சோமிதரன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்தவர். கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இவர் தற்போது சென்னையில் உயர்கல்வி பயில்கிறார். லயோலோ கல்லூரியில் திரைத் துறை தொடர்பான சிறப்புக் கல்வியை முடித்துள்ள சோமிதரன் ஆவணப்படங்களின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான எரியும் நினைவுகள், இறுதி யுத்தப் படுகொலைகள் பற்றிய முல்லைத்தீவு சகா, ஈழத் தமிழர்களின் வரலாறு பற்றிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆகியவை இவரது முக்கியமான ஆவணப் படங்கள். [
]
சம்பூர் பிரதேசம்தான் எங்களுக்கு வேண்டும். எனவே சொந்த மண்ணில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.படையினர் தங்களை மூன்று மாதங்களுக்குள் தாங்கள் குறிப்பிடும் பிரதேசத்தில் குடியமர வேண்டும். மறுத்தால் உங்கள் முகாமை புள்டோசர் போட்டு அழித்து விட்டு உங்களை அடித்து ஏத்துவோம் என்று கூறியுள்ளனர். நாங்கள் என்ன செய்வது, அவர்கள் குறிப்பிட்ட பிரதேசம் குடியேறுவதற்கு ஏற்ற பிரதேசம் அல்ல. அது தண்ணீர் இல்லாத காட்டுப் பிரதேசம். நாங்கள் அங்கு குடியேற மாட்டோம். [ full story | ]
492 தமிழர்களை கனாடவுக்கு கொண்டு சென்ற சன் ஸீ கப்பலை வாங்கியதாக கூறப்படும் நபர்மீது, அந்த கப்பலை சட்டவிரோதமாக கனாடவுக்கு கொண்டு சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த பழைய கப்பலில் பயணித்த மற்றுமொருவர் மீதும் இதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குணறொபின்ஸன் கிறிஸ்துராஜா மற்றும் லெஸ்லி ஜனா இமானுவல் ஆகியோர் மீது குடிவரவு மற்றும் அகதி சட்டங்களை மீறி கனடாவுக்கு ஆட்களை கொண்டுவர ஒழுங்கு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என கனடா பொலிஸார் செவ்வாய்கிழமை கூறினர். [ full story | ]
விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: இலங்கையில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' (‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka) ) என்ற நூல் வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 'திவயின' என்ற சிங்கள நாளிதழின் ஊடகவியலாளரான சி.ஏ.சந்திரபிறேம எழுதியுள்ள 'கோத்தாவின் போர்‘ என்ற இந்த நூல் அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. [ full story | ]
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கேற்கச் செய்வதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை எட்டுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார். [ full story | ]
"இந்தியா என்னத்தைத் தந்துவிடப்போகிறது என்று அவர்களிடம் கொண்டுபோய் உழுத்த பருப்பைத் தூக்கிக் காட்டினீர்கள்'' என்று கடுகடுத்தார் அமைச்சர். நேற்று முன்தினம் இரவு 6.30 மணியளவில் கதிர்காமர் நலன்புரி முகாமுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர் நலன்புரி முகாம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடினார்.இதன் போதே அமைச்சர் மக்களிடம் மேற்கண்டவாறு கடிந்துள்ளார். [ full story | ]
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட "பற்றன் பொக்ஸ்' என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது. ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே "பற்றன் பொக்ஸ்' என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. [ full story | ]
தமிழர் ஐக்கியம் இந்த விடயத்தில் முக்கியமானதாக இருந்த போதிலும் அவர்களது அரசியல் நிலைப்பாடு நியாயமாக இருந்தால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும். தனி நாட்டுக் கோரிக்கையோ முஸ்லிம்களை புறக்கணிக்கும் தீர்வோ ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது. தனி நாட்டுக் கோரிக்கை தலை தூக்கும் போது சிங்களவர்கள் மத்தியில் வாழும் முற்போக்கு கருத்துள்ளவர்களும் அசௌகரியத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள். தமிழர் ஐக்கியம் என்று வரும் போது அது தமிழநாட்டு மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கருத்துக்களையும் உள்ளடக்கும். [ full story | ]
வடபகுதி மக்களுக்கு இன்று ஜனநாயகம் சிவில் நிர்வாகம் தேவைப்படுகிறது. எனவே அங்கு தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சோடிக்கப்பட்ட கதையைச் சொல்லி தேர்தல் நடத்தப்படாமைக்கு கதை சொல்கிறது. அப்படியானால் எப்படி அங்கு பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தின் உண்மையான 'முகத்தை' புரிந்து கொண்டு தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்தால் தகுந்ததொரு அரசியல் பாடத்தை புகட்ட முடியும் என்றார். [ full story | ]
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய அழிவுகளையும் மீளமுடியாத துயரங்களையும் விட்டுச் சென்றுள்ளது.போரின் முடிவு அரசாங்கத்தைப் புகழின் உச்சாணிக்கு எந்தளவு வேகத்தில் கொண்டு சென்றதோ, பொருளாதாரச் சுமைகள் அதே வேகத்தில் கீழே இறக்கி வந்து விட்டது. இதனால் போரிலும், தேர்தல்களிலும் வெற்றியீட்டிய அரசாங்கத்தினால் மக்களின் மனங்களை வெல்ல முடிந்ததா என்ற கேள்வி நிறையவே எழுந்துள்ளது. [ full story | ]
