கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்: போட்டு உடைக்கிறார் கோத்தபாய

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் மேற்கொண்டபோது நிகழ்ந்த "உள்ளடி வேலைகளை" இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போட்டு உடைத்துள்ளார்.

இது தொடர்பாக "Indian Defence Review" சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதாவது:

புலிகளை தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் பேட்டியில் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய கூறியிருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.

இந்தியா - இலங்கை அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது.

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது.1987 ஆம் ஆண்டு "ஆப்ரேஷன் லிபரேஷன்" நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது.அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும், இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்: போட்டு உடைக்கிறார் கோத்தபாய கொழும்பு, வெள்ளி, 30 ஏப்ரல் 2010( 19:52 IST ) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் மேற்கொண்டபோது நிகழ்ந்த "உள்ளடி வேலைகளை" இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போட்டு உடைத்துள்ளார்.

இது தொடர்பாக "Indian Defence Review" சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதாவது:

புலிகளை தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் பேட்டியில் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய கூறியிருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.

இந்தியா - இலங்கை அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது.

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது.1987 ஆம் ஆண்டு "ஆப்ரேஷன் லிபரேஷன்" நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது.அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும், இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

Please Click here to login / register to post your comments.