ஜெனரல் பொன்சேகாவுக்கு அப்பாலும் கட்டளையிடுபவர்கள் இருந்துள்ளார்களா?

20.12.2009 அன்று "சண்டே ரைம்ஸ்" வெளியிட்டுள்ள அரசியல் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி இது.

கடந்த மே மாதத்தையடுத்து இராணுவத்தின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான சரத் சந்திரலால் பொன்சேகா மிகப் பெரும் வீரராக உயர்ந்துவிட்டார் புலிகளுக்கு எதிராக படை நடத்தி வெற்றிபெற்றமை காரணமாக. ஜனாதிபதி அவருக்குக் காணி, பணம் மற்றும் உல்லாசக் கார் முதலிய வற்றைப் பரிசாக வழங்கிக் கௌர வித்தார். அதற்குப்பின் ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்பே தமது 40 வருட இராணுவ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பொன்சேகா. அதன்பிறகு சப்ரகமுவ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்புகொண்டு பேசியபோது தமது ஒரு காலத்து நெருங்கிய சகாவாக இருந்தவரான கோத்தபாய ராஜபக்ஷ பற்றி தமது கசப்பான கருத்துக்கள் பலவற்றை சரத் கொட்டித் தீர்த்தார். ராஜபக்ஷ குடும்பத்தினரையும் அவர்களின் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தப் போவதாகத் தெரி வித்தார். உண்மையில் பொன்சேகா கடைசித் தடவையாகப் பிரியாவிடை கூறுவதற்காக அலரிமாளிகைக்குச் சென்றபோது, அவர் கூறியிருந்த சில ""அசிங்கிதமான'' விடயங்கள் பதிவில் இருப்பதாக ஜனாதிபதி அவருக்குக் கூறினார்.

ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் வேறொரு கட்சியின் பேரில் அமைந்த "சி டி எம் ஏ" ரெலி போன் ஒன்றை முன்னாள் பாதுகாப்பு பிரதம அதிகாரியால் பாவிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கொண்டுபோயுள்ளார். ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளவை களைக் கேட்டபோது எனது கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. உண்மையில் அவர் கூறிய அதிர்ச்சியளிக்கும் விடயங்களை நீங்கள் கேட்க வேண்டும் என்று தமது கட்சியினருக்கு அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.

பொருத்தமான வேட்பாளர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பினரும்கூட இவ்வாறு நடக் கும் என்று நம்ப மறுத்திருந்தார்கள். எதிர்க்கட்சியினருடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. பொன்சேகாவை விட வேறு எந்த ஒரு வேட்பாளரும் ராஜ பக்ஷவுக்குப் பொருத்தமான எதிர் வேட்பாளராக அமையமாட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் உணர்ந்தார்கள். புலிகளை வெற்றி கொண்டதில் பொன் சேகாவுக்குத் தொடர்ந்தும் புகழ் இருந்து வந்தமையை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

எனவே எதிர்க்கட்சியினர் ஒன்றாகச் சேர்ந்து நின்று ஒன்றாகப் போட்டி யிடுவதற்குப் பொன்சேகாவே பொருத்த மான பிரமுகராக எல்லாரையும் இணைக் கும் கயிறாக செயல்படுவதற்குச் சரி யானவர் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே போர் வீரர் பொது வேட் பாளராக நிறுத்தப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆக ராஜபக்ஷ குடும் பத்தினரின் செயல்களை வெளிப் படுத்துவதற்கும் நிறைவேற்று அதி காரம் மூலம் அவர்களுக்குப் பல்வேறு அதிகாரங்களும் கிடைத்து வருவதை ஒழிக்கும் வகையிலும் பொது வேட் பாளராகப் போட்டியிடுவதற்கு அவர் முன்வந்தார். இவ்வாறு அவர் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டார். அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டின் மூலம் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொள்ளும் நிலைக் கும் தள்ளப்பட்டுவிட்டார். அவரது தொழில்துறை, தகுதிகள், மற்றும் பெருமை போன்றவை தொடர்பான பாரதூரமான கேள்விகள் எழுவதற்கும் இடம் அளித்துவிட்டார்.

