வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்!

ஆக்கம்: நக்கீரன்

உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பறையறைவுகள் (pசழஉடயஅயவழைn) காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன. அந்த முரசறைவுகள் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன.

1847 இல் யூலை மாதத்தில் இலண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர” (றுழசமநசள ழக வாந றழசடன ரnவைந் லழர hயஎந ழெவாiபெ வழ டழளந டிரவ லழரச உhயiளெ) என்ற முழக்கத்தை கார்ல் மார்க்சும் பிடரிக் ஏஞ்ஜெல்சும் (முயசட ஆயசஒ யனெ குசநனநசiஉம நுபெநடள ) முன்வைத்தனர். 1848 இல் மார்க்ஸ், ஏஞ்ஜெல்ஸ் இருவரும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (ஊழஅஅரnளைவ Pயசவல ஆயnகைநளவழ) என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் மக்களின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது. அமெரிக்காவுக்கும் அய்க்கிய இராச்சியத்துக்கும் எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளைக் கையாண்ட புநழசபந றுயளாiபெவழn அவர்களின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும் இவர்களது விடுதலை வேட்கையும் வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான, இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திரப் பறையறை துரடல 4, 1776 இல் இடம்பெற்றது.

1776 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பறையறை வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பறையறைக்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பறையறை" என்பதாகும். இன்றளவும் அந்த யூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

யூலை 10, 1776 இல் அய்வரைக் கொண்ட குழு சுதந்திர பறையறைவு தயாரிப்பில் ஈடுபட்டது. யோன் அடம்ஸ் (துழாn யுனயஅள) பென்ஜமின் பிராங்ளின் (டீநதெயஅin குசயமெடin) றொஜர் ஷெர்மன் (சுழபநச ளூநசஅயn) ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் (சு.சு.டுiஎiபௌவழநெ) தொமஸ் ஜெஃபர்சன் (வுhழஅயள துநககநசளழn) ஆகியோரே இந்த அய்வர் ஆவர். இந்தப் பஞ்ச பாண்டவருள் வுhழஅயள துநககநசளழn என்பாரே இந்த பறையறைவை எழுதினார். இந்த பறையறைவில் காணப்பட்ட சாகா வரம் கொண்ட வைர வரிகள்....

"றுந hழடன வாநளந வசரவாள வழ டிந ளநடக நஎனைநவெ: வாயவ யடட அநn யசந உசநயவநன நஙரயட் வாயவ வாநல யசந நனெழறநன டில வாநசை உசநயவழச றiவா உநசவயin iயெடநையெடிடந சiபாவள் வாயவ யஅழபெ வாநளந யசந டகைந, டiடிநசவல, யனெ வாந pரசளரவை ழக hயிpiநௌள."

"இந்த உண்மைகள் வெளிப்படையானவை எனக் கருதுகிறோம்: எல்லா மனிதர்களையும் கடவுள் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் மறுக்க முடியாத சில உரிமைகளையும் கடவுள் அவர்களுக்கு அளித்துள்ளான். அவற்றுள், வாழ்வுரிமை (டகைந) சுதந்திரம் (டiடிநசவல) இன்பத்திற்கான தேடல் உரிமை (pரசளரவை ழக hயிpiநௌள) என்பன வெளிப்படையான உண்மைகள் எனக் கருதுகிறோம்.”

