குடாநாட்டில் இளவயதுக் கர்ப்பங்கள்

குடாநாட்டில் இப்போதெல்லாம் இள வயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய் திகளையும். குப்பைதொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங் களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது. அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய் யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம்.

கல்வியறிவில் உயர்ச்சி யடைந்து, மனித விழுமியங்களில் மகோன் னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் குடும்ப வாழ்க்கைக்கு தயாராக முன்னரே அவர் களைத் தாயார்களாக்கி விடுவதில் அவ சரம் காட்டுகின்றோம். இத்தகைய இள வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் பெற் றோருக்குத் தெரியாமல் பருவ ஈர்ப்பின் காரணமாக இரகசியமாகவும், சிலவேளை களில் பெற்றோரின் சம்மத்ததோடும் நிகழ்ந்து விடுகின்றன. ஆனாலும் அதனால் பல பின் விளைவுகள் சமூகரீதியாகவும், உட லியல் ரீதியாகவும்(மருத்துவ ரீதியாகவும்) ஏற்படுவதை மறந்துவிடுகின்றோம். ஆண் களை விடவும் பெண்களே உரிய வயதை அடையமுன்னர் நிகழ்கின்ற இளவயது திரு மணங்களால் மகிழ்வான வாழ்வினைத் தொலைக்க வேண்டியவர்களாகின்றனர்.

இளமையில் தாயாவதற்கான காரணங் கள், அதனால் உண்டாகும் பிரச்சினைகள், தீர்வுகள் என்பன பற்றி இத்தருணத்தில் நோக்குவது அவசியமாகும். இந்த வேளை யில் இளவயது என்ற வகைக்குள் உள் ளடங்குவது எந்த வயதினர் என்ற வினா உங்களுக்கு எழக்கூடும். 13வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட அனைவருமே இந்த இளவயது என்னும் வட்டத்துக்குள் வருகின்றனர். இந்த வயதில் இயல்பா கவே பாலியல் சார்ந்த தன்னெழுச்சி நிலை அவர்களுக்கு இருக்கும். இதனால் வெகு விரைவாகவே பாலியல் சார் நடத்தை களுக்குள் இவர்கள் இந்தவயதில் வீழ்ந்து விடக்கூடிய அபாயமுண்டு. பெற்றோர் தம் பிள்ளைகள் மீதான அதிதீவிர கண்காணிப்பை இந்த வயதில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த வருடங்களில் மட்டும் 342 பெண்கள் இளவயதிலேயே தாயாகியுள்ள னர் என்ற தகவலை யாழ்.போதனா வைத் தியசாலை வட்டாரங்கள் அண்மையில் வெளியிட்டுள்ளன. இது வைத்தியசாலை வெளியிட்ட ஒரு பதிவு மட்டும்தான். இதனை விட வெளியே தெரியாமல் வைத் தியசாலைக்கு வராமல் தாயான இளம் பெண்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் எனப் பலரும் கருதுகின்றனர். இதற்குரிய காரணங்களை ஒவ்வொருவரு வரும் தமக்குச் சாதகமான கருத்துக்களை முன்வைக்கவும் செய்கின்றனர்.மேற்குலக நாகரீகத்தினை நாம் பின்பற்றவிழைவதா லேயே இத்தகைய இளம்வயதுத் தாய் மாரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதோ என்னும் சந்தேகமும் இவ்விடத்தில் துளிர் விடுகின்றது. ஆயினும் மேற்குலகின் நவ நாகரீகங்களை கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றும் நாம், அவர்களிடத்தே உள்ள நல்ல விடயங்களை பள்ளிகளில் நடை முறையில் உள்ள பாலியல் கல்வி போன்ற வற்றை ஏனோ பின்பற்றத் தவறிவிடு கின்றோம்.