விடுதலைப்புலிகள் எவரும் சரணடைய அனுமதிக்கப்படலாகாது; அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களநிலைத் தளபதி ஒருவருக்குக் கட்டளையிட்டி ருந்தார் எனவும் போரின் இறுதிக்கட்ட செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பாக மூன்று முக்கிய புலித் தலைவர்கள் (புலித்தேவன், நடேசன், மற்றும் ரமேஷ்) மூவர் சரணடைவதற்கு முன் வந்திருந்தது தொடர்பாக தமக்குத் தகவல் தரப்படவில்லையென்றும் பொன்சேகா கூறியிருந்தார். மேலும், இந்தத் தகவலை பஸில் ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கியிருந்தார், அவர் அது தொடர்பாக 58ஆவது படையணி யின் களநிலைத் தளபதி பிரிகேடியர் ஷவேந்திராவுடன் தொடர்பு கொண்டு புலிகள் எவருக்கும் சரணடையச் சந்தர்ப்பம் அளிக்கலாகா தெனவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தார் எனக் கூறியிருந்தார்.

போர் வீரர்களைக்காட்டிக் கொடுக்கும் செயல் இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், சரத்பொன்சேகாவின் அறிக்கை போர் வீரர்களைக் காட்டிக் கொடுப்பதாகவுள்ளது. தமது உயிர்களை போர்முனையில் தியாகம் செய்த வீரர்கள் அவர்கள் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் போர் வீரர்களை சர்வதேச போர் விசாரணை ஆணைக்குழு முன் நிறுத்துவதற்கு நடைபெறும் சதித்திட்டத்தின் ஓர் அம்சமாகவே பொன்சேகாவின் கூற்றுக்கள் விளங்கு வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் அழைக்கப்பட்டிருந்த அவசர ஊடகக் கூட்டமொன்றில் இந் தக் கருத்துக்களை அவர்கள் வெளியிட் டிருந்தனர். பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவும் சிரேஷ்ட பொலிஸ் பிரதி அதிபர் காமினி நவரத் தினவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துக்கள் அவசரத்தில் வெளியிடப்பட்டவை; ஆய்வுகள் நடத்தி வெளியிடப்பட்டவையன்று. ஆனால் சரணடைந்த புலிகள் கொல் லப்பட வேண்டும் என்று கட்டளை யிடப்பட்டமை தொடர்பாக இவர்கள் குறிப்பாக மறுப்பு எதனையும் வெளி யிடவில்லை என்பது இந்த மறுப்பு களில் தென்பட்ட மிக முக்கிய குறைபாடாகும். இதனால் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானவை யென்றே கருதப்படும் வகையில் அமைந்துவிட்டன. இது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை.

உத்தியோக பூர்வ இரகசியம் இது இந்த மாநாட்டின் நோக்கம் இதில் சர்வதேச சதித்திட்டம் இருக்கிறது என்று காட்டுவதும் தொழில்சார் இரகசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வேறு சட்டங்களின் கீழ் பொன்சேகா வின் மீது சட்டமா அதிபரால் நடவடிக்கை எடுக்கும்படி கோருவதற்காகவே என்று கருதப்படுகின்றது. ஓய்வுபெற்ற இராணு வத்தளபதி பொன்சேகா இப்போது உத்தியோகபூர்வ இரகசியம் ஒன்றை வெளியிட்டுவிட்டார் என்பதே குற்றச்சாட்டாகும். இது இப்போது கொழும்பில் குறிப்பாக ராஜதந்திர வட்டாரங்களில் சரணடைந்த புலித்தலைவர்கள் கொல்லப்பட்டமையானது உத்தியோகபூர்வ இரகசியமாகப் பாதுகாக் கப்படுகின்றது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. அரசின் சட்டநிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட அனை வரும் இந்த விடயத்தை இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதேசமயம் வெளிநாட்டிலுள்ள இலங் கைத் தூதரகங்களை இந்த விடயத்தில் கவனமாய் இருக்கும்படியும், சம்பந்தப் பட்டுக்கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்கள் இதனைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தின் மீது சேறு பூசும் செயற்பாட்டை அதிகரித்து விட லாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதுவானாலும் ஜெனரல் பொன் சேகாவின் கருத்து இராணுவத்தில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பைத் தோற்றுவித்துள்ளது. அவர் பதக்கங்கள் பெற்றுப் பாராட்டுப் பெற்ற அதிகாரி, இராணுவத்தில் உயர்ந்த தராதரங்களை அறிமுகப் படுத்தியவர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒருவர் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் தோற்கடித்தமைக் கான சகல பெருமைகளுக்கும் உரிய வராக கூறிக்கொள்பவர், தமது உயர் அதிகாரிகள், தனக்கு கீழ் உள்ள ஓர் அதிகாரி முழு நாட்டையும் காட்டிக் கொடுத்துள்ளார். இந்த அதிகாரி லெப்டினட் ஜெனரல் பொன்சேகா விடமிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயல்பட்டு இராணுவத்தை நடத்திச் சென்றுள்ளார். போர் முடிந்த கையோடு தம்மால் வழிநடத்தப்பட்ட இராணுவத் துக்கே 95 வீதம் போரின் இராணுவ வெற்றி உரித்தாகும் என்றும் கூறியிருக்கிறார்.

