குடாநாட்டின் கனிய வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரிடம்?

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை யின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. வடமாகா ணத்தில் யாழ்ப்பாணம், முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் படு வேகமாக இந்தக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் அவை அமளியாக இடம்பெற்று வருகின்றன.

ஒரு புறத்தில் அரச திணைக்களங்களுக்கான புதிய கட்டடங்கள், தொழிற்சாலைகள், பாடசாலை கள், பொது மண்டபங்கள், ஹோட்டல்கள், வியாபார நிறுவனங்கள் என்பன புதிது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. மறு புறத்தில் மக்கள் தமது இல்லங் களைத் தமக்கு விரும்பிய வகையில் பல்வேறு வசதிக ளைக் கொண்டவைகளாக அமைத்து வருகின்றனர். இந்தப் பணிகளினால் யாழ்ப்பாணத்தில் இப்போது சிமெந்து உட்பட கட்டடப் பொருள்கள் படுவேகமாக விற்பனையாகி வருகின்றன. கட்டடப் பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இவற்றின் விற்பனை வேகமும் அதிகரித்துச் செல்கிறது.

இந்தக் கட்டடப் பணிகளுக்காகச் சில முக்கிய பொருள்கள் யாழ்ப்பாணத்திலேயே பெறப்பட்டு வருகின்றன. மணல், கல், சுண்ணக்கல் என்பவையே கட்டடப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தில் பெறப்படு கின்ற முக்கிய பொருள்களாகும். இந்தப் பொருள்களை விற்பனை செய்வோரின் எண்ணிக்கையும் குடாநாட் டில் இப்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக் கிறது. யார்? எவர்? என்றில்லாமல் அனைவரும் இந்த வியாபாரத்தில் படுமும்முரமாக மூழ்கியிருக்கி றார்கள். இந்தப் பொருள்களின் விற்பனை மூலம் பெருத்த லாபம் கிடைத்து வருவதே அதிகளவானோர் இதில் ஈடுபாடு காட்டுவதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

மிக நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங்கி யிருந்த குடாநாடு இப்போது படுவேகமாக அபிவிருத்தி செய்யப்படுவது வரவேற் புக்கும் தேவைக்கும் உரிய தொன்றே. யுத்தத்தினால் 25 வருடங்களுக்கு மேலாகக் குடாநாட்டில் எந்தவொரு பெரிய அபிவிருத்தி நடவடிக் கைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்பது அனை வரும் அறிந்த விடயம். இதன் காரணமாக அது பல்வேறு துறை களில் கடுமையாகப் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. அரச நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனேயே இயங்கி வந்தன.

தனியார் நிறுவனங் களுக்கும் கட்டுப்பாட்டுகள் கடுமையாக இருந்தன. தனிமனிதர்கள் தமது இல்லிடங்களை வேண்டிய வாறு விஸ்தரித்துக் கொள்ளப் போதிய பொருளாதார வசதிகள் இருக்கவில்லை. அனைத்துப் வழிகளாலும் இறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாகவே குடாநாடு யுத்த காலத் தில் இருந்தது என்பது சொல்லித் தெரியவேண்டிய தொன்றல்ல. இந்த நிலையில் இருந்து கொண்டு அபிவிருத்தி, கட்டுமானம், புனரமைப்பு என்றெல் லாம் சிந்திப்பதற்கு அப்போது நேரமில்லை.

ஆனால் நிலைமை இப்போது அவ்வாறு இல்லை. எல்லாம் தாராள மயம். எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளக்கூடிய திறந்த பொருளாதாரம் யாழ். குடாநாட்டில் இப்போது உள்ளது. தமிழ் மக்கள் எந்தவொரு குறையுமில்லா மல் இப்போது சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக அரசு நன்கு திட்ட மிட்டு காய் நகர்த்தி மேற்கொள்ளும் நடவடிக்கை களே இந்தத் திறந்த பொருளாதாரத்திற்கு காரணம் என்பதையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

இதன் பின்னணியில் இன்னொரு விடயமும் இருக் கிறது. தமிழர்களுக்குத் தேவையான அனைத்தையும் தாரளமயமாக விட்டுவிட்டால் அவர்கள் தமது உரிமைப்போராட்டத்தை மறந்து விடுவார்கள். புலிக ளைத் தேற்கடித்தது போல இலகுவாகத் தமிழர்களின் உரிமைப்பிரச்சினையையும் தோற்கடித்து விடலாம் என்பதும் அரசின் இரகசியத்திட்டம். அதனை அப்ப டியே விட்டுவிடுவோம். நாம் சொல்ல வந்த விடயத் திற்கு நேரடியாக வருவோம்.