அமெரிக்க சதந்திரப் பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த அறமே காரணம் எனலாம். ஈழத் தமிழ் மக்களும் இன்று அல்லது நாளை தங்கள் விடுதலையை வென்றெடுப்பர். ஏனெனில்... "தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட வேட்கை நியாயமானது. பன்னாட்டு மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். பன்னாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.” (தமிழ் ஈழ தேசியத்தலைவர் மேதகு திரு வே. பிரபாகரன்) பாகிஸ்தான் 1947 இல் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் நாடு. அதன் முன்னோடி மார்ச்சு 22 - 24, 1940 இல் லாகூரில் கூடிய முஸ்லிம் லீக் மாநாடு பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அதிகளவு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் என எல்லோராலும் கருதப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை 1930 இல் அல்லமா இக்பால் (யுடடயஅய ஐஙடியட) அவர்களால் முன்மொழியப்பட்டது. அதன் பின் பாகிஸ்தான் என்ற பெயர் 1933 இல் சவுத்திரி இராமத் அலி (ஊhழரனாயசல சுயாஅயவ யுடi) என்பவரால் முன்மொழியப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் மொகமட் அலி ஜின்னாவும் மற்றும் தலைவர்களும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள். 1941 இல் லாகூர் தீர்மானம் முஸ்லிம் லீக்கின் யாப்பில் சேர்க்கப்பட்டது. இதுவே 1946 இல் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையாக வடிவெடுத்தது. “முஸ்லிம்கள் தொடர்ச்சியாகவும் வாழும் புவியியல் நிலப்பரப்பு தனிப் பகுதிகளாக எல்லை வகுக்கப்பட்டால் அல்லாது எந்த அரசியல் யாப்புத் திட்டமும் முஸ்லிம்களால் ஏற்கவோ நடைமுறைப் படுத்தவோ முடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஆன வட - மேற்கு மற்றும் கிழக்கு வலையங்கள் சுதந்திர அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவை தன்னாட்சி உரிமை மற்றும் இறைமை படைத்த மாநிலங்களாக விளங்கும்.” பாகிஸ்தான் உருவாகுவதற்கு பிரித்தானிய இந்திய சட்டசபைகளில் சிந்து மாகாணமே முதலாவதாக ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் ஒரு தலைபட்ச பறையறவை அறிவித்தது. இந்தப் பறையறை வெளியிடப்பட்ட 11 ஆவது மணித்துளியில் அமெரிக்கா இஸ்ரேலை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கவுத்தமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்;தது. மே 17 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் பல நாடுகள் ஒப்புதல் அளித்தன.

1945 இல் அய்யன்னா அவை உருவாக்கப்பட்டது. அப்போது அதில் 51 நாடுகள் உறுப்புரிமை வகித்தன. இன்று அதன் உறுப்பினர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மை தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த நாடுகள் ஆகும்.

1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக்குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியம் 15 இணைப்பாட்சி நாடுகளைக் (1. யுசஅநnயைஇ 2. யுணநசடியதையnஇ 3. டீநடயசரளஇ 4. நுளவழnயைஇ 5. புநழசபயைஇ 6. முயணயமாளவயnஇ 7. முலசபலணளவயnஇ 8. டுயவஎயைஇ 9. டுiவாரயnயைஇ 10. ஆழடனழஎயஇ 11. சுரளளயைஇ 12. வுயதமைளைவயnஇ 13. வுரசமஅநnளைவயnஇ 14. ருமசயiநெஇ 15. ருணடிநமளைவயn) கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து பொரிஸ் யெல்ச்சின் (டீழசளை லுநடவளin) ஆட்சியைக் கைப்பற்றினார். செப்தெம்பர், 1991 இல் போல்ரிக் நாடுகளது (டுயவஎயைஇ டுiவாரnயைஇ நுளவழnயை) சுதந்திரத்தை உருசியா ஏற்றுக்கொண்டது. நொவெம்பர், 1991 இல் பொரிஸ் யெல்ச்சின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து எஞ்சிய 12 நாடுகள் தனிநாடாகத் தம்மைப் பிரகடனம் செய்தன.

இதே போல் யூகோசிலோவாக்கியா குடியரசில் 6 நாடுகளும் (ளுடழஎநnயைஇ ஊசழயவயைஇ டீழளnயை யனெ ர்நசணநபழஎiயெஇ ஆயஉநனழnயைஇ ஆழவெநநெபசழஇ ளுநசடியை) இரண்டு மாகாண அரசுகளும் (முழளழஎழ யனெ ஏழதஎழனiயெ) உறுப்பிரிமை வகித்தன. யூகோசிலோவாக்கியாவின் தலைவர் டிட்ரோ மறைந்த பின்னர் அது உடைந்து தனித்தனி நாடுகள் ஆகின.

யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் யூன் 25, 1991 இல் சுதந்திரப் பறையறை செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக ஒப்புதல் அளித்தது.

1991ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பறையறை செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழியில் யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.

இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னை சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்யன்னா அவையின் ஒப்புதல் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்யன்னா அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (ர்யளாiஅ வுhயஉi) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

“கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்.........”

எனவே புவிவரை படத்தில் இருக்கும் நாடுகள் மனிதர்கள் புவியைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட வரலாறுதான். நாடுகளின் எல்லைக் கோடுகள் கல்லில் எழுதியவை அல்ல. கடவுளால் எழுதப்பட்டவையும் அல்ல.

இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே 1976 ஆண்டு மே 14 இல் வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாம் நோக்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் நான் மேலே குறிப்பிட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்துக்கும் அல்லது லாகூர் தீர்மானத்துக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

இலங்கையின் வட – கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களது ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருண்மிய வேட்கைகள் அனைத்தையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் துல்லியமாகவும் அச்சொட்டாகவும் எடுத்துக் காட்டுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்வியல் அவலங்களில் உள்ள பல்வேறு இடர்களைத் தீர்ப்பதற்கும் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மானத்தோடும் வாழ்வதற்கும் தங்களது மொழி, கலை, பண்பாடு இன அடையாளங்களைப் பேணித் தனித்துவமான இனமாக வாழ்வதை வற்புறுத்துகிறது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுடைய சமயசார்பற்ற சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டெடுத்து மீள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசியல் இலக்கை எட்டும் வரை நாம் ஓயாது போராடவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. வடக்கில் 69 விழுக்காடு வாக்குகளையும் கிழக்கில் 32.9 விழுக்காடு வாக்குகளையும் அது பெற்றது.

33 ஆண்டுகளுக்குப் 1976 இல் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட் வட்டுக்கோட்டைத் தீர்மானமே திம்பு பேச்சுவார்த்தைக்கும் ஒஸ்லோ அறிவித்தலுக்கும் அடிக்கல்லாக இருந்தது. திம்புவில் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக்காக முன்வைத்த தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கோட்பாடுகளே.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் உறுதிசெய்வது நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்துக்கு வலு சேர்க்கும். இதனை நாடுகடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் உறுதி செய்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவையில் காணப்படும் “நாடுகடந்த தமிழீழ அரசின் நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?” என்ற கேள்விக்கு பின்வருமாறு விடை இறுக்கப்பட்டுள்ளது.

“ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு;, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப் படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.”

காலத்தின் தேவையை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழீழ விடுதலைக்குப் தொடர்ந்து ஓயாது ஒழியாது போராடுவோம்.

யாழ்ப்பாண அரசு

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய கருத்தரங்குகள் ரொறன்ரோவில் நடத்தப்பட்டன.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், சுதந்திரமா? அடிமை வாழ்வா? என்ற கேள்விக்கு 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த ஆணை, 1985 இல் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அனைத்துத் தமிழ் அமைப்புகளும் முன்வைத்த தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுகள், 2004 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் வி.புலிகளே தமிழமக்களின் ஏகப் பிரதிநிதிகள!

ஆகிய வரலாற்றுப் பதிவுகளை மீள் வாசிப்புச் செய்து “தமிழீழமே தமிழர்களது முடிந்த முடிவு” என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலுசேர்க்க ஒரு நேரடிவாக்கெடுப்பை (சுநகநசநனெரஅ) நடத்துவதன் தேவை பற்றியும் நாடு கடந்த அரசை மக்களாட்சி முறைமைக்கு ஏற்ப வலுப்படுத்தவும் இந்தக் கருத்தரங்குகளில் விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல் இடம்பெற்றது. செப்தெம்பர் 20 இல் ஸ்கபரோ முருகன் கோயில் அரங்லும் ஒக்தோபர் 04 இல் மிசிசக்கா ஜெதுர்க்கா கோயில் மண்டபத்திலும் இக் கருத்தரங்கம் நடந்தேறின. கனடியத் தமிழ் மாணவர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் சமூகம் ஒழுங்கு செய்த இந்தக் கருத்தரங்கில் நானும் கலந்த கொண்டு பேசினேன்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் - நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் இடையிலான வேற்றுமை ஒற்றுமை பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்.

தமிழில் பல இலக்கண நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் தொல்காப்பியமே முதல் நூல். நன்னூல், தொன்னூல், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், களவியற்காரிகை, நேமிநாதம், காக்கைபாடினியம், பன்னிரு பாட்டியல், வீரசோழியம் போன்றவை வழி நூல்களாகும்.

இது போலவே திம்பு பேச்சுவார்த்தை, இடைக்கால தன்னாட்சி அதிகார அவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்றவற்றுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமே ஆணிவேர் அல்லது அடித்தளம். திம்புப் பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்ட தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட - சுதந்திரம், இறைமை நீங்கலாக - எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளே. பேச்சுவார்த்தைக்காக சுதந்திரம், இறைமை இரண்டும் கைவிடப்பட்டன.