இப்பொழுது வேறுவிதமான கதையொன்றை அவர் வெளியிடுகின்றார். அவரை நம்புவதானால் இராணுவத்திற்கு வேறு நபர்களும் கட்டளைகளை விடுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. அது உண்மையானால், முழு வெற்றிக்கும் தாமே பொறுப்பு என்று அவர் எவ்வாறு கூறிக் கொள்ளமுடியும்?

நானே பொறுப்பு இது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஆதரவான பௌத்த துறவிகள் குழுவொன்று பொன்சேகாவின் கொள்ளுப்பிட்டி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தார்கள். பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு இது கவலையை அளித்துள்ளது. கும்பல்களை எதிர்கொள்ள நேர்ந் தால் அதன் விளைவுகள் மோசமாகி விடும் என்பதால் கோட்டை எம்.பி ரவி கருணாரத்னவின் மாளிகை வீட்டுக்கு சரத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அப்படிப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம் பெறவில்லை.

ஜெனரல் பொன்சேகா பின்னர் நடத்திய பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பின்வரும் அறிவித்தலை விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தகாலம் முழுமையிலும் இடம் பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். களநிலை அதிகாரிகள் எவரும் சட்டத் திற்கு மாறாக நடந்து கொள்ளவில்லை. அரசாங்கம் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களைக் காட்டுகிறது. பத்திரி கைப் பேட்டியொன்றினை தவறாகத் திரிவுபடுத்திக் கூறுகின்றது என்று கூறியிருந்தார்.

பின்னர் அவர் மேலும் தெரிவிக்கை யில் செய்தி சேகரிப்பதற்காக 58 படையணிக்குச் சென்றிருந்த ஒரு நிருபரிடமிருந்து அறிந்தேன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடமிருந்து அழைப்பு ஒன்று 58 ஆவது பிரிவுப் படையணித் தலைவர் ஷவேந்திர சில்வாவுக்கு வந்துள்ளது. சில புலித் தலைவர்கள் சரணடையப் போவது பற்றி அழைப்பொன்று வந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் இந்தச் செய்தி தவறானதா இல்லையா என்பதை அவர் உறுதிப்படுத்தினாரா இல்லையா என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்களா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. அப்படியான ஒரு நிலைமை இருந்திருந்தால் அதுபற்றி முழு அளவிலான ஆய்வுகளின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும். பொன்சேகா பேட்டியின் போது கூறியவைகளை மறுக்காத நிலையில் அவை அரசாங்கத்தால் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று கூறுகிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியவை தவறு என்றால், அவரேதான் அவைகளைச் சோடித்தவராவார். இது அவரால் கடந்த ஆறுமாதங்களில் மக்கள் மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கையை சிதறடித்துவிட மாட்டாதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

Please Click here to login / register to post your comments.