அபிவிருத்தி, மீள்கட்டுமானம் என்ற பெயரில் குடாநாட்டின் கனிய வளங்கள் படு வேகமாகச் சூறையாடப்பட்டுவருவதுதான் அந்த விடயம். சட்ட விரோத மணல் அகழ்வு, கல் அகழ்வு, சுண்ணக் கல் அகழ்வு என்பன இப்போது யாழ்ப்பாணத்தில் சர்வசாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன. பல்வேறு இடங்களிலும் உரிய அனுமதிகளின்றி சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்றது. பெரிய மூலதனமின்றி இலகுவில் பெருந்தொகைப் பணம் சம்பாதிக்கக் கூடிய வழிமுறைகளில் ஒன்றாக இந்தச் சட்டவிரோத மணல் அகழ்வு தற்போது உருப்பெற்றி ருக்கிறது. நகரம் முதல் கிராமங்கள் வரை பல்வேறு இடங்களிலும் அகழப்படும் மணல் முறையற்ற வகையில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கொட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதை குடாநாட்டின் பல பகுதி களிலும் காணமுடிகின்றது. சட்டரீதியாக மணல் பெறு வதில் உள்ள காலதாமதம், தாராளத் தன்மையின்மை என்பவும் இந்தச் சட்டவிரேத மணல் அகழ்வை ஊக்குவிப் பதாக அமைந்து விடுகின்றன.

மக்களும் தமக்குத் தேவையான மணலை காலதாமதமின்றிப் பெற்றுக் கொள்வதற்காக இந்தச் சட்டவிரோத மணல் விற்பனை யாளர்களையே நாடுகின்றார்கள். இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதில் பொலிஸார் மும்முரமாக உள்ள போதும் நீதிமன்றத்தில் அபராதத் தைச் செலுத்தி விட்டு வெளியில் வந்த அடுத்த கணமே அவர்கள் மீண்டும் தமது முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். காரணம் நீதிமன்றத்தில் செலுத்திய அபராதத்தை அவர்கள் இரண்டொரு தினங்களில் உழைத்துவிடுவார்கள்.

அத்துடன் மற்றுமொரு நடவடிக்கையும் இப்போது எல்லைமீறி விட்டது. அதுதான் கிராமப் புறங்களில் பலரும் அதிக ஆர்வம் காட்டும் கல் அகழ்தல் தொழில். சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு, கனியவளங்கள் திணைக் களம் ஆகியவற்றின் அனுமதிகள் எதுவுமின்றி இந்தத் தொழில் இடம்பெற்று வருகின்றது. கிராமங்களில் வேலையின்றி இருக்கும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் இந்தத் தொழிலிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார்கள். கற்பாறைகள் படர்ந்துள்ள நிலங்கள் இனங்காணப்பட்டு அந்தப் பகுதிகளில் இந்தத் தொழில் வேகமாக நடைபெறுகின்றது. இந்தத் தொழிலின் மூலம் நாளொன்றுக்கு தொழிலாளி ஒருவர் ஆகக் குறைந்தது 1500 ரூபா வரை வருமானம் பெறுவ தால் பெருமளவானோர் பணத்திற்காக இதனை நாடுகின்றார்கள்.

அகழப்படும் கற்களை உடைத்துத் தரம்பிரிப்பதற்கும் இப்போது கண்ட இடங்கள் எல்லாம் கல்லுடைக்கும் தொழிற்சாலைகள் முளைத்துவிட்டன. காணி உரிமையாளர்களும் தமது நிலங்களில் உள்ள கற்கள் இல்லாமல் போகட்டும் என்பதற்காகத் தமது நிலங்களில் கல் அகழ்வதற்கு இலவச அனுமதியை யும் வழங்கிவிடுகிறார்கள். இந்தக் கல் அகழ்வுத் தொழில் சூடுபிடிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. யாழ்ப் பாணத்தில் புனரமைப்புப் பணிகளுக்காகப் பெரும் எண்ணிக்கையான "பைக்கோ' கனரக வாகனங்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன் படுத்திக் கல்அகழ்வு செய்வது சுலபமாக உள்ளதாலும் பலர் அவற்றை வாடகைக்கு அமர்த்தி முழுநேரமாக அந்தத் தொழிலில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை அண்டியுள்ள கல் குவாறிகளில் சிமெந்து உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சுண்ணக் கல் அகழ்வும் அரச ஆசீர்வாதத்துடன் முனைப்பாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பில் நாடாளு ன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போதும் அது நின்றபாடாக இல்லை. காங்கேசன்துறை சிமெந்து நிறுவனத்தின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்தபோது இந்த சுண்ணக்கல் அகழ்வை நிறுத்து வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகக் கூறிச் சென்றார்.

