தொப்பிகல காட்டுப்பகுதியை இலங்கை அரசுப் படை கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டன என்ற குதூகல அறிவிப்பு நேற்று தென்னிலங்கையில் மகிழ்வோடு வெளி யிடப்பட்டது.
தொப்பிகல மீட்போடு கிழக்கு மாகாணம் முழுமையாக அரசுப் படைகள் வசம் வந்துவிட்டன என்றும் தெற்கில் சந்தோஷம் கொண்டாடப்படுகின்றது.
தொப்பிகல ஆக்கிரமிப்புடன் கிழக்கு மாகாணம் முழு வதும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது என்ற கூற்றின் உண்மைத் தன்மையை நிஜ நிலை மையை காலம் தான் உறுதிப்படுத்த வேண்டும். முழு வதுமாக மீட்பு என்ற திருப்திக்குப் பின்னால் ஒளிந்து கிடக் கக்கூடிய பூரணத்துவத்தை அல்லது ஓட்டைகள், ஒழுக்கு களை கால ஓட்டம்தான் நமக்கு வெளிப்படுத்தும்.
அது எப்படி இருந்துவிட்டும் போகட்டும். இன்றைய நிலையில் தமிழர் தாயகத்தின் தென் பிரதேசத்தை வட புறத்திலிருந்து துண்டித்த மஹிந்தர் அரசு, அந்தத் தென் பகுதியைத் தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாகக் கருதி பூரித்து நிற்கின்றது என்பதே யதார்த்தம்.
இது தொடர்பான கொண்டாட்டத் திருவிழாவை எதிர் வரும் 19 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாட்டை பொது நிர்வாக, உள்நாட்டலு வல்கள் அமைச்சு செய்து வருவதாகவும் அறிவிக்கப்படு கின்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வின் பின்னணியில் புதைந்துள்ள மூன்று விடயங்களை நாம் அவதானிக்க வேண்டும்.
ஒன்று இந்நிகழ்வு நடைபெறும் இடம். அடுத்தது இந்நிகழ்வை நடத்தும் அமைச்சு. மூன்றாவது இந்நிகழ்வில் பங்குபற்றும் அரசுத் தலைவர்.
சுதந்திர சதுக்கத்தில் இந்தக் கொண்டாட்டம் நடை பெறப் போகின்றது. வழமையாக நாட்டின் சுதந்திரதின நிகழ்வை ஒழுங்குசெய்யும் பொதுநிர்வாக, உள்நாட்டலு வல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலங் கைத் தீவின் தலைவரே ஜனாதிபதியே இந்நிகழ்வில் முக்கிய அதிதியாகவும் கலந்துகொள்கின்றார்.
ஆக, நாட்டின் ஒரு சுதந்திரதின நிகழ்வாக இது அமை யப் போகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவில் மாறாத வடுவாக அமையும் ஓர் ஆக்கிரமிப்பை தென்னிலங்கை பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.
1995 இறுதியில் யாழ். குடாநாட்டின் ஒரு பகுதியை இதேபோல இலங்கைப் படைகள் கைப்பற்றியபோதும் தெற்கில் இதே மாதிரியான ஒரு விழா எடுக்கப்பட்டது.
ஓர் அரசனின் படைகள் அயல் தேசத்தை அல்லது பிற நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினால் அது தொடர் பான வெற்றிப்பட்டயத்தை சம்பந்தப்பட்ட படைத்தளபதி, அந்த அரசனிடம் வீரபுருஷனாக நின்று ஒப்படைப்பதை பெரு விழாவாக முன்னாளில் கொண்டாடுவர்.
அதுபோல, யாழ். குடாநாடு என்ற "அயல் தேசத்தை' கைப்பற்றியமை தொடர்பான வெற்றிப்பட்டயத்தை, அரச படைகளின் அப்போதைய வழிகாட்டியான பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு பெருங் கொண்டாட்ட மாகத் தெற்கில் அச்சமயம் நடத்தப் பட்டமை பலருக்கும் நீங்காத நினைவாக மனதில் இருக் கலாம்.
இந்நிகழ்வு குறித்து பின்னர் ஒரு தடவை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கு நெருங்கியவர்களிடம் வேத னையுடன் கருத்து வெளியிட்டார் எனத் தெரிகின்றது.
""நான் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றியமை தவ றல்ல.
ஆனால் அயல் தேசத்தைக் கைப்பற்றியமை போல நான் அதைக் கொண்டாடியமை தவறு. தங்கள் பிரதே சத்தை சிங்கள மக்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றி மகிழ் கின்றார்கள் என்ற சினத்தையும் எரிச்சலையும், நீங்காத மனவேதனையாக அந்நிகழ்வு தமிழர் மனதில் ஏற்படுத்தி யதை நான் உணர்கிறேன். இத்தகைய நிகழ்வுகள் தமிழ் மக்களை என்னிடமிருந்து தள்ளி வைத்துவிட்டன.'' என்று பின்நாளில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறி மன வேதனைப்பட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டா ரங்கள் கூறுகின்றன. அதே தவறை இப்போது செய்ய முயல்கிறார் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும்.
இலங்கை அரசின் அதிகாரத்தையும் இறைமையையும் விஸ்தரித்து நிலைநிறுத்தியமையை ஒட்டி நடத்தப்படும் வெற்றித்திருவிழாவாக இது தெற்கில் அடையாளப்படுத் தப்படுகின்றது.
ஆனால் தமிழ்த் தேசியத்தின் மனதில் அப்படி அமை யப் போகும் நிகழ்வல்ல இது.
எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தரிடம் தென் னிலங்கை பார்த்து மகிழ்ந்திருக்க கையளிக்கப்படப் போகும் "வெற்றிப்பட்டயம்' தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்களின் சமூக வாழ்வு மீது தலையில் அறையப்பட் டுள்ள அடிமைப் பட்டயத்தின் மற்றொரு அத்தியாயமே.
ஈழத் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்த அந்நிய சக்திகள், கடைசியாக 1948 இல் இலங்கைத் தீவிலிருந்து வெளி யேறிய போது, அதுவரை தம்வசம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழரின் சுதந்திர இறைமையை, "நாட்டின் சுதந் திரம்' என்ற பெயரில் இலங்கைத் தீவின் பெரும்பான்மை யிடம் கையளித்துச் சென்றன.
அந்த அடிமை சாசனப் பட்டயத்தை மீண்டும் ஒரு முறை தூசு தட்டி, மீட்டுப் பார்க்க இத்தீவின் பெரும் பான்மையினர் முயல்கின்றனர். அந்த நிகழ்வே 19 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
ஆனால் அக்கொண்டாட்டத்தோடு இந்த அடிமைப் பட்டய விவகாரம் அடங்கிப் போய்விடாது. அதற்குப் பின் னர்தான் விவகாரமே இருக்கின்றது. அதற்குக் காத்திருப் போமே பார்த்திருப் போமே.....!
Published: Dec 15, 2009 05:00 GMT