தமிழின் ஆங்கில மயம்

தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன.

"மற்றர்", "சஸ்பென்ட்", "கட்", "ரெடி", "நைட்", "பவர்", இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கில

மயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமானது பல நூறு கோடி ரூபாவை உலக செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக செலவழித்துள்ளது. செம்மொழித் தமிழ் குறித்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சகல பேச்சாளர்களுமே தொண்டை வரளும் அளவுக்குப் பேசினார்கள். தமிழின் மேன்மைத்தன்மையை அவர்கள் எடுத்துரைத்தனர். ஆனால், எழுத்திலோ வேறுபட்ட தன்மை காணப்படுகிறது. தமிழானது ஆங்கிலச் சொற்களுடன் இணைந்து எழுதப்படுவது தொடர்கிறது.

அத்துடன், மொழியானது ஆக்ரோஷமான விதத்தில் ஏனைய வழிகளிலும் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு முன்னர் சென்னைக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தலொன்றை விடுத்திருந்தது. சகல வர்த்தக நிறுவனங்களும் பெயர்ப்பலகையை தமிழில் எழுத வேண்டுமென்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தந்திரோபாயம் தமிழ்மொழியைப் பொறுத்தவரை வெற்றிபெற்றதாக காணவில்லை. தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கில மொழியின் செல்வாக்குக் காணப்படுவதாக சில நிருபர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாடல்கள், உரையாடல்களில் ஆங்கில மொழி தாராளமாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால், வாசகர்களுடன் இதன் மூலம் சுலபமாக தொடர்புகொள்ள முடியுமென சிலர் நியாயப்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகையொன்றின் நிருபரொருவர் அதிரடி,சஸ்பென்ட்,ஆலோசனை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். நாங்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர். தூய்மையான மொழியை பயன்படுத்துவது பத்திரிகை ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறுகிறார். தினம் என்பதற்குப் பதிலாக டெய்லி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நிருபர் முன்னுரிமை கொடுக்கிறார்.அது அவரின் பத்திரிகையை குறிப்பதாக அமைகிறது. கிராமவாசிகள் கூட சஸ்பென்ட் என்ற வார்த்தையை இலகுவாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறுகிறார். தற்காலிக பணி நீக்கம் என்ற இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கஷ்டம் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், சகலருமே பத்திரிகை ஆசிரியர்களே இந்த விடயத்தை சீரமைக்க முடியுமென்ற ஏகோபித்த அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். கால ஓட்டத்தில் தமிழ்ச் சொற்களை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அறிமுகம் செய்ய முடியும் என அதாவது அடிக்கடி அச்சொற்களைப் பயன்படுத்துவதால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மாற்றியமைக்க முடியுமென அந்த அபிப்பிராயம் காணப்படுகிறது.

தியாகராஜர் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் கூறுகையில்;

சரியான தமிழ்ச்சொற்கள் இல்லாவிடில் இது சரியான விடயம். (ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்) ஆனால், கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது தமிழை கேலிக்கூத்தாக்கும் விடயமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜக்கிஷான் தமிழ்பேசுகிறார். (ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழ்வடிவம்) தமிழ் நடிகர் சூர்யா தமிழ்ப் படங்களில் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் புஷ் தெரிவித்திருக்கிறது.

Please Click here to login / register to post your comments.