போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம் பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம் பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எங்களை எச்சரித்தனர் இரு தரப்பினராலும் மக்கள் பட்ட அவலங்களை விவரித்தார் சாட்சி

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற் காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று நடத் தியது. அவ்வேளை ந. சுந்தரமூர்த்தி தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Please Click here to login / register to post your comments.