ஜனாதிபதியின் லண்டன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது எதற்காக?

அச்சமா? அட்வைஸா? குழப்பத்தில் உலகம்!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.

இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் குற்றச்சாட்டுக்களின் பேரின் லண் டனில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பயணத்தை அவர் ரத்துச்செய்திருப்பதாக வெளியான செய்திகள்தான் இந்தப்பர பரப்புக்கு காரணம்.

இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்திய ஊட கம்தான் முதலில் இந்த விவகாரத்தை கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டன் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அவர் மீது போர்க்குற்ற வழக்கு ஒன்றை அங்குள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவ தாக உலகத்தமிழர் பேரவை கூறியிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் லண்டனுக்கான பயணத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ திடீ ரென கைவிட அவர் அச்சத்தின் பேரில்தான் பயணத்தை கைவிடுகிறாரா என்ற கேள்வி பலமாக எழுந்துவிட்டது. ஜனாதிபதி மகிந்தராஜபக்­ லண்டனுக் கான பயணத்தை நிறுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் அச்சத்தினால்தான் செய்திகளை வெளியிட வெளிவிவகார அமைச்சு விழுந்த டித்துக்கொண்டு மறுப்பு அறிக்கையயான்றை வெளியிட்டது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்­ அண்மைய நாட்களில் அதிக வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் விரைவில் இரண்டா வது பதவியேற்புவிழா நடைபெறவுள்ளதாலும் தான் பயணம் இடைநிறுத்தப்பட்டது. டிசெம்பர் வரை இந்தப்பயணம் பிற்போடப்பட் டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என்று விளக் கமளித்துள்ளது வெளிவிவகார அமைச்சு.

ஜனாதிபதிக்கு வேலைச்சுமை அதிகமாக இருப்பதால்தான் இந்தப்பயணத்திட்ட மாற் றம் என்பதே அதன் வாதம். என்னதான் வெளிவிவகார அமைச்சு இப்படி விளக்கம் கொடுத்தாலும் இதை பலர் நம்பமறுக்கின்றார்கள் என்பது உண்மை. சர்வதேசரீதியில் இடம்பெறும் போர்க்குற் றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத்தொடுக்கவோ அல்லது அதில் சம்பந்தப்பட்டுள்ள எவரையும் கைதுசெய்து விசாரிக்கவோ பிரித்தானியாவின் சட்டத்தில் இடமுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு உலகத்தமிழர் பேரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­மீது வன்னியில் போரின் இறுதி யின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக் குத்தொடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது. இதுதான் இப்போது இலங்கையரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ள விவகாரம். சர்வதேச அளவில் இலங்கையரசு போர்க் குற்றங்கள் தொடர்பான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இறுதிப்போரின்போது போர்க்குற்றங்கள் நடந்ததாகக்கூறப்படும் குற்றச்சாட்டுக்களைச் சமாளிப்பதற்கு அதற் குப் பெரும் பிரச்சினையாகவுள்ளது. ஐ.நா. பொதுச்செயலர் நியமித்துள்ள நிபுணர் கள் குழு ஒருபக்கத்தில் இலங்கையரசுக்கு நெருக்கடியாக இருந்து வருகிறது. ஆனாலும் அதை இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

இதுபோல பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டிருந்த நெருக்கடிகளை சமாளிப் பதில் ஓரளவுக்கேனும் இலங்கையரசு வெற்றி பெற்றிருந்ததை மறுக்கமுடியாது. இப்படிப் போடப்பட்ட பந்துகளையயல்லாம் சமாளித்து வந்த அரசுக்கு பிரித்தானி விவகாரம் ஒரு சறுக்கலாகவே அமைந்துள்ளது போலத் தெரிகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ இந்தமாத இறுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொள் விருந்த பயணம் அரசுமுறையிலான உத்தி யோகபூர்வ பயணமல்ல. தனிப்பட்ட பயணமே.

அவர் லண்டன் செல்லும் போது பிரித்தா னிய நீதிமன்றம் ஒன்றில் அவருக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டால் அவர் கைதுசெய் யப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை அத்தகைய வழக்குத்தொடுக்கப்பட்ட பின் னரே தெரியவரும். அதற்குமுன்னர் அதை யாரும் தீர்மானிக்கமுடியாது. பிரித்தானியாவில் உத்தியோகபூர்வ அரசு முறைப்பயணமாகப் சென்றிருக்கும்போது ஜனா திபதி மகிந்த ராஜபக்­ கைதுசெய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டால் அது சர்வதேச இராஜ தந்திர முறைக்கு முரணானதாக அமையும்.

