். பேச்சுவார்த்தையே கூடாது என்பது நமது நோக்கம் அல்ல.

ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, உண்மையிலேயே அவர்கள் ராணுவத் தீர்விலேதான் மிகுந்த நம்பிக்கை வைத்து அதற்குத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்முடைய கணிப்பு, கருத்து.

அதை முதல்வர் பாரதப் பிரதமரிடமும் இந்திய அரசிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் பாரதப் பிரதமரைச் சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்தபோதும் தெளிவாகச் சொன்னார்கள். பிரதமர் எடுத்த பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு, நமது முதல்வர் கடிதத்தில் கூறுவதாவது:

""உங்களுடைய உண்மையான முயற்சிகளுக்கு மாறாக, இலங்கை அரசு அரசியல் தீர்வை விரும்பவில்லை. அதற்கு மாறாக ராணுவத் தீர்வுக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று நாங்கள் கருதுகிறோம் ஐய் ள்ல்ண்ற்ங் ர்ச் ஹ்ர்ன்ழ் ள்ண்ய்ஸ்ரீங்ழ்ங் ங்ச்ச்ர்ழ்ற்ள், ஜ்ங் ச்ங்ங்ப் ற்ட்ஹற் ஹப்ப் ர்ச் ஹ ள்ன்க்க்ங்ய்,ற்ட்ங் நழ்ண் கஹய்ந்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் ள்ஜ்ண்ற்ஸ்ரீட்ங்க் ர்ஸ்ங்ழ் ற்ர் ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ர்ல்ற்ண்ர்ய் ண்ய்ள்ற்ங்ஹக் ர்ச் ஹழ்ழ்ண்ஸ்ண்ய்ஞ் ஹற் ஹ ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய்'' என்றார்.

அதோடு மட்டுமல்ல, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திலே இருந்தபோது நம்முடைய முதல்வர் பாரதப் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்கள். 9-3-1987 அன்று கொடுத்த அந்தத் தந்தியில் எங்களுக்கு வருகின்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை அரசானது ராணுவத் தீர்வை நடத்துவதற்கு முடிவு எடுத்து விட்டது என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

‘‘பட்ங்ள்ங் ழ்ங்ல்ர்ழ்ற்ள் ர்ய்ப்ஹ் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம் ர்ன்ழ் ச்ங்ஹழ் ற்ட்ஹற் ற்ட்ங் நழ்ண் கஹய்ந்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் க்ங்ஸ்ரீண்க்ங்க் ற்ர் ச்ண்ய்க் ஹ ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ள்ர்ப்ன்ற்ண்ர்ய் ற்ர் ற்ட்ங் ங்ற்ட்ண்ய்ண்ஸ்ரீ ல்ழ்ர்க்ஷப்ங்ம் க்ஷஹ் ஹய்ய்ண்ட்ண்ப்ண்ஹற்ண்ய்ஞ் ற்ட்ங் பஹம்ண்ப்ள்.’’

அதனைத் தொடர்ந்து முதல்வர் எழுதிய கடிதத்தில்,

யாழ்ப்பாணம் பகுதியிலே இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் மீது இலங்கை அரசு முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் மீது முப்படைகளையும் ஏவியிருக்கிறார்கள். ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள். விமானம் மூலம் குண்டு வீசுகிறார்கள். தமிழர்கள் தப்பித்து வெளியே செல்ல முடியாமல் கடல் வழியையும் தடை செய்கிறார்கள்.

""இலங்கை அரசியல் தீர்வுக்குப் போராடவில்லை. எங்கள் நாட்டின் ஒற்றுமையையும் இறையான்மையையும் பாதுகாக்கப் போராடுகிறோம். அமைதிக்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை'' என்று இலங்கைப் பிரதமர் பேசுகிறார்.

அமைதியை ஏற்படுத்தியபின்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றால் அமைதி எப்போது ஏற்படும்? நான் கேட்க விரும்புவதெல்லாம், இந்த அரசு கேட்பதெல்லாம் அமைதி என்றால் சுடுகாட்டு அமைதியா? என்பதுதான்.

80 : தமிழக அரசின் தைரியமான முடிவு!

முதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையின் தொடர்ச்சி...

