என்ன நடக்குது இலங்கையில்...

3தமிழகத்திலிருந்து வெளிவரும் நூல்கள் பெரும்பாலானவை பூபாலசிங்கம் புத்தகக் கடையில் கிடைக்கிறது. வெள்ளவத்தை, யாழ்ப்பாணம் முதலான இடங்களில் அதன் கிளைகள் உண்டு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்னை வந்து புத்தகங்களைத் தேர்வு செய்து தருவித்துக்கொள்கிறார் ஸ்ரீதர்சிங். தமிழகத்திலிருந்து செல்கிற எழுத்தாளர்கள் அவரது விருந்துபசாரத்தைத் தவிர்க்க இயலாது.நான் கொழும்பிலிருந்து அவரது கடைக்குச் சென்ற அடுத்த கணம் அருகிலிருந்த ஈழ எழுத்தாளர்கள் பலரையும் அங்கு வரவழைத்தார். ஸ்ரீதர்சிங்,

டொமினிக்ஜீவா, திக்குவலைக் கமால், மேமன்கவி முதலியோர் அடுத்த சில நிமிடங்களில் அங்கு தோன்றினர்.சமீபத்திய மல்லிகை இதழ்களையும் அதன் 42 ஆவது மலரையும் கையோடு கொண்டு வந்திருந்தார் பழம்பெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. டானியலின் கல்லறைக்கு மரியாதை செய்ய ஒருமுறை அவர் தஞ்சை வந்தபோது நான் வீட்டில் இல்லாததையும் எனது இளைய மகன் அவரை அந்தக் கல்லறைக்கு அழைத்துச் சென்றதையும் நினைவுகூர்ந்தார்.ஈழப் பிரச்சினையைத் தமது சொந்த அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட தமிழக அரசியல்வாதிகளைக் கடுமையாகக் கண்டித்தார். இந்த இலங்கைத் தீவு மட்டும் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழகத்திற்கு அருகில் இல்லாமல் எங்காவது ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்திருந்தால் நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டோம் என இருமுறை கூறினார்.

ஸ்ரீதர் சிங்கைச் சில மாதங்களுக்கு முன்னர் ராஜபக்ஷ அரசு கைதுசெய்தது. அவர் இறக்குமதி செய்திருந்த தமிழ் வார இதழ் ஒன்றில் பிரபாகரன் அட்டைப் படத்துடன் வந்த கட்டுரை ஒன்றிற்காக அந்தக் கைது அந்த வழக்கு இப்போது எந்த நிலையிலுள்ளது என வினவினேன். அது ஒரு பைத்தியக்காரத்தனமான செயல்,என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.அந்தத் தமிழ் வார இதழின் ஆசிரியர் நான் எனக்குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றார். தீவிரவாதியில் வெளிவரும் எனது கட்டுரைத் தொடர் பற்றிப் பேசிய ஒரு பேராசிரியர் அவருக்குத் தேவையான எனது கட்டுரை ஒன்றின் பின் புறம் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரின் பேட்டி இருந்ததற்காக அதைக் கிழித்த பின்பே விற்பனைக்கு அனுமதித்ததால் எனது கட்டுரையை முழுமையாகப் படிக்க இயலவில்லை எனவும் அதை அனுப்பித் தருமாறும் கேட்டபோது நடப்பில் உள்ள பத்திரிகைத் தணிக்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கொழும்பில் நான் அழைக்கப்பட்டிருந்த கருத்தரங்கம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை மலையகம் புறப்பட்டேன்.கலாநிதி ரவீந்திரன் அது குறித்த ஒழுங்குகளைச் செய்திருந்தார். கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.30 மணி அளவில் அரசுப் பேருந்து ஒன்றில் புறப்பட்டோம். சுமார் நாலரை மணி நேரப் பயணம் கொழும்பிலிருந்து புறப்பட்ட சுமார் 2 மணி நேரத்தில் மலைச்சாலை தொடங்கிவிடுகிறது. இருபுறமும் றப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஏ 7 சாலையில் கனவரல்ல, கிடுகல,கினிகத்தேனை, வட்டவல வழியாக ஹட்டனை அடைந்தபோது மணி சுமார் பத்தரை.

