ஈழ ம‌க்க‌ள் வா‌ழ்‌வி‌ல் ஏ‌ற்ற‌ம் வருமா?

ஆக்கம்: ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்
இலங்கையில் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டம் ஒரு ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. தமிழர்கள் சிதறிடிக்கப்பட்டு வாழ்வே இல்லாத நிலையில் இருக்கிறார்கள். இப்படி நொடிந்து போயுள்ள மக்களின் வாழ்வில் ஏற்றம் வருமா? அவர்களுடைய அரசியல் உரிமைப் போராட்டம் என்பதெல்லாம் எப்படி இருக்கும்.

ஈழப் போர் என்பது, அந்தப் போர் தொடங்கப்பட்டது, போர் முறை என்பதையெல்லாம் பார்க்கும் போது அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. விருட்சிக ராசியில்தான் அந்த நாடு வருகிறது. நாட்டை ஆள்பவரும் விருட்சிக ராசியில்தான் வருகிறார். உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறவரும் அந்த ராசியில்தான் வருகிறார்.

இப்படி எல்லாமே அந்த ராசிக்குள் இருப்பதனால் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தற்பொழுது வெற்றி கிட்டியவர்கள் பிறகு மண்ணைக் கவ்வுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுது தோல்வி அடைந்ததாக சொல்லப்படுபவர்கள் பிறகு முழுமையாக வெற்றி அடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. சில கிரக மாறுதல்களுக்குப் பிறகு சில உண்மைகளெல்லாம் தெரியவரும். அப்பொழுது அவர்களுடைய போராட்டங்கள் மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த மாற்றங்கள் எப்பொழுது இருக்கும்?

தற்பொழுது குரு பகவான் வக்கிர நிலையில் இருக்கிறார். அதற்கடுத்து வக்கிர நிலையில் இருந்து மாறுகிறார். நவம்பர் 20, 21 தேதி போல மாறுவார். அப்பொழுது வக்கிரம் நீங்கி வருகிறார். அந்த காலகட்டம் வரும்போது, அதாவது நவம்பருக்குப் பிறகு சில விஷயங்கள் தெரியவருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தேர்தலில் பெற்ற வெற்றி, போரில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தன்னை தலைமைப் பதவியில் நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்வதற்கான பெரும் முயற்சியில் ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார். இதில் அவர் எந்த அளவிற்கு வெற்றி பெறுவார்?

கோள்களையும், கோள்களின் நிலைகளையும் வைத்து ஆராயும் போது இவர் முழுமையான வெற்றி அடைய முடியாது. தற்பொழுது பெற்றிருக்கும் வெற்றி நிரந்தரமாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அதில் சில மாற்றங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. நவம்பருக்குப் பிறகே சில மாற்றங்கள் தெரியவரும்.

Please Click here to login / register to post your comments.