""இலங்கையில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல, காட்டு தர்பார் (In Sri Lanka, there is no rule of law but only the law of jungle). ஆகவே, இலங்கை அரசினுடைய போக்கு, அது கையாளுகின்ற தன்மை, அதனுடைய பண்பு, அதனுடைய இயல்பு இவற்றை எல்லாம் பார்க்கிறபோது அவர்களுடைய பேச்சுவார்த்தையைப் பற்றியோ அல்லது அவர்கள் கையாளுகின்ற முறையைப் பற்றியோ கட்டாயம் தீர்க்கமாக சிந்தித்துத் தமிழ் மக்களுக்குச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த நாட்டின் பிரதமர் கூறுகின்றார். அவர்களுடைய நாட்டிலே உள்ள ஜனநாயகத்தை அழிப்பதற்கு முயலுகின்ற சில பிரிவினரை அழித்து, ஒழிப்பதற்கு உலகிலுள்ள அவர்களின் நண்பர் உதவி செய்ய வேண்டும் என்கிறார்.

இலங்கையில் ஜனநாயகம் என்று ஒன்று உண்டா? பாராளுமன்றத்திலே இருப்பவர்கள் மக்களைச் சந்தித்து தேர்ந்தெடுக்கப்படாமலேயே தங்களுடைய பாராளுமன்ற காலத்தை நீட்டிக் கொண்டார்களே. இதுதான் ஜனநாயகமா? அவ்வளவு சொல்வானேன்? ஜனநாயகம் என்பதே தமிழர்கள் வாழுகிற இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் எங்கே இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒன்று காவல் துறை ராஜ்யம், இல்லை என்றால் ராணுவ ராஜ்யம். அவர்கள் ராணுவத்தால் ஆட்சி செய்யப்படுகிறார்களே தவிர, எப்போதாவது சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறார்களா? சுவாசிக்க அனுமதிக்கத்தான் செய்தார்களா?

ஒருவேளை சிங்களவர்களுக்கு வேண்டுமானால் ஜனநாயகம் இருக்கலாம். தமிழர்களைக் கொல்லுகிற ஜனநாயகமாக அது இருக்கலாம்.

போராட்டத்தில் முன்னிலையில் இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை, அந்த மக்களுக்கு வேண்டிய உற்சாகத்தையும் தருவதிலேதான். அந்த மக்கள் இத்தகைய போக்கை முறியடிப்பதற்கும், இலங்கை அரசின் முகமூடிகளை கிழித்து எறிவதற்கும் வாய்ப்பு இருக்குமே தவிர, நாம் இங்கே இருந்து கொண்டு அரசியல் தீர்வா, ராணுவத் தீர்வா என்று பேசுவது பயன் தராது. அரசியல் தீர்வுதான் காணவேண்டுமே தவிர ராணுவத் தீர்வு நிரந்தரமான தீர்வு ஆகாது.

விடுதலை இயக்கங்களின் வரலாற்றை படித்தவர்களுக்குத் தெரியும். விடுதலை உணர்வு கொண்டவர்கள் சிறுபான்மை மக்களானாலும் சரி, பெரும்பான்மை மக்களானாலும் சரி, எந்த பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளானாலும் அவர்களை வீழ்த்த முடியாது என்பது உலக நாடுகளின் வரலாறு.

வேண்டுமானால் சில வெற்றிகள் அங்கும் இங்கும் கிடைக்கலாம். சில சண்டைகளில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதிப் போரில் வெற்றியடையப்போவது என்னவோ விடுதலைப் போராளிகள்தான்(ரஹழ் ஜ்ண்ப்ப் க்ஷங் ஜ்ர்ய் க்ஷஹ் ப்ண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ்ஸ்ரீங்ள்). ஆகவே ஒரு இயக்கத்தின் மீது இரண்டு மூன்று குண்டுகள் போடுவதானாலும் 100, 200 பேர்களின் மீது தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதனால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாக முடியுமே தவிர வேறு அல்ல.

ராணுவத் தீர்வை மேற்கொண்ட நாடுகள் உலகத்தில் எப்படியெல்லாம் பிரிந்தன, என்ன வகையிலே சீர்குலைந்தன என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, நிச்சயமாக அவர்களுக்கு அதனால் பலன் விளைந்ததாக வரலாறு கிடையாது.

அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை.

சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே... கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள்.

பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்தவரைக்கும் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச் சிந்துகிறார்கள். ஆண்கள் ஆனாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி அத்தனை பேரும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை, அந்த பாசிச போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜனவரி மாதத்திலிருந்து ஏற்பட்ட பொருளாதாரத் தடையின் காரணமாக நலிந்து, மெலிந்து, வாடி, வதங்கி, வாழ வழியற்று, வீட்டிலும் கூட இருக்க முடியாமல் வீதியிலே கூட நடமாட முடியாமல் காடுகளிலேயும் புதர்களிலேயும் மறைந்து வாழ்கின்ற லட்சோபலட்சம் ஏழைகளுக்கு அவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் கொடுக்கக்கூட வழி இல்லாத நிலைமை இருக்கிறது.

நம்முடைய தாய் உள்ளம்கொண்ட முதல்வர் அவர்கள், அந்த மக்களுக்கு மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு நம்மால் ஆன உதவிகளை, அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அல்லது மருந்துகள் மற்றவைகள் கொடுக்கும் வகையில் அங்கேயிருந்து ஓடி இங்கே வந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கும், அங்கேயே இருக்கிற தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தர முடியுமா என்று யோசித்துப் பார்த்தது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதிலே புரட்சித் தலைவர் அவர்கள் தனது தலையாய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும் உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே சுமார் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியாக தந்திருக்கிறார்கள். புரட்சித் தலைவர் அவர்கள் அந்த ஐந்து கோடி ரூபாயிலிருந்து உடனடியாக நான்கு கோடி ரூபாயை பாதிக்கப்படுகிற அந்த மக்களுக்கு உணவு வகையிலும், உடுக்கிற உடை வகையிலும், மருந்து வகையிலும், மற்ற மற்ற தேவைகளிலும் உதவிட அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு இன்றே உத்தரவு வழங்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசைப் பொறுத்தவரையிலும் புரட்சித் தலைவர் அவர்களைப் பொறுத்தவரையிலும் இன்றைக்கு அந்தத் தமிழ் மக்களுக்காக, இங்கே மட்டுமல்ல, அங்கேயும் போராடுகிற மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் என்னென்ன உதவிகளைச் செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்ய முன்வரும்'' (சட்டமன்றத்தில் 27-4-87).

எம்.ஜி.ஆர். சார்பில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சட்டப்பேரவை உரை இன்றளவும் ஈழத் தமிழர்தம் மனதில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு சாசனமாகத் திகழ்கிறது.

81 : விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனை

அன்றைய நிகழ்வுகளை பண்ருட்டி இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்) நினைவு கூர்கிறார்.

""எம்.ஜி.ஆர்., பிரபாகரன் நட்புத்தான் பணம் கொடுக்க வைத்தது. நான்தான் கொடுத்தேன் நாலுகோடி. மூன்று கோடி எல்.டி.டி.க்கும் ஒரு கோடி ஈரோசுக்கும்.

""இந்த பணம் ஒரு நாள் அரசு ஊழியர்களிடம் இருந்து வசூல் செய்ததை எடுத்து கொடுத்தார். அப்ப வந்து தமிழர் பகுதியில், இலங்கை அரசு குண்டுமாரி பொழிந்தது. அங்ககுள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னா ராஜீவ்காந்தி முன்வரல. நீங்க கொடுக்கலனா பரவாயில்லை நாங்க பணம் கொடுக்கிறோம் என்றார் எம்.ஜி.ஆர். அந்த மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி கொடுத்தார். உடனே ராஜீவ்காந்தி அலறியடித்துக்கிட்டு இன்னொரு நாட்டுல போர்க்களம் நடத்துறத்துக்கு நம்ம நாட்டுல இருந்து பணம் கொடுத்தா என்ன ஆகிறது அந்த மாதிரி கொடுக்க கூடாது அப்படினு சொல்லி அலறியடிச்சுகிட்டு ஆளை அனுப்பிச்சாரு. அப்ப நாங்க சொன்னோம் மனிதாபிமான பணிகளுக்காக எல்.டி.டி.யியும் ஈரோசும் ஒரு அமைப்பு வைச்சிருக்காங்க அதுக்கு பணம் கொடுத்தோம்னு.

""அதாவது அன்று காலை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கிறேன். "என்ன எல்லோரும் நம்மள கைவிட்டுடாங்க நாம ஏதாவது பண்ணணும்னாரு. அதோடு நம் ஆட்கள் சண்டை போடுவதற்கு ரெடியா இருக்காங்க, பணம் இல்ல ஆயுதம் வாங்குவதற்கு, பணம் கொடுத்திடுவோம் பாதுகாத்துக் கொள்ளட்டும்' என்றார். சரின்னு ஒத்துக்கிட்டு வீட்டில் இருந்து நேரேபோய் நாலுகோடி அறிவிச்சு பேசுகிறோம்.