பெரும்பாலும் தஞ்சை,புறக்கோட்டை மற்றும் தெற்கு மாவட்டங்களிலிருந்து இங்குகொண்டு வரப்பட்ட அடித்தள மக்கள் மலையகத் தமிழர்களாக உருப்பெற்று 180 ஆண்டுகள் ஓடிவிட்டன. இது ஏழாம் தலைமுறை நுவரெலியா,பதுளை,கண்டி, கேகாலை , களுத்துறை,மொனறாகலை மாவட்டங்களிலும் மலையகத் தமிழர்கள் உள்ளபோதும் என்னால் ஹட்டனுக்கு மட்டுமே செல்லமுடிந்தது. முதலில் அருகிலுள்ள கொட்டகலையிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் எனது உரை ஒன்றைப் பேராசிரியர் சற்

குருநாதன் ஏற்பாடு செய்திருந்தார். உலகமயச் சூழலில் கல்வி குறித்துப் பேசினேன். இலங்கை அரசுப் பள்ளிகள் இந்தியப் பள்ளிகளைக் காட்டிலும் ஓரளவு தரமாக உள்ளன.

அரசுக் கட்டுமானங்களில் மட்டுமல்ல ஆசிரியர் எண்ணிக்கையிலும் கூட சீருடை நல்ல தாளில் அச்சிடப்பட்ட வண்ணப்பாட நூல்கள் எண்ணிக்கை இலவசமாகத் தரப்படுகின்றன. தமிழில் பாடநூல் வெளியீட்டுத் துறையில் பணியாற்றுபவர்தான் லெனின் மதிவாணம்.சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிற்ற என் இளம் நண்பர்களில் ஒருவரான காண்டீபனும் அங்குதான் பணியாற்றுகிறார்.

எனது உரை முடிந்த பின் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஒரு ஆசிரியப் பயிற்சி மாணவர் ஏன் இந்திய அரசு ஈழப்போராட்டத்தில் உதவவில்லை? என்றார். நேரடியான அரசியற் கேள்வி. அந்தக் கலாசாலையின் பீடாதிபதி தர்ம சங்கடத்திற்குள்ளானதை அவர் முகம் காட்டியது.

இந்திய அரசு தமிழ் ஈழம் பெற்றுத்தரும் என எப்படி நீங்கள் நம்பினீர்கள்?தமிழ் ஈழம் அமைப்பது இந்திய அரசின் நலனுக்குகந்ததாக எப்படி இருக்கும்? ஈழப்போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் பிழைகளில் ஒன்று இப்படி நம்பியது என்றேன். இரு நாட்களுக்குப்பின் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இதை நான் கூற நேர்ந்தது. இணையத் தளம் ஒன்றிலும் யாழ்ப்பாண நாளிதழ் ஒன்றிலும் நவமணி வார இதழிலும் இக்கருத்து முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டது.

கொட்டகலையிலுள்ள தமிழ் மகாவித்தியாலயத்தில் பள்ளி மாணவ மாணவி

களைச் சந்தித்து உரையாடிய பின் அன்று மாலை நோர்வூட் எஸ்டேட்டிலுள்ள மலையகத்தமிழ் குடியிருப்பு ஒன்றிற்குச் சென்றோம். ஆசிரியர் ஹெலன் எங்களை அழைத்துச்சென்றார்.10து5 அளவில் அமைக்கப்பட்ட

"லயம்%27 வீடுகள் அன்றிருந்தது போலவே இன்றும் உள்ளன. ஒற்றை அறையில்தான் அவர்கள் எல்லாவற்றையும் செய்து கொள்ளவேண்டும்.எதிரெதிராக அமைந்த இரு லயன்களுக்கும் இடையில் பொதுவாக வைக்கப்பட்டுள்ள தொட்டிலில் ஊற்றப்பட்ட நீரில்தான் அவர்கள் குளிப்பது, குடிப்பது, துவைப்பது எல்லாம்.