ஒஸ்லோ பறையறைதலிலும் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்துக்கு மாற்றாக உள்ளக தன்னாட்சிக் (Internal Self Determination) கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை (1) நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதில் இறுக்கியது.

“நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையைத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியல் அமைப்பாகும்.”

இது போலவே இடைக்கால தன்னாட்சி அதிகார அவை (ISGA)) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாண இராச்சியம் என்று சொல்லப்படும் அரசுருவாக்கம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே உருவானது எனும் கருத்துடைய வரலாற்றாய்வாளர்கள் கலிங்க மாகனுடன் அதன் தோற்றத்தை எடுத்துக் கொள்வார்கள்.

1976 ஆம் ஆண்டு மே 14 இல் பண்ணாகம், வட்டுக்கோட்டையில் தந்தை செல்வநாயகம் தலைமையில் கூடிய தமிழர் அய்க்கிய முன்னணியின் முதல் தேசிய மாநாட்டில் ஒரு நீண்ட தீர்மானம் நிறைவேறியது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானம் தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும். இருபத்து ஏழு ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் இணைப்பாட்சி அரசியல் முறைமைக்கு அறவழியில் போராடிய தà! ��ிழ் அரசுக் கட்சி அதில் தோல்வியையே கண்டது. எனவே இணைப்பாட்சியைக் கைவிட்டுத் தனித் தமிழீழத்துக்கான முடிவை மேற்கொண்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட வாசகம் இருந்தது.

“இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்மக்களுக்குள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமய சார்பற்ற, சமவுடமை தமிழீழ அரசை மீட்டெடுத்தலும் மீள உருவாக்குதலும் தவிர்க்க முடியாதென இம் மாநாடு தீர்மானிக்கிறது.”

This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

இந்தத் தீர்மானத்தில் காணப்படும் இரண்டு சொற்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது. அவை மீட்டெடுத்தல் மீள்உருவாக்கல் (restoration and reconstitution) என்பனவாகும்.

போர்த்துக்கேயர் (கிபி 1505 -1658) முதன்முறை இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு மூன்று அரசுகள் இருந்தன. வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம், தெற்கே கோட்டை இராச்சியம், மத்தியில் கண்டி இராச்சியம் ஆகியன இருந்தன.

கோட்டை இராச்சியத்தை போர்த்துக்கேயர் கிபி 1565 கைப்பற்றினார்கள். யாழ்ப்பாண இராச்சியத்தை கிபி 1619 ஆண் ஆண்டு போர்முனையில் கைப்பற்றினார்கள்.

இலங்கை போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் 1658 இல் கைமாறியது. ஒல்லாந்தர் கண்டி, வடக்கு வன்னிமை நீங்கலாக இலங்கையை 1796 மட்டும் ஆண்டார்கள். பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியரிடம் கைமாறியது. 1815 இல் கண்டியை ஆண்ட தமிழ்மன்னன் ஸ்ரீவிக்கிரமசிங்கனை சிங்களப் பிரதானிகள் பிரித்தானியர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டு அரசையும் அவர்களிடம் கையளித்தார்கள்.

யாழ்ப்பாண அரசு (இராச்சியம்) யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்தது. அதன் மேலாண்மை சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வரைக்கும் பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது.

யாழ்ப்பாண அரசு வீழ்ந்த பின்னரும் பண்டார வன்னியன் ஆண்ட வன்னிமை 1803 ஆம் ஆண்டுவரை தனி அரசாகவே விளங்கியது. கற்சிலைமடுவில் நடந்த போரில் பண்டாரவன்னியன் கப்டன் ட்றிபேர்க் (ஊயிவ. னுசநைடிநசப) என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.

யாழ்ப்பாண அரசு இருந்ததை இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்கள். சென்ற ஆண்டு (2008) தரம் எட்டு வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த "யாழ்ப்பாண இராச்சியம்" தொடர்பான பாடத்தை நீக்கிவிட அரசு சாங்கம் முயற்சி மேற்கொண்டது. ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

யாழ்ப்பாண அரசை ஆண்ட மன்னர்களது பெயர்களையும் ஆட்சிக் காலத்தையும் கீழே காணலாம்.