""அப்ப என்ன முதலமைச்சர் சொல்கிறாருன்னா, இதனால ஆட்சி போனாலும் பரவாயில்லை. பணம் கொடுத்திடுவோம். அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி, அரசியல் சட்டத்தை மீறி, அந்நிய நாட்டு உறவுகளுக்கு பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா, அது சட்டவிரோத நடவடிக்கை நம்ம ஆட்சியை கலைப்பாங்க. கலைச்சாக்கூட பரவாயில்லை. நம்ம வெளிய போயிரலாம்னு உறுதியாக இருந்தாங்க.''

எம்.ஜி.ஆர். அரசின் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்றதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இது ஒரு "திருப்பு முனை' என்று கூறியது. "ஈரோஸ்' இயக்கமும் தனது வரவேற்பை தெரிவித்துக் கொண்டது.

நிதியுதவி வழங்கியதைக் கேட்ட ஜெயவர்த்தனா கொதித்து எழுந்து ""இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருள்களை வழங்கப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார். நாங்களே உணவு அளிக்க முடியும். அதற்கு இந்திய பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால் எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள் இருக்கலாம். விடுதலை புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்படை'' - (தினமணி 30-4-87) என்றார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரத்தில் புத்த கோவிலுக்கு எதிரே 10,000 சிங்கள மாணவர்களை எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயவர்த்தன உசுப்பிவிட்டார்.

நிதியளிப்பு குறித்து அப்போதைய அரசவைக் கவிஞர் - புலவர் புலமைப்பித்தன் கூறுவதாவது:

""தனிப்பட்ட இன உணர்வு காரணத்தினால்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்க முன்வந்தார். முதலிலே உமாவுக்கு (உமாமகேஸ்வரன் என்ற முகுந்தன்) பணம் கொடுத்திருக்கிறார். தம்பிக்கு (பிரபாகரன்) பணம் கொடுத்திருக்கிறார்.

""ஆனால் அதற்கு பின்னாலே உமாவின் மீது துளிக் கூட நம்பிக்கை ஏற்படவில்லை. தம்பியின் மீது இருந்த முழுமையான நம்பிக்கை காரணமாக அவர் ஒருவர் மட்டும்தான் களத்தில் இருப்பார் என்று முடிவு செய்த காரணத்தினால் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு உதவி செய்தார்.

""ரிசர்வ் பேங்கில் இருந்து தமிழ்நாட்டு அரசின் சார்பாக 4 கோடி ரூபாய் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் இயக்கங்களுக்கு கொடுத்தார் என்றால், அவர் எந்த அளவுக்கு மிகத் துணிச்சலோடு இருந்தார் என்பதை அறியலாம்.

""தமிழீழம் விடுதலை பெற்றுவிடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற சூழ்நிலையில் - தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள் இந்தியத் தரப்பினர்.

நாளை:

82 missing தப்பினார் பிரபாகரன்!

83: ராஜீவுக்கு நேர்ந்த நெருக்கடி!

உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகள் ராணுவமயமானது. "48 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் ராணுவம் வசமாகும்' என்று பிபிசி வானொலியின் செய்தியில் நிருபர் மார்க்துலி தெரிவித்தார்.

இச்சூழல் குறித்து விடுதலைப் புலிகள் 1987-இல் வெளியிட்ட "இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்னையும்' என்ற வெளியீட்டில் கூறியிருப்பதாவது:

"ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ்குடா நாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியதுடன் வடக்கிலும் கிழக்கிலும் பெரிய அளவிலான ராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டது. வடக்கில் மட்டும் இருபதினாயிரம் துருப்புகள் வரை யுத்தத்தில் குதித்தன. எமது கொரில்லா அணிகள் பல்வேறு அரங்குகளில் சிங்கள ஆயுதப்படையினரை எதிர்கொண்டு வீராவேசத்துடன் போர்புரிந்து வந்தன.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் நாம் எதிரியைச் சமாளித்துக் கொண்டிருந்தோம். எதிரியின் ஆகாயக் குண்டு வீச்சுகள், பீரங்கி மோட்டார் செல் தாக்குதல்களிலும் ராணுவ வெறியாட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மடிந்தவண்ணம் இருந்தனர். இந்த இக்கட்டான யுத்தச் சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவியை நாடினோம்.