இளவயதுக்கர்ப்பங்களுக்கு காதலே மிகமுக்கியமான காரணி என்று குற்றம் சாட்டப்படுகின்றது. பருவ வயதில் பால் கவர்ச்சி காரணமாக ஆண்,பெண் இரு பாலாரும் தம் வயதை ஒத்த எதிர்ப்பா லரின் மீது மையல் கொள்வது வழமை. இது அனேக சந்தர்ப்பங்களில் அதன் எல் லையைத் தாண்டுகின்ற போது தவறான பாலியல் உறவுகள், இளவயதுக் கர்ப்பங் கள் என்பன ஏற்படுகின்றன, எல்லை தாண்டுகின்ற காதலர்களுக்கு பாலியல் கல்வி உரிய வகையில் புகட்டப்படாமை யாலேயே அவர்கள் அவ்வாறான எல்லை மீறல்களுக்குப் பயமின்றிச் செல்கின்ற னர். பாலியல் சார் உடற் தகுதியை அடைய முன்னர் ஏற்படுகின்ற இத்தகைய உறவு களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அவர் களுக்கு சரியான வழியில் கிடைத்திருக்கு மானால், காதலிக்கும்போது பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்ற இளவயதி னரின் எண்ணிக்கை வெகுவாகக் குறை யும்.

பொருளாதார ரீதியில் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்களில் வருமானம் குறைவாக இருந்தாலும் பிள்ளை களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் குறைவிருக்காது. வருடம் ஒவ்வொன்றும் செல்லச் செல்ல தமது பிள்ளைகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவதில் இவர்கள் தவறுவதில்லை. இதனால் குடும் பப் பராமரிப்புக்கு பிள்ளைகளின் கல்வி, உடை, உணவு, மருத்துவ செலவு போன்றனவுக்கு பெருந் தொகைப்பணம் தேவைப்படுகின் றது. ஆனாலும் தொடர்ந்தும் வறு மையே இவர்களைப் பின்தொடர் வதால், பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் தமது பிள்ளைகளின் குறிப்பாகப் பெண் பிள்ளைகளின் கல் விக்கு இடைநடுவிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, எவ்வளவு விரைவாக அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து, தமது குடும்பப் பாரத்தைக் குறைப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்.

இதனை விட பொருளாதார ரீதியில் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்களின் குடியி ருப்புகள் பெரும்பாலும் மிகநெருக்கமான தாக அமைந்திருக்கும். இது எதிர்ப்பால் இளவயதினரிடையே காதல் என்ற விட யத்தை வெகுவிரைவில் உண்டுபண்ணி விடுவதால், எதிர்காலம் பற்றிய எவ்வித தொலைநோக்கும் இல்லாமல் ஓடிப்போ கின்ற கலாசாரமும் தொடர்கின்றது. இத னாலேயே நலன்புரிநிலையங் களிலும், நெருக்கமான குடியிருப்புகள் அமைந் துள்ள கிராமங்களிலும் இளவயதில் கர்ப் பம் தரிப்போரின் எண்ணிக்கையும் அதிக மாக இருப்பதை அவதானிக்கலாம்.

இதனைவிட யுத்தமும் இளவயதுத் திருமணங்களின் அதிகரிப்புக்கு ஒரு மறைமுக ஊக்கியாக இருந்துள்ளது. யுத் தத்தின் போது பலவந்தமாகப் போராட் டத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக் கையில் இருந்து தப்பித்துக்கொள்வதற் காகவும், படையினரின் கைதுகளில் இருந்து தப்புவதற்காகவும் நிகழ்ந்தேறிய ஏராளமான இளவயதுத்திருமணங்கள் இதற்கு நல்ல உதாரணம்.

தவறான நட்புச் சேர்க்கைகள், ஆபாசத் திரைப்படங்கள், சமூகத்தின் `ழலியல் கட்டமைப்பு என்பனவும் இளவயதுத் திரு மணங்களை அதிகரிக்கச்செய்கின்றன. நண்பர்களின் உ_ப்பேற்றலாலும், அவர் களின் தவறான வழிநடத்துதல் காரணமா கவும் வாழ்க்கையைச் சரியானபடி கணிக் காமல் மிக இளம் வயதிலேயே திருமண பந்தத்துக்குள் வீழ்ந்து துயரத்தின் பாதை யில் பயணிக்கின்றனர்.

இதனால் அவர் களது பிள்ளைகளும் நல்ல வாழ்வினை அனுபவிக்க முடியாமல், அவர்களும் தம் பெற்றோரைப் போலவே மிக இளம் வயதி லேயே தமக்கான துணையைத்தேடி, இள வயதுத் திருமணம் செய்தவர்களின் பட்டி யலில் இணைந்துவிடுகின்றனர். எனவே வாழையடி வாழையாக இளவயதுக் குடும் பஸ்தர்களை உற்பவிக்கும் செயலையே இளவயதுத்திருமணங்கள் ஏற்படுத்துகின் றன. எந்திரன் படத்தில் வருகின்ற ரோபோ தன்னைப்போலவே பல நூறு ரோபோக்களை உருவாக்குவதைப் போலவே இளவயதில் திருமணம் செய்பவர்கள் தாமும் கெட்டு, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழித்து அவர்களையும் தம்மைப் போல, இளவயதில் பாதை மாற வைக்கின்றனர்.