உழைப்புச் சுரண்டல் இன்று முன்னைவிட அதிகரித்துள்ளது.1965 இல் குடும்பம் ஒன்றில் ஐவருக்கு வேலை இருந்து என்றால் இன்று இரு குடும்பங்களுக்கு மூவருக்கு மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது.இதனால் இரண்டு இலட்சம்பேர் இன்று வேலை இழந்துள்ளனர்.முன்பு ஒரு பெண் தினம் எட்டு கிலோ தேயிலைக்கொழுந்து சேகரிக்க வேண்டும்.இன்று 18 கிலோ, முன்பு ஒரு ஆண் தொழிலாளி 140 செடிகளுக்கு "கவாத்து%27 வெட்ட வேண்டும். இப்போது 350 இப்படி நிறையச்

சொல்லலாம். சமீபத்தில் ஈட்டிய விடுப்பு எனப்படும்.

உச்ணூண ஃஞுச்திஞு ஐ ஊதியமாக மாற்றிக்கொள்ளும் உரிமையை ரத்துச் செய்துள்ளதை அங்கிருந்த எல்லோரும் சொல்லிப் புலம்பினர்.

பெருந்தோட்டங்களை அரசு மயமாக்கியது எவ்வாறு? சிங்கள மயமாக்கலாக மாறியது என்பதை நான் விரிவாக எனது நூல்களில் எழுதியுள்ளேன். இன்று 450 தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் பல "டாடா%27 முதலான இந்திய நிறுவனங்கள். 50 மட்டுமே அரசு கூட்டு நிறுவனத் தோட்டங்கள். மொத்தத்தில் சுமார் 3 இலட்சம் மலையகத் தமிழர் இவற்றில் பணி செய்கின்றனர். இவர்களது பிரச்சினையை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றும் கண்டு கொண்டதில்லை. சொல்லப்போனால், தமிழர் தலைவர்கள் சிங்கள அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் காட்டிக்கொடுக்கப்பட்டது மலையகத் தமிழர்களே.

இனப் போராட்டத்தின் விளைவாக இடதுசாரித் தொழிற்சங்கங்கள் இன்று பலமிழந்துள்ளன. ராஜபக்ஷவுடன் அரசியல் கூட்டு வைத்துள்ள ஆறுமுகம் தொண்டமானின் தொழிற்சங்கம் மலையக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்துத் துரோகம் செய்யத் தயங்குவதில்லை. ஆரோக்கியமற்ற குழந்தைகள், இளைத்துப்போன பெண்கள், இளமையிலேயே முதுமை எய்திய ஆண்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு தங்கள் பிரச்சினைகளை முறையிட்டபோது உண்மை அறியும் குழுக்களில் பங்குபெற்றுப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் போது ஏற்படும் அதே கையாலாகாத குற்ற உணர்ச்சியே இங்கும் எனக்கு ஏற்பட்டது.

அடுத்த நாள் காலை தோட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் மதிவாணம். கொழுந்துகளைப் பறித்துப்போட முன்பெல்லாம் நமது பெண்கள் மூங்கில் கூடைகளை முதுகில் சுமந்திருப்பார்கள். இப்போது கூடைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகள் அவர்கள் முதுகுகளில் தொங்குகின்றன. சுமந்து வந்த மதிய உணவுப் பொதிகளை"கேட்%27 அருகில் வைத்துவிட்டு அந்த அதிகாலையிலேயே வேலையைத் துவங்கியிருந்த மலையகத் தமிழ்ப் பெண்களையும் அவர்களை மேய்க்கும் கங்காணிமார்களையும் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் ஹட்டனை விட்டு அகன்றோம்.

அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் "பகை மறப்பு%27 என்கிற தலைப்பில் நான் பேசியதும், தொடர்ந்து நடந்த விவாதங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு ஜூன் 2010 "எதுவரை%27 இதழில் அப்படியே வெளிவந்துள்ளது. இடமின்மை குறித்து இங்கு அதைத் தவிர்க்கிறேன். அந்தச் சந்திப்பின் ஊடாகக் கிடைத்த ஒரு நல்ல நட்பு தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கத்தினுடையது.

