வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
1212 - கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
1213 - நனவினான் நல்கா தவரைக் கனவினால்நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
1214 - கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
1215 - நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
1216 - நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
1217 - நனவினான் நல்காக் கொடியார் கனவினான்நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
1218 - துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
1219 - நனவினான் நல்காரை நோவர் கனவினான்கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
1220 - நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
Previous Chapter Next Chapter[Thirukural in English] [Thirukural in Tamil] [Thirukural in Details]
Courtesy: We have used Thirukural Tamil interpretations by Dr. M. Karunanithi. The Englist translation was used from the book: TIRUKKURAL with translations in English by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis Published by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Limited. India (1982).