எமது மக்கள் இனப்படுகொலைக்கு இலக்காகி வருகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, எமது மக்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யுமாறு நாம் பாரதத்திடம் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்தோம். எமது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாகக் கூறிக்கொண்ட பாரதம் மெüனமாக இருந்தது.

நாம் கோரிய ஆயுதப்படையின் விவரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்ற முக்கிய ராணுவத் தகவல்களைச் சேகரித்து "ரா' அதிகாரி உண்ணிக்கிருஷ்ணன் இலங்கை அரசிற்குச் சமர்ப்பித்தார். பின்னர் உண்ணிக்கிருஷ்ணன் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் சிங்கள ராணுவம் தனது போர் உபாயங்களை வகுத்து, ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியா எந்த வகையிலும் இனி போராளிகளுக்கு உதவாது என்ற நம்பிக்கையில் இருந்த சிங்கள அரசு, மக்கள்மீது கணக்கில்லாக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் மக்கள் உண்ண உணவும், உயிருக்குப் பாதுகாப்புமின்றி துன்பத்துக்கு ஆளாகி மேலும் அகதிகளானார்கள்.

தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து, இலங்கையின் தற்போதைய கொடுமைகளைக் கண்டித்தும், யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்குமாறும், மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளவாறு பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை "ஒரு தடை ஆயுதமாகப்' பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்திக் கூறியும் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் இலங்கைத் தமிழர் கட்சிகளும், போராளி இயக்கங்களும் கலந்துகொண்டன.

ஐ.நா. மன்றத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டபோது, இது ஒரு பிரச்னை என்று பேசப்பட்டதேயொழிய, பொருளாதாரத் தடையை நீக்குவதற்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைப் பலரும் கண்டித்தனர்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பை உடனே வழங்க வேண்டும் என்றும், "டிசம்பர் 19-ஆம் தேதிய முன்மொழிவுப்படி' உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்க வகைசெய்ய வேண்டும் என்றும் செய்தி அனுப்பினார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில் "எரிபொருள் தடையை நீக்கும்படி' வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வளவு கோரிக்கைகளுக்கும் எந்தப் பலனும் இல்லை; ஜெயவர்த்தனா கேளாக்காதினராக, தான் விரும்பியதை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் வெடித்த குண்டு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அப்போது ஜெயவர்த்தனா, "அரசோ, போராளிகளோ யாரோ ஒருவர் வெற்றி பெறும்வரை யுத்தம் தொடரும்' என்று பிரகடனம் செய்தார்.

அவரின் அறிவிப்பை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. தனது சொந்த நாட்டில் தனது சொந்தப் பிரஜைகளின் மீதே தொடுக்கின்ற யுத்தம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமரிசிக்கப்பட்டது.

ஐந்து மாதத் தடை காரணமாக யாழ் பகுதிக்கு எந்த மருத்துவப் பொருள்களும் செல்லவில்லை. உயிர்காக்கும் ஆக்ஸிஜன்கூடக் கிடைக்கவில்லை. இதனாலும் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் குண்டுகளுக்கு அஞ்சி கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலைக்கும் சிலர் கொழும்புக்கும் சென்றனர்.

இதில் கொழும்பு தவிர மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற இத்தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள்கூடத் தப்பவில்லை. எங்கு சென்றால் குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்று நம்பி மக்கள் கூட்டம் சென்றதோ அங்கே எல்லாம் குண்டுவீச்சு நடைபெற்றது.

சிங்களக் கட்சிகள் பலவும் மெüனமாக இருக்க, ஸ்ரீலங்கா மகாஜனக்கட்சி முதன் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தது. இதன் தலைவர் விஜய குமாரணதுங்கா இந்தியா சென்று தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். தொண்டமான் "நடுவர் பாத்திரம் என்ற நிலையிலிருந்து இந்தியா விடுபட்டு, நீதி வழங்கும் தீர்வொன்றை உடனே அளித்து, தமிழ்மக்களைக் காக்கவேண்டும்' என்று அறிக்கை விட்டார்.

