கருணாநிதி தமக்குரிய கடமையை சரிவரச் செய்ய முன்வருவாரா?

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்று கிடைக்குமா என்ற தற்போதைய இருண்ட சூழ்நிலையில், ஒரு மெல்லிய மின்னற் கீற்று உள்ளடங்கிய காட்சி தென்படு கிறது. இந்தியாவின் பக்கத்திலிலிருந்து அது தெரிகிறது.

எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அந்த நாட்டின் மத்திய அரசு ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு கார ணத்தை முன்னிறுத்திச் செயற்பட முனைந்திருக்கிறது. இந்திய அரசுத் தலைவர்கள், அவர்களின் அதிகாரிகள் இலங்கை அரசுத் தலைவரையும் ஏனைய அமைச்சர்களை யும் சந்திக்கும் போதெல்லாம் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது வழக்கம்.

அண்மைக் காலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ் வாறு அமையவேண்டும் என்பதனை இலங்கைத் தலைவர்க ளிடம் இந்தியா உச்சரித்து உரைத்து வருவதையும் அவதா னிக்கமுடிகிறது. இலங்கை அரசுத் தலைவர்கள் அவற்றை உள்வாங்குகிறார்களா, இந்தியத் தலைவர்களின் கருத்துடன் ஒத்துப்போகிறார்களா என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

இந்தியா அவசரப்படுவதுபோன்று இனப்பிரச்சினைக் குத் தீர்வுகாணமுடியாது. அது "நூடில்ஸ்' தயாரிப்பது போன்றதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பத்திரிகையாளர் ஒருவ ருக்குச் "சூடு' போட்டிருந்தார். அது மறைமுகமாக இந்தியா வைச் சாடுவதாக அமைந்தது. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வை விட, தாம் முன்னு ரிமை கொடுத்துச் செய்யவேண்டிய பல அலுவல்கள் உள் ளன என்ற தோரணையில் ஜனாதிபதி மஹிந்த கருத்துத் தெரி வித்திருந்தார்.

அதேபேட்டியில் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண் டும் இணைக்குமாறு யார் சொன்னாலும் குறிப்பாக இந்தியா சொன்னாலும் கூட அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்று மஹிந்த உரத்து உறுக்கிக் கூறியிருந்தார்.

இவற்றின் மத்தியிலும் ஈழத்தமிழர்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதில் இந்தியா பங்களிக்க விரும்புகிறது என்ப தனை அந்நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் செயலளவில் காட்டியிருக்கிறார். அதற்கு முன்னோடியாக, ஈழத் தமிழர்க ளின் பிரச்சினைக்கு, நிரந்தரமான தீர்வு காண்பதற் குத் தக்க ஆலோசனைகளைத் தருமாறு தமிழக முதல்வர் மு.கருணா நிதியிடம் கேட்டிருக்கிறார் மன்மோகன் சிங்.

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும் சுயமரியாதை யுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்கொள்ளும். அதன்பொருட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரமான தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளையும் தங்க ளின் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியிடம் தெரிவித் திருக்கிறார்.

இலங்கை விடயத்தில், இனப்பிரச்சினைத் தீர்வில் ஏதா வது செய்தாகவேண்டும் என்று இந்திய அரசு இந்தியப் பிரதமர், மனதார நினைத்திருக்கிறார் என்பது ஓரளவு புலப் படுகிறது. நல்லது. இந்தியா இப்போதும் தனது நலனை நாடி இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்மீது எதனை யும் திணித்துவிட முயலலாகாது. 1987ஆம் ஆண்டு ராஜீவ் ஜே. ஆர். ஒப்பந்தம் போன்ற, தமிழ் மக்களுக்கு அரைகுறைத் தீர் வுத் திட்டம் எதனையும் இப்போதைய இந்திய அரசு கையி லெடுக்காது என நம்புகிறோம். முன்னரைப் போன்று தனது விரலைச் சுட்டுக்கொள்ள முனையாது என்றும் கருதலாம். இலங்கைத் தமிழர் பிரசினைக்குரிய தீர்வுக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி யிடம் ஆலோசனைகளைக் கேட்டிருப்பது வரவேற்கத்தக்க தும், மிகவும் பொருத்தமானதும் ஆகும்.

ஆனால் முதல்வர் கருணாநிதி இந்தச் சந்தர்பத்தில், ஈழத்தமிழ ருக்கு அரசியலில், வாழ்வியலில் விடிவைத் தரவல்ல ஆலோ சனைகளைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண் டும், வழங்குவார் என்றே இங்கு வாழும் தமிழர்கள் எதிர்பார்க் கிறார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் கோவையில் நடைபெற்ற உல கச் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சர் மு.கருணா நிதியால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஒன்றும் அடங்கும்.

இலங்கைத் தமிழர்கள் தமது மொழி இன உரிமையை நிலை நாட்டிக் கொள்வதற்கு நீண்ட நெடுங்காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு காணப்படாதமை யும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறை வேற்றப்படாதமையும் கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் திரண்டுள்ள லட்சோப லட்சம் உலகத் தமி ழர்களுக்கு வேதனையைத் தருகிறது எனவே, இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச் சினைகளுக்கும், உடனடியாகத் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டு மென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பதாகும் அதன் தொடர்பாக இம்மாதம் முற்பகுதியில்(ஜூலை 3ஆம் திகதி) இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றிலும் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றைத் காண்பதற்கு இந்திய அரசு முனைப்புடன் செயற்படவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டிருந்தார்.

ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகள் தக்க வகையில் கிடைப்பதற்கு, நடைமுறைப்படுத்த வேண்டியன என்று கருதும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படைகளை, விதி முறைகளை விரிவாகவும் விளக்கமாகவும் முதல்வர் கருணா திநிதியிடம் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்க்கிறார் என்பது புலப்படுகிறது.

இலங்கை அரசிடம் தாம் முன்வைக்கும் யோசனைக ளில் தமிழக அரசின் பங்கும் இருக்கவேண்டும் என்று கருதியும் பிரதமர் மன்மோகன் முதல்வரின் ஆலோனைகளை கேட்டி ருக்கக்கூடும்.

ஆகையால் ஈழத்தமிழர்கள் தமக்குரிய அரசியல் உரிமை களை அனுபவிக்கக்கூடியதான சிபார்சுகளை விதிமுறை களை பிரதமர் மன்மோகன் சிங்குக்குச் சிபார்சு செய்வது கருணாநிதியின் பொறுப்பும் கடமையாகும். அந்தப் பொறுப்பை முதல்வர் கருணாநிதி முழு அளவில் நிறைவேற்றுவாரா? தயக்கமும் குழப்பமும் இன்றி இந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் தவறவிடமாட்டார் என்று எதிர்ப்பார்க்கலாமா?

Please Click here to login / register to post your comments.