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். [ full story | ]
எதிர்க்கட்சிகள் அங்கம் வகிப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிடையில் நேற்றுமுன் தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ரணில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே சம்பந் தனையும் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதன் போது கூட்டமைப்பின் தலைவரிடம் ரணில் எடுத்துரைத்தார். [ full story | ]
அரசாங்கம் வடபகுதி மக்களை மூன் றாம் தரப்பு பிரஜைகளாக மதிபபிடு வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிர தித்தலைவர் சஜித் பிரேமதாஸ குறி ப்பிட்டுள்ளார். இதனாலேயே வடமா காண சபைத் தேர்தலை நடத்துவதற் கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் தெரி வித் துள்ளார். அம்பாந்தோட்டை அளுத் வெவ பகுதியில் நடைபெற்ற நிகழ் வின்போதே அவர் இதனைக் கூறி னார். [ full story | ]
புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள சி 4 எனப்படும் உயர் சக்தி வெடிபொருட்களை கண்டு பிடித்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறி த்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர், இந்தத் தக வல் உண்மையானதுதான என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார். [ full story | ]
'எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் உயிரைப் பறிகொடுத்த எம் உறவுகள் எத்தனைபேர் என்று இன்றுவரை கணக்கிட முடியவில்லை' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். [ full story | ]
"இலங்கையின் கொலைக்களங்களின் பாதிப்பும் நாட்டின் இன்றைய நிலையும்'' என்ற தலைப்பிலான விவாதம் பிரித்தானியாவில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான "ப்ரொன்ட்லைன் கிளப்" இந்த விவாத நிகழ்வை எதிர்வரும் 16 ஆம்திகதி மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது. [ full story | ]
இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது. [ full story | ]
வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எதற்காக வாக்களிக்கிறோம் என்பதைக் கேட்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆகவே, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முன்பாக அரசியல்தீர்வுத் திட்டம், அதற்கான வேலைத் திட்டம் என்பதை மிகத் தெளிவாக மக்கள் முன்வைக்க வேண்டும். ஏனெனில், முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் தற்போது பேசுவதற்கும் பாரிய இடைவெளி காணப்படுகிறது. [ full story | ]
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்லவுள்ளார்.ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மஹிந்த பிரிட்டிஷ் அரச அதிகாரிகள் எவரையாவது சந்திப்பாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. [ full story | ]
வெளிநாட்டு உதவிகள் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு அக்கறை காட்டி வரும் இலங்கை அரசு, அதே அக்கறையோடு போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமான அரசியல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் கலாநிதி போல் காட்டர் இதனை தெரிவித்தார். [ full story | ]
"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது'' என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்."நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். மக்களின் கைதட்டல்களுக்காக நடக்க முடியாதவற்றைப் பற்றிப் பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. [ full story | ]
Former Sri Lanka Tamil Tiger rebels 'disappear'
Refugee limbo spurs suicide attempts
Owner of MV Sun Sea charged with human smuggling
Sri Lanka could free jailed ex-army chief 'within days'
Tributes to war reporter Colvin at London service
Days of Remembrance: Tamils Remember, Three Year On
Sri Lankan rice farmers buffeted by flood, drought
Partnership helps restore public services in rural Sri Lanka
2012-05-16 - London, London
2012-05-18 - Scarborough, ON
2012-05-18 - Toronto, ON
2012-05-18 - Melbourne, -
2012-05-19 - Toronto, ON
2012-05-20 - Scarborough, ON
2012-05-26 - Scarborough, ON
2012-07-29 - Toronto, ON
[வீரகேசரி - May 14, 2012 13:33:23 GMT]
[திருமறைக் கலா மன்றம் - May 10, 2012 15:22:49 GMT]
[தினமணி - May 10, 2012 13:06:19 GMT]
[வீரகேசரி - May 07, 2012 12:36:09 GMT]
[தமிழ் மிரர் - May 07, 2012 10:07:47 GMT]
[வீரகேசரி - Apr 30, 2012 13:04:10 GMT]
[தினக்குரல் - Apr 27, 2012 13:33:50 GMT]
[வீரகேசரி - Apr 26, 2012 12:55:13 GMT]
[தமிழ் மிரர் - Apr 24, 2012 10:11:37 GMT]
[ வீரகேசரி - Apr 23, 2012 18:22:06 GMT]
[வீரகேசரி - Apr 23, 2012 13:14:43 GMT]
[வீரகேசரி - Apr 17, 2012 12:31:45 GMT]
[வீரகேசரி - Apr 16, 2012 15:30:44 GMT]
[உதயன் - Apr 15, 2012 11:26:39 GMT]
[யாழ் மண் - Apr 11, 2012 16:31:20 GMT]