ஈழமே தீர்வென்று கூறிவந்த உலகத் தமிழ் இளைஞர் மன்றத் தலைவர் இரா. ஜனார்த்தனம், இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், லோக்தள் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுத் தலைவர், இலங்கையின் மீது ராணுவ வளையம் அமைக்கவேண்டும் என்றும் திராவிடக் கழகச் செயலாளர் கி.வீரமணியும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறனும் இந்திய அரசாங்கம் தேவையான, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இலங்கைப் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்,"தனது பிரஜைகளைக் கொன்றுகுவிக்கும் நாட்டுக்கு உதவிசெய்வது ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். இலங்கைக்கு உதவி புரியும் நாடுகள் தங்களது உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்!' என்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் பெரும் தவறுகள் நேர்ந்துள்ளதாக தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பெரும் யுத்தம் ஒன்றை ராஜீவ் காந்தியின் பேரில் நடத்தி வந்தன. இதன் பாதிப்பில் ராஜீவ் காந்தி உழன்று கொண்டிருக்கையில் இலங்கை அரசின் "ஆபரேஷன் லிபரேஷன்' என்கிற யாழ்ப்பாணம் மீட்பு நடவடிக்கை ஏற்படுத்திய விளைவுகளும் சேர்ந்து, அவருக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

84 : ஆபரேஷன் பூமாலை!

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், அரசியல் கட்சித் தலைவரின் நடவடிக்கைகள், தமிழக அரசின் நெருக்குதல் ஆகிய எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை ராஜீவ் காந்தி அரசு மேற்கொண்டது.

ஏக காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையொட்டி, அந்தப் பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்துப் படகுகள் சுற்றிவர ஆரம்பித்தன.

அதுமட்டுமின்றி, ராமேஸ்வரத்தின் பயன்பாடற்ற விமானதளம் மீண்டும் செப்பனிடப்பட்டு, அங்கு ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஆரம்பித்தன. இது குறித்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கூறுகையில், ""அண்டை நாடுகள் பிறநாடுகளில் பெற்றுள்ள அதிநவீன உளவுத் தகவல்கள், அந்நாடுகள் பெற்றுள்ள நவீன ஆயுதங்கள் -தளவாடங்களுக்கேற்ப இந்தியாவும் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.

உடனே ஜெயவர்த்தனா, யாழ்ப்பாண "ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையினால் பெருமளவில் குண்டுகள் வீசப்படவில்லை என்றும், அங்கு மக்கள் அதிகம் பாதிக்கவில்லை என்றும், இது உண்மை என்பதை நிரூபிக்க வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தூதர்களை விமானத்தில் ஏற்றி, அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு உடன்பட்ட பத்திரிகையாளர்கள் விமானத்தில் ஏறி யாழ்ப்பாணப் பகுதியைப் பார்வையிடச் சென்றார்கள். அவர்கள் பார்வைக்கு படும்படியான தூரத்தில் விமானம் பறக்கவில்லை. விமானிகளுக்கு மூவாயிரம் அடிக்கு மேலாக பறக்க வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு இலவச விமானப் பயணம் பொழுதுபோக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி அமைந்தது.

இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுத் தூதரும் இந்தப் பயண ஏற்பாட்டில் பங்குபெற விரும்பவில்லை.

இந்தச் சமயத்தில் அமைதியை விரும்பும் சிங்களக்குழு ஒன்றின் தமிழ்நாட்டு வருகையையொட்டி, கூட்டம் ஒன்றுக்கு, சென்னை கிறிஸ்தவ மகளிர் அணியின் சென்னை அலுவலகத்தில் அதன் செயலாளர் சாரா சந்தா எற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சந்திரஹாசன், ஈழவேந்தன், மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆகிய மூவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாரா சந்தாவும் மறவன்புலவு க.சச்சிதானந்தமும் பழம்பெரும் அரசியல்வாதியும் மாநில-மத்திய அமைச்சரவையில் பல்வேறு இலாகாக்களின் அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சி.சுப்ரமணியத்தைச் சந்தித்தனர். அப்போது, அவருடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ரெசிடண்ட் எடிட்டராக பொறுப்பிலிருந்த ராஜ்மோகன் காந்தியும் உடனிருந்தார். இலங்கையின் பொருளாதாரத் தடையை நீக்க வகை செய்ய சாராவும் சச்சிதானந்தமும் வலியுறுத்தினர்.