தமது துணை தவிர்ந்த வேறு நபர்க ளுடன் உறவு கொள்ளல், உடலுறவின் பின்னர் கசந்து விடும் காதல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பனவும் இள வய துத் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகச்சீர்கேடுகளின் பெருக்கம் என்பன வற்றுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன.

திருமணத்துக்கு முன்னரான பாலியல் உறவுகளால் அவர்கள் சமூக ரீதியாக ஒதுக் கப்பட்டு,தனிமையில் வாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தவறான உறவுகள், திருமணத்துக்கு முன் னர் உடலுறவு கொள்ளல் என்பவறின் மூலம் கருத்தரிக்கும் பெண்கள் தமது மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபடு கின்றனர். இத்தகைய சட்டவிரோதக் கருக் கலைப்புகள் சிலவேளைகளில் உயிராபத் தையும் உண்டுபண்ணுகின்றன. கருக் கலைப்புச் செய்யப்பட்டால், குருதியில் கிருமிதொற்று, பெண்களுக்கு வலிப்பு நோய், அதிகளவான குருதி வெளியேற் றம், தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற் படுதல், கருப்பைக்கு வெளியே குழந்தை தங்குதல், நிரந்தரமான மலட்டுத்தன்மை என்பன ஏற்படலாம்.

சிலர் தற்கொலைக்கும் இத்தகைய சந்தர்ப்பங்களின் போது முயற்சிப்பதுண்டு. மேலும் தவறான உறவுகள் மற்றும் திரு மணத்துக்கு முந்திய உடலுறவு என்பவற் றால் பிரசவிக்கப்படும் குழந்தைகள் எங் காவது வீசப்பட்டு விடுகின்றன அல்லது பிரசவிக்கப்பட்ட மறுகணமே காதும் காதும் வைத்ததைப் போன்று கொலை செய்யப் படுகின்றன. இன்னும் சிலர் இவ்வாறு பிரச விக்கப்படும் குழந்தைகளின் பிறப்புத் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளா திருந்து விடுகின்றனர்.இதை விட இளம் வயதில் கர்ப்பம் தரிப்பதால் கருப்பைக் கழுத் துப் புற்றுநோய் ஏற்படவும் இடமுண்டு.

இளம் வயதில் கர்ப்பம் தரிப்பதால் பிரசவிக்கப்படும் குழந்தைகளும் உடல், உளரீதியான பாதிப்புகளை சந்திக்க வேண் டியுள்ளது. மண்டையோடு இல்லாத சி_க்கள், நிறை குறைந்த பிள்ளைகள், மூளை விருத்தி குறைந்த பிள்ளைகள் , இறந்த நிலையில் பிள்ளைகள் பிறத்தல் என்பன ஏற்படும்.

இத்தகைய இளவயதுக் கர்ப்பங்களைத் தவிர்க்க பாடசாலைகளில் பாலியல் தொடர் பான கல்வியறிவு வழங்கப்படல் வேண் டும். குடும்பத்தினரிடையே பரஸ்பர அன்பு, பாலியல் பற்றிய கலந்துரையாடல், சரி யான நட்பு, ஆர்வமேலிட்டால் புகைபிடித் தல், மது பாவனை, ஆபாசத் திரைப்படங் களைப் பார்வையிடல் என்பவற்றைத் தவிர்ப் பதுடன், அவற்றில் ஈடுபடும் நண்பர் களையும் தடுக்கவேண்டும். அத்துடன் அவற்றுக்குத் தூண்டுவோரையும் நல் வழிப்படுத்த வேண்டும். ஊடகங்களும் பாலியல் உணர்வுகளுக் குத் தீனி போடும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து பாலியல் சார்ந்த சமுதாய விழிப் புணர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவையே இளவயதுக் கர்ப்பங்களைக் குறைப் பதற்கான வழிகளாக அமையும்.

Please Click here to login / register to post your comments.