அவுஸ்திரேலியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் மூவருள் இருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை மெல்பேர்ண் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதி பேர்னால் பொங்கியோர்னோ இவ் இவ் வழக்கினை விசாரித்து பிணை வழங்கியதுடன் அடுத்த வாரம் மெல்பேர்ண் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் மே மாதம் கைது செய்யப்பட்ட மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சிவராஜா யாதவன், விநாயகமூர்த்தி ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கைது செய்யப்பட்ட மூன்றாவது நபரான ஆறுமுகம் ரஜீவன் செவ்வாய்கிழமை மெல்போர்ண் நீதிமன்றத்தில் பிணை வழங்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இம் மூவரும் விடுதலை புலி இயக்கத்திற்கு நிதி சேகரித்தனர் எனற சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டிருந்த்னர். எனினும் சுனாமி புனரமைப்பு பணிகளிற்காகவே தாம் நிதி சேகரித்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published: Dec 16, 2009 05:00 GMT