அப்போது சி.சுப்பிரமணியம், ""நானும் ராஜ்மோகன் காந்தியும் இதுபற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என்றார். அப்போது சச்சிதானந்தன், ""நாங்கள் உணவு-மருந்து பொருள்களைத் திரட்டித் தருகிறோம். நீங்கள் இந்திய கப்பற்படைப் பாதுகாப்புடன், காங்கேசன்துறை துறைமுகம் வரை கொண்டுசெல்ல கப்பல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால், அது பல பிரச்னையைத் தீர்க்கும்'' என்றார்.

உடனே, சி.சுப்பிரமணியம், ராஜீவ் காந்தியைப் போனில் தொடர்புகொண்டு, ""யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை நீக்க வழிகாண வேண்டும். பல வழிகள் அதற்கு இருக்கின்றன. என்னைப் பார்க்க வந்துள்ளவர்கள், உணவுப்பொருள்களை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை செல்ல ஒரு கப்பலும் அதற்குப் பாதுகாப்பும் கேட்கிறார்கள்'' என்றார்.

தொடர்ந்து இருநாள்கள் கழித்து சாரா சந்தாவுக்கு ஏதேனும் நல்லது நடக்க, வாய்ப்பிருக்கிறதா பார்ப்போம் என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

எனவே, இந்திய அரசின் அனுசரணையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கை என்ற பெயரில் 38 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களுடன் 19 மீன்பிடிப் படகுகள் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டனர். இந்த மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையின் வட எல்லை கடற்பிராந்தியத்திலேயே, கடற்படையால் மடக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த நடவடிக்கையால் கோபமடைந்த இந்திய அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையாக பெங்களூர் விமான தளத்திலிருந்து ஐந்து விமானங்களில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு மிராஜ் -2000 என்ற நான்கு போர் விமானங்களில் பாதுகாப்புடன் இலங்கையின் வான்வெளியில் நுழைந்து, உணவுப் பொட்டலங்கள் பாராசூட் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கியது. கூடவே இந்திய மற்றும் வெளிநாட்டு நிருபர்கள் 35 பேரும் இவ்விமானத்தில் பயணம் செய்தனர். 1987 ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த நடவடிக்கை "ஆபரேஷன் பூமாலை' என்று பெயரிடப்பட்டிருந்தது.

"ஆபரேஷன் லிபரேஷன்' செய்கையால் உரம் பெற்றிருந்த ஜெயவர்த்தனா, "ஆபரேஷன் பூமாலை' நடவடிக்கையால் கலங்கிப் போனார். இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையைப் பாராட்டி விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.

இதன்மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் மேலாட்சியையும் தான் ஒரு வல்லரசு என்பதையும் இந்தியா நிரூபித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன.

""இலங்கை வான் எல்லையில் இந்தியா அத்துமீறி நுழைந்தது. முற்று முழுதாக இது அத்துமீறல் என்றும், இன்று உணவுப் பொட்டலம், நாளை குண்டு வீச்சா'' என்று கூக்குரலிட்டன.

ஜெயவர்த்தனாவும் தான் கருத்து சொல்ல விரும்பாமல், தனக்கு ஆதரவுப் பத்திரிகைகள், புத்தபிக்குகளை விட்டு பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் முடுக்கிவிட்டார்.

அடுத்த நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் (இந்தியா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்), "இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பக்கமே இந்தியா இருக்கிறது' என்றும் "அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடும் இந்தியாவுக்கு இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து உறுப்பினர் நாடுகளின் ஒன்றைக்கூட தனக்குச் சாதகமாக்கி, இப்பிரச்னையை உலக அளவில் எழுப்ப முடியவில்லை.

ஐரோப்பிய நாடுகளை இலங்கை அணுகியபோது, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் குழுமம் (உன்ழ்ர்ல்ங்ஹய் உஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் உஉஇ) இனப் பிரச்சினையை சுமுகமான முறையில் பேசித் தீர்க்க வழிகாணுமாறு அறிவுறுத்தியது. ஜெயவர்த்தனா இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.

85: நெல்லியடித் தாக்குதல்!

காரணம், இந்தியா எந்த நிலையிலாவது இலங்கை மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்ற தனது ஐயப்பாட்டை போக்கிக் கொள்வதற்கு பிப்ரவரியில் கொழும்பு தொழிலதிபர் சி.டி.ஏ. ஷாப்டர், பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் என்.கே.பி. சால்வே ஆகியோருடன் அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா ஆலோசனை நடத்தியிருந்தார்.