அரசன் பெயர் ஞானப்பிரகாசர் இராசநாயகம்
கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது
காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி கி.பி 1242 கி.பி 1210
குலசேகர சிங்கையாரியன் கி.பி 1246
குலோத்துங்க சிங்கையாரியன் கி.பி 1256
விக்கிரம சிங்கையாரியன் கி.பி 1279
வரோதய சிங்கையாரியன் கி.பி 1302
மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325
குணபூஷண சிங்கையாரியன் கி.பி 1348
விரோதய சிங்கையாரியன் கி.பி 1344 கி.பி 1371
சயவீர சிங்கையாரியன் கி.பி 1380 கி.பி 1394
குணவீர சிங்கையாரியன் கி.பி 1414 கி.பி 1417
கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1440

1450 இல் கோட்டை அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450 - 1467 வரை ஆட்சி செய்தான். அது மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது.

கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1467
செகராசசிங்கன் சிங்கையாரியன் கி.பி 1478
முதலாவது சங்கிலி கி.பி 1519 கி.பி 1519
1560 இல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச்
சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்
புவிராஜ பண்டாரம் கி.பி 1561
காசி நயினார் கி.பி 1565
பெரியபிள்ளை கி.பி 1570
புவிராஜ பண்டாரம் கி.பி 1572
எதிர்மன்னசிங்கம் கி.பி 1591
அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1615
சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1617
1619 இல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு அவர்களின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. . கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) எம வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும். கீழே தமிழ் வரலாற்று நூல்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தந்துள்ளேன். முடிந்தளவு இவற்றைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.

பரராசசேகரம் - ஐ.பொன்னையாப்பிள்ளை (பதிப்பு 1928-1936)
வையா பாடல் - வையாபுரி அய்யர் (14-17 ஆம் நூற்றாண்டு) பதிப்பு க.செ. .நடராசா 1980)
கைலாயமாலை - முத்துக்கவிராயர் (16-17 ஆம் நூற்றாண்டு) - நல்லூர் கைலாசநாத கோயில் புராணம்
யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர் (பதிப்பு குல.சபானாதன் 1949)
யாழ்ப்பாண சரித்திரம் - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (1912)
புராதன யாழ்ப்பாணம் - முதலியார் செ. இராசநாயகம் (1926)
யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம் (1933)
யாழ்ப்பாண வைபவ கவ்முதி - ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை (1918 – வல்வை நகுலசிகாமணி 2001 பதிப்பு)
யாழ்ப்பாண அரசர்கள் (1920) - சுவாமி ஞானப்பிரகாசர்
யாழ்ப்பாண இராச்சியம் - கலாநிதி சி. பத்மநாதன்
யாழ்ப்பாண இராச்சியம் - பேராசிரியர் க. சிற்றம்பலம் (1992)
யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (1953)
பவுத்தரும் சிறுபான்மையினரும் - ச.கீத. பொன்கலன் (1987) இலங்கையில் தமிழர்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (2008)
யாழ்ப்பாண அரச பரம்பரை - க. குணராசா தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப. புஷ்பரட்ணம்
என்று முடியும் எங்கள் போட்டிகள் -
எஸ்.கே.மகேந்திரன், எம்.ஏ.தஷிணகைலாச புராணம் -
சிங்கை செகராசசேகரன் (பதிப்பாசிரியர் சி.பத்மநாதன் (1995)

The Fall and Rise of the Tamil Nation - V.Navaratnam (1995)
Sri Lanka The National Question - Satchi Ponnambalam (1983)
Sri Lanka: Witness to History – S.Sivanayagam (2000)
S.J.V. Chelvanayakam The Crisis of Sri Lankan Tamil
Nationalism – A.Jeyaratnam Wilson (1993)
The Break-Up of Sri Lanka – A Jeyaratnam Wilson (1988)
Sri Lankan Tamil Nationalism – Murugesar Gunasingam (1999)
The Evolution of An Ethnic Identity – K.Indrapala (2005)

அடுத்த கிழமை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் வானில் சுடர்விட்டு ஒளிர்ந்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்களில் ஒருவரான சேர் பொன். அருணாசலம் பற்றி எழுதுவேன். (வளரும்)

Please Click here to login / register to post your comments.