ஆனாலும் அது நடை பெறவில்லை. இப்போதும் அங்கு அந்தப் பணி சீராக நடைபெற்று வருகின்றது. முன்பு காங்கேசன் துறை சிமெந்து ஆலை இயங்கிய போது அதற்குத் தேவையான சுண்ணக்கல் இப்பகுதியிலேயே அகழப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத் தக்கது. தற்போது அகழப்படும் சுண்ணக்கல் எங்கு? யாருக்கு? கொண்டு செல்லப்படுகின்றது என்பது தெரியாது.

எனினும் இவ்வாறு யாழ்ப் பாணத்தின் கனிய வளங்கள் தொடர்ந்தும் வேகமாகச் சூறை யாடப்பட்டுக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. இது விடயத்தில் சுற்றுச் சூழல் பாது காப்புச் சபை, கனிய வளங்கள் திணைக்களம் ஆகியவை அக் கறை காட்டிச் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அண்மையில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் சில விடயங்களை தெரிவித்துள்ளார். ""குடாநாட்டில் உள்ள கனிய வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கனியவளத் திணைக்களத் திடமே உள்ளது. தற்போது இங்கு சுமூக நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் கனியவளத்திணைக் களத்தின் உயர் அதிகாரிகள் இங்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து கனிய வளங்களின் அகழ் வுக்கு அரச அதிபர் மட்டும் தனித்து நின்று நடவடிக்கை எடுக்க முடியாது. கனியவளத் திணைக்களம் இந்த விடயத்தில் அதிக அக்கறையு டனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என்பதே எனது கருத்து'' என்றார் அவர்.

அரச அதிபர் கூறியதிலும் நியாயம் இருக்கிறது என்பது அப்போது தெரிந்தது. மாவட்டத்தில் இடம் பெறும் எல்லாவற்றையும் அரச அதிபர் தனித்தனியே கவனித்துக் கொள்ள முடியாது. அவருக்கும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. எல்லா விடயத்திலும் அவரைக் குற்றஞ்சாட்ட முடியாது. இங்கு இப்போது துறைசார் அரச திணைக்களங்கள் பல உள்ளன. தத்தமது திணைக் களங்களுக்குட்பட்ட பணிகளை அந்தந்தத் திணைக் களங்கள் உரிய வகையில் ஒழுங்காகக் கவனித்தால் பிரச்சினைகள் வராது. அப்படி பிரச்சினைகள் வந்தா லும் அவற்றுக்கு இலகுவாக தீர்வினை எட்டமுடி யும். இங்குள்ள சில திணைக்களங்கள் இப்போது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. செயற் பாட்டு ரீதியில் எல்லாம் பூச்சியமாகத்தான் உள்ளன. சுற்று நிருபங்கள், கடிதங்கள் ஆகியவற்றுடன் சில திணைக்களங்களின் பணிகள் பூர்த்தியாகி விடுகின் றன.

களத்தில் இறங்கி பிரச்சினைகளை இனங்கண்டு செயற்பட அந்தத் திணைக்களங்களின் அதிகாரிக ளுக்கு ஆர்வமும் இல்லை, அக்கறையும் இல்லை. இதனால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவ தற்கு இந்த அதிகாரிகளின் சோம்பேறித்தனம் வழி வகுத்து விடுகின்றது.

திணைக்களங்கள் உரியவாறு செயற்பட்டால் அரச அதிபரின் பணியும் இலகுவாகி விடும். இதன் மூலம் குறுகிய காலத்தில் அபிவிருத்தி என்ற இலக்கின் எல்லையை எட்ட முடியும். குடாநாட்டின் கனிய வளம் பறிபோகும் விடயத்தில் இனியும் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் கனிய வளத்திணைக்களத்திற்கு உள்ளது. இதில் தாமதம் காட்டாமல் அந்தத் திணைக்களம் செயலில் இறங்க வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு. அதனை உரியவர்கள் செய்வார்களா?

Please Click here to login / register to post your comments.