என்.கே.பி. சால்வே அப்போது இந்திய கிரிக்கெட்டில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதுபோலவே இலங்கை அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்ததால் சால்வேயை அணுகுவது சுலபமாக இருந்தது. ஒரு பயம் காரணமாக இந்த ஆலோசனை நடைபெற்றிருக்கையில் இந்தியாவின் மனிதாபிமான உதவியை ஏற்பது ராஜதந்திரமானது என்ற முடிவுக்கு வந்தார் ஜெயவர்த்தனா. (ஐய்க்ண்ஹ’ள் நழ்ண் கஹய்ந்ஹ ஊண்ஹள்ஸ்ரீர் க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓஹக்ண்ஹய் -ல்ஹஞ்ங் 10-11)

உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க, போர் நிறுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்த உணவுப் பொருட்களை வழங்குவதில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஜெயவர்த்தனா வேறு வழியின்றி அவர்களுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் இணைந்து செயல்படுவார்கள் என்றார்.

"ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் முதலியவற்றை விடுதலைப்புலிகள் விவரித்தவாறு அகில இந்திய வானொலி அப்படியே ஒலிபரப்பியது. இதன்படி இந்தப் போர் நடவடிக்கையால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 2000 பேர் என்று அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, "ஸ்ரீவத்ஸவா' என்கிற இந்தியக் கப்பல் ஜூன் 25-ஆம் தேதி காங்கேசன் துறைமுகத்தில் வந்து நின்றது. அந்தப் பொருள்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லுகையில், வாகன அணிவகுப்பின் முன்னதாக இந்தியத் தூதரக அதிகாரி ஹர்தீப் பூரியும், காப்டன் குப்தாவும், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வந்தனர். அப்போது சாலையின் இருபுறமும் இலங்கைத் தமிழர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர். அதேநேரம் அவர்கள் கையில், "எங்களுக்கு ஆயுதம் வேண்டும்' என்றும், "இந்தியா எங்களைப் பாதுகாக்க வேண்டும்' என்றும் இருவகையானப் பதாகைகள் இருந்தன.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கம் நெல்லியடி மத்திய கல்லூரியில் முகாமிட்டிருந்த ராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகள் இயக்கத்தின், புதிய தற்கொலைப் படையான கரும்புலிகள் உறுப்பினர் மில்லர் நடத்தினார். அவர் வெடிகுண்டுகள் நிரம்பிய வேனை, அப்பாடசாலையின் நுழைவு வாயில் வழியாக ஓட்டிக்கொண்டு முகப்புக் கட்டடத்துக்குள் புகுந்தார்.

இந்தத் தாக்குதலை அடுத்து ராணுவம் குண்டுகளை வீசியது. மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். பலர் கொல்லப்பட்டனர். இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. நிவாரணப் பொருள்களை விநியோகித்த இந்திய அதிகாரிகளும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வடமராச்சியில் அகப்பட்டுக் கொண்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நெல்லியடித் தாக்குதல்தான். இதில் பலியான முதல் போராளி மில்லர். பின்னாளில் இந்தப் பிரிவு மில்லர் பிரிவு என்றே அழைக்கப்பட்டது.

86: பிரபாகரன் போராளியானது ஏன்?

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.

86: முதலாவது கொரில்லாத் தாக்குதல்!

தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.

இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').

அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.

தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.

இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.

88: விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!

தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் "பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.

"புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், "விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.

தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்' வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.

89: கரும்புலிகளும், கடற்புலிகளும்!

1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.

தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.

கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.

புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.

1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.

"தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்' என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.

இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.

இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.

"தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை' என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.

அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

"பயங்கரவாதத்தை ஒழிப்போம்' என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.

ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.

90: விடுதலைப் புலிகளின் பதிலடி!

யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட "கஜவாகு ரெஜிமெண்ட்' பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.

"மக்களே மகத்தானவர்கள் - அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்' என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.

யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.

ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.

புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.

புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.

1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் - வே.தங்கநேயன்).

பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.

அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் எழுதி இருப்பதாவது:

""ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு - இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?'' என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து, ""அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே'' என்றார்.

""அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது'' என்றேன்.

""அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்'' என்றார்.

""எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.

""விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது'' என்று குறிப்பிட்டுள்ளார் (தகவல்: விடுதலை நூல்).

Please Click here to login / register to post your comments.