தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
 

தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் பரிசு 2005 - 2010

தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன.

2005 – 2010 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2011 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது. கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு; 2042> தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 14> 2011 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி) பரிசுகள் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்


(1) குழந்தையின் பெயர்---------------------------------------
(2) பிறந்த நாள்-------------------------------
(3) பிறந்த இடம்--------------------------
(4) தாயார் பெயர்-----------------------------------------------
(5) தந்தை பெயர்----------------------------------
(6) முகவரி---------------------------------------------------------------
(7) தொலைபேசி எண்: --------------------------------------------

குழந்தையின் பெயரை உறுதிப் படுத்தும் பிறப்புச் சான்றிதழ் (படி) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள தரவுகள் முற்றிலும் உண்மையானவை என இத்தால் உறுதிப் படுத்துகிறோம்.

தாயாரின் கையெழுத்து---------------------------------------------

தந்தையாரின் கையெழுத்து.--------------------------------------

அனுப்ப வேண்டிய முகவரி

Secretary
TCWA
2857 Lawrence Avenue East, Unit #2
Scarborough
Ontario. M1P 2S8

njhlHG: njh.Ngrp (416) 281 1165 (416) 321 3343>

njh. gb (416) 281 1165