Thursday - 02nd of September 2010

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:
   » Home -> News Room -> Tamil News -> Full Story

யுத்த அவலம் நீங்க முன்னர் தேர்தல் என்ற அபத்த நாடகமா?
   [ உதயன் ] - [ Sep 02, 2010 04:00 GMT ]

தொப்பிகல காட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டி, கிழக்கு மாகாணத்தை முழுதாக விடுவித்து விட்டதாக மார்தட்டுகின்றது மஹிந்தரின் அரசு.

"தேசத்தை மீட்டமை' பற்றிய பிரகடனம் அடங்கிய வெற்றிப்பட்டயத்தை நாளை மறுதினம் கொழும்பில் பெரும் எடுப்பில் நடைபெறும் கொண்டாட்டத் திரு விழாவில் வைத்து, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பீரங்கி வேட்டுகள் தீர்த்து வரவேற்பு அளிக்கப்படவிருக் கின்றது. அதேசமயம் சுமார் எண்ணூறு படையினர் பங்குகொள்ளும் அணி வகுப்பு மரியாதையையும் இந்த "வீரக்கொண்டாட்டத்தின்' ஓர் அங்கமாக ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்.

நல்லது. போர் வெறித் தீவிரத்தில் திளைத்து நிற் கும் பௌத்த சிங்கள மேலாதிக்கப் போக்குத் தலை வர் ஒருவரைப் பூரிக்கவைக்கும் புளகாங்கிதப்படுத் தும் பெரு வரவேற்பாகத்தான் இது அமையப் போகின்றது. அதன் பின்னர் என்னவென்பதே கேள்வி. தாம் முற்றாக விடுவித்து மீட்டாகி விட்டது எனக் கரு திக் கொண்டாடும் கிழக்கு மாகாணத்தை "அபிவிருத்தி' செய்ய எண்ணுகிறதாம் அரசு.

அங்கு "மாகாண சபைத் தேர்தலை' நடத்தவும் அது திட்டமிடுகின்றது என்றும் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணம் உட்படத் தமிழர் தாயகம் எங்கும் வாழும் தமிழ் மக்களின் உடனடி அவசர மனிதாபி மானப் பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்கும் தாராளமோ, தெளிவோ, நன்நோக்கோ தெற்குக்கு இல்லை. போரி னாலும், ஆழிப் பேரலை அனர்த்தத்தினாலும் வீடு, வாசல்களைப் பறிகொடுத்து, உறவுகளைத் தொலைத்து, அன்றாட ஜீவனோபாயத்தை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்காமல், தேர்தலை நடத்திக்காட்டும் தமது அரசியல் தர்பாரை முன்னெடுக்கத் தீவிரமாக முயல்கி றது தென்னிலங்கை அரசுத் தலைமை.

"தேர்தல்' நடத்துவது பற்றிச் சிந்திக்கக் கூடத் தகு தியோ அல்லது அடிப்படைச் சூழ்நிலையோ கிழக் குக்கு இல்லை என்பதை சுயாதீனத் தேர்தல் கண் காணிப்புக் குழுவான "பவ்ரல்' அம்பலப்படுத்தியிருக் கின்றது. அவ்வாறு தேர்தல் ஒன்றை நடத்தும் திட்டத் தில் அமைந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை அந்த அமைப்புக் கடுமையாகச் சாடியுமிருக்கின்றது.

கள நிலைமைகள் மற்றும் யதார்த்தப் புறநிலை களை உதாசீனம் செய்துவிட்டுத் தம்பாட்டில் தேர்தல் எதையும் நடத்தும் திட்டத்தை இலங்கை அரசோ அல்லது தேர்தல் ஆணையமோ தனித்து முடிவெடுத்து விட முடியாது என்பதையும் உரிய நடைமுறைகள் இதற்குப் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் "பவ் ரல்' அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கிழக்கில் மூன்று லட்சம் மக்கள் பெரும்பாலும் தமிழர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். முதலில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட மோசமான யுத்தத்தின் வடு அங்கு சிறிதேனும் நீங்கிவிடவில்லை. அந்த அனர்த்தத்துக்கு மத்தியில் சுயாதீனமாக தமது சொந்த பூர்வீக இடங்களில் மீள்குடியமர மக்களுக் குக் கால அவகாசம் வழங்கப்படவேண்டும். அதன் பின் னர் முறையான வாக்காளர் பட்டியல் சட்ட முறைப்படி தயாரிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முந்திய இந்தப் பிரதான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய் யவே காலம் பிடிக்கும்.

அதன் பின்னரே கிழக்கில் தேர்தல் நடத்துவதற் கான சாதக நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய முடியும். அதற்குப் பின்பே தேர்தல் பற்றித் தீர்மானிக்கலாம்.

போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பு, சுதந் திரமான பிரசாரத்துக்கான வாய்ப்புகள், நீதி, நியாய மான தேர்தல் நடத்துவதற் கான சூழல் இவை குறித்தெல் லாம் தீவிரமாகப் பரிசீலித்து, அவற்றுக்கு ஏற்புடையதான நிலைமை இருந்தாலேயே தேர்தல் பற்றிச் சிந்திப்பது முறையாகும்.

அதை விடுத்து தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாதிக்கம் கிழக்கில் செல்லுபடியாகின்றது என்பதை தாங்கள் நிரூபித்துள்ளார்கள் என அந்த மேலாண்மைச் சக்திகள் தங்களுக்குத் தாங்களே தலைப்பாகை சூட்டி மகிழ்வ தற்காகவோ அல்லது தென்னிலங்கை அரசியல் தலைமை களின் அரசியல் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும் நோக்கிலோ அரை வேக்காட்டுத் திட்டம் ஒன்றை தேர்தல் என்ற பெயரில் அரங்கேற்றி அபத்தம் புரிவது அர்த்தமற்றது. யுத்தச் சூழலால் பாதிப்புற்று அவலப்பட்ட கிழக்கு மக் களின் அவலத்தை "தேர்தல்' என்ற பெயரில் அரசிய லாக்குவது மிகக் கேடுகெட்ட நடவடிக்கையாகும்.


Published: Sep 02, 2010 04:00 GMT