ஆனால் தனிப்பட்ட பயணமாக அவர் செல்லும்போது இந்த நெருக்கடியில் பிரித்தா னியா சிக்கிக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வைப் பொறுத்தவரையில் அது பாதுகாப்பானதாக இருக்கமுடியாது. இதைவிட இன்னொரு சிக்கலுமுள்ளது. பிரித்தானிய அரசுக்கும் இலங்கைக்கு மிடையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர் பான விடயத்தில் அவ்வளவாக ஒருமித்த கருத்துக் கிடையாது. இறுதிப்போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா? என்பது தொடர்பாக கண் டறிந்துகொள்வதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்ற கருத்தை அண்மையில் கூட பிரித்தானியப் பிரதமர் டேலிட் கமரோன் வெளியிட்டிருந்தார்.

இலங்கையரசோ அப்படியான எந்தப் போர்க்குற்றங்களும் நடக்கவில்லை என் கிறது. ஆனால் பிரித்தானியாவோ அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை, சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்து கண்டுபிடிக்க வேண்டும் என்கிறது. இந்தப்பிணக்கநிலையானது இரு நாடு களுக்குமிடையில் இந்த விடயத்தில் ஒரு இடை வெளியை ஏற்படுத்தியிருக்கிறது. எம்மீது போர்க்குற்றம் சாட்ட பிரித்தானி யாவுக்கு என்ன யோக்கியம் இருக்கிறது? என்று பதிலுக்கு கேள்வி கேட்டது இலங்கை. கடந்த காலங்களில் ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பிரித்தானி யாவும் பொறுப்புத்தானே என்று கேள்வி கேட்டது. இந்த சுமுகமற்ற சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பிரித்தானியா செல்வது நெருக்கடியைக் கொடுக்கக்கூடியதென்ற கருத்தே நிலவுகிறது. இதன் காரணமாக பிரித் தானிய அரசாங்கமே கூட ஜனதிபதி மகிந்த ராஜபக்­வின் வருகை நெருக்கடியைக் கொடுக்கூடியதென்று எச்சரிக்கை விடுத்தி ருக்கலாம்.

ஏனென்றால் ஏற்கனவே சிலியின் சர்வா திகாரிஅகஸ்டோ பினோசே 1998 ஆம் ஆண்டில் லண்டன் சென்றிருந்த போது ஸ்கொட் லான்ட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுத் தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் வழக்குதொடரப்பட்டதன் விளைவாகவே அவர் கைதுசெய்யப்பட்டார்.

அது போல பலஸ்தீனர்கள் சட்டரீதியாக போர்க் குற்ற வழக்குத் தொடரப்போவதாக எச்சரித்த தையடுத்து இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் சரோன் 2005 ஆம் ஆண்டு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து திரும்பிப் போனார்.பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயரின் அழைப்பின்பேரில்தான் அவர் லண்டன் சென்றார். ஆனால் அங்கு கைதுசெய்யப்படும்நிலை இருப்பதாகப் பிரித்தானிய அரசு எச்சரிக்க வந்தவழியிலேயே திரும்பிச்சென்றார்.

இதேபோன்ற நெருக்கடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இலங்கையும் சரி பிரித்தானியாவும் சரி அக்கறையோடிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்தால் அது சர்வதேச அளவில் நெருக்கடிகளைக்கொடுக்கும்.குறிப்பாக பிரித்தானியாவுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையான அழுத்தங்களைக்கொடுக்கத் தயங்காது.

அது வேண்டப்படாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய பயணத்திட்டத்தை பிரித்தானியா கூட பிற்போடுமாறு ஆலோசனை கூறியிருக்கலாம். எது எவ்வாறாயினும் யாருடைய ஆலோசனையின் பேரில் இந்தப்பயணம் இப்போதைக்கு இரத் துச் செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை அரசுமீ தான நெருக்கடி நீங்கிவிடவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்துவைக்கமுடியுமா?-இல்லையா? என்பதுதான் இப்போது பலரிட மும் உள்ள முக்கியமான கேள்வி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச டிசம்பரில் அங்கு செல்வார் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சு என்ன திகதியில் அவர் அங்கு செல்வார் என்று கூறவில்லை. என்னதான் சமாதானம் சென்னாலும், லண்டனுக்கான பயணத்திகதி தீர்மானிக்கப்பட்டு அவர் அங்கு சென்று திரும்பும் வரைக்கும் அச்சத்தின் காரணமாக இந்தப்பயணம் தள்ளிப்போடப்பட்டதாகவே கருதப்படும்.

உண்மை எதுவாயினும் இப்போது இலங்கை அரசுக்கு இது சோதனையானதொரு விவகாரம் தான். உலத்தமிழர் பேரவை எடுத்த முயற்சிகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டதா? அல்லது இலங்கையரசு பிள்ளையார் பிடிக்க அது குரங் காகிப்போனதா என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை லண்டன் சென்று திரும்பிய பின்னர்தான் தீர்மானிக்கமுடியும்.

Please Click here to login / register to post your comments.