தமிழகத்திலிருந்து செல்கிறவர்கள் பார்க்கத் தவறுகிற, சரியாகச் சொல்வதானால் பார்க்கத் தவிர்க்கிற ஒரு பிரிவினர் உண்டெனில் அது புத்தளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் முஸ்லிம்கள்தான். விடுதலைப் புலிகளால் 198990 களில் 24 மணி நேர கெடுவில் வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் அவர்கள். குழந்தைகளையும் வயதானவர்களையும் வன்னிவரை சைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டு அவர்கள் வந்த கதை சோகமானது. வன்னியிலிருந்து அநுராதபுரம் வரை இராணுவ லொறிகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். பின் அங்கிருந்து முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மேற்குக்கடலோர மாவட்டமான புத்தளத்திற்கு கிடைத்த வாகனங்களில் நம்மிடமிருந்த கொஞ்ச நஞ்சக் காசையும் கொடுத்து வந்து சேர்ந்த அவர்கள், ஸாஹிரா கல்லூரியிலும் கற்பிட்டி செல்லும் வழியில் இரு புறங்களிலும் உள்ள தென்னந்தோப்புகளிலும் சில மாதங்கள் தங்கியுள்ளனர்.

தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் முஜிபுர் ரஹ்மான், மன்னாரை ஒட்டி கடல்வழியாக சிறு படகுகளிலும் ஆழமற்ற பகுதிகளில் இறங்கி நடந்தும் புத்தளம் வந்து சேர்ந்தவர்களில் ஒருவர். அப்போது அவருக்குப் பத்து வயதிருக்கவேண்டும். ஓடிவரும் வழியில் கடலில் நழுவி விழுந்து செத்த குழந்தைகள் பல என்கிறார் முஜிபுர்.

சில மாதங்களுக்குப் பின்னர் புத்தளத்திலும் அங்கிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவிலுள்ள ஆலங்குடாவிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இன்றைய முள்வேலி முகாம்களை ஒத்தவையாகத்தான் அவையும் உள்ளன. ஒரே வித்தியாசம் இவை முகாம்கள் என்கிற பெயரிலான சிறைச்சாலைகள் இல்லை. வேண்டுமானால், இவர்கள் வெளியே போகலாம். ஆனால், போகத்தான் முடியாது. "போகலாம். ஆனால் போக முடியாது%27 என வடிவேலு பாணியில் ஒருவர் சன்னக் குரலில் கூறினார். ஆனால், இந்த வார்த்தைகள் சுமந்து வந்தது நகைச்சுவையை அல்ல. இருபதாண்டு கால சோகம் அதில் தெறிந்தது.

எப்படியாயினும் புத்தளம் முகாம்களிலுள்ள அகதிகளையும் பார்த்தே ஆக வேண்டும் என வற்புறுத்தியதால் நான் ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் "மீள் பார்வை%27 ஆசிரியர் சிராஜ் மசூர் ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து அங்கு அழைத்துச் சென்றார். பெருக்குவந்தான் என்கிற இடத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகளின் ஆணைக்கிணங்கி வெளியேறி நீண்ட நாள் புத்தளத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்த கவிஞர் முல்லை முஸ்ரிபாவும் எங்களுடன் வந்திருந்தார்.தற்போது ஆசிரியராக உள்ள அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. "அவாவுறும் நிலம்%27 என்கிற அவரது கவிதைத் தொகுதி முக்கியமான ஒன்று. சேரன் அதற்கொரு முன்னுரை எழுதியுள்ளார். கொழும்பு நகரில் ஏழை எளிய முஸ்லிம்கள் பெரிதும் வசிக்கும் ஜும்மா மசூதி பகுதியில் வசிக்கிறார்.

காலை 8 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் 11 மணி அளவில் நீர்கொழும்பு, நைனாமடம், சிலாபம், மதுரங்குழி வழியாகப் புத்தளத்தை வந்தடைந்தோம். புத்தளம் "சால்ட்1%27 முகாமில் ஒரு உப்பளத்திற்கருகில் உள்ளது. இந்த உப்பளத்தில் கடும் வெயிலில் தான் உப்பு அள்ளியதை நினைவுகூர்ந்தார் முஸ்ரிபா. நாங்கள் சென்ற நேரத்தில் ஆண்கள் வேலைக்குப் போயிருந்தனர். நாங்கள் சந்தித்த முதல் பெண்மணிக்கு சுமார் 25 வயதிருக்கலாம். முஸ்ரிபா அருகில் இருந்ததால் அவர்களுடன் உரையாட முடிந்தது. நீங்கள் எந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளீர்கள் என நான் கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு உடன் பதில் சொல்லத் தெரியவில்லை. பக்கத்து வீட்டு "அக்கா%27விடம் கேட்டு "பொம்மைவெளி%27 என்றான். இடம்பெயர்ந்த போது அவளுக்கு 5 வயதிருக்கலாம். நினைவில்லாததில் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

பக்கத்தில் "மேசன்%27 வேலை செய்து கொண்டிருந்த மஜிது எங்களைப் பார்த்தவுடன் இறங்கி வந்தார்."தற்போது ஊர் திரும்புவதில் தடையில்லையே. நீங்கள் போகவில்லையா?%27 என்று கேட்ன். "இல்லை%27 என்றார். தொடர்ந்து "வாப்பாவும் உம்மாவும் வந்தபோது நாங்கள் அஞ்சு பிள்ளைகள். எல்லோருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது? வாப்பா உயிரோடு இல்லை. திரும்பிப் போனால், உம்மாவுக்கு மட்டுந்தானே வீடிருக்கும்.நாங்கள் என்ன செய்ய...? இங்கே "மேசன்%27 வேலை (கொத்தனார்) பார்க்கிறேன்.%27 அப்படியே இருந்து விட வேண்டியதுதான் என்றார்.

இன்னொரு பெண் 16 வயதிருக்கும். இங்கு வந்தபின் பிறந்திருக்க வேண்டும். அவளின் சகோதரி சிங்கள அரசின் தடுப்புக் காவல் முகாமிலுள்ளாள். அவளைக் கேட்டபோது, "நிச்சயம் ஊருக்குத் திரும்புவோம் என்ன இருந்தாலும் இங்கே நாங்கள் அகதிகள் தானே%27 என்றாள்.

20 ஆண்டுகளுக்குப் பின் 80,000 என்கிற எண்ணிக்கை இன்று அதிகமாகியுள்ளது. ஊருக்குத் திரும்பினால் எல்லோருக்கும் வீடு கிடையாது. இளய தலைமுறைக்குத் தங்கள் இடத்தை அடையாளம் காணவும் இயலாது. குடும்பத்திற்கு 3 இலட்சம் இலங்கை ரூபாய்களை உலக வங்கி தற்போது தந்துள்ளது. சிறிய அளவில் அவர்கள் வீடுகள்

கட்ட முனைந்துள்ளனர். ஊருக்குச்

சென்றால் அவர்களுக்கு வீடுகள் கிடையாது. இங்கேயே தொடர்வதென்றால் என்ன இருந்தாலும் "அகதிகளாகத்தான்%27 இருக்க வேண்டும். சிக்கல்தான். சாதாரண சிக்கல் இல்லை இடியப்பச் சிக்கல்.

திரும்பி வரும் வழியில் ஆலங்குடா முளம் அருகில் ஒரு "முஸ்லிம் மகா வித்தியாலயம்%27 90 சதம் அகதி முஸ்லிம் பிள்ளைகள். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளைகளுக்கான கல்விச் செலவை வடமேற்கு மாகாண அரசு ஏற்க மறுக்கிறது. வடக்கு மாகாணமோ, வடமேற்கு மாகாணப் பள்ளி ஒன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தயாராக இல்லை. எண்பது ஆசிரியர்கள் இருக்க வேண்டிய அப்பள்ளியில் தற்போது 20 ஆசிரியர்கள்தான் உள்ளனர். பிள்ளைகள் மரத்தடியில், மண் தரையில் உட்கார்ந்து பாடம் கேட்கின்றனர். "நான் இந்த மகா வித்தியலாயத்தின் பீடாதிபதி, ஆனால், ஆசிரியர் வேலையையும் சிற்×ழியர் வேலையையும் எல்லாவற்றையும் நானே செய்கிறேன். என்ன இருந்தாலும் இந்தப் பிள்ளைகள் தம் படிப்பை இழக்கக் கூடாதல்லவா? அரசாங்கம் எங்களுக்கு கூலி தராவிட்டாலும் அல்லாஹ் என்றாவது கூலி தருவான்தானே...%27 என்று தலைமையாசிரியர் பத்ருதீன் கூறியபோது இரண்டாம் முறையாக என் கண்களில் நீர் முட்டி நின்றது.

Please Click here to